பொது மாநாடு
நமது பரலோக வழிகாட்டும் அமைப்பு
ஏப்ரல் 2025 பொது மாநாடு


10:48

நமது பரலோக வழிகாட்டும் அமைப்பு

இயேசு கிறிஸ்துவில் நமது வாழ்க்கையை மையப்படுத்தும்போது, நாம் வீட்டிற்கு செல்லும் வழியைக் கண்டடைவோம், இறுதிவரை நிலைத்திருப்போம், இறுதிவரை மகிழ்ச்சியடைவோம்.

சிலியில் உள்ள நான் நேசிக்கிற ப்ருட்டிலரில் 26 வயதில் நான் ஞானஸ்நானம் பெற்றபோது இயேசு கிறிஸ்து என் வாழ்க்கையை மாற்றினார். அந்த நேரத்தில், என் வேலை என்னை அழகான சிலி படகோனியாவின் கடல், ஆறுகள் மற்றும் ஏரிகளைக் கடந்து அழைத்துச் சென்றது. ஞானஸ்நானம் பெற்ற பிறகு, என் வேலையையும் வாழ்க்கையையும் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான வழியில் பார்த்தேன். “அனைத்துக் காரியங்களும் தேவன் ஒருவர் உண்டென்று புலப்படுத்துகிறது,“ என்பதை உண்மையிலேயே உணர்ந்தேன்.

இயற்கையில், சால்மன் மீன்கள் நதிகளின் மூலத்தில் பிறக்கின்றன. அவைகளினுடைய வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், அவைகள் கடலை அடைய ஆற்றில் கீழ்நோக்கி நீந்த வேண்டும், அங்கு அவைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் நிலைமைகளை அவைகள் காண்கின்றன.

ஆனால் கடல் ஒரு ஆபத்தான இடமாகும், அங்கு கொடியமிருகங்கள் பதுங்கியுள்ளன மற்றும் மீனவர்கள் சால்மனை, உணவைப்போல தோன்றும் ஆனால் அவைகளுக்கு உணவளிக்காத, பளபளப்பான தூண்டில்களால் பிடிக்க முயற்சிக்கிறார்கள். இந்த அச்சுறுத்தல்களில் இருந்து அந்த சால்மன்களால் தப்பிக்க முடிந்தால், புதிய மற்றும் சில பழக்கமான சவால்களை எதிர்கொண்டு, அவைகள் பிறந்த அதே இடத்திற்குத் திரும்ப தங்கள் சக்திவாய்ந்த வழிகாட்டும் அமைப்பைப் பயன்படுத்த அவைகள் தயாராக இருக்கின்றன. விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக அவற்றின் இடம்பெயர்வு நடத்தையை ஆய்வு செய்துள்ளனர், மேலும் நம்பமுடியாத துல்லியத்துடன் அவற்றின் இறுதி இலக்குக்கு வழிகாட்ட ஜி.பி.எஸ் போன்ற ஒரு வகை காந்த வரைபடத்தைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்துள்ளனர்.

நாம் அனைவரும் ஒரு நாள் நாம் புறப்பட்டு வந்த இடமான பரலோக வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். சால்மன் மீனைப் போலவே, நமக்கு வழிகாட்ட நம் சொந்த காந்த வரைபடம் அல்லது “கிறிஸ்துவின் ஒளி“ உள்ளது. இயேசு தமது சீஷர்களுக்குப் போதித்தார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”

இயேசு கிறிஸ்துவில் நமது வாழ்க்கையை மையப்படுத்தும்போது, நாம் வீட்டிற்கு செல்லும் வழியைக் கண்டடைவோம், இறுதிவரை நிலைத்திருப்போம், இறுதிவரை மகிழ்ச்சியடைவோம். தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “நாம் அடைகிற மகிழ்ச்சி, நமது வாழ்க்கை சூழ்நிலைகளைப் பொருத்தது அல்ல, எல்லாம் நமது வாழ்க்கையின் நோக்கத்தைப் பொருத்ததே.”

