வேதக் கதைகள்
பரிசுத்தவான்கள் மரித்தோருக்கான ஞானஸ்நானத்தைப் பற்றி அறிதல்


“பரிசுத்தவான்கள் மரித்தோருக்கான ஞானஸ்நானத்தைப் பற்றி அறிதல்” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“பரிசுத்தவான்கள் மரித்தோருக்கான ஞானஸ்நானத்தைப் பற்றி அறிதல்” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

ஆகஸ்ட்–அக்டோபர் 1840

2:28

பரிசுத்தவான்கள் மரித்தோருக்கான ஞானஸ்நானத்தைப் பற்றி அறிதல்

ஞானஸ்நானம் பெறாத குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கை

ஜோசப் ஸ்மித் பேசும் ஒரு இறுதிச் சடங்கில் ஜேன் நேமன்.

ஜேன் நேமன் நாவூவில் வசித்தாள். ஜோசப் ஸ்மித் பேசிக்கொண்டிருந்த ஒரு இறுதிச் சடங்கிற்கு அவள் சென்றாள். இறுதிச் சடங்கு, ஜேன் தனது மகன் சைரஸைப் பற்றி சிந்திக்க வைத்தது. அவன் இறந்துவிட்டான், ஞானஸ்நானம் பெறவில்லை. ஜேன் சைரஸைப் பற்றி கவலைப்பட்டாள். பரலோக பிதாவுடன் வாழ நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

Saints, 1:421

ஆல்வின் ஸ்மித்தின் கல்லறைக்கு முன்னால் மண்டியிடும் ஜோசப்.

அவள் எப்படி உணருகிறாள் என்பது ஜோசப்புக்குத் தெரியும். ஞானஸ்நானம் பெறாமலேயே இறந்துவிட்ட தனது சகோதரர் ஆல்வினைப் பற்றியும் அவர் இதே விஷயத்தையே யோசித்துக்கொண்டிருந்தார்.

Saints, 1:421

மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது பற்றிய போதனையை ஜோசப் அறிமுகப்படுத்துகிறார்.

இறுதிச் சடங்கின் போது, ​​தேவன் தனக்குக் கற்பித்த ஒன்றை ஜோசப் பகிர்ந்து கொண்டார். ஒருவர் ஞானஸ்நானம் பெறாமல் மரித்துவிட்டால், நாம் அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறலாம் என்று அவர் கூறினார்.

Saints, 1:421

ஜேன் தன் மகனுக்காக ஞானஸ்நானம் பெறுகிறாள்.

இதைக் கேட்டதும் ஜேன் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்! இறுதிச் சடங்கிற்குப் பிறகு, அவள் சபையின் ஒரு மூப்பருடன் ஆற்றுக்குச் சென்றாள். சைரஸுக்காக அவர் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

Saints, 1:421

மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் பற்றி ஜோசப் மேலும் பல பரிசுத்தவான்களுக்குக் கற்பிக்கிறார்.

சில வாரங்களுக்குப் பிறகு, மரித்தோருக்கான ஞானஸ்நானம் பற்றி ஜோசப் பரிசுத்தவான்களுக்கு அதிகமாகக் கற்பித்தார். மரித்த பலர் ஞானஸ்நானம் பெற விரும்பினர் என்று அவர் கூறினார். அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினர். அவர்கள் உயிருடன் இருந்த தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்காக ஞானஸ்நானம் பெறுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:15–19; Saints, 1:423

மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறும் பரிசுத்தவான்கள்.

பரிசுத்தவான்கள் உடனே ஆற்றுக்கு ஓடினார்கள். அவர்கள் நேசித்த மக்களுக்காக ஞானஸ்நானம் பெற்றார்கள். ஹைரம் ஸ்மித் ஆல்வினுக்காக ஞானஸ்நானம் பெற்றார். பின்னர், மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் ஆலயத்தில் செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஞானஸ்நானத்தின் பதிவையும் யாராவது வைத்திருக்க வேண்டும் என்றும், ஆண்களுக்காக ஆண்கள் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றும், பெண்களுக்காக பெண்கள் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றும் கர்த்தர் கற்பித்தார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:29–32; 127:5–12; 128:1–9; Saints, 1:424