“அத்தியாயம் 12: ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்கு ஆயத்தமாக மக்களுக்கு உதவுங்கள்” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)
“அத்தியாயம் 12,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
அத்தியாயம் 12
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்கு ஆயத்தமாக மக்களுக்கு உதவுங்கள்
இதைக் கருத்தில் கொள்ளவும்
-
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்கு மக்கள் தயாராக நான் எவ்வாறு உதவ முடியும்?
-
ஞானஸ்நான நேர்காணலை நான் எப்படி நடத்துவது?
-
உற்சாகமூட்டும் ஞானஸ்நான ஆராதனை எவ்வாறு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது?
-
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது ஏன் முக்கியம்?
-
புதிய உறுப்பினர்களை நான் எவ்வாறு ஆதரிக்க முடியும்?
ஞானஸ்நானம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் தேவனின் வல்லமையைக் கொண்டுவரும் நம்பிக்கையின் மகிழ்ச்சியான கட்டளை. அந்த வல்லமை பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவதன் மூலம் வருகிறது. ஒரு நபர் ஞானஸ்நான உடன்படிக்கையைக் கைக்கொள்வதில் இறுதிவரை நிலைத்திருக்கும்போது அது தொடரும்.
உங்கள் கற்பித்தலின் நோக்கம், மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவில் தங்கள் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பவும், கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான உண்மையான விருப்பத்துடன் ஞானஸ்நானம் பெறவும் உதவுவதாகும். மார்மன் கற்பித்தபடி, “மனந்திரும்புதலின் முதற்கனிகள் ஞானஸ்நானம் ஆகும்” (மரோனி 8:25). நீங்கள் கற்பிக்கும் மக்கள் நீங்கள் அழைக்கும் ஒப்புக்கொடுத்தல்களைக் கடைப்பிடிக்கும்போது, அவர்கள் தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்து அவற்றைக் காத்துக்கொள்ளவும், வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் தயாராக இருப்பார்கள்.
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் ஆகியவை இறுதி இலக்கு அல்ல. மாறாக, இந்த நியமங்கள் தேவனுடைய பிள்ளைகள் உடன்படிக்கைப் பாதையில் பிரவேசிப்பதற்கான வாயிலாகும். இந்தப் பாதை ஆலயத்தின் நியமங்கள், உடன்படிக்கைகள் மற்றும் மகிழ்ச்சியான ஆசீர்வாதங்களுக்கு வழிவகுக்கிறது—இறுதியில் நித்திய ஜீவனுக்கு (3 நேபி 11:20–40 ஐப் பார்க்கவும்).
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்கான தகுதிகள்
தேவன் தம்முடைய எல்லாப் பிள்ளைகளையும் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் மூலம் தம்மிடம் வரும்படி அழைக்கிறார் (2 நேபி 26:33; 3 நேபி 27:20 ஐப் பார்க்கவும்). ஞானஸ்நானம் பெறுவதற்கான தகுதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37 லிருந்து.
-
தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள்.
-
ஞானஸ்நானம் பெற விருப்பம்
-
நொருங்குண்ட இருதயத்துடனும், நருங்கிய ஆவியுடனும் வாருங்கள்.
-
உங்கள் எல்லா பாவங்களுக்கும் மனந்திரும்பி மன்னிப்புக்காக ஜெபிக்கவும்.
-
கிறிஸ்துவின் நாமத்தை உங்கள் மீது தரித்துக்கொள்ள சித்தமாயிருத்தல்.
-
இறுதிவரை கிறிஸ்துவுக்கு சேவை செய்ய தீர்மானத்துடன் இருங்கள்.
-
உங்கள் பாவ மன்னிப்புக்காக கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றீர்கள் என்பதை உங்கள் செயல்களால் காட்டுங்கள்.
பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்திடமிருந்து
-
ஞானஸ்நான நேர்காணல் கேள்விகளுக்குப் பொருத்தமான முறையில் பதிலளிக்கவும்.
-
அனைத்து ஊழியக்காரர்கள் பாடங்களையும் கேளுங்கள்.
-
மூப்பர்கள் குழுமத் தலைவர், ஒத்தாசைச் சங்கத் தலைவர் மற்றும் ஆயரைச் சந்திக்கவும்.
