வேதக் கதைகள்
எம்மாவுக்கான ஒரு வெளிப்படுத்தல்


“எம்மாவுக்கான ஒரு வெளிப்படுத்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“எம்மாவுக்கான ஒரு வெளிப்படுத்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

ஜூலை 1830

2:51

எம்மாவுக்கான ஒரு வெளிப்படுத்தல்

கர்த்தரின் பணியைச் செய்ய அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவள்

ஜோசப் எம்மாவிடம் கை அசைத்துவிட்டு விடைபெறுதல்.

எம்மா மற்றும் ஜோசப்பின் வாழ்க்கை மிக விரைவாக மாறிக்கொண்டிருந்தது. விவசாயத்தில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கர்த்தர் ஜோசப்பிடம் கூறினார். மாறாக, இயேசு கிறிஸ்துவைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதிலும், கர்த்தருடைய சபை வளர உதவுவதிலுமே ஜோசப் தனது நேரத்தை செலவிட வேண்டும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:7-9; Saints, 1:96

ஜோசப் செல்லும்போது எம்மா ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறார்.

இந்த மாற்றம் குறித்து எம்மாவுக்கு பல கேள்விகள் இருந்தன. ஜோசப் கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தபோது எம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கர்த்தருக்கும் அவருடைய சபைக்கும் அவளும் உதவலாமா?

Saints, 1:96

எம்மாவும் ஜோசப்பும் சிரிக்கிறார்கள்.

ஜோசப்புக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வெளிப்படுத்தல் மூலம் கர்த்தர் எம்மாவிடம் பேசினார். அவர் “எம்மா ஸ்மித், என் மகளே“ என்று அவளை அழைத்தார். அவர் எம்மாவிடம் தான் அவளை தேர்ந்தெடுத்திருப்பதாகவும், தனது பணியைச் செய்ய அழைத்திருப்பதாகவும் சொன்னார். அவள் ஒரு விசேஷமான பெண்ணாக இருந்தாள், எம்மாவை வைத்து செய்ய பெரிய காரியங்கள் அவரிடம் இருந்தன.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:1-3

எம்மா சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்.

கர்த்தர் எம்மாவை ஜோசப்புடன் பயணம் செய்யச் சொன்னார். எம்மா சபை உறுப்பினர்களுக்கு வேதத்தை விளக்கமாகக் கற்றுக்கொடுப்பாள் என்று கர்த்தர் கூறினார். அவர் எம்மாவிடம் தனது வாழ்க்கையில் அவருக்கு முதலிடம் கொடுக்கவும், தனது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கவும் சொன்னார். எம்மாவுக்கு அவருடைய ஆவி கிடைக்கும் என்று அவர் வாக்களித்தார். எம்மா கற்றுக் கொள்ளவும், வளரவும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறவும் அவர் விரும்பினார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:2, 6–10, 15

சபை கூட்டத்தில் எம்மா ஒரு பாடலை வழி நடத்துகிறார்.

கர்த்தர் எம்மாவிடம் தன் பிள்ளைகள் பாடக்கேட்பது தனக்கு பிரியமானதெனச் சொன்னார். அவருடைய பரிசுத்தவான்களின் பாடல்கள் அவருக்கு ஒரு ஜெபம் போன்றது என்றார். பரிசுத்தவான்கள் ஒன்றாக இணைந்து பாடக்கூடிய பாடல்களை ஒரு புத்தகமாக உருவாக்குமாறு அவர் எம்மாவிடம் கேட்டுக்கொண்டார். எம்மா கர்த்தரைப் பற்றியும் அவரது சுவிசேஷத்தை பற்றியதான பல அழகான பாடல்களைக் கண்டறிந்து ஒரு பாடல் புத்தகத்தில் வைத்தாள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:11–12; Saints, 1:221–22

எம்மாவும் ஜோசப்பும் பக்கத்து வீட்டாரை நோக்கி கையசைக்கிறார்கள்.

எம்மா மற்றும் ஜோசப்பின் வாழ்க்கை தொடர்ந்து மாறியது, ஆனாலும் கர்த்தர் தன்னை நேசிப்பதையும் தனக்காக ஒரு நோக்கம் வைத்திருப்பதையும் எம்மா அறிந்திருந்தாள். அவள் கர்த்தருக்கும் தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஊழியம் செய்தாள். இயேசுவின் சபை வளர அவள் உதவி செய்தாள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:13–15; Saints, 1:221–23