வேதக் கதைகள்
கர்த்தர் ஆலிவர் கௌட்ரியை அனுப்புதல்


“கர்த்தர் ஆலிவர் கௌட்ரியை அனுப்புதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“கர்த்தர் ஆலிவர் கௌட்ரியை அனுப்புதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

1828–1829

3:11

கர்த்தர் ஆலிவர் கௌட்ரியை அனுப்புதல்

தேவன் நம்மோடு எவ்வாறு பேசுகிறார் என்று கற்றுக்கொள்ளுதல்

ஜோசப்பும் எம்மா ஸ்மித்தும்அவர்களின் சிறிய வீட்டின் முன் வேலை செய்கிறார்கள்.

ஜோசப்பும் எம்மாவும் மார்மன் புஸ்தகத்தை தொடர்ந்து மொழிபெயர்த்தனர். பணி கடினமாக இருந்தது, மேலும் அவர்கள் தங்கள் பண்ணை நிலத்திலும் வேலை செய்ய வேண்டியிருந்தது மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்க்க பரலோக பிதா ஒருவரை அனுப்பி உதவுமாறு ஜோசப் ஜெபித்தார்.

Saints, 1:56, 58

ஆலிவர் கௌட்ரி பள்ளி மணியை அடிக்கிறார்.

மிகுந்த தொலைவிலுள்ள நியூயார்க்கில், ஆலிவர் கௌட்ரி, ஒரு இளம் பள்ளி ஆசிரியர், ஜோசப் ஸ்மித்தின் பெற்றோருடன் வசித்து வந்தார். ஆலிவர் ஜோசப்பின் இளைய சகோதர சகோதரிகளுக்கு கற்பித்தார்.

Saints, 1:58-59

ஆலிவர் கௌட்ரி ஒரு நெருப்பிடத்தின் அருகே அமர்ந்து ஜோசப் ஸ்மித்தின் பெற்றோருடன் பேசுகிறார்.

ஜோசப்பை குறித்தும் தங்கத் தகடுகளைப் பற்றியும் ஆலிவர் கேள்விப்பட்டார். அவர் ஆர்வமாக இருந்தார். ஜோசப்பின் பெற்றோரிடம் பேசினார். ஜோசப் தேவனுடைய பணியைச் செய்கிறார் என்று அவர்கள் ஆலிவரிடம் சொன்னார்கள்.

Saints, 1:59

ஜோசப் ஸ்மித்தைப் பற்றி மேலும் அறிய ஆலிவர் கௌட்ரி தனது படுக்கையினருகில் முழங்காலில் நின்று ஜெபம் செய்கிறார்.

இப்போது ஆலிவர் இன்னும் ஆர்வமாக இருந்தார். இது தேவனுடைய பணிதானா என்பதை கண்டறிய ஜெபம் செய்து தானே அறிய வேண்டுமென ஜோசப்பின் பெற்றோர் ஆலிவரிடம் கூறினார்கள். எனவே ஒரு இரவன்று, முழு இருதயத்தோடு ஆலிவர் ஜெபம் செய்தார். தேவன் அவர் மனதில் சமாதானத்தை தந்தருளினார். ஜோசப் ஸ்மித் தேவனுடைய ஊழியக்காரர் என்று ஆலிவர் அறிந்திருந்தார். ஜோசப்பிற்கு உதவ வேண்டுமென அவர் உணர்ந்தார்.

Saints, 1:60

ஆலிவர் கௌட்ரியும் ஜோசப் ஸ்மித்தும் ஒரு நெருப்பிடம் அருகே அமர்ந்துள்ளனர். எம்மா சில கையெழுத்துப் பக்கங்களை வைத்திருக்கிறார்.

பள்ளி ஆண்டு முடிந்ததும், ஆலிவர் ஜோசப் மற்றும் எம்மாவை சந்திக்க சென்றார். ஜோசப்பும் ஆலிவரும் தங்கத் தகடுகளைப் பற்றியும் தேவனுடைய பணியைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டு தாமதமாகத் தூங்கினார்கள்.

Saints, 1:60

ஆலிவர் கௌட்ரி ஒரு கையெழுத்துப் பக்கத்தில் எழுதுகிறார்.

ஜோசப் மொழிபெயர்க்க தான் எழுதப்போவதாக ஆலிவர் கூறினார். இயேசுவைக்குறித்து அவர் என்ன கற்றுக்கொண்டிருந்தாரோ அது அவரைக் கவர்ந்தது. அவரிடமும் கேள்விகள் இருந்தன, ஆனாலும் பலத்த விசுவாசம் வேண்டுமென விரும்பினார்.

Saints, 1:61

ஆலிவர் கௌட்ரியும் ஜோசப் ஸ்மித்தும் ஜன்னலினருகே நாற்காலிகளில் அமர்ந்துள்ளனர்.

தீர்க்கதரிசி ஜோசப் மூலம் ஆலிவருக்கு கர்த்தர் ஒரு செய்தியை கொடுத்தார். அவர் ஜெபம் செய்த அந்த இரவை நினைவில் கொள்ளுமாறு ஆலிவரிடம் சொன்னார். தேவன் அவருக்கு சமாதானத்தை தந்தருளினார். இந்த ஜெபத்தை தேவன் மாத்திரமே அறிந்திருந்தார். ஆலிவரின் விசுவாசமானது இன்னும் பலப்பட்டது. அவர் ஜோசப்புக்கு தொடர்ந்து உதவி செய்தார், கர்த்தர் தேவன் நம்மிடம் எப்படிப் பேசுகிறார் என்பதைப் பற்றிய பல காரியங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:14–24; 8:1–3; 9:7–9; Saints, 1:62–64