-
பல திருவிருந்துக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்.
இந்தத் தகுதிகள் ஆவிக்குரிய மனமாற்ற செயல்முறையின் குறிகாட்டிகளாகும். மக்கள் இந்தத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும்போது, ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் ஆகிய பரிசுத்த நியமங்களுக்கு அவர்கள் தயாராக உள்ளனர்.
ஒரு நபர் ஒரு உறுதியான ஞானஸ்நான தேதியை நிர்ணயித்திருக்கும் போது:
-
தேவையான கோட்பாடுகளையும் கட்டளைகளையும் நீங்கள் கற்பித்திருப்பதை உறுதிசெய்ய, என் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் செயலியில் அவரது பதிவை கவனமாக பரிசீலனை செய்யவும்.
-
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்குத் தயாராவதற்குத் தேவையான நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையை உருவாக்குங்கள். இந்த அட்டவணையை அந்த நபருடன் பரிசீலனை செய்யவும்.
-
முடிந்தால், அந்த நபரை அவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு ஒரு ஞானஸ்நான ஆராதனையில் கலந்து கொள்ள அழைக்கவும்.
வேதப் படிப்பு
பின்வரும் வேதவாக்கியங்ளைப் படிக்கவும்: நீங்கள் கற்பிப்பவர்கள் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்குத் தயாராவதற்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும்? உங்கள் படிப்பிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதைப் பதிவு செய்யுங்கள்.
-
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37–39
ஞானஸ்நான நேர்காணலுக்கு மக்கள் தயாராக உதவுங்கள்
ஞானஸ்நானத்திற்கான கர்த்தருடைய தகுதிகளை ஒருவர் பூர்த்தி செய்கிறார் என்பதை உறுதி செய்வதற்கு ஞானஸ்நான நேர்காணல் ஒரு முக்கியமான படியாகும். ஒருவர் தயாராக இருக்கும்போது மட்டுமே ஞானஸ்நான நேர்காணலைத் திட்டமிடுங்கள்.
இந்த நேர்காணலுக்கு மக்கள் தயாராக உதவுங்கள், இதனால் அவர்கள் அதைப் பற்றி வசதியாக உணர முடியும். அது எப்படி இருக்கும் என்பதை விளக்குங்கள். உங்களைப் போன்ற இன்னொரு ஊழியக்காரரை அவர்கள் சந்திப்பார்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
நேர்காணலின் நோக்கத்தை விளக்குங்கள். “தங்கள் பாவங்களின் மன்னிப்பிற்காக தங்களின் கிரியைகளால் கிறிஸ்துவின் ஆவியை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என உண்மையிலேயே தெரிவிக்கிற சகலரும் ஞானஸ்நானத்தால் மனந்திரும்பியவர்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37) என்பதை அவர்கள் சாட்சியாகக் காட்ட இது ஒரு வாய்ப்பாகும்.
நேர்காணல் செய்பவர் கேட்கும் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (கீழே காண்க). இது அந்த நபர் அவற்றிற்கு பதிலளிக்கத் தயாராக உதவுகிறது.
நீங்கள் கற்பித்ததையும், ஞானஸ்நானத்தில் அவர் அல்லது அவள் செய்யும் உடன்படிக்கையையும் அந்த நபர் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த உடன்படிக்கை:
-
கிறிஸ்துவின் நாமத்தை நம் மீது தரித்துக்கொள்ள சித்தமாயிருங்கள்.
-
தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்.
-
தேவனுக்கும் பிறருக்கும் சேவை செய்யுங்கள்.
-
இறுதிபரியந்தம் நிலைத்திருங்கள். (பாடம் 4 பார்க்கவும்.)
ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்டு, ஞானஸ்நான உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதால் வரும் மகத்தான ஆசீர்வாதங்களைப் பற்றி சாட்சியம் கூறுங்கள். இந்த ஆசீர்வாதங்களில் பாவ மன்னிப்பு மற்றும் பரிசுத்த ஆவியின் வரம் ஆகியவை அடங்கும்.
