வேதக் கதைகள்
ஜாக்சன் குடும்பம்


“ஜாக்சன் குடும்பம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“ஜாக்சன் குடும்பம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

மே–நவம்பர் 1856

4:1

ஜாக்சன் குடும்பம்

விசுவாசம் மற்றும் மீட்புப் பயணம்

இங்கிலாந்தின் லிவர்பூலில் ஒரு கப்பலில் ஏறும் ஜாக்சன் குடும்பம்.

முதல் குழு பரிசுத்தவான்கள் சால்ட் லேக் பள்ளத்தாக்குக்குச் சென்ற பிறகு, ஆயிரக்கணக்கான பிற பரிசுத்தவான்களும் சென்றனர். அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்தார்கள், கர்த்தர் அவர்களுக்கு உதவினார். இந்தப் பயணத்தை மேற்கொண்ட ஒரு குடும்பம் ஜாக்சன் குடும்பம். அவர்கள் இங்கிலாந்தில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறி, பரிசுத்தவான்கள் சீயோனைக் கட்ட உதவ உற்சாகமாகச் சென்றார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 136:1–11; Saints, 2:222–23

ஜாக்சன் குடும்பத்தினர் கப்பலில் பயணம் செய்தல்.

ஜாக்சன் குடும்பத்தினர் ஒரு கப்பலில் சமுத்திரத்தைக் கடந்தனர். பின்னர் அவர்கள் சால்ட் லேக் பள்ளத்தாக்குக்குச் செல்லும் வழியில் ஒரு ரயிலில் பயணம் செய்தனர். மீதமுள்ள தூரம் அவர்கள் நடந்து செல்ல வேண்டும்.

Saints, 2:222–23

ஜாக்சன் குடும்பத்தினர் தங்கள் கை வண்டியில் பாரம் ஏற்றுதல்.

அவர்கள் தங்கள் உணவு, உடைகள் மற்றும் அவர்கள் கொண்டு வர விரும்பும் பிற பொருட்களை எடுத்துச் செல்ல ஒரு சிறிய கை வண்டியை உருவாக்கினர். பல பரிசுத்தவான்கள் இந்த வழியில் பாதுகாப்பாக பள்ளத்தாக்கை அடைந்தனர்.

Saints, 2:223–26

ஜாக்சன் குடும்பத்தினர் தங்கள் கை வண்டியுடன் மேற்கு நோக்கி பயணிக்கின்றனர்.

எலிசபெத்தும் ஆரோன் ஜாக்சனும் தங்கள் கனமான கை வண்டியை இழுத்தனர். அவர்களின் குழந்தைகள், மார்த்தா, மேரி மற்றும் ஆரோன் ஜூனியர், நடந்தார்கள். இது கடின உழைப்பு. குளிர்காலத்திற்கு முன்பு பள்ளத்தாக்குக்கு சென்றுவிடுவோம் என்று அவர்கள் நம்பினர். ஆனால் இலையுதிர் காலம் வந்தபோது, ​​அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. குளிர் அடிக்கத் தொடங்கியது, அவர்களிடம் உணவு தீர்ந்து போனது.

Saints, 2:223–26, 229, 231–32

மேற்கு நோக்கி பயணிக்கும் பரிசுத்தவான்களுக்கு உதவுமாறு சால்ட் லேக்கில் உள்ள பரிசுத்தவான்களை பிரிகாம் யங் கேட்கிறார்.

சால்ட் லேக் சிட்டியில், பள்ளத்தாக்குக்கு வரும் பரிசுத்தவான்களைப் பற்றி பிரிகாம் யங் கண்டுபிடித்தார். அவர் அவர்களைப் பற்றி கவலைப்பட்டார். மறுநாள் சபையில், இந்தப் பரிசுத்தவான்கள் சிக்கலில் இருப்பதாக அவர் எல்லோரிடமும் கூறினார். பரிசுத்தவான்களுக்குத் தேவையான பொருட்களால் வண்டிகளை நிரப்பும்படி அவர் அவர்களிடம் கேட்டார். “செல்லுங்கள் அந்த மக்களை அழைத்து வாருங்கள்” என்றார் அவர்.

