வேதக் கதைகள்
விலையேறப்பெற்ற முத்து


“விலையேறப்பெற்ற முத்து,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“விலையேறப்பெற்ற முத்து,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

ஜூலை 1835–மார்ச் 1842

2:24

விலையேறப்பெற்ற முத்து

கர்த்தரிடமிருந்து கூடுதல் வேதம்

ஜோசப் ஸ்மித் ஒரு எகிப்திய சுருளைப் பார்த்தல்.

ஒரு நாள், ஒரு மனிதன் எகிப்திலிருந்து மம்மிகளுடன் கர்த்லாந்திற்கு வந்தான். அந்த மம்மிகளுடன் சில சுருள்கள் அல்லது மிகவும் பழைய காகிதச் சுருள்கள் இருந்தன. அந்தச் சுருள்களில் எகிப்திய எழுத்துக்கள் இருந்தன. அந்த மனிதன் அவற்றை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடம் காட்டினான். ஜோசப் அந்த எழுத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

Saints, 1:219–20

ஜோசப் எம்மா ஸ்மித்துடன் சுருளைப் பகிர்ந்து கொள்ளுதல்.

சில நண்பர்கள் ஜோசப்பிற்கு மம்மிகளையும் சுருள்களையும் வாங்க உதவினார்கள். ஜோசப் எழுத்துக்களைப் படித்தபோது, வேதாகமத்தில் ஒரு தீர்க்கதரிசியான ஆபிரகாமின் பண்டைய எழுத்துக்களை கர்த்தர் அவருக்கு வெளிப்படுத்தினார். ஆலிவர் கௌட்ரி போன்ற நண்பர்களின் உதவியுடன், ஆபிரகாமின் போதனைகளைப் பற்றி கர்த்தர் தனக்குக் கற்பித்ததை ஜோசப் எழுதினார்.

Saints, 1:220

ஆபிரகாமையும் பரலோக பிதாவையும் ஜோசப் தரிசனமாகக் காணுதல்.

நாம் பிறப்பதற்கு முன்பே, பரலோக பிதாவுடனான நமது வாழ்க்கையின் ஒரு தரிசனத்தை ஆபிரகாம் கண்டிருந்தான். இயேசு நமது இரட்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அவன் கண்டான். உலகத்தின் சிருஷ்டிப்பு பற்றியும் ஆபிரகாம் கற்றுக்கொண்டான். ஆபிரகாமிடமிருந்து இந்தப் போதனைகளைப் பெற்றதில் பரிசுத்தவான்கள் உற்சாகமடைந்தனர். கர்த்தர் தங்களுக்கு இன்னும் அதிகமாகக் கற்பிக்க விரும்பியதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆபிரகாம் 2:6–11; 3–5; Saints, 1:220

மோசே மற்றும் ஆபிரகாமின் கதைகளிலிருந்து ஜோசப் உணர்த்துதல் பெறுதல்.

ஆபிரகாமின் எழுத்துக்கள் விலையேறப்பெற்ற முத்து என்று அழைக்கப்படும் வேத புத்தகத்தின் ஒரு பகுதியாக மாறியது. இந்தப் புத்தகத்தில் வேதாகமத்தின் மற்றொரு தீர்க்கதரிசியான மோசேயின் எழுத்தும் உள்ளது. வேதாகமத்தில் விடுபட்ட சத்தியங்களை இது கற்பிக்கிறது. இந்த சத்தியங்களை மக்கள் அறிய வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார், அதனால் அவர் அவற்றை ஜோசப் ஸ்மித்துடன் பகிர்ந்து கொண்டார்.

மோசே 1–8; ஆபிரகாம் 1–5

ஒரு சிறுவனும் சிறுமியும் விலையேறப்பெற்ற முத்து புத்தகத்தைப் படித்தல்.

விலையேறப்பெற்ற முத்துவில் ஜோசப் ஸ்மித்தின் சாட்சியமும் 13 விசுவாசப் பிரமாணங்களும் உள்ளன. பிற்காலப் பரிசுத்தவான்கள் நம்புவது என்ன என்பதை உலகிற்குச் சொல்ல ஜோசப் ஸ்மித் இந்த காரியங்களை எழுதினார். விலையேறப்பெற்ற முத்து என்பது ஒரு சிறிய புத்தகம், ஒரு முத்து சிறியது போல, ஆனால் அது மிகவும் விலைமதிப்பற்றது.

ஜோசப் ஸ்மித்—வரலாறு; விசுவாசப் பிரமாணங்கள் 1