நமது தெய்வீக தன்மையும் இலக்கும்

“ஒவ்வொருவரும் பரலோக பெற்றோரின் ஆவிக்குமாரன் அல்லது குமாரத்தி, அப்படியானால் ஒவ்வொருவருக்கும் தெய்வீக தன்மையும் இலக்கும் உண்டு“ என்று குடும்ப பிரகடனத்திலிருந்து நாம் வாசிக்கிறோம். அநித்தியத்திற்கு முந்தைய இராஜ்யத்தில், ஆவி குமாரர்களும், குமாரத்திகளும் தேவனை தங்களது நித்திய பிதாவாக அறிந்து அவரை ஆராதித்தார்கள். மேலும் அவருடைய பிள்ளைகள் மாம்ச சரீரத்தைப் பெற்று, பரிபூரணத்தை நோக்கி முன்னேறும்படி பூமியின் அனுபவத்தைப் பெற்று இறுதியாக, நித்திய ஜீவனின் சுதந்தரவாளிகளாக, தம்முடைய தெய்வீக இலக்கை அடையவும், அவரது திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.”

இயேசு கிறிஸ்து அநித்தியத்தில் பிறப்பதற்கு முன்பு, மோசேக்குத் தரிசனமாகி, பிதாவின் சார்பாக அவரிடம் பேசினார். அவன் செய்வதற்கு ஒரு பெரிய வேலை இருக்கிறது என்று அவர் மோசேயிடம் கூறினார். அந்த சந்திப்பின் போது, கர்த்தர் அவனை “என்னுடைய குமாரனே“ என்று பல முறை அழைத்தார்.

அந்த அனுபவத்திற்குப் பிறகு, சாத்தான் அவனை சோதித்துக்கொண்டு, “மோசே, மனுஷகுமாரனே, என்னைத் தொழுதுகொள்!” எனச் சொன்னான்.

மோசே தனது தெய்வீக தன்மையை நினைவுகூர்ந்து சோதனைக்கு பதிலளித்தான்: “நீ யார்? ஏனெனில் இதோ, நான் தேவனுடைய குமாரன்.” சத்தியம் சத்துருவின் தாக்குதலிலிருந்து மோசேயை விடுவித்தது.

சகோதர சகோதரிகளே, அநித்தியத்தின் தூண்டில்கள் உண்மையானவை. அவை பெரும்பாலும் கவர்ந்திழுக்கின்றன, பிதாவிடமும் நித்திய ஜீவனுக்கும் வழிநடத்தும் ஜீவ தண்ணீரின் போக்கிலிருந்து நம்மை வெளியே இழுக்க, ஆனால் அவை ஒரே ஒரு இலக்கை மட்டுமே தேடுகின்றன:

அநித்தியத்தின் தூண்டில்கள் எவ்வளவு உண்மையானவை என்பதை நான் அறிவேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை, புதிதாக மனம் மாறியவனாகிய, நான் ஒரு ஆசாரியத்துவ வகுப்பில் கற்பித்துக்கொண்டிருந்தபோது, ஒரு அமைதியற்ற உரையாடல் எழுந்தது. பாடத்தை முடிக்க மிகவும் சிரமப்பட்டேன். நான் கோபமடைந்தேன், நான் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். ஒரு வார்த்தை கூட பேசாமல், நான் சிறிது காலம் சபைக்குத் திரும்ப மாட்டேன் என்ற எண்ணத்துடன் வெளியேறும் வழியை நோக்கி நடந்தேன்.

அத் தருணத்தில் அக்கறையுள்ள ஆசாரியத்துவம் தரித்த ஒருவர் என் முன் நின்றார். வகுப்பில் நாங்கள் அனுபவித்த சூழ்நிலையில் அல்லாமல் கிறிஸ்துவில் கவனம் செலுத்தும்படி அவர் அன்பாக என்னை அழைத்தார். அவருடனான அனுபவத்தைத் திரும்பிப் பார்த்தபோது, “அவரைப் பின்தொடருங்கள்; அவர் எனக்கு முக்கியமானவர்“ என்று ஒரு குரல் அவரிடம் சொல்வதைக் கேட்டதாக அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார்,

மூப்பர் வர்காஸ் மற்றும் அவரைப் பின்தொடர்ந்த தலைவர்.

