தெய்வீக அதிகாரம், உன்னதமான வாலிபர்கள்
ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்தவர்கள், அதன் அதிகாரங்கள், நியமங்கள் மற்றும் கடமைகளுடன் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார்கள் என்பதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஆசாரியத்துவ வல்லமை மற்றும் இரட்சகருடைய பாவநிவர்த்தியின் வல்லமையின் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டிற்காக உங்களுக்கு நன்றி மூப்பர் ஆன்டர்சன் அவர்களே.
இந்த ஜனவரி மாதம், நான் திருவிருந்துக் கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது, ஒரு டஜன் இளைஞர்களுக்கு மேல் ஆரோனிய ஆசாரியத்துவத்தில் முன்னேற ஆதரிக்கப்பட்டனர். நமது காலடியில் உலகம் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
உலகெங்கிலும், நேர மண்டலம் வாரியாக, அதைப் போன்ற திருவிருந்துக் கூட்டங்களில், பல்லாயிரக்கணக்கான உதவிக்காரர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசாரியர்கள்—இன்று காலையில் தலைவர் ஹாலண்டின் நண்பன் ஈஸ்டன் போன்றோர், இஸ்ரவேலின் கூடுகையின் நீள அகலத்தை உள்ளடக்கிய வாழ்நாள் முழுவதுக்குமான ஆசாரியத்துவ ஊழியங்களில் நியமிக்கப்படுவதை நான் உணர்ந்தேன்.
ஒவ்வொரு ஜனவரியிலும், சுமார் 1,00,000 வாலிபர்களின் தலைகளில் கைகள் வைக்கப்படுகின்றன, இது மறுஸ்தாபித யுகம் வழியாக ஜோசப் மற்றும் ஆலிவர் மேலும் யோவான் ஸ்நானன் மற்றும் இயேசு கிறிஸ்துவுடன் நீண்டிருக்கும் ஒரு பிரகாசமான அதிகார வரிசையுடன் நியமம் மூலம் அவர்களை இணைக்கிறது.
நமது சபை எப்போதும் மிகவும் ஆர்ப்பாட்டமானதாக இருக்காது. இங்கே, நாம் குறைத்து மதிப்பிடுகிறோம்.
இருந்தும், புதிதாக நியமிக்கப்பட்ட ஆசாரியத்துவம் தரித்தவர்களின் இந்த உருளும் இடிமுழக்கம் பூமி முழுவதும் பரவியதைப் பார்த்து, நான் ஆச்சரியப்பட்டேன்—“மகிழ்ச்சியின் சபை“ எனும் வகையில்—இது கூரைகள் மேலிலிருந்து கத்தப்படக்கூடாதா என்று. “இன்று,“ நான் நினைத்தேன், “எக்காளங்களும், முழக்கமிடும் ஜால்ராக்களும், எரியும் ரோமானிய மெழுகுவர்த்திகளும் இங்கு இருக்க வேண்டும்.“ அணிவகுப்புகள் இருக்க வேண்டும்! ”
தேவனின் வல்லமையை அது உண்மையில் என்னவென்று அறிந்த நாம், பூமி முழுவதும் பரந்திருக்கிற தெய்வீக அதிகாரம், இந்த உலகத்தின் வடிவங்களையே சீர்குலைத்ததைக் கண்டோம்.
இந்த நியமனங்கள் இந்த வாலிபர்களை வாழ்நாள் முழுவதும் சேவையில் ஈடுபடுத்துகின்றன, ஏனெனில் அவர்கள் தங்கள் வருகையும் ஜெபங்களும் அவர்கள் வைத்திருக்கும் தேவனுடைய ஆசாரியத்துவத்தின் வல்லமைகளும் ஆழமான முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நேரங்களிலும் இடங்களிலும் தங்களைக் காண்பார்கள்.
இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட சங்கிலித் தொடர் எதிர்வினை தேவனால் அனுப்பப்பட்ட ஒரு ஊழிய தூதனுடன் தொடங்கியது. பூர்வ காலத்து உயிர்த்தெழுந்த யோவான் ஸ்நானன் ஜோசப்புக்கும் ஆலிவருக்கும் தோன்றி, அவர்களின் தலைகளில் கைகளை வைத்து, “என் சக ஊழியக்காரர்களாகிய உங்கள் மேல், மேசியாவின் நாமத்தில் ஆரோனின் ஆசாரியத்துவத்தை நான் அருளுகிறேன், அது தேவ தூதர்களின் பணிவிடையையும், மனந்திரும்புதலின் சுவிசேஷத்தையும், பாவங்களின் மீட்பிற்காக முழுக்கு ஞானஸ்நானத்தையும் தரித்திருக்கிறது” என்றான் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13:1).
யோவான் இந்த அதிகாரத்தை மோசேயின் ஆசாரியத்துவ தோழனான அவனுடைய சகோதரனின் பெயரால் “ஆரோனின் ஆசாரியத்துவம்“ என்று அழைத்தான். பூர்வகாலத்தில், ஆரோனின் இந்த ஆசாரியத்துவத்தைத் தரித்தவர்கள், எதிர்கால மேசியாவாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது சீஷத்துவத்தை மையமாகக் கொண்ட நியமங்களை கற்பித்து உதவ வேண்டியிருந்தது (உபாகமம் 33:10 பார்க்கவும்).
ஆரோனின் ஆசாரியத்துவத்தை தரித்திருப்பவர்களுக்கு நியமங்களின் பாத்திரங்களைக் கையாளும் பணிகளை எண்ணாகம புத்தகம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. “நீ ஆரோனையும் அவன் குமாரரையும்… நியமிக்கக்கடவாய்; அவர்கள் விசாரிக்க வேண்டியது… மேஜையும்… அவர்கள் ஆராதனை செய்யும் பரிசுத்த ஸ்தலத்தின் பாத்திரங்களும்.“ (எண்ணாகமம் 3:10, 31).
பழைய ஏற்பாட்டு மிருக பலியின் நியமம் முடிக்கப்பட்டு, இரட்சகரின் வாழ்க்கை மற்றும் பாவநிவாரணத்தின் மூலம் மாற்றப்பட்டது. அந்த பண்டைய நியமம் கர்த்தருடைய இராப்போஜனத்தின் திருவிருந்து என்று இப்போது நாம் அழைக்கும் நியமத்தால் மாற்றப்பட்டது.
ஆரோனின் ஆசாரியத்துவத்தை இன்று தரித்திருப்பவர்கள், பண்டைய காலத்தில் செய்த அதே காரியங்களைச் செய்யும்படி கர்த்தர் அவர்களிடம் ஒப்படைக்கிறார்: நியமங்களைக் கற்பிப்பதும் நிர்வகிப்பதும்—இவை அனைத்தும் அவருடைய பாவநிவர்த்தியை நமக்கு நினைவூட்டுவதற்காக.
உதவிக்காரர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசாரியர்கள் திருவிருந்துக்கு உதவும்போது, மற்றவர்களைப் போலவே அவர்களும் அதன் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்: அவர்கள் செய்யும் உடன்படிக்கையைக் கைக்கொள்வதன் மூலம் அவர்கள் தனித்தனியாக அப்பத்தை புசித்து தண்ணீரை பருகும்போது. ஆனால் இந்த பரிசுத்த கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம், அவர்கள் தங்கள் ஆசாரியத்துவ பொறுப்புகளைப் பற்றியும் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆரோனிய ஆசாரியத்துவம் ஆயத்த ஆசாரியத்துவம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் நியமங்கள் கர்த்தரின் பணியில் இருப்பதன் பொறுப்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க அவர்களை அனுமதிக்கின்றன, எதிர்கால ஆசாரியத்துவ சேவைக்கு அவர்களை தயார்படுத்துகின்றன, அப்போது அவர்கள் எதிர்பாராத வழிகளில் ஊழியம் செய்ய அழைக்கப்படலாம்—நம்பிக்கைகள், கனவுகள், வாழ்க்கை மற்றும் இறப்பு கூட நிலையற்ற மற்றும் மாறக்கூடிய நேரங்களில் உணர்த்தப்பட்டப்பட்ட ஆசீர்வாதங்களை உச்சரிப்பது உட்பட.