ஞானஸ்நான நேர்காணலை நடத்துதல்
ஞானஸ்நானம் பெற விரும்பும் ஒவ்வொரு நபரும் அங்கீகரிக்கப்பட்ட ஆசாரியத்துவத் தலைவரால் நேர்காணல் செய்யப்படுகிறார்கள். ஒரு ஊழியத்தில், இந்த நபர் சேகரம் அல்லது மண்டலத் தலைவராக இருப்பார். அவர் நேர்காணல்களை நடத்துகிறார்:
-
9 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், ஒருபோதும் ஞானஸ்நானம் பெற்று, திடப்படுத்தப்படாதவர்கள்.
-
8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பிள்ளைகள், அவர்களின் பெற்றோர் சபை உறுப்பினர்களாக இல்லாதவர்கள்.
-
8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பிள்ளைகள், அவர்களின் பெற்றோரும் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்படுகிறார்கள்.
நேர்காணல் செய்பவருக்கான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
-
நேர்காணலை ஒரு வசதியான, தனிமையான இடத்தில் நடத்துங்கள், அங்கு ஆவியை உணர முடியும்.
-
ஒரு பிள்ளை, இளைஞர் அல்லது பெண்ணை நேர்காணல் செய்யும்போது, நேர்காணல் செய்பவரின் துணைவர் அருகிலுள்ள அறை, வரவேற்பறை அல்லது மண்டபத்தில் அருகில் இருக்க வேண்டும். நேர்காணல் செய்யப்படுகிறவர் விரும்பினால் மற்றொரு வயதுவந்தவர் நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்படலாம். தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடிய அனைத்து சூழ்நிலைகளையும் ஊழியக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.
-
ஜெபத்துடன் தொடங்குங்கள்.
-
அந்த நபர் சௌகரியமாக உணர உதவுங்கள்.
-
நேர்காணலை ஆவிக்குரிய ரீதியில் மேம்படுத்தும் அனுபவமாக மாற்றுங்கள்.
-
நேர்காணலின் நோக்கத்தை அந்த நபர் புரிந்துகொண்டதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
-
கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஞானஸ்நான நேர்காணல் கேள்விகளைக் கேளுங்கள். தேவைக்கேற்ப, நபரின் வயது, முதிர்ச்சி மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப கேள்விகளை மாற்றியமைக்கவும்.
-
அந்நபரின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
-
துல்லியத்திற்காக ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் படிவத்தில் உள்ள தகவல்களை பரிசீலனை செய்யவும். அந்த நபர் வயது குறைந்தவராக இருந்தால், ஞானஸ்நானத்திற்கு முன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் படிவத்தில் கையொப்பமிட வேண்டும் (இந்த அத்தியாயத்தில் “ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்: கேள்விகள் மற்றும் பதில்கள்” பகுதியைப் பார்க்கவும்).
-
சாட்சியம் அளிக்க அல்லது அவரது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அந்நபரை அழைக்கவும்.
-
அந்த நபரைச் சந்திக்க முடிந்ததற்கு நன்றி தெரிவிக்கவும்.
ஞானஸ்நான நேர்காணல் கேள்விகள்
ஞானஸ்நான நேர்காணல் கேள்விகள் பின்வருவன:
-
தேவன் நமது நித்திய பிதா என்று நீங்கள் நம்புகிறீர்களா? இயேசு கிறிஸ்து தேவனின் குமாரன் என்றும், உலகத்தின் இரட்சகர் மற்றும் மீட்பர் என்றும் நீங்கள் நம்புகிறீர்களா?
-
ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி மூலம் இயேசு கிறிஸ்துவின் சபை மற்றும் சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா? [தற்போதைய சபைத் தலைவர்] தேவனின் தீர்க்கதரிசி என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களுக்கு இது என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?
-
மனந்திரும்புதல் என்றால் என்ன? உங்கள் கடந்த கால பாவங்களுக்காக நீங்கள் மனந்திரும்பிவிட்டதாக உணர்கிறீர்களா?
-
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்துவின் சபையில் உறுப்பினர் சேர்க்கை என்பது சுவிசேஷத் தரங்களின்படி வாழ்வது என்று உங்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. பின்வரும் தரநிலைகளைப் பற்றி நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்? இவற்றிற்கு கீழ்ப்படிய நீங்கள் தயாரா?
