“இயேசு கிறிஸ்து சபை ஸ்தாபிக்கப்பட்டது,”கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“இயேசு கிறிஸ்து சபை ஸ்தாபிக்கப்பட்டது,”கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
ஏப்ரல் 1830
இயேசு கிறிஸ்து சபை ஸ்தாபிக்கப்பட்டது
ஒரு சந்தோஷமான சபைக் கூட்டம்
மார்மன் புஸ்தகம் இப்போது அச்சிடப்பட்டுவிட்டது, மேலும் தேவனின் ஆசாரியத்துவம் மீண்டும் பூமியில் கிடைத்துவிட்டது. இயேசு கிறிஸ்து சபையை ஸ்தாபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜோசப் ஸ்மித்திடம் கர்த்தர் கூறினார்.
Saints, 1:84
ஏப்ரல் 6, 1830 இல், சபையை ஸ்தாபிக்க விட்மரின் குடும்ப வீட்டிற்கு சுமார் 40 பெண்களும் ஆண்களும் வந்தனர். கர்த்தர் ஜோசப்பையும் ஆலிவரையும் தன் சபையை வழிநடத்த அழைத்திருந்தார். ஜோசப் மற்றும் ஆலிவர் தலைவர்களாக இருப்பதற்கு சம்மதம் தெரிவிக்கும்வண்ணம் கைகளை உயர்த்தும்படி மக்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:1–3; Saints, 1:84
அடுத்ததாக, ஜோசப்பும் ஆலிவரும் திருவிருந்தை ஆசீர்வதித்தனர். இயேசு கிறிஸ்துவை நினைவுகூரும் வண்ணம் அதை மக்களுக்குக் கொடுத்தனர். ஜோசப்பும் ஆலிவரும் ஞானஸ்நானம் எடுத்தவர்களின் தலையில் தங்கள் கைகளை வைத்தார்கள். அவர்கள் அவர்களை சபையின் உறுப்பினர்களாக உறுதிசெய்து, பரிசுத்த ஆவியின் வரத்தை அவர்களுக்கு வழங்கினார்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:75–79; Saints, 1:85
புதிய சபைக்கான செய்தியை கர்த்தர் ஜோசப்புக்கு கொடுத்தார். சபையில் நடந்தவற்றை எழுதும்படிச் சொன்னார். ஜோசப் ஸ்மித் அவருடைய தீர்க்கதரிசி என்று அவர் சொன்னார். ஜோசப்பிடம் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை அவர்கள் பின்பற்றினால், அவர் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று சபை உறுப்பினர்களுக்கு அவர் வாக்களித்தார். பிசாசிற்கு அவர்கள் மேல் வல்லமை இருக்காது.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:1–6; Saints, 1:85
இயேசு கிறிஸ்து சபை கிடைத்ததில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்! இந்த கூட்டத்திற்குப் பிறகு, ஜோசப்பின் அம்மா அப்பா உட்பட அதிகமானோர் ஞானஸ்நானம் பெற்றனர். அவரது அப்பாதண்ணீரிலிருந்து வெளியே வந்ததும், ஜோசப் அவரை இறுக்கமாக அணைத்துக்கொண்டார் “என் அப்பா இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபையில் ஞானஸ்நானம் எடுப்பதைக் காண நான் உயிரோடிருக்கிறேன்!“ என அவர் சொன்னார்.
Saints, 1:86
அன்று இரவு, ஜோசப் தனியாக இருக்க வேண்டுமென்று காட்டிற்குச் சென்றார். அவர் உள்ளம் சந்தோஷத்தால் நிறைந்திருந்தது. பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அவர் முதன்முதலில் பார்த்ததிலிருந்து 10 வருடங்கள் ஆகியிருந்தன. அன்றிலிருந்து நிறைய நடந்துவிட்டன. இயேசு கிறிஸ்துவின் சபையை மறுஸ்தாபித்ததில் அல்லது மீண்டும் கொண்டுவந்ததில் ஜோசப் மிகவும் நன்றியுள்ளவராக இருந்தார்!
Saints, 1:86