வேதக் கதைகள்
கர்த்லாந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படுதல்


“கர்த்லாந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“கர்த்லாந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

மார்ச் 1836

2:42

கர்த்லாந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படுதல்

கர்த்தருடைய ஆவியை அவருடைய வீட்டில் உணருதல்

கர்த்லாந்து ஆலயத்துக்கு நடந்து செல்லும் ஒரு குடும்பம்.

கிட்டத்தட்ட மூன்று வருட கடின உழைப்புக்குப் பிறகு, கர்த்லாந்து ஆலயம் இறுதியாக கட்டி முடிக்கப்பட்டது. ஆலயத்தை பிரதிஷ்டை செய்ய ஒரு விசேஷித்த கூட்டத்திற்கு தீர்க்கதரிசி ஜோசப் பரிசுத்தவான்களை அழைத்தார். அவர் ஒரு விசேஷித்த ஜெபம் செய்து, ஆலயத்தை கர்த்தரிடம் ஒப்படைப்பார். அது கர்த்தருடைய பரிசுத்த வீடாக மாறும்.

Saints, 1:235

பிரதிஷ்டைக்காக மக்கள் ஆலயத்தில் கூடுதல்.

கூட்டம் தொடங்கிய அதிகாலையில், நூற்றுக்கணக்கான பரிசுத்தவான்கள் ஆலயத்துக்குள் திரண்டனர். எல்லா இருக்கைகளும் நிரம்பியதும், மக்கள் வாசலிலும் வெளியேயும் நின்று ஜன்னல்கள் வழியாகப் பார்த்தார்கள். ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படுவதைக் காண அனைவரும் உற்சாகமாக இருந்தனர்.

Saints, 1:235–36

பிரதிஷ்டைக்கான ஜெபத்தை ஜோசப் ஸ்மித் வாசித்தல்.

ஜோசப் ஆலயத்தை பிரதிஷ்டை செய்ய ஒரு ஜெபத்தை வாசித்தார். பரிசுத்தவான்கள் அவருக்குக் கீழ்ப்படிந்ததாக அவர் கர்த்தரிடம் கூறினார். அவர் கர்த்தரிடம் ஆலயத்தைத் தம்முடைய வீடாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:1–5

மக்கள் கண்களை மூடிக்கொண்டு ஜெபித்தல்.

ஆலயத்திற்கு வரும் அனைவரும் கர்த்தருடைய வல்லமையை உணர்ந்து, அது அவருடைய வீடு என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஜோசப் ஜெபித்தார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:13

சபையார் கர்த்தரைப் புகழ்தல்.

பரிசுத்தவான்கள் பாவம் செய்தபோது, ​​உடனடியாக மனந்திரும்ப வேண்டும் என்றும் ஜோசப் ஜெபித்தார். உலகம் முழுவதும் அவருடைய சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு வல்லமையைத் தருமாறு அவர் கர்த்தரிடம் கேட்டார். ஜெபத்திற்குப் பிறகு, ஒரு சேர்ந்திசைக் குழு “The Spirit of God.” என்ற புதிய பாடலைப் பாடியது. மக்கள் சந்தோஷத்தால் நிரப்பப்பட்டார்கள். அவர்கள் எழுந்து நின்று கர்த்தரைத் துதித்தார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:21–32; Hymns, no. 2; Saints, 1:237

ஆலயத்தின் மீது ஒரு பிரகாசமான ஒளி இறங்குதல்.

அன்று பலர் ஆலயத்தில் தூதர்களைப் பார்த்தார்கள். அவர்கள் வானத்திலிருந்து பிரகாசமான ஒளி ஆலயத்தின் மீது இறங்கி வருவதைக் கண்டார்கள். சிலர் அது ஒரு மேகம் போல இருப்பதாகச் சொன்னார்கள்; மற்றவர்கள் அது நெருப்பு போல இருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் அனைவரும் அந்த ஆலயம் ஒரு பரிசுத்தமான இடம் என்று உணர்ந்தார்கள். அது உண்மையிலேயே இப்போது கர்த்தருடைய வீடாக இருந்தது.

Saints, 1:237