-
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சட்டப்பூர்வ திருமணத்தின் பிணைப்புகளுக்கு வெளியே எந்தவொரு பாலியல் உறவுகளையும் தடைசெய்யும் கற்புடைமை நியாயப்பிரமாணம் பற்றி நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?
-
தசமபாக நியாயப்பிரமாணம்
-
ஞான வார்த்தை
-
வாரந்தோறும் திருவிருந்தில் பங்கேற்பது மற்றும் மற்றவர்களுக்கு சேவை செய்வது உட்பட, ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரித்தல்.
-
-
நீங்கள் எப்போதாவது ஒரு கடுமையான குற்றம் செய்திருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் இப்போது சோதனைக்காலம் அல்லது பரோலில் இருக்கிறீர்களா?
-
நீங்கள் எப்போதாவது கருக்கலைப்பில் ஈடுபட்டிருக்கிறீர்களா? (பொது கையேடு, 38.6.1 பார்க்கவும்.)
-
நீங்கள் ஞானஸ்நானம் பெறும்போது, கிறிஸ்துவின் நாமத்தை உங்கள் மீது தரித்துக்கொள்ளவும், மற்றவர்களுக்கு சேவை செய்யவும், எல்லா நேரங்களிலும் தேவனின் சாட்சியாக நிற்கவும், உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும் நீங்கள் விருப்பமுள்ளவராக இருப்பதாக தேவனுடன் உடன்படிக்கை செய்கிறீர்கள். இந்த உடன்படிக்கையைச் செய்து, அதற்கு உண்மையாக இருக்க நீங்கள் தயாரா?
5 அல்லது 6 ஆம் கேள்விக்கு அந்த நபர் உறுதியாக பதிலளித்தால், வழிமுறைகளுக்கு, பொது கையேடு, 38.2.8.7 மற்றும் 38.2.8.8 ஐப் பார்க்கவும்.
பொது கையேடு, 38.2.8 இல் உள்ள ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் தொடர்பான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். இந்தக் கொள்கைகளில் சில நீங்கள் சந்திக்கக்கூடிய சிறப்புச் சூழ்நிலைகளை உள்ளடக்கியது.
நேர்காணலுக்குப் பிறகு, ஊழியக்காரரும் அந்நபரும் மற்ற ஊழியக்காரர்களுடன் மீண்டும் இணைகிறார்கள். அந்த நபர் ஞானஸ்நானத்திற்குத் தயாராக இருந்தால், ஞானஸ்நான ஆராதனையில் என்ன நடக்கும் என்பதை ஊழியக்காரர்கள் விளக்குவார்கள். திடப்படுத்தல் பொதுவாக அந்த நபர் வசிக்கும் தொகுதியின் ஒரு திருவருந்துக் கூட்டத்தில் நடைபெறுகிறது என்றும் அவர்கள் விளக்குகிறார்கள்.
ஞானஸ்நானம் தள்ளிப்போட வேண்டியிருக்கும் போது
சில சமயங்களில் சாட்சியம் அல்லது தகுதியில் உள்ள சவால்கள் காரணமாக ஞானஸ்நானத்தை தள்ளிப்போட வேண்டியிருக்கும். இது நிகழும்போது, சூழ்நிலையை உணர்திறன்மிக்கதாகவும் தனிப்பட்ட முறையிலும் கையாளுங்கள். எதிர்கால தேதியில் ஞானஸ்நானத்திற்கு எவ்வாறு தயாராவது என்பதைப் புரிந்துகொள்ள அந்த நபருக்கு உதவுங்கள்.
அந்த நபரை ஊக்குவித்து, கிறிஸ்துவிலும் அவருடைய பாவநிவர்த்தியிலும் நம்பிக்கை வழங்குங்கள். தொகுதி உறுப்பினர்களிடம் ஐக்கியம் கொள்ளச் சொல்லுங்கள். அந்நபர் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தத் தயாராகும் வரை சுவிசேஷத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கற்பிப்பதைத் தொடரவும். புதிய ஞானஸ்நான தேதியை திட்டமிட அந்த நேரம் வரை காத்திருங்கள்.