இத்தகைய தீவிர எதிர்பார்ப்புகளுக்கு தீவிர தயாரிப்பு தேவைப்படுகிறது.
உதவிக்காரர்களும் ஆசிரியர்களும்“, எச்சரித்து, வியாக்கியானமளித்து, புத்தி சொல்லி, போதித்து கிறிஸ்துவண்டை அழைக்கவேண்டும்,“ என்று கோட்பாடும் உடன்படிக்கைகளும் விவரிக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:59). இந்த வாய்ப்புகளுக்கும் கூடுதலாக, ஆசாரியர்கள் “பிரசங்கிக்க வேண்டும் … ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்“ (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:50).
நல்லது, இவையெல்லாம் அதிகமாகத் தோன்றினாலும், நிஜ உலகில், இவை இயற்கையாகவும் உலகம் முழுவதும் நடக்கும்.
ஒரு ஆயர் தனது புதிய உதவிக்காரர்கள் குழுமத் தலைமைக்கு இந்தக் கடமைகளைக் கற்பித்தார். அவர்களுடைய குழுமத்திலும் இந்த தொகுதியிலும் அது எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அந்த இளம் தலைமை பேச ஆரம்பித்தது. தொகுதியிலுள்ள வயதான உறுப்பினர்களை சந்தித்து அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து பின்னர் அதைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அவர்கள் சேவை செய்தவர்களில் முரட்டுத்தனமான, அடிக்கடி அவதூறு பேசும், சில சமயங்களில் விரோத எண்ணம் கொண்ட அண்டை வீட்டுக்காரரான ஆலனும் ஒருவர். ஆலனின் மனைவி வாண்டா சர்ச்சில் உறுப்பினரானார், ஆனால் ஆலன், நாம் சொல்வது போல், ஒரு விரும்பத்தகாதவராயிருந்தார்.
ஆனாலும், உதவிக்காரர்கள் அவருடைய அவமதிப்புகளை வேடிக்கையாக புறக்கணித்து, வேலைக்குச் சென்றார்கள், அவர்கள் பனியை வாரி அள்ளி குப்பைகளை வெளியே எடுத்தார்கள். உதவிக்காரர்களை வெறுப்பது கடினம், ஆலன் இறுதியில் அவர்களை நேசிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவரை சபைக்கு அழைத்தனர்.
“எனக்கு சபை பிடிக்காது,“ என்று அவர் பதிலளித்தார்.
“நல்லது, உங்களுக்கு எங்களைப் பிடிக்கும்“ என்றார்கள். “சரி, எங்களுடன் வாருங்கள். நீங்கள் விரும்பினால், எங்கள் குழுமக் கூட்டத்திற்கு எங்களுடன் வாருங்கள்.“
ஆயரின் ஒப்புதலுடன், அவர் வந்தார்—அவர் வந்துகொண்டே இருந்தார்.
உதவிக்காரர்கள் ஆசிரியர்களானார்கள், அவர்கள் தொடர்ந்து அவருக்குச் சேவை செய்தபோது, கார்களை பழுது பார்க்கவும் பொருள்களைக் கட்டவும் அவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஆசிரியர்களான உதவிக்காரர்கள், ஆசாரியர்களானபோது, ஆலன் அவர்களை “என் பையன்கள்“ என்று அழைத்தார்.
அவர்கள் உண்மையாகவே ஊழியங்களுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள், அவருடன் ஊழிய பாடங்களைப் பயிற்சி செய்யலாமா என்று கேட்டார்கள். அவர் ஒருபோதும் கேட்கவோ நம்பவோ மாட்டேன் என்று சத்தியம் செய்தார், ஆனால், ஆம், அவர்கள் அவருடைய வீட்டில் பயிற்சி செய்யலாம்.
பிறகு ஆலனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அவர் இளகிய மனதாயிருந்தார்.
