வேதக் கதைகள்
கனடாவுக்கான பார்லியின் ஊழியம்


“கனடாவுக்கான பார்லியின் ஊழியம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“கனடாவுக்கான பார்லியின் ஊழியம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

ஏப்ரல்–ஜூன் 1836

3:49

கனடாவுக்கான பார்லியின் ஊழியம்

கர்த்தருடைய வாக்குறுதிகளில் விசுவாசத்தைக் காட்டுதல்

கர்த்லாந்து ஆலயத்துக்கு அருகில் நடந்து செல்லும் சபைத் தலைவர்கள்.

கரத்லாந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட உடனேயே, சபையின் பல தலைவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஊழியங்களுக்குச் சென்றனர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:81; 109:22–23; 112:28–29; Saints, 1:249

பார்லி பிராட் தனது மனைவியின் படுக்கையருகில் அமர்ந்திருத்தல்.

பார்லி பிராட் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதை விரும்பினார். ஆனால் தாங்க்புல் எனும் பெயருடைய அவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அவர்களிடம் அதிக பணமும் இல்லை.

Saints, 1:249

பார்லி மற்றும் தாங்க்புலை ஹீபர் கிம்பல் ஆசீர்வதித்தல்.

பார்லியின் நண்பரும் அப்போஸ்தலர்களில் ஒருவருமான ஹீபர் கிம்பல் சந்திக்க வந்தார். அவர் பார்லிக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்து, கனடாவில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்றார். ஆசீர்வாதத்தில், தாங்க்புல் நலமடைவார் என்று ஹீபர் வாக்களித்தார். அவளுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும், பார்லிக்குத் தேவையான பணத்தைப் பெற கர்த்தர் உதவுவார் என்றும் அவர் உறுதியளித்தார்.

Saints, 1:249–50

தாங்க்புலிடம் விடைபெறும் பார்லி.

தாங்க்புல் மற்றும் பார்லி திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் அவர்கள் கர்த்தருடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்திருந்தார்கள். கனடாவில் தாங்க்புலிடமிருந்து வெகு தொலைவில் இருப்பது கடினமாக இருந்தாலும், பார்லி சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள புறப்பட்டார்.

Saints, 1:250

கனடாவில் பார்லியின் ஊழியம்.

கனடாவில், பார்லி மக்களுக்குக் கற்பிக்கக்கூடிய இடங்களைத் தேடினார். சபைகளிலும் பிற கட்டிடங்களிலும் கற்பிக்க முடியுமா என்று கேட்டார். எல்லோரும் முடியாது என்றார்கள்.

Saints, 1:252–53

ஜான் மற்றும் லியோனோரா டெய்லரை பார்லி சந்தித்தல்.

பின்னர் பார்லி, ஜான் மற்றும் லியோனோரா டெய்லரை சந்தித்தார். அவர்கள் இயேசு கிறிஸ்துவையும் வேதாகமத்தையும் நேசித்தார்கள். பார்லி கற்பித்தது வேதாகமத்திலிருந்து வேறுபட்டதில்லயா என்று ஜான் கேட்டார்.

Saints, 1:252–53

பார்லியும் ஜானும் பேசிக்கொண்டிருத்தல்.

இயேசு, தீர்க்கதரிசிகள், ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியைப் பற்றி தான் போதித்ததாக பார்லி கூறினார். அந்த விஷயங்கள் எல்லாம் வேதாகமத்தில் இருந்தன. ஜான் கேட்டார், “ஜோசப் ஸ்மித் மற்றும் மார்மன் புஸ்தகம் எதற்கு?” வேதாகமத்தைப் போலவே மார்மன் புஸ்தகமும் உண்மை என்று தனக்குத் தெரியும் என்றும், ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசி என்றும் பார்லி ஜானிடம் கூறினார்.

Saints, 1:253

ஒரு பரிசுத்தவான் குழுவுக்கு பார்லி போதித்தல்

பார்லி சொன்னதை ஜான் நம்பினார். அவர் மார்மன் புஸ்தகத்தைப் படித்தார், அது உண்மையென்று அறிந்தார். ஜானும் லியோனோராவும் தங்கள் நண்பர்களான ஜோசப், மெர்சி, மேரி பீல்டிங் மற்றும் பிறரை பார்லி கற்பிப்பதைக் கேட்க அழைத்தனர். பலர் ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்ந்தனர்.

Saints, 1:254–55

கனடாவில் உள்ள தனது நண்பர்களிடம் விடைபெறும் பார்லி.

பார்லி மகிழ்ச்சியாக இருந்தார், ஆனால் அவர் கர்த்லாந்தில் உள்ள தாங்க்புல்லிடம் செல்ல விரும்பினார். கனடாவில் உள்ள தனது புதிய நண்பர்களிடம் அவர் விடைபெற்றார். அவர் அவர்களிடம் கைகுலுக்கியபோது, ​​அவருடைய குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள உதவுவதற்காக அவர்கள் அவருக்குப் பணம் கொடுத்தார்கள்.

Saints, 1:255–56

ஒன்றாக கனடாவில் பார்லியும் தாங்க்புலும்.

பார்லி வீட்டிற்கு வந்தபோது, ​​தாங்க்புல் மிகவும் நன்றாக இருப்பதைக் கண்டார். பார்லி மார்மன் புஸ்தகத்தின் அதிக பிரதிகளைப் பெற்று, சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ள கனடா திரும்பினார். இந்த முறை, தாங்க்புல் அவருடன் சென்றார்.

Saints, 1:256

பார்லியும் தாங்க்புலும் தழுவிக் கொள்ளுதல்

விரைவில் தாங்க்புல் மற்றும் பார்லி தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பதை அறிந்து கொண்டனர். ஹீபர் பார்லிக்கு அளித்த ஆசீர்வாதத்தை அவர்கள் நினைவு கூர்ந்தனர். அந்த ஆசீர்வாதத்தில் கர்த்தர் வாக்குறுதியளித்த அனைத்தும் நிறைவேறுவது போல் அவர்கள் உணர்ந்தார்கள்.

Saints, 1:256