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்: கேள்விகள் மற்றும் பதில்கள்
வயது குறைந்த ஒருவரை ஞானஸ்நானம் செய்ய எனக்கு அனுமதி தேவையா? பிள்ளைகளின் நல்வாழ்விலும், அவர்களின் வீட்டுச் சூழலின் நல்லிணக்கத்திலும் சபை அக்கறை கொண்டுள்ளது. உள்ளூர் சட்டங்களால் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பின்வரும் இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் வயது குறைந்த ஒருவர் ஞானஸ்நானம் பெறலாம்:
-
பாதுகாவலர் பெற்றோர்(கள்) அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்(கள்) எழுத்துப்பூர்வ அனுமதியை வழங்குகிறார்கள். சபையின் உறுப்பினராக தங்கள் பிள்ளைக்குக் கற்பிக்கப்படும் கோட்பாடு குறித்த பொதுவான புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும். ஞானஸ்நான உடன்படிக்கையைச் செய்து அதைக் கடைப்பிடிப்பதில் பிள்ளையை ஆதரிக்கவும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
-
பிள்ளை ஞானஸ்நான உடன்படிக்கையைப் புரிந்துகொள்கிறது என்பதை நேர்காணலை நடத்துபவர் பகுத்தறிவார். சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது உட்பட கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் பிள்ளை இந்த உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க பாடுபடும் என்று அவர் நம்பிக்கையுடன் உணர வேண்டும்.
கணவன் அல்லது மனைவிக்கு ஞானஸ்நானம் கொடுக்க எனக்கு துணைவரின் ஒப்புதல் தேவையா? ஆம். திருமணமான ஒருவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு தனது துணைவரின் சம்மதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெற்றோர் ஞானஸ்நானத்திற்குத் தயாராக இல்லை என்றால், நான் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமா அல்லது பெற்றோர் தயாராகும் வரை காத்திருக்க வேண்டுமா? குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக ஞானஸ்நானம் பெறுவது விரும்பத்தக்கது. இருப்பினும், சிலர் தயாராக இல்லை என்றால், தேவையான ஒப்புதல் வழங்கப்பட்டால், தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஞானஸ்நானம் பெறலாம்.
குடும்ப உறுப்பினர்களின் ஞானஸ்நானம், தகப்பன் ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பெற்று, தாமே ஞானஸ்நானம் கொடுக்கும் வரை தாமதிக்க வேண்டுமா? இல்லை. புதிதாக ஞானஸ்நானம் பெற்ற சகோதரர்கள் ஞானஸ்நானம் பெற்ற நாளில் ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பெறுவதில்லை. அவர்கள் முதலில் ஆயரால் நேர்காணல் செய்யப்பட்டு, தொகுதி உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட வேண்டும்.
சபை அங்கத்தினரத்துவத்தை ராஜினாமா செய்த அல்லது உறுப்பினர் நிலை நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு நான் கற்பித்து ஞானஸ்நானம் கொடுக்கலாமா? சபை அங்கத்தினரத்துவத்தை ராஜினாமா செய்தவர்கள் அல்லது உறுப்பினர் நிலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் மூலம் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படலாம். அவர்கள் கற்பிக்க விரும்பினால், உங்களுக்கு இருக்கக்கூடிய எந்தவொரு பங்கைப் பற்றியும் உள்ளூர் ஆசாரியத்துவத் தலைவர்களுடனும் உங்கள் ஊழியத் தலைவருடனும் ஆலோசனை செய்யுங்கள்.
ஒரு பிணையத்தில், ஞானஸ்நானம் மூலம் மீண்டும் சேர்க்கப்படுவது ஆயர் அல்லது பிணையத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளது. ஒரு ஊழியத்தில், மறுபடியும் சேர்த்தல் என்பது ஊழியத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறுகிறது. இந்தத் தலைவர்கள் தேவைக்கேற்ப பிரதான தலைமையிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவார்கள். ஊழியக்காரர்கள் இந்த ஞானஸ்நான நேர்காணல்களை நடத்துவதில்லை அல்லது ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் படிவத்தை நிரப்புவதில்லை. இருப்பினும், ஞானஸ்நானம் நிறைவேற்ற ஒரு ஊழியக்காரர் அழைக்கப்படலாம்.
