“சிட்னியும் பெபே ரிக்டனும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“சிட்னியும் பெபே ரிக்டனும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
அக்டோபர்–நவம்பர் 1830
சிட்னி மற்றும் பெபே ரிக்டன்
சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள அவர்களின் வாழ்க்கையை மாற்றுதல்
பார்லி பிராட்டும் மற்றவர்களும் பூர்வீக அமெரிக்கர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில், பார்லி தனது நண்பரான சிட்னி ரிக்டனைப் பார்க்க விரும்பினார். சிட்னி ஒரு போதகர், அவர் வேதாகமத்திலுள்ள இயேசு கிறிஸ்துவைப் பற்றி பார்லிக்கு கற்பித்திருந்தார். இப்போது பார்லி மார்மன் புஸ்தகத்திலுள்ள இயேசுவைப் பற்றி சிட்னிக்கு கற்றுக்கொடுக்க விரும்பினார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 32; Saints, 1:99
பார்லி மார்மன் புஸ்தகத்தைப் பற்றி சிட்னியிடம் சொல்லி, அதைப் படிக்கும்படி அழைப்பு விடுத்தார், சிட்னிக்கு உறுதியாக தெரியவில்லை, ஆனாலும் பார்லி ஒரு நண்பர் என்பதால், அவர் செய்வதாக உறுதியளித்தார்.
Saints, 1:100
சிட்னி மார்மன் புஸ்தகத்தைப் படித்தபோது, அது தேவனிடமிருந்து வந்தது என்பதை அறிந்து கொண்டார். அவர் தனது உணர்வுகளை தனது மனைவி பெபேயுடன் பகிர்ந்து கொண்டார்.
Saints,1:101
ஆனால் அடுத்து என்ன செய்வது என்று சிட்னிக்குத் தெரியவில்லை. அவர் ஞானஸ்நானம் பெற்றால், அவர் தனது சபையில் பிரசங்கிக்கும் வேலையை இழக்க நேரிடும். பெபே மற்றும் அவர்களது ஆறு குழந்தைகளை அவர் எவ்வாறு கவனித்துக் கொள்ள முடியும்? அவருடைய சபையில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? அவர் உதவிக்காக பரலோக பிதாவிடம் ஜெபித்தார், அவர் சமாதானத்தை உணர்ந்தார்.
Saints, 1:101; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:23
சிட்னி பெபேவிடம் அவர்களின் வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு அவருடன் இந்தப் புதிய சபையில் சேரத் தயாரா என்று கேட்டார். “வாழ்வானாலும் சாவானாலும்,“ “தேவனின் சித்தத்தைச் செய்வதே என் விருப்பம்,“ என்று அவள் சொன்னாள். ஞானஸ்நானம் எடுக்க முடிவு செய்தனர்.
Saints,1:101
பின்பு, சிட்னி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தை சந்தித்தார். கர்த்தர் சிட்னிக்கு ஜோசப் மூலம் ஒரு செய்தியைக் கொடுத்தார். சிட்னி செய்த நல்ல காரியங்களைப் பார்த்ததாகவும், அவருடைய ஜெபங்களைக் கேட்டதாகவும் அவர் சொன்னார். ஒரு சிறந்த பணி ஒன்றை சிட்னிக்கு செய்ய வைத்திருப்பதாக கர்த்தர் அவரிடம் சொன்னார். சிட்னி பெரிய காரியங்களைச் செய்வார்.