வேதக் கதைகள்
சூசா யங் கேட்ஸ் மற்றும் ஜோசப் எப். ஸ்மித்


“சூசா யங் கேட்ஸ் மற்றும் ஜோசப் எப். ஸ்மித்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“சூசா யங் கேட்ஸ் மற்றும் ஜோசப் எப். ஸ்மித்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

1902–1918

3:20

சூசா யங் கேட்ஸ் மற்றும் ஜோசப் எப். ஸ்மித்

ஆவி உலகம் பற்றிய ஒரு வெளிப்பாடு

பிரிகாம் யங் தனது மகள் சூசாவுடன் பேசுதல்.

சூசா யங் கேட்ஸ், பிரிகாம் யங்கின் மகள். அவள் யூட்டாவில் பிறந்து அங்கேயே வளர்ந்தாள். அவள் எழுதுவதை விரும்பினாள், கர்த்தருடைய சபையில் சேவை செய்வதை விரும்பினாள்.

Saints, 3:9–10, 64

சூசா ஒரு ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தைப் பெறுகிறாள்.

சூசா பெரியவளானபோது, ​​அவளுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவள் ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தைக் கேட்டாள். ஆசீர்வாதத்தில், கர்த்தர் சூசாவிடம், அவள் ஆலயப் பணி செய்ய வேண்டும் என்று கூறினார்.

Saints, 3:193–94

ஆலயங்கள் மற்றும் குடும்ப வரலாறு பற்றி சூசா மற்றொரு பெண்ணுடன் பேசுதல்.

ஆசீர்வாதத்திற்குப் பிறகு, சூசா குணமடைந்தாள். அவள் தன் குடும்ப வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதில் தன் நேரத்தைச் செலவிட்டாள். ஞானஸ்நானம் பெறாமல் இறந்த குடும்ப உறுப்பினர்களைக் கண்டபோது, ​​அவர்களுக்காக ஞானஸ்நானம் பெற அவள் ஆலயம் சென்றாள். குடும்ப வரலாற்றுப் பணிகளைப் பற்றி மக்களுக்குச் சொல்வதில் அவளுக்கு விருப்பம் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, பலர் ஆர்வம் காட்டவில்லை.

Saints, 3:194–95, 206

ஜோசப் எப். ஸ்மித்துடன் சூசா பேசுகிறாள்.

ஒரு நாள், சூசா தனது நண்பர், சபையின் தலைவரான ஜோசப் எப். ஸ்மித்தை சந்தித்தாள். தலைவர் ஸ்மித் பல வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது மகன் இறந்துவிட்டதால் அவர் மிகவும் சோகமாக இருப்பதை சூசா அறிந்திருந்தாள். உலகில் நடக்கும் போர்கள், நோய்கள் போன்ற பிற விஷயங்களைப் பற்றியும் அவர் வருத்தப்பட்டார்.

Saints, 3:197–99, 205–6

ஜோசப் எப். ஸ்மித் தனது தரிசனம் பற்றி சூசாவிடம் கூறுகிறார்.

ஆனால் சூசா தலைவர் ஸ்மித்துடன் அமர்ந்தபோது, ​​அவளுடன் பேச அவர் உற்சாகமாக இருந்தார். தேவன் தனக்கு ஒரு சிறப்புத் தரிசனத்தைக் கொடுத்ததாக அவர் சூசாவிடம் கூறினார். அது முழுக்க முழுக்க ஆவி உலகத்தைப் பற்றியது, மக்கள் இறந்த பிறகு அங்கு செல்கிறார்கள் என்பது பற்றியது. அவரது தரிசனம் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டது. தலைவர் ஸ்மித் அதை சூசாவிடம் கொடுத்து, அவளை வாசிக்கச் சொன்னார்.

Saints, 3:206–7

சூசா தரிசனம் பற்றி வாசித்தல்.

சூசா காகிதத்தை வாசித்தாள். ஆவி உலகத்திற்கு இயேசு கிறிஸ்து விஜயம் செய்ததாகக் கூறப்பட்டது. உயிருடன் இருந்தபோது சுவிசேஷத்தைப் பெறாத ஆவிகளுக்குப் போதிக்க ஆதாம், ஏவாள் மற்றும் பிற விசுவாசமிக்க ஆண்கள் மற்றும் பெண்களை அவர் அனுப்பினார். ஆலயத்தில் மக்கள் அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவதற்காக இந்த ஆவிகளை தயார்படுத்த அவர்கள் உதவினர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:11–19, 29–48; Saints, 3:206–7

ஜோசப் எப். ஸ்மித்தும் சூசாவும் பேசுதல்.

தலைவர் ஸ்மித்தின் தரிசனத்தைப் படித்தபோது சூசா ஆச்சரியப்பட்டாள். தலைவர் ஸ்மித் அவளைப் பார்த்து புன்னகைத்தார். “சூசா,” அவர் கூறினார், “நீ ஒரு சிறந்த பணி செய்கிறாய்.” கர்த்தர் மீது அவள் வைத்திருந்த விசுவாசத்திற்காக அவளை நேசிப்பதாக அவர் அவளிடம் சொன்னார்.

Saints, 3:206

சால்ட் லேக் ஆலயத்துக்கு அருகில் அமர்ந்திருக்கும் சூசா.

சூசா தனது குறிப்பிதழில் இந்த வெளிப்பாட்டைப் பற்றி எழுதினாள். “ஓ, அது எனக்கு ஒரு ஆறுதலாக இருந்தது!” அவள் சொன்னாள். அவளுடைய தோழிகளிடமும், சபையின் மற்ற உறுப்பினர்களிடமும் இதைப் பற்றிச் சொல்ல அவள் ஆவலுடன் இருந்தாள். தலைவர் ஸ்மித்தின் தரிசனம், ஆவி உலகத்தில் உள்ள மக்களுக்கு ஆலயப் பணிகளைச் செய்ய பரிசுத்தவான்கள் உற்சாகமாக இருக்க உதவும் என்பதை அவள் அறிந்தாள்.

Saints, 3:207