ஒரு நாள், குழுமக் கூட்டத்தில், தான் புகைப்பதை விட்டுவிட வேண்டுமென்று ஜெபிக்கும்படி அவர் அவர்களிடம் கனிவாகக் கேட்டுக்கொண்டார், அப்படியே அவர்கள் செய்தார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அவரை வீட்டிற்கு பின்தொடர்ந்து சென்று அவர் பதுக்கி வைத்திருந்த புகையிலை அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
அவரது மோசமான உடல்நிலை ஆலனை மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களில் வைத்தபோது, “ஆலனின் பையன்கள்“ அவருக்கு சேவை செய்ததால், ஆசாரியத்துவத்தின் வல்லமைகளையும் மாறாத அன்பின் வல்லமைகளையும் அமைதியாக வெளிப்படுத்தினர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:41).
ஆலன் ஞானஸ்நானம் கொடுக்குமாறு கேட்டபோது அந்த அற்புதம் தொடர்ந்தது, ஆனால் அது நடப்பதற்கு முன்பே அவர் காலமானார். அவரது வேண்டுகோளின் பேரில், உதவிக்காரர்களாக இருந்து மாறிய ஆசாரியர்கள் அவரது இறுதிச் சடங்கில் சவப்பெட்டியைத் தூக்குபவர்களாகவும் செய்தியாளர்களாகவும் இருந்தனர், அங்கு அவர்கள் பொருத்தமாக எச்சரித்தனர், விளக்கினர், அறிவுறுத்தினர், கற்பித்தனர், அனைவரையும் கிறிஸ்துவண்டை அழைத்தனர்.
பின்னர், ஆலனுக்கு பதிலியாக அந்த முன்னாள் உதவிக்காரர் குழுமத் தலைவரான “ஆலனின் பையன்களில்“ ஒருவர் ஞானஸ்நானம் கொடுத்தார்.
யோவான் ஸ்நானன் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் செய்தார்கள். இந்த சபை முழுவதிலும், உலகம் முழுவதிலும் உள்ள ஊதவிக்காரர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசாரியர்கள் செய்வதையே அவர்களும் செய்தார்கள்.
ஆரோனின் ஆசாரியத்துவத்தைத் தரித்தவர்கள் செய்ய வேண்டிய காரியங்களில் ஒன்று திருவிருந்து நியமத்தை உள்ளடக்கியது.
கடந்த ஆண்டு, நான் ஒரு உணர்த்தப்பட்ட ஆயரையும் அவரது அற்புதமான மனைவியையும் சந்தித்தேன். சமீபத்தில் சனிக்கிழமை காலை தங்கள் மகனின் ஞானஸ்நானத்திற்காக காரில் சென்றபோது, அவர்களின் இரண்டு வயது மகள் டெஸ்ஸின் துயரமான மற்றும் திடீர் இழப்பை அவர்கள் அனுபவித்தனர்.
மறுநாள் காலையில் அவர்களின் தொகுதி உறுப்பினர்கள் இரக்கத்தால் நிறைந்த திருவிருந்து கூட்டத்திற்காகக் கூடினர், மேலும் இந்த பரிபூரணமான சிறுமியின் இழப்பால் துன்பப்பட்டனர். அன்று காலை ஆயரின் குடும்பத்தினர் சபையில் இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவர்கள் அமைதியாக உள்ளே நுழைந்து தங்கள் இடங்களில் அமர்ந்தனர்.
ஆயர் மேடைக்குச் சென்று, தனது ஆலோசகர்களுக்கு இடையிலுள்ள தனது வழக்கமான இருக்கையைக் கடந்து சென்று, திருவிருந்து மேசையினருகே தனது ஆசாரியர்களுக்கு இடையில் அமர்ந்தார்.
புரிதலையும் அமைதியையும் தேடிய அந்த வேதனையான மற்றும் தூக்கமில்லாத இரவின் போது, அவரது குடும்பத்திற்கு மிகவும் தேவையானது என்ன—அவரது தொகுதிக்கு மிகவும் தேவையானது என்ன என்பது பற்றிய வலுவான உணர்வை அவர் பெற்றிருந்தார். அது அவர்களின் ஆயர், அவர்களின் தொகுதி ஆரோனிய ஆசாரியத்துவத் தலைவர், அவர்களின் துக்கத்தில் இருக்கும் தகப்பன் ஆகியோரின் குரலைக் கேட்பதற்காக, பரிசுத்த உடன்படிக்கையின் வாக்குறுதிகளை உச்சரித்தார்.
