வேதக் கதைகள்
லூசி மோர்லியும் அவரின் குடும்பமும்


“லூசி மோர்லியும் அவரின் குடும்பமும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“லூசி மோர்லியும் அவரின் குடும்பமும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

நவம்பர் 1830

2:43

லூசி மோர்லியும் அவரின் குடும்பமும்

பலர் நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்

லூசி மோர்லி மூன்று ஊழியக்காரர்களை அபிகாயில் டேனியல்ஸின் வீட்டிற்கு அழைக்கிறார்.

ஒரு நாள், 15 வயதான லூசி மோர்லி தனது பக்கத்து வீட்டு அபிகாயில் டேனியல்ஸ் என்பவருக்கு துணி நெய்வதற்கு உதவி செய்து கொண்டிருந்தார். அவர்கள் வேலை செய்யும் போது, கதவு தட்டும் சத்தம் கேட்டது. அங்கு மூன்று ஊழியக்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அபிகாயில் அவர்களை உள்ளே அழைத்தார். ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள இயேசு கிறிஸ்து தங்களை அனுப்பியதாக அவர்கள் சொன்னார்கள்.

Saints, 1:102-3

ஊழியக்காரர்கள் லூசி மற்றும் அபிகாயிலுக்கு மார்மன் புஸ்தகத்தைப் பற்றி கற்பித்தல்.

இயேசு ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்திருப்பதாக அம்மனுஷர் அபிகாயிலிடமும் லூசியிடமும் சொன்னார்கள். மார்மன் புஸ்தகத்தைப் பற்றியும் சொன்னார்கள்.

Saints, 1:103

அபிகாயில் ஊழியக்காரர்களை வீட்டை விட்டு வெளியேறச் செய்தல்.

அபிகாயில் கோபமடைந்தது லூசிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஊழியக்காரர்களை தன் வீட்டை விட்டு வெளியேறச் செய்தார்.

Saints, 1:103

லூசி தன் குடும்பத்தைப் சந்திக்க வருமாறு ஊழியக்காரர்களை கேட்கிறார்.

இந்த ஊழியக்காரர்கள் தேவனின் ஊழியர்கள் என்பதை லூசி அறிந்திருந்தார். சாலையின் கீழ் அமைந்துள்ள தன் குடும்பத்தை பார்க்குமாறு சொன்னார். “என் தந்தை இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் வசிக்கிறார்,“ என்று அவர் கூறினார். “அங்கு செல்லுங்கள், உங்களுக்கு உணவளித்து உபசரிப்பார்கள்.“

Saints, 1:103–4

ஊழியக்காரர்கள் லூசி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உணவு உண்கின்றனர்.

லூசி சரியாகச் சொன்னார். ஊழியக்காரர்கள் மோர்லியின் குடும்பப் பண்ணையில் நன்றாகச் சாப்பிட்டார்கள். லூசியின் பெற்றோர் சிட்னி ரிக்டனின் நண்பர்கள். தங்களிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்று அவர்கள் நம்பினர். தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் கற்றுக்கொடுக்க ஊழியக்காரர்களை அழைத்தார்கள்.

Saints, 1:104

லூசி, அபிகாயில், மற்றும் பலர் ஞானஸ்நானம் பெறுகின்றனர்.

அன்று இரவு, நள்ளிரவில், 17 பேர் ஞானஸ்நானம் பெற்றனர். அடுத்த சில நாட்களில், ஊழியக்காரர்கள் பேசுவதைக் கேட்க மேலும் 50 பேர் மோர்லியின் பண்ணைக்கு வந்தனர், அவர்கள் ஞானஸ்நானம் எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டனர். லூசியின் தோழியான அபிகாயில் டேனியல்ஸ் கூட ஊழியக்காரர்களைகளைப் பற்றிய தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அவரும் அவரின் கணவரும் சபையில் சேர முடிவு செய்தனர்.

Saints, 1:105; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:25, 37