“ஒஹாயோவில் கூடிச் சேருதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“ஒஹாயோவில் கூடிச் சேருதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
டிசம்பர் 1830–மே 1831
ஒஹாயோவில் கூடிச்சேருதல்
லூசி ஸ்மித்தின் விசுவாசமும் அற்புதமும்
ஒஹாயோவில், அதிகமான மக்கள் சபையில் சேர்ந்தனர். மற்ற இடங்களில் வாழும் பரிசுத்தவான்கள் ஒஹாயோவில் கூட வேண்டும் என்று கர்த்தர் ஜோசப் ஸ்மித்திடம் கூறினார். அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். ஆனால் அவர்கள் கூடிச்சேர்ந்த பிறகு, பரிசுத்தவான்களுக்குத் தம்முடைய நியாயப்பிரமாணத்தைக் கற்பிப்பதாகவும், தம்முடைய பணியைச் செய்ய அவர்களுக்கு வல்லமையை அருளி ஆசீர்வதிப்பதாகவும் கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 37; 38:32; Saints, 1:109–110
ஜோசப்பின் தாயார் லூசியும் சுமார் 80 சபை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் நியூயார்க்கில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஒஹாயோவுக்குச் சென்றனர். ஒரு பகுதி தூரம் , அழைத்துச் செல்லும் ஒரு படகில் அவர்கள் ஏறினார்கள். அவர்கள் சில நாட்கள் பயணம் செய்த பிறகு, படகு நிற்க வேண்டியிருந்தது. தண்ணீரில் இருந்த பனிக்கட்டி அவர்களின் வழியைத் தடுத்தது.
Saints, 1:121–22
பனிக்கட்டி உடைய பரிசுத்தவான்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் சோர்வாகவும், பசியோடும், ஈரமாகவும், குளிராகவும் இருந்தனர்.
Saints,1:122
காத்திருப்பது கடினமாக இருந்தது. சில பரிசுத்தவான்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர்.
Saints,1:122
பரிசுத்தவான்கள் வாதிடுவதைக் கேட்பது லூசிக்குப் பிடிக்கவில்லை. அவள் ஏதோ சொல்ல வேண்டும் என்று அவளுக்குத் தெரிந்தது. “உங்களுடைய விசுவாசம் எங்கே?” என்று அவள் கேட்டாள். அவர்கள் தேவனிடம் ஜெபித்தால், தாங்கள் தங்கள் பயணத்தைத் தொடர அவர் பனிக்கட்டியை உடைக்கமுடியும் என்று லூசி பரிசுத்தவான்களிடம் கூறினாள்.
Saints, 1:122–23
திடீரென்று, பனிக்கட்டிகள் உடையும்போது இடி போன்ற சத்தத்தை அவர்கள் கேட்டனர். அவர்களின் படகு கடந்து செல்லும் அளவுக்கு அகலமாக பனிக்கட்டியில் ஒரு பாதை திறந்தது.
Saints, 1:123
பரிசுத்தவான்கள் ஆச்சரியப்பட்டு நன்றியுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் ஜெபிக்கவும் பரலோக பிதாவுக்கு நன்றி சொல்லவும் கூடினர். அவர்களது படகு ஒஹாயோவை நோக்கி பாதுகாப்பாக பயணித்தது.
Saints, 1:123
பரிசுத்தவான்கள் ஒஹாயோவை அடைந்தபோது, அங்குள்ள சபை உறுப்பினர்கள் அவர்களை வரவேற்று, அவர்கள் வாழ இடங்களைக் கண்டுபிடிக்க உதவினார்கள். கர்த்தர் தம்முடைய நியாயப்பிரமாணத்தை அவர்களுக்குக் கற்பிப்பதாகவும், தம்முடைய பணியைச் செய்ய அவர்களுக்கு வல்லமையைக் கொடுப்பதாகவும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42; Saints, 1:126