எனக்கு அன்பான நண்பர்களே, நாம் அனைவரும் அவருக்கு முக்கியமானவர்கள். தலைவர் நெல்சன் போதித்தார், “தேவனுடனான நமது உடன்படிக்கையின் காரணமாக, அவர் நமக்கு உதவி செய்யும் முயற்சிகளில் சோர்வடைய மாட்டார், மேலும் அவருடைய இரக்கமுள்ள பொறுமையை நாம் ஒருபோதும் இழக்க மாட்டோம்.” நமது தெய்வீக தன்மையும் தேவனுடனான உடன்படிக்கை உறவும் தெய்வீக உதவியைப் பெற நமக்கு உரிமை அளிக்கிறது.

போஷிப்பின் அவசியம்

சால்மன் மீன்கள் வளர கடலில் ஊட்டச்சத்து தேவைப்படுவதைப் போலவே, ஆவிக்குரிய ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பதைத் தவிர்ப்பதற்கு ஆவிக்குரிய ரீதியாகவும் நம்மை போஷித்துக் கொள்ள வேண்டும். ஜெபம், வேதங்கள், ஆலயம், ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில் நாம் தவறாமல் கலந்துகொள்வது ஆகியவை நம்முடைய ஆவிக்குரிய உணவுப்பட்டியலில் இன்றியமையாதவை.

நவம்பர் 1956ல், ரிக்கார்டோ கார்சியா, சிலியில் ஞானஸ்நானத்தின் தண்ணீரில் பிரவேசித்து, என் நாட்டில் சபையின் முதல் உறுப்பினரானார். அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு முன்பாக அறிவித்தார், “பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழியக்காரர்கள் என்னை என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க அழைத்தனர். நான் ஒரு மகிழ்ச்சியான மனிதன். சிலியில் உள்ள அனைவருக்கும் சுவிசேஷம் என்பது மகிழ்ச்சி என்று சொல்லுங்கள்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் போஷிக்கப்பட்ட பிறகு, ரிக்கார்டோ தனது முழு வாழ்க்கையையும் தேவனுக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் அன்புடன் சேவை செய்ய அர்ப்பணித்தார். சீஷத்துவத்தின் அவரது முன்மாதிரி நான் உட்பட தலைமுறைகளை ஆசீர்வதித்துள்ளது. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார், “தேவனின் அன்பால் நிரப்பப்பட்ட ஒரு மனிதன், தனது குடும்பத்தை ஆசீர்வதிப்பதில் மட்டுமே திருப்தியடைவதில்லை, ஆனால் முழு மனித இனத்தையும் ஆசீர்வதிக்க ஆர்வமுள்ளவனாக உலகம் முழுவதும் பரவுகிறான்.“

நமது பரலோக வீட்டிற்குத் திரும்புதல்

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாக நமது பரலோக வீட்டிற்குத் திரும்புவதற்கான ஆவல் உள்ளது, இயேசு கிறிஸ்து நமது பரலோக வழிகாட்டும் அமைப்பாக இருக்கிறார். அவரே வழி. அவரது பாவநிவாரண பலி தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்வதை நமக்கு சாத்தியமாக்குகிறது. நாம் உடன்படிக்கைகளைச் செய்துகொண்டவுடன், சில சமயங்களில் நீரோட்டத்திற்கு எதிராக நீந்துவதைக் காண்போம். ஆபத்து, ஏமாற்றம், சோதனை மற்றும் துன்பம் ஆகியவை நமது விசுவாசத்தையும் ஆவிக்குரிய பலத்தையும் சோதிக்கும். உதவி கேளுங்கள். இயேசு கிறிஸ்து புரிந்துகொள்கிறார், நமது சுமைகளை பகிர்ந்து கொள்ள எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்.

அவர் “துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார்,” என்று அறியப்படுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரட்சகர் போதித்தார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.” அவரது பாவநிவாரண பலி நமது பாவங்களை மன்னிக்க அனுமதிக்கிறது, அவர் அவற்றை இனி நினைவுகூருவதில்லை.

