“நித்திய திருமணம் மற்றும் குடும்பங்கள்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“நித்திய திருமணம் மற்றும் குடும்பங்கள்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
1843–1846
நித்திய திருமணம் மற்றும் குடும்பங்கள்
இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் முத்திரிக்கப்படுதல்
எம்மாவும் ஜோசப்பும் திருமணம் செய்துகொண்டபோது, அவர்கள் இறந்தவுடன் அவர்களின் திருமணம் முடிவுக்கு வரும் என்று நம்பினர். எல்லா திருமணங்களும் இப்படித்தான் இருந்தன. ஆனால் பின்னர் திருமணங்களும் குடும்பங்களும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கர்த்தர் ஜோசப்பிடம் கூறினார்.
Saints, 1:413
கர்த்தர் ஜோசப்புக்கு நித்திய திருமணத்தைப் பற்றிக் கற்பித்தார். ஆசாரியத்துவத்தின் வல்லமையின் மூலம், ஒரு ஆணும் பெண்ணும் கர்த்தருடன் ஒரு உடன்படிக்கை செய்ய முடியும். அவர்கள் தங்கள் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், அவர்களின் திருமணம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கர்த்தர் வாக்குறுதி அளிக்கிறார். இது முத்திரிக்கப்படுதல் என்று அழைக்கப்படுகிறது. விரைவில், ஜோசப்பும் எம்மாவும் நித்தியத்திற்கும் முத்திரையிடப்பட்டனர்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:7, 19–24; Saints, 1:413, 432–33, 481–82, 492, 502–3
ஒரு ஆணும் பெண்ணும் முத்திரிக்கப்படும்போது, அவர்களுடைய பிள்ளைகள் அவர்களுடன் முத்திரிக்கப்படுவார்கள் என்பதையும் ஜோசப் கற்றுக்கொண்டார். இயேசு கிறிஸ்துவின் வல்லமையால், அவர்களுடைய குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்க முடியும். இந்த ஆசீர்வாதத்தைப் பற்றி ஜோசப் பரிசுத்தவான்களிடம் சொன்னபோது, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்! அவர்கள் ஒன்றாக முத்திரையிடப்பட உற்சாகமாயிருந்தனர்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 131:2; 132:6–7; Saints, 1:492–93, 580
பின்னர், ஆலயத்தில் முத்திரித்தல் செய்யப்பட வேண்டும் என்று கர்த்தர் கற்பித்தார். நாவூவில் உள்ள ஆலயத்தில் ஒன்றாக முத்திரிக்கப்படும்படிக்கு பரிசுத்தவான்கள் கடுமையாக உழைத்தனர். ஆலயம் தயாரானதும், பல குடும்பங்கள் முத்திரிக்கப்பட்டன. இறந்த குடும்ப உறுப்பினர்களுடனும் அவர்கள் முத்திரிக்கப்பட்டனர். இந்த ஆசீர்வாதத்திற்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள்!
Saints, 1:579–80