வேதக் கதைகள்
ஒத்தாசைச் சங்கம்


“ஒத்தாசைச் சங்கம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“ஒத்தாசைச் சங்கம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

மார்ச் 1842

3:38

ஒத்தாசைச் சங்கம்

நாவூவின் பெண்கள் கர்த்தருக்கு சேவை செய்தல்

நாவூவில் கட்டப்பட்டு வரும் புதிய ஆலயம் பற்றி மார்கரெட் குக் மற்றும் சாரா கிம்பல் பேசுதல்.

மார்கரெட் குக் நாவூவில் வசித்து வந்தார். அவர் சாரா கிம்பலிடம் வேலை செய்து, தையல் வேலையில் உதவி செய்தார். அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, ​​நாவூவில் கட்டப்பட்டு வரும் புதிய ஆலயம் பற்றிப் பேச அவர்கள் விரும்பினர். அவர்கள் ஆலயத்துக்காக உற்சாகமாக இருந்தார்கள்.

Saints, 1:447

ஆலயப் பணியாளர்கள் பழைய ஆடைகளை அணிந்திருப்பதை மார்கரெட் கவனித்தல்.

ஒரு நாள், ஆலயம் கட்டும் பல ஆண்களின் ஆடைகள் பழையதாகவும், நைந்து போனதாகவும் இருப்பதை மார்கரெட் கவனித்தார். ஆண்களுக்குப் புதிய சட்டைகளைத் தைக்க தானும் சாராவும் ஒன்றாக வேலை செய்ய முடியுமா என்று அவர் யோசித்தார். சாராவுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. தொழிலாளர்களுக்கு உதவ ஒரு குழுவை உருவாக்குவது குறித்து அவரும் மார்கரெட்டும் மற்ற பெண்களிடம் பேசினர்.

Saints, 1:447–48

சபையின் ஒத்தாசைச் சங்கத்தை உருவாக்குவதற்காக ஜோசப் ஸ்மித் மார்கரெட், சாரா மற்றும் பிறருடன் சந்தித்தல்.

அவர்களுடைய யோசனையில் கர்த்தர் மகிழ்ச்சியடைந்ததாகவும், அவர்களுக்காக இன்னும் சிறந்த ஒன்றை வைத்திருந்ததாகவும் தீர்க்கதரிசி ஜோசப் கூறினார். மார்ச் 17, 1842 அன்று ஜோசப் அந்தப் பெண்களைத் தம்முடன் சந்திக்க அழைத்தார். ஆசாரியத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர் சபையின் பெண்களை ஒழுங்கமைத்தார். அவர்கள் தங்கள் குழுவை நாவூவின் பெண்கள் ஒத்தாசைச் சங்கம் என்று அழைக்க முடிவு செய்தனர்.

Saints, 1:448, 450–51

மார்கரெட் இரண்டு பெண்களுடன் பேசுதல்.

ஆலயத்தின் ஆசீர்வாதங்களுக்கும் நித்திய ஜீவனுக்கும் மக்கள் தயாராக உதவுமாறு ஜோசப் ஒத்தாசை சங்கத்தைக் கேட்டார். அவர்கள் இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.

Saints, 1:451

ஒத்தாசைச் சங்க உறுப்பினர்கள் தேவைப்படும் ஒரு குடும்பத்திற்கு உணவு கொண்டு வருதல்.

ஒத்தாசைச் சங்கம் ஏழைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் ஜோசப் கூறினார். ஏழைப் பெண்களும் கூட தேவைப்படுபவர்களுக்கு உதவ விரும்பினர்.

Saints, 1:449

ஒத்தாசைச் சங்கம் அமைக்கப்படுதல்

ஒத்தாசைச் சங்கம் அமைக்கப்பட்டது. எம்மா ஸ்மித் தலைவராக அழைக்கப்பட்டார். அவர் சாரா கிளீவ்லேண்ட் மற்றும் ஆன் விட்னி என்ற இரண்டு ஆலோசகர்களை அழைத்தார். அவர் செயலாளராக எலிசா ஆர். ஸ்னோவையும் அழைத்தார்.

Saints, 1:450

ஒத்தாசைச் சங்கத்தில் பெண்களுக்கு எம்மா கற்பித்தல்.

எம்மாவின் அழைப்பை நிறைவேற்ற கர்த்தர் உதவினார். கர்த்தருடைய சேவையில் மகத்தான காரியங்களைச் செய்ய முடியும் என்று எம்மா பெண்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அவர்கள் ஒவ்வொருவரும் நன்மை செய்வதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்று அவர் விரும்பினார். மிக முக்கியமாக, அவர் அவர்களிடம் சொன்னது, இயேசுவைப் போல மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்பதாகும். நாவூவில் உள்ள பல பெண்கள் ஒத்தாசைச் சங்கத்தில் சேர்ந்தனர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:3, 7; Saints, 1:451

உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சபையின் பெண்கள் எவ்வாறு உதவியிருக்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் ஒரு தொகுப்பு விளக்கம்.

ஆலய ஆசீர்வாதங்களுக்கு மக்கள் தயாராக அவர்கள் உதவினார்கள், மேலும் நாவூவில் தேவையில் இருந்த பல குடும்பங்களுக்கு உதவினார்கள். அப்போதிலிருந்து, உலகம் முழுவதும் உள்ள பெண்கள் ஒத்தாசைச் சங்கத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து, ஆலய ஆசீர்வாதங்களைப் பெற உதவுகிறார்கள்.

Saints, 1:451