எனவே, உரிய நேரத்தில் அவர் அந்த ஆசாரியர்களுடன் முழங்காற்படியிட்டு தன் பிதாவிடம் பேசினார். அந்த சந்தர்ப்பத்தின் பரிதாபத்துடன், இந்த வாழ்நாளில் எவரும் உரக்கச் சொல்ல அனுமதிக்கப்பட்ட மிக வல்லமை வாய்ந்த வார்த்தைகளில் சிலவற்றை அவர் உச்சரித்தார்.
நித்திய விளைவு கொண்ட வார்த்தைகள்.
நியமத்தின் வார்த்தைகள்
உடன்படிக்கையின் வார்த்தைகள்.
இந்த வாழ்க்கையின் நோக்கங்களோடும், நமக்காக பரலோக பிதாவின் திட்டத்தின் மிக அற்புதமான விளைவுகளோடும் நம்மை இணைக்கும் அறிவுறுத்தல்.
அந்த நாள் அந்த ஆராதனைக் கூடத்தில் சபையார் என்ன கேட்டார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா—ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நமது ஆராதனைக் கூடங்களில் நாம் கேட்கும் வார்த்தைகளில் என்ன உணர்ந்தார்கள்?
”நித்திய பிதாவாகிய தேவனே, இந்த அப்பத்தைப் புசிக்கிற யாவருடைய ஆத்துமாக்களுக்காகவும், அவர்கள் உம்முடைய குமாரனுடைய சரீரத்தை நினைவுகூரும்படிக்கு புசிக்கும்படிக்கும், உம்மிடத்தில் சாட்சி பகரவும், நித்திய பிதாவாகிய தேவனே, அவருடைய ஆவியை அவர்கள் எப்பொழுதும் தங்களோடே கொண்டிருக்கும்படி உம்முடைய குமாரனுடைய நாமத்தை தங்கள்மீது தரித்துக்கொள்ளவும், அவரை எப்பொழுதும் நினைவுகூரவும், தங்களுக்கு அவர் கொடுத்திருக்கிற அவருடைய கட்டளைகளை கைக்கொள்ளவும் சித்தமாயிருக்கும்படிக்கும் இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77).
அதன் பிறகு: ”நித்திய பிதாவாகிய தேவனே, இந்த திராட்சைரசத்தை பானம் பண்ணுகிற யாவருடைய ஆத்துமாக்களுக்காகவும், அவர்களுக்காக சிந்தப்பட்ட உமது குமாரனுடைய இரத்தத்தை நினைவுகூரும்படிக்கும், உம்மிடத்தில் அவர்கள் சாட்சி பகரும்படிக்கும், நித்திய பிதாவாகிய தேவனே, அவரை எப்பொழுதும் நினைவுகூரும்படிக்கும், அவருடைய ஆவியை அவர்கள் தங்களோடே கொண்டிருக்கும்படிக்கும் இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:79).
அந்த வாக்குத்தத்தம் நிறைவேறிவிட்டதாக இந்த நல்ல தகப்பனும் தாயும் சாட்சி பகர்கிறார்கள். உண்மையாகவே “அவருடைய ஆவியை அவர்கள் தங்களோடே கொண்டிருக்கும்படி“ அவர்களின் நித்திய ஆறுதலை அவர்கள் பெற்றிருக்கின்றனர்.
ஆரோனிய ஆசாரியத்துவத்தை தரித்தவர்கள், அதன் வல்லமைகள், நியமங்கள் மற்றும் கடமைகளுடன், “தூதர்களின் பணிவிடை, மனந்திரும்புதலின் சுவிசேஷம், மற்றும் பாவங்களின் மீட்பிற்காக முழுக்கு ஞானஸ்நானம்“ ஆகியவற்றின் திறவுகோல்கள் மூலம் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார்கள். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13:1). இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.