வேதக் கதைகள்
நியூவெல் மற்றும் ஆன் விட்னி தீர்க்கதரிசி ஜோசப்பை சந்தித்தல்


“நியூவெல் மற்றும் ஆன் விட்னி தீர்க்கதரிசி ஜோசப்பை சந்தித்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“நியூவெல் மற்றும் ஆன் விட்னி தீர்க்கதரிசி ஜோசப்பை சந்தித்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

அக்டோபர் 1830–பிப்ரவரி 1831

2:25

நியூவெல் மற்றும் ஆன் விட்னி தீர்க்கதரிசி ஜோசப்பை சந்தித்தல்

கர்த்தரால் பதிலளிக்கப்பட்ட விசுவாச ஜெபங்கள்

ஆனும் நியூவெல் விட்னியும் ஜெபித்தல்.

ஆனும் நியூவெல் விட்னியும் ஒஹாயோவின் கர்த்லாந்தில் ஒரு கடை வைத்திருந்தனர். ஆன் ஒரு சபைக்குச் சென்றோ அல்லது கர்த்தரைப் பற்றிக் கற்றுக்கொண்டோ வளரவில்லை, ஆனால் அவள் அவரை அறிய விரும்பினாள். அவளும் நியூவெலும் திருமணமான பிறகு, அவர்கள் பலமுறை ஜெபித்து, தங்களை வழிநடத்தும்படி கர்த்தரிடம் கேட்டார்கள்.

Saints, 1:111–12

ஆனும் நியூவெலும் ஒரு தரிசனம் காணுதல்.

ஒரு இரவு ஜெபத்தின் போது, ​​ஆன் மற்றும் நியூவெல் ஒரு தரிசனத்தைக் கண்டனர். அந்த தரிசனத்தில், ஒரு மேகம் அவர்களுடைய வீட்டின் மேல் தங்கியது. தேவனுடைய ஆவி அவர்களை நிரப்பியது. மேகம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. பின்னர் அவர்கள் பரலோகத்திலிருந்து ஒரு சத்தத்தைக் கேட்டார்கள். அது அவர்களிடம், “கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளத் தயாராகுங்கள், ஏனெனில் அது வருகிறது” என்று சொன்னது.

Saints, 1:111

பார்லி பிராட்டிடமிருந்து சுவிசேஷம் பற்றி ஆன் கற்றுக்கொள்ளுதல்.

சிறிது காலத்திற்குப் பிறகு, பார்லி பிராட் கர்த்லாந்திற்கு வந்தார். அவரும் அவரது தோழர்களும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போதித்தார்கள். அவர்கள் போதித்ததை ஆன் கேட்டவுடன், அது உண்மை என்பதை அவள் உணர்ந்தாள். அவள் நியூவெலுடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ள வீட்டிற்குச் சென்றாள். விரைவில் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Saints, 1:112

ஜோசப்பும் எம்மா ஸ்மித்தும், ஆனையும் நியூவெலையும் சந்தித்தல்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு ஆணும் பெண்ணும் நியூவெலின் கடைக்கு வந்தனர். நியூவெலுக்கு அவர்களைத் தெரியாது, ஆனால் அந்த மனிதர் நியூவெலின் கையைக் குலுக்கி நியூவெலைப் பெயர் சொல்லி அழைத்தார். அந்த மனிதன், “நான் தீர்க்கதரிசி ஜோசப்” என்றார். நியூவெலின் ஜெபங்களுக்குக் கர்த்தர் பதிலளித்து வருவதாக அவர் விளக்கினார். அவர் ஆன் மற்றும் நியூவெலைச் சந்திக்க எம்மாவையும் ஜோசப்பையும் அனுப்பியிருக்கிறார்.

Saints, 1:113

ஆனும் நியூவெலும் ஜோசப் மற்றும் எம்மா ஸ்மித்தை தங்களோடு தங்க அழைக்கிறார்கள்.

நியூவெலும் ஆனும் தங்கள் கனவு நனவாகும் என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் ஜோசப்பையும் எம்மாவையும் தங்கள் வீட்டில் தங்கும்படி கேட்டார்கள். ஆனும் நியூவெல் இயேசுவையும் அவரது சுவிசேஷத்தையும் நேசித்தார்கள். அவர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் பரிசுத்தவான்களுக்கும் இரட்சகரின் சபைக்கும் கொடுத்தார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:23–27, 34–42; Saints, 1:114