Saints, 2:229–30

மேற்கு நோக்கி பயணிக்கும் பரிசுத்தவான்களுக்கு உதவ சால்ட் லேக்கில் உள்ள பரிசுத்தவான்கள் பொருட்களை சேகரித்தல்.

கூட்டத்தில் இருந்த பெண்கள் தங்கள் இதமான காலுறைகளைக் கழற்றி வண்டிகளில் வைத்தார்கள். மற்றவர்கள் தங்கள் உணவு, போர்வைகள், காலணிகள் மற்றும் உடைகளைக் கொடுத்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு, 50க்கும் மேற்பட்ட ஆண்களும் 20 வண்டிகளும் உதவிக்காக பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டனர்.

Saints, 2:230

ஆரோன் ஜாக்சனும் பிற பரிசுத்தவான்களும் வடக்கு பிளாட் நதியைக் கடக்கிறார்கள்.

ஜாக்சன் குடும்பத்தினர் நடந்து செல்லும்போது, ​​பனி விழத் தொடங்கியது. ஆரோனுக்கு மிகவும் உடம்பு சரியில்லை. அவனுக்கு நடப்பது கடினமாக இருந்தது. பரிசுத்தவான்கள் உறைபனி நதியைக் கடக்க வேண்டியிருந்தது, இது ஆரோனை இன்னும் பலவீனப்படுத்தியது. அன்று இரவு, ஆரோன் இறந்தான். துரதிர்ஷ்டவசமாக, அவன் இல்லாமல் அவனது குடும்பம் தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது.

Saints, 2:232–34

ஜாக்சன்களும் மற்ற பரிசுத்தவான்களும் பனியில் தங்கள் கை வண்டிகளை இழுத்தல்.

மறுநாள் காலையில், தரையில் அதிக பனி இருந்தது. ஜாக்சன்களும் மற்ற பரிசுத்தவான்களும் பனியின் வழியாக தங்கள் கை வண்டிகளைத் தள்ளி இழுத்துச் சென்றனர். தேவன் தங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர்கள் ஒவ்வொரு நாளும் ஜெபித்தார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 136:29; Saints, 2:234–35

எலிசபெத் ஜாக்சன் தனது கணவரைப் பற்றி கனவு காணுதல்.

ஒரு இரவு, எலிசபெத் தன் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டாள். அவர்கள் பசியோடும், குளிராகவும் இருந்தனர். அவர்கள் சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு செல்வார்களா? அவள் தூங்கிவிட்டாள், அவள் ஆரோனைக் கண்டதாக கனவு கண்டாள். அவன், “உற்சாகமா இரு, எலிசபெத்” என்றான். உதவி வருவதாக அவன் அவளிடம் கூறினான்.

Saints, 2:235–36

பரிசுத்தவான்களுக்கு உதவ வரும் மக்கள்.

ஆரோன் சொன்னது சரி. விரைவில், சால்ட் லேக்கிலிருந்து வந்தவர்கள் தங்கள் வண்டிகளுடன் வந்தனர். அவர்கள் பரிசுத்தவான்களுக்கு உணவு மற்றும் உடைகளைக் கொடுத்தார்கள். பரிசுத்தவான்கள் ஆரவாரம் செய்து சிரித்தனர், அந்த ஆண்களை கட்டிப்பிடித்தனர். அவர்கள் ஒரு பாடலைப் பாடி, தங்கள் ஜெபங்களுக்கு பதிலளித்ததற்காக பரலோக பிதாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 136:28; Saints, 2:236

பயணிக்கும் பரிசுத்தவான்கள் இறுதியாக சால்ட் லேக் பள்ளத்தாக்கை வந்தடைதல்.

அவர்கள் இறுதியாக பள்ளத்தாக்கை அடைந்தபோது, ​​அது ஞாயிற்றுக்கிழமை. சால்ட் லேக் சிட்டியில் உள்ள சபை உறுப்பினர்களிடம், சபைக்குச் செல்வதற்குப் பதிலாக, வந்திருந்த பரிசுத்தவான்களை வரவேற்கச் செல்ல வேண்டும் என்று பிரிகாம் யங் கூறினார். அவர்கள் குளிராகவும் சோர்வாகவும் இருந்த பரிசுத்தவான்களை வரவேற்று, தங்கள் வீடுகளில் தங்க அழைத்தனர்.

Saints, 2:239–40