நம்முடைய அநித்திய கற்றலின் ஒரு பகுதியாக நம்முடைய பாவங்களை நாம் முற்றிலுமாக மறந்துவிடாமலிருக்கலாம், எனவே அவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பதை நினைவில் கொள்வோம். மாறாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபையில் திருவிருந்தை எடுக்கும்போது அவரை நினைவுகூருவோம். இந்த நியமம் ஆராதனை மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இன்றியமையாத பகுதியாயிருக்கிறது. இது இன்னொரு நாள் அல்ல என்பதை புரிந்து கொள்ளும்போது மகிழ்ச்சி வருகிறது. உலகத்திலிருந்து நமக்கு இளைப்பாறுதல் கொடுக்கும் நோக்கத்துடனும், நமது உடலையும் ஆவியையும் புதுப்பிக்கும் நோக்கத்துடனும், “ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.“

நாம் கர்த்தருடைய வீடாகிய ஆலயத்திற்குச் செல்லும்போதும் அவரை நினைவுகூருவோம். நித்திய ஜீவனுக்கு நம்மை வழிநடத்தும் உடன்படிக்கையின் மையமாக, தேவனுடைய வரங்களில் மிகப் பெரிதாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆழமான அறிவை ஆலயங்கள் நமக்குத் தருகின்றன.

ஆலயத்திற்குச் செல்வது எனக்கு ஆறுதலையும் நமது நித்திய இலக்கைப் பற்றிய பெரிய நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. திரையின் இருபுறமும் உள்ள ஜனங்களுடன் பரலோக தொடர்புகளை நான் அனுபவித்திருக்கிறேன். என் இளம் குழந்தைகளின் வாழ்க்கையில் குணப்படுத்தும் அற்புதங்களை நான் கண்டிருக்கிறேன், அவர்களில் இருவர் இந்த வாழ்நாள் முழுவதும் தினசரி கவனிப்பு தேவைப்படும் கண்ணுக்குத் தெரியாத நோய்களுடன் வாழ்கிறார்கள்.

மகிழ்ச்சியின் திட்டத்தைப் பற்றி நாங்கள் பகிர்ந்துகொள்ளும்போது எங்கள் குடும்பம் அகமகிழ்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி, அவர்களின் “பாடுகள் ஒரு சிறிய தருணம் மட்டுமே“ என்று கேட்கும்போது என் பிள்ளைகளின் முகங்கள் பிரகாசிக்கிறது. நாம் நம் பிள்ளைகளை ஆழமாக நேசிக்கிறோம், தலைவர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் போதித்தபடி, ஒருநாள் அவர்கள் “மகிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் மகத்தானவர்களாகவும், சரீரத்திலும் மனதிலும் பிரமிப்பூட்டும் பரிபூரணத்தோடும் நமக்கு முன்பாக நிற்பார்கள் என்பதை நாம் அறிவோம்.“ நமது உடன்படிக்கைகள் சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் அளவுக்கு நம்மை தேவனிடம் நெருக்கமாக கொண்டு வருகின்றன, இருள் மற்றும் சந்தேகத்தின் ஒவ்வொரு இடத்தையும் ஒளி மற்றும் சமாதானத்தால் நிரப்புகின்றன.

இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி, நாம் கவனித்துக் கொள்பவர்களைத் தொடர்ந்து நேசிக்கவும், ஜெபிக்கவும், ஆதரிக்கவும் நம்பிக்கை மற்றும் நன்கு நிறுவப்பட்ட காரணங்கள் உள்ளன.

அவர் ஜீவிக்கிறார் என்பதை நான் அறிவேன். அவர் நம்மை அறிந்திருக்கிறார், அவர் நம்மை நேசிக்கிறார். அவரே உலகத்தின் வழியும், சத்தியமும், ஜீவனும் ஆவார்.

இயேசு கிறிஸ்துவிலும் அவரது போதனைகளிலும் நமது வாழ்க்கையை மையப்படுத்த இன்று நம் அனைவரையும் அழைக்கிறேன். அப்படிச் செய்யும்போது, சோதனை, குற்றம், சுய பரிதாபம் போன்ற தூண்டில்களைக் கடிப்பதைத் தவிர்க்க முடியும். நாம் ஆலயங்களாக நிற்போம்; பரிசுத்தமாக, உறுதியாக, நிலையானதாக. நாம் புயல்களைச் சமாளித்தும், முடிவுபரியந்தம் சகித்தும் முடிவுபரியந்தம் மகிழ்ச்சியோடும் வீட்டை அடைய திரும்புவோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.