“எலைஜா ஏபிள்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“எலைஜா ஏபிள்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
1838
எலைஜா ஏபிள்
விசுவாசம் மற்றும் தைரியத்தின் ஒரு ஊழியம்
எலைஜா ஏபிள் என்ற மனிதனை ஒரு ஊழியக்காரராக கர்த்தர் அழைத்தார். எலைஜா, யூனிஸ் மற்றும் சார்லஸ் பிராங்க்ளினுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பற்றிக் கற்றுக் கொடுத்தார். அவர் அவர்களிடம் மார்மன் புஸ்தகம் மற்றும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் பற்றி கூறினார். யூனிஸும் சார்லஸும் அவர் கற்பித்ததை நம்பி சபையில் சேர விரும்பினர். எலைஜா அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
Saints, 1:316
எலைஜா வேறொரு பட்டணத்தில் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளப் புறப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு ஒரு இரவு, அவர் தனது தோழி யூனிஸைப் பற்றி ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில், மார்மன் புஸ்தகம் உண்மையா அல்லது ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசியா என்பது யூனிஸுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. எலைஜா விழித்தெழுந்ததும், யூனிஸைப் பார்க்க உடனடியாகத் திரும்பி வந்தார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 75:27; Saints, 1:315–16
எலைஜா தன் வாசலில் நிற்பதைக் கண்டு யூனிஸ் ஆச்சரியப்பட்டாள்! எலைஜாவின் கனவு சரியானது: யூனிஸ் இனியும் மார்மன் புஸ்தகத்தையோ அல்லது ஜோசப் ஸ்மித்தையோ நம்பவில்லை.
Saints, 1:317
எலைஜா, ஒரு பள்ளியில் தான் பிரசங்கிப்பதைக் கேட்குமாறு யூனிஸிடம் கேட்டார். எலைஜாவின் வார்த்தைகளைக் கேட்டதும், அவள் மீண்டும் பரிசுத்த ஆவியை உணர்ந்தாள். சுவிசேஷம் உண்மை என்று அவளுக்குத் தெரியும்!
Saints, 1:317
இரண்டு வாரங்களில் மீண்டும் பிரசங்கிக்க வருவேன் என்று எலைஜா யூனிஸுக்கு வாக்குறுதி அளித்தார். ஆனால் ஊரில் இருந்த சிலர் அவர் திரும்பி வருவதை விரும்பவில்லை. எலைஜா சென்ற பிறகு, எலைஜா மக்களைக் கொன்றுவிட்டதாக அவர்கள் எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தார்கள். அவரைக் கண்டுபிடித்துத் தருபவருக்குப் பரிசு வழங்குவதாக அறிவித்தனர்.
Saints, 1:318
மக்கள் எலைஜாவைப் பற்றி பொய் சொல்கிறார்கள் என்பதை யூனிஸ் அறிந்திருந்தாள். அவர் யாரையும் கொல்லவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர், தேவனின் ஊழியராக இருந்தார். அவர்களுடைய பொய்கள் எலைஜா அவர்களுடைய ஊருக்குப் பிரசங்கிக்க வருவதைத் தடுக்காது என்பது அவளுக்குத் தெரியும். எலைஜா திரும்பி வருவார் என்று யூனிஸ் மக்களிடம் சொன்னாள். “தேவன் அவரைப் பாதுகாப்பார்,” என்று அவள் சொன்னாள்.
Saints, 1:318
எலைஜா திரும்பி வந்தார். அவர் முன்பு பிரசங்கித்த அதே பள்ளிக்கு வந்தார். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று விரும்பிய மக்களால் அது நிரம்பி வழிந்தது. எலைஜா கூட்டத்திற்கு முன்பாக நின்றார். அவரை கைது செய்ய விரும்பினால், அவர் கற்பிக்கத் தொடங்குவதற்கு முன்பு, இப்போதே அதைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இல்லையென்றால், அவர்கள் அவரைக் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்.
Saints, 1:318
யாரும் நகரவில்லை. எலைஜா காத்திருந்தார், ஆனால் கூட்டம் அமைதியாக அமர்ந்திருந்தது. எலைஜா ஒரு பாடலைப் பாடினார், ஒரு ஜெபத்தைச் சொன்னார், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போதித்தார். தேவனுடைய வல்லமை அவரோடு இருந்தது. அவர் கற்பித்தலை முடித்த பிறகு, அவர் தனது நண்பர்களான யூனிஸ் மற்றும் சார்லஸுடன் பேசி, சமாதானமாக தனது ஊழியத்தைத் தொடர்ந்தார்.
Saints, 1:319