மீண்டும் இணையும் முன்னாள் சபை உறுப்பினர்கள் மனமாறியவர்கள் அல்ல. ஆயினும்கூட, ஊழியக்காரர்கள் சில சமயங்களில் சபை உறுப்பினர்களின் ஆசீர்வாதங்களை மீண்டும் அனுபவிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
ஒருவருக்கு ஞானஸ்நான தேதி திட்டமிடப்பட்டிருந்தாலும், அவர் தனது எல்லா ஒப்புக்கொடுத்தல்களையும் நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்வது? ஒருவர் தனது ஒப்புக்கொடுத்தல்களைக் கடைப்பிடித்து, ஞானஸ்நானத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் வரை, ஞானஸ்நான நேர்காணலைத் திட்டமிட காத்திருக்கவும். இந்த அத்தியாயத்தில் “ஞானஸ்நானம் எப்போது தள்ளிப்போடப்பட வேண்டும்” என்பதைப் பார்க்கவும்.
ஒரு தம்பதியினர் ஞானஸ்நானம் பெற விரும்பி, ஆனால் திருமணமின்றி ஒன்றாக வாழ்ந்தால் என்ன செய்வது? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சட்டப்பூர்வ திருமணத்திற்கு வெளியே ஒன்றாக வாழும் ஒரு தம்பதி, அவர்கள் கற்புடைமை நியாயப்பிரமாணத்தின்படி வாழும் வரை ஞானஸ்நானம் பெறக்கூடாது. இதன் பொருள், இனிமேலும் ஒன்றாக வாழவில்லை—இரு பாலின ஜோடியாக இருந்தாலும் அல்லது ஒரே பாலின ஜோடியாக இருந்தாலும் சரி—அல்லது, ஒரு ஆணானாலும் பெண்ணானாலும் திருமணம் செய்துகொள்வதைக் குறிக்கிறது. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி மனந்திரும்புவதற்கு விசுவாசத்தைப் பிரயோகிப்பதும் இதில் அடங்கும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் தேவனின் திட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும்.
ஞானஸ்நான நேர்காணலில் 5 மற்றும் 6 கேள்விகள், ஒருவர் எப்போதாவது கடுமையான குற்றத்தைச் செய்திருக்கிறாரா அல்லது கருக்கலைப்பில் பங்கேற்றிருக்கிறாரா என்று கேட்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு யாராவது “ஆம்” என்று பதிலளித்தால் நான் என்ன செய்ய வேண்டும்? ஞானஸ்நான நேர்காணலின் போது இந்த சூழ்நிலைகளில் ஒன்றை நீங்கள் அறிந்தால், விவரங்களைப் பற்றி கேட்காதீர்கள். அந்த நபர் ஞானஸ்நானத்திற்கு அங்கீகரிக்கப்படுவார் என்று வாக்குறுதி அளிக்காதீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள், மேலும் அதிக முதிர்ச்சியும் அனுபவமும் உள்ள ஒருவர் அந்த நபரிடம் பேசி உதவுவார் என்று தயவுசெய்து விளக்குங்கள்.
உங்கள் ஊழியத் தலைவருக்கு ஞானஸ்நான நேர்காணல் கோரிக்கையை அனுப்புங்கள். அவர் அல்லது அவரது ஆலோசகர்களில் ஒருவர் அந்த நபரைச் சந்திப்பார். பொது கையேடு, 38.2.8.7 மற்றும் 38.2.8.8 ஐப் பார்க்கவும்.
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் உறுப்பினர் பதிவு உருவாக்கப்பட்டிருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? அறிவுரைகளுக்கு உங்கள் ஊழியத் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.
தனிப்பட்ட படிப்பு
நீங்கள் நேர்காணல் செய்யப்பட்டால் எப்படி உணருவீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். பின்வரும் கேள்விகளைக் கருத்தில் கொண்டு உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்.
-
நேர்காணல் உங்களுக்கு எப்படி சங்கடமாகத் தோன்றலாம்? நீங்கள் எளிதாக உணர நேர்காணல் செய்பவர் என்ன செய்ய அல்லது சொல்ல முடியும்?
-
நேர்காணல் செய்பவர் உங்களுடன் எப்படிப் பழக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
-
நீங்கள் சந்தேகங்களையோ அல்லது தவறான புரிதல்களையோ தெரிவித்தாலோ அல்லது மோசமான பாவங்களை ஒப்புக்கொண்டாலோ பேட்டி காண்பவர் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்?
