“சாமுவேல் ஸ்மித் மார்மன் புஸ்தகத்தை பகிருதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“சாமுவேல் ஸ்மித் மார்மன் புஸ்தகத்தை பகிருதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
1830–1832
சாமுவேல் ஸ்மித் மார்மன் புஸ்தகத்தை பகிருதல்
ஒரு புஸ்தகம் பலருடைய வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறது
ஜோசப்பின் இளைய சகோதரரான சாமுவேல் ஸ்மித்தை கர்த்தர் சுவிசேஷத்தைப் பகிரும் ஊழியத்திற்கு அழைத்தார். சாமுவேல் ஜான் மற்றும் ரோடா கிரீனைச் சந்தித்து, மார்மன் புஸ்தகத்தைப் பற்றி அவர்களிடம் சொன்னார். ஜான் வேறொரு சபையில் போதகராக இருந்தார். அந்தப் புஸ்தகத்தின் ஒரு பிரதியை எடுத்துக்கொண்டு, தன்னுடைய சபையில் யாராவது அதைப் படிக்க விரும்புகிறார்களா என்று பார்ப்பதாகச் சொன்னார்.
Saints, 1:99
சில மாதங்களுக்குப் பிறகு, சாமுவேல் திரும்பி வந்தார். மார்மன் புஸ்தகத்தைப் படிக்க விரும்பும் எவரையும் தனது கணவரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ரோடா கூறினார். அவர் அதை சாமுவேலிடம் திருப்பிக் கொடுத்தார்.
Saints, 1:99
சாமுவேல் வருத்தமாக இருந்தார். அவர் வெளியேறத் திரும்பினார், ஆனால் ரோடா அவரைத் தடுத்தாள். தான் மார்மன் புஸ்தகம் படித்ததாகவும் தனக்குப் பிடித்திருந்ததென்றும் சொன்னாள்.
Saints, 1:99
பரிசுத்த ஆவியானவர் சாமுவேலிடம் புஸ்தகத்தை ரோடாவிடம் திரும்பக் கொடுக்கும்படி சொன்னார். சாமுவேல் அவளிடம், “உங்களுக்கு ஒரு சாட்சி கொடுக்க தேவனிடம் கேளுங்கள்,“ என்றார். அவர் ரோடாவுக்கு பரிசுத்த ஆவியைப் பற்றியும், மார்மன் புஸ்தகம் உண்மை என்பதை அவள் எப்படி அறிந்துகொள்ளலாம் என்றும் கற்பித்தார்.
மரோனி 10: 3–5; Saints, 1:99–100
சாமுவேல் தனது ஊழியத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அவர் யாருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, ஒரு சிலர் மட்டுமே மார்மன் புஸ்தகத்தில் ஆர்வமாக இருந்தனர்.
ரோடாவும் ஜானும் ஜெபித்தார்கள், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் மார்மன் புஸ்தகம் உண்மை என்று கூறினார். ரோடா தனது சகோதரர் பிரிகாம் யங்குடன் மார்மன் புஸ்தகத்தைப் பகிர்ந்து கொண்டார்.
Saints, 1:100
பிரிகாமும் அவருடைய நண்பர் ஹீபர் கிம்பலும் இயேசுவின் உண்மையான சபையை தேடிக்கொண்டிருந்தனர் அவர்கள் மார்மன் புஸ்தகத்தைப் படித்தார்கள். சுமாராக இரண்டு வருடங்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றி ஆராய்ந்து ஜெபித்தார்கள்.
இந்த நேரத்தில், பிரிகாமும் ஹீபரும் தங்கள் குடும்பத்தினருடன் சபைக் கூட்டங்களுக்குச் சென்றனர். இந்தக் கூட்டங்களில் ஒன்றில், ஒரு ஊழியக்காரர் தனது சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்வதை பிரிகாம் கேட்டார். அந்த ஊழியக்காரர் ஒரு சிறந்த பேச்சாளர் அல்ல, ஆனால் அவர் பேசும்போது பிரிகாம் பரிசுத்த ஆவியை உணர்ந்தார். பிரிகாம் அவர் சொல்வது உண்மை என்று அறிந்தார்.
பிரிகாம், ஹீபர் மற்றும் அவர்களது மனைவிகளான மிரியம் மற்றும் விலேட் ஆகியோர் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்கள் இரட்சகரையும் அவருடைய சுவிசேஷத்தையும் நேசித்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிகாம் மற்றும் ஹீபரை தனது அப்போஸ்தலர்களாகவும் ஊழியம் செய்யவும் கர்த்தர் அழைத்தார். சாமுவேல் மார்மன் புஸ்தகத்தைப் பகிர்ந்ததால், பலர் இரட்சகரின் சபையில் சேர்ந்தனர்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:127–29; 126; Saints, 1:215–16