வேதக் கதைகள்
நாவூவை விட்டு மேற்கு நோக்கி பயணித்தல்


“நாவூவை விட்டு மேற்கு நோக்கி பயணித்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“நாவூவை விட்டு மேற்கு நோக்கி பயணித்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

ஜூன் 1844–ஜூலை 1847

3:51

நாவூவை விட்டு மேற்கு நோக்கி பயணித்தல்

பரிசுத்தவான்கள் கர்த்தருக்குத் தங்கள் வாக்குறுதிகளைச் செய்து, அவற்றை கடைப்பிடிக்கிறார்கள்.

நாவூ ஆலயம் கட்டி முடிக்கப்படுவதை பிரிகாம் யங் மேற்பார்வையிடுகிறார்.

ஜோசப் ஸ்மித் இறந்துவிட்டார். இப்போது பிரிகாம் யங் மற்றும் பிற அப்போஸ்தலர்கள் சபையை வழிநடத்தினர். நாவூவில் பரிசுத்தவான்கள் இனி பாதுகாப்பாக இல்லை என்பதை பிரிகாம் அறிந்திருந்தார். அவர்கள் வெளியேற வேண்டியிருக்கும். ஆனால் முதலில், அவர்கள் ஆலயத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். அவர்கள் அவருடன் உடன்படிக்கை செய்து குடும்பங்களாக முத்திரிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

Saints, 1:571, 579–80

ஆலயத்தில் பரிசுத்தவான்கள் ஆசீர்வாதங்களைப் பெற பிரிகாம் உதவுகிறார்.

சில மாதங்களுக்குப் பிறகு, மக்கள் உடன்படிக்கைகள் செய்ய ஆலயம் தயாராக இருந்தது. ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்கள் ஆலயத்துக்கு வந்தனர். கர்த்தருடன் உடன்படிக்கைகளைச் செய்ய அவர்களுக்கு உதவ பிரிகாம் இரவு வெகுநேரம் வரை ஆலயத்தில் தங்கினார். இறுதியாக, பிரிகாம் அனைவரும் நாவூவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார்.

Saints, 1:582

பிரிகாம் பரிசுத்தவான்களிடம் நாவூவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறார்.

மறுநாள் காலையில் பிரிகாம் விழித்தெழுந்தபோது, ​​இன்னும் பல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் காத்திருந்தனர். நாவூவில் தங்குவது பாதுகாப்பானது அல்ல என்று பிரிகாம் அவர்களிடம் கூறினார். அவர்கள் மேற்கில் ஒரு புதிய வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவர்கள் அங்கு சென்றதும் ஒரு புதிய ஆலயம் கட்ட முடியும் என்று அவர் உறுதியளித்தார்.

Saints, 1:582–83, 2:13–14

ஆலய ஆசீர்வாதங்களைப் பெற பிரிகாமிடம் கெஞ்சும் பரிசுத்தவான்கள்.

ஆனால் பரிசுத்தவான்கள் வெளியேறவில்லை. அவர்கள் ஒரு புதிய வீட்டிற்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு கர்த்தருடன் உடன்படிக்கைகளைச் செய்ய விரும்பினர்.

Saints, 1:583

ஆலயத்தில் பரிசுத்தவான்கள் ஆசீர்வாதங்களைப் பெற பிரிகாம் தொடர்ந்து உதவுகிறார்.

அவர்களின் முகங்களைப் பார்த்த பிரிகாம் தனது மனதை மாற்றிக்கொண்டார். அவர் அன்றைய தினம் மற்றும் மறுநாள் முழுவதும் ஆலயத்தில் பரிசுத்தவான்கள் உடன்படிக்கைகளைச் செய்ய உதவுவதற்காக செலவிட்டார்.

Saints, 1:583

நாவூவிலிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கிப் பயணத்தைத் தொடங்கும் பரிசுத்தவான்கள்

இப்போது பரிசுத்தவான்கள் கர்த்தருடன் உடன்படிக்கைகளைச் செய்துகொண்டதால், நாவூவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது. கர்த்தர் அவர்களுக்காக ஒரு இடத்தை தயார் செய்திருப்பதை பிரிகாம் அறிந்திருந்தார். அவர் அதை ஒரு தரிசனத்தில் கண்டிருந்தார். அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். வானிலை குளிராக இருந்தது, தரை சேறும் சகதியுமாக இருந்தது. மக்கள் நோய்வாய்ப்பட்டனர். அவர்களிடம் ஏற்கனவே உணவு தீர்ந்து போயிருந்தது.

Saints, 2:16–18, 20–21

பிரிகாமும் மற்றவர்களும் பனி முகாமில் வசிக்கின்றனர்.

பரிசுத்தவான்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம். இவ்வளவு நீண்ட மற்றும் கடினமான பயணத்தை அவர்களால் எப்படி மேற்கொள்ள முடியும் என்று பிரிகாம் யோசித்தார். அவர் தேவனின் உதவிக்காக மன்றாடினார்.

Saints, 2:46

விண்டர் குவாட்டர்ஸில் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும் பரிசுத்தவான்கள்.

பிரிகாமுக்கு கர்த்தர் ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்தார். அவர் பிரிகாமுக்கு பரிசுத்தவான்களை எவ்வாறு வழிநடத்துவது என்று கற்றுக் கொடுத்தார். ஏழைகளைக் கவனித்துக் கொள்ள ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று அவர் கூறினார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 136:1–8

வசந்த காலத்தில் மேற்கு நோக்கி தங்கள் பயணத்தைத் தொடரும் பரிசுத்தவான்கள்.

பரிசுத்தவான்கள் அவரோடு செய்த உடன்படிக்கைகளை நினைவில் கொள்ள வேண்டும் என்று கர்த்தர் சொன்னார். அவர்கள் அப்படிச் செய்தால், அவர் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு உதவுவார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 136:4, 11, 42; Saints, 2:47

ஒரு குடும்பம் கல்லறைக்கு அருகில் மண்டியிடுதல்.

பயணம் இன்னும் மிகவும் கடினமாக இருந்தது. சிலர் இறந்தனர். ஆனால் அவர்களின் ஆலய உடன்படிக்கைகள் காரணமாக, பரிசுத்தவான்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை மீண்டும் பார்ப்பார்கள் என்பதை அறிந்தார்கள்.

வில்போர்ட் உட்ரப் மற்றும் பிரிகாம் யங் ஆகியோர் சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு வந்து சேர்தல்.

சில மாதங்களுக்குப் பிறகு, முதல் பரிசுத்தவான்கள் 1847 இல் சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு வந்தனர். பிரிகாம் யங் பள்ளத்தாக்கைப் பார்த்தபோது, ​​“இதுதான் சரியான இடம்” என்றார். அது அவர் ஒரு தரிசனத்தில் கண்ட அதே இடம். இங்குதான் பரிசுத்தவான்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இங்கே அவர்கள் கர்த்தரை ஆராதித்து, அவருடைய பணியை சமாதானமாகச் செய்ய முடியும்.

Saints, 2:17, 64–67

உலகெங்கிலும் உள்ள ஆலயங்கள் மற்றும் பரிசுத்தவான்களின் தொகுப்பு.

பல வருடங்களாக, அதிகமான பரிசுத்தவான்கள் வந்தனர். அவர்கள் இன்னும் பல ஆலயங்களைக் கட்டினார்கள், அங்கு மக்கள் கர்த்தருடன் உடன்படிக்கை செய்து கொள்ள முடியும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போதிக்க அவர்கள் உலகம் முழுவதும் ஊழியக்காரர்களை அனுப்பினர். இரட்சகரின் சபை தொடர்ந்து வளர்ந்து, பரலோக பிதாவின் பிள்ளைகளை எல்லா இடங்களிலும் ஆசீர்வதித்தது.