ஞானஸ்நான ஆராதனை
ஞானஸ்நான ஆராதனையும் திடப்படுத்தலும் ஒரு புதிய உறுப்பினருக்கு ஆவிக்குரிய சிறப்பம்சங்களாக இருக்க வேண்டும். ஒருவர் ஞானஸ்நானம் பெறுவதற்கான தகுதிகளைப் பெற்றவுடன், ஞானஸ்நான ஆராதனையை திட்டமிட வேண்டும். என்ன திட்டமிடப்பட்டுள்ளது, ஏன் என்பதை விளக்குங்கள். ஞானஸ்நானத்திற்கு வெள்ளை ஆடை அணிய அந்த நபருக்கு எவ்வாறு வழங்கப்படும் என்பது உட்பட, சரியான உடை பற்றி கலந்துரையாடவும்.
மனமாறியவர்களுக்கான ஞானஸ்நான ஆராதனைகள் ஆயத்தின் வழிகாட்டுதலின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளன. தொகுதி ஊழியத் தலைவர் (ஒருவர் அழைக்கப்பட்டால்) அல்லது மூப்பர்கள் குழு தலைமையின் உறுப்பினர் ஊழியப்பணித் திட்டங்களை வழிநடத்தி இந்த ஆராதனைகளை நடத்துவார் . அவர் முழுநேர ஊழியக்காரர்களுடன் ஒருங்கிணைக்கிறார். ஞானஸ்நான ஆராதனைகள் எளிமையாகவும், சுருக்கமாகவும், ஆவிக்குரிய ரீதியில் மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
ஞானஸ்நான ஆராதனையில் கலந்து கொள்ள ஆயத்தின் ஒரு உறுப்பினரை, ஒத்தாசை சங்கத் தலைமையின் ஒரு உறுப்பினரை, மற்றும் மூப்பர்கள் குழுமத் தலைமையின் ஒரு உறுப்பினரை (அவர் நடத்தவில்லை என்றால்) அழைக்கவும். பொருத்தமான நேரங்களில், மற்ற அமைப்புத் தலைவர்கள், இளைஞர் தலைவர்கள் மற்றும் ஊழிய சகோதர சகோதரிகளை (நியமிக்கப்பட்டால்) அழைக்கவும். ஞானஸ்நானம் பெறும் நபருடன் இணைந்து பணியாற்றி, நண்பர்கள் மற்றும் உறவினர்களை ஞானஸ்நான ஆராதனை மற்றும் திடப்படுத்தலில் கலந்து கொள்ள அழைக்கவும்.
நீங்கள் கற்பிக்கும் மற்றவர்களை அழைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இந்த அனுபவங்கள் அவர்கள் ஆவியை உணரவும், சுவிசேஷத்தைப் பற்றி மேலும் அறியவும் உதவும். ஆராதனைக்குப் பிறகு, அவர்களின் அனுபவத்தைப் பற்றி கலந்துரையாட பின்தொடர்ந்து, அவர்களைக் கற்பிக்க அழைக்கவும்.
ஞானஸ்நான ஆராதனையில் பின்வருவன அடங்கும்:
-
முன்னிசை
-
ஆராதனையை நடத்தும் ஆசாரியத்துவத் தலைவரிடமிருந்து ஒரு சுருக்கமான வரவேற்பு (முடிந்தால் ஆயத்தின் உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்க வேண்டும்)
-
ஒரு ஆரம்பப் பாடல் மற்றும் ஜெபம்
-
ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியின் வரம் போன்ற சுவிசேஷ பாடங்களைப் பற்றிய ஒன்று அல்லது இரண்டு சிறு செய்திகள்.
-
ஒரு இசைத் தேர்வு
-
ஞானஸ்நானம்
-
ஞானஸ்நானத்தில் பங்கேற்றவர்கள் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொள்ளும் ஒரு பயபக்தியான நேரம். (இந்த நேரத்தில் பாடல்கள் அல்லது ஆரம்ப வகுப்பு பாடல்கள் இசைக்கப்படலாம் அல்லது பாடப்படலாம்.) அல்லது ஊழியக்காரர்கள் ஒரு சