“சாட்சிகள் மார்மன் புஸ்தகத் தகடுகளைக் காணுதல், “ கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“சாட்சிகள் மார்மன் புஸ்தகத் தகடுகளைக் காணுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்.
மார்ச்-செப்டம்பர் 1829
சாட்சிகள் மார்மன் புஸ்தகத் தகடுகளைக் காணுதல்
உலகிற்கு சாட்சியமளித்தல்
ஜோசப், எம்மா மற்றும் ஆலிவர் ஆகியோர் பென்சில்வேனியாவில் உள்ள ஸ்மித் வீட்டில் தங்கத் தகடுகளை தொடர்ந்து மொழிபெயர்த்தனர். ஆனால் அவர்களது ஊரில் உள்ளவர்கள் அவர்களைத் தடுக்க விரும்பினர். ஆலிவருக்கு நியூயார்க்கில் வசித்து வந்த டேவிட் விட்மர் என்ற நண்பர் இருந்தார். மொழிபெயர்ப்பை முடிக்க விட்மர் குடும்பத்துடன் தங்கலாமா என்று டேவிட்டிடம் ஆலிவர் கேட்டார்.
Saints, 1:68
டேவிட் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஜோசப், எம்மா மற்றும் ஆலிவர் ஆகியோரை தங்கள் வீட்டிற்கு வரவேற்றனர். இப்போது அவர்களால் மொழிபெயர்ப்பில் சமாதானமாக வேலை செய்ய முடிந்தது. விட்மர் வீட்டில் பலர் வசித்து வந்தனர். அதனால், டேவிட்டின் தாய் மேரிக்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருந்தது.
Saints, 1:68–70
ஒரு நாள், மேரி வேலை செய்து கொண்டிருந்தபோது, தூதன் மரோனி அவளைச் சந்தித்தார். அதிகப்படியான வேலைகள் அனைத்தும் அவளை சோர்வடையச் செய்வது தனக்குத் தெரியும் என்று கூறினார். அவளின் விசுவாசத்தை பலப்படுத்த விரும்பினார். அவர் ஒரு பையைத் திறந்து தங்கத் தகடுகளை வெளியே எடுத்தார். பக்கங்களைப் புரட்டி அதில் எழுதியிருந்ததை மேரிக்கு காட்டினார். அவள் ஆசீர்வதிக்கப்படுவாள் என்று மேரிக்கு வாக்களித்தார்.
Saints, 1:70–71
தகடுகள் உண்மையானவை என்று சிலர் நம்பவில்லை. தகடுகளை யாருக்கும் காட்டக்கூடாது என்ற கர்த்தரின் கட்டளைக்கு ஜோசப் கீழ்ப்படிந்திருந்தார். இன்னும் மூன்று சாட்சிகள் தகடுகளைப் பார்க்க அனுமதிப்பதாக கர்த்தர் சொன்னார். டேவிட் விட்மர், மார்ட்டின் ஹாரிஸ் மற்றும் ஆலிவர் கௌட்ரி ஆகியோர் தாங்கள் சாட்சிகளாக இருக்க முடியுமா என்று கேட்டார்கள். அவர்கள் இருக்கலாம் என்று கர்த்தர் சொன்னார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 5:11-12.; 17; Saints, 1:73
ஜோசப், மார்ட்டின், ஆலிவர் மற்றும் டேவிட் ஆகியோர் காட்டுக்குள் சென்றனர். அவர்கள் முழங்காலிட்டு, தகடுகளைப் பார்க்க முடியுமா என்று தேவனிடம் மாறி மாறிக் கேட்டார்கள், ஆனால் எதுவும் நடக்கவில்லை.
Saints, 1:73
அவர்களின் ஜெபத்திற்கு பதில் கிடைக்காததற்கு தான் காரணம் என்று மார்ட்டின் ஹாரிஸ் உணர்ந்தார். மார்ட்டின் சென்று விட்டார் , மற்றவர்கள் தொடர்ந்து ஜெபம் செய்தனர்.
Saints, 1:73
அப்போது ஒரு தூதன் பிரகாசமான வெளிச்சத்துடன் தோன்றினார். அவர் ஆலிவருக்கும் டேவிடுக்கும் தங்கத் தகடுகளையும் அதிலுள்ள எழுத்துக்களையும் காட்டினார். தேவனின் வல்லமையால் தகடுகளை ஜோசப் மொழிபெயர்த்தார் என்றும் அந்த மொழிபெயர்ப்பு சரியானது என்றும் சொன்ன தேவ குரலை அவர்கள் கேட்டார்கள். அவர்கள் பார்த்ததையும் கேட்டதையும் அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்றும் தேவன் சொன்னார்.
“The Testimony of Three Witnesses”; Saints, 1:73–74
ஜோசப் மார்ட்டினைத் தேடிச் சென்றார். அவர் இன்னும் ஜெபித்துக் கொண்டிருந்தார். ஜோசப் அவருடன் ஜெபம் செய்தார். பின்னர் தூதன் தோன்றி, ஆலிவருக்கும் டேவிடுக்கும் செய்தது போலவே மார்ட்டினிடமும் தகடுகளைக் காட்டினார்.
Saints, 1:74
அடுத்ததாக, மேரி விட்மரைப் பார்க்க சென்ற தனது பெற்றோரைக் தேடி ஜோசப் சென்றார். மற்றவர்கள் தகடுகளைப் பார்த்ததில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார் என்று அவர்களிடம் சொன்னார். ஜோசப் உண்மையைத் தான் சொன்னார் என்று இப்போது சாட்சிகள் மக்களுக்குச் சொல்ல முடியும். சாட்சிகளில் ஒருவராக தேவன் தன்னை அனுமதித்ததில் தான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் என்று மார்ட்டின் எல்லோரிடமும் கூறினார்.
Saints, 1:74–75
சில நாட்களுக்குப் பிறகு, கர்த்தர் ஜோசப்பிடம் இன்னும் எட்டு பேருக்கு அதாவது—அவருடைய தந்தை, அவருடைய இரண்டு சகோதரர்கள், டேவிட்டின் நான்கு சகோதரர்கள் மற்றும் டேவிட்டின் மைத்துனர் ஆகியோரிடம் தங்கத் தகடுகளைக் காட்டச் சொன்னார். அவர்கள் தகடுகளைப் பிடித்து பார்த்து பக்கங்களைப் புரட்டினார்கள். தகடுகள் உண்மையானவை என்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள்
“The Testimony of Eight Witnesses”; Saints, 1:75
மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பு இப்போது முடிந்தது. ஜோசப் தங்கத் தகடுகளை தூதன் மரோனியிடமே திரும்பக்கொடுத்தார். இப்போது புஸ்தகத்தின் பிரதிகளை அச்சிடுவதற்கான நேரம் வந்துவிட்டது, அதனால் அனைவரும் அதைப் படித்து இயேசு கிறிஸ்துவைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம்.
Saints, 1:75–76
மார்மன் புஸ்தகத்தை அச்சிடுவதற்கு நிறைய பணம் செலவானது. மார்ட்டின் ஹாரிஸ் தனது பண்ணையின் ஒரு பகுதியை தியாகம் செய்து பணம் கொடுத்தார். அவர் மார்மன் புஸ்தகம் உண்மை என்று அறிந்ததால் இதைச் செய்தார். புஸ்தகத்தின் ஒவ்வொரு பிரதியிலும் அனைவரும் படிப்பதற்காக மார்ட்டின் மற்றும் மற்ற சாட்சிகளின் சாட்சியங்கள் வைக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் தங்கள் சாட்சியத்தை ஒருபோதும் மறுத்ததில்லை.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:26-27-27, 34–35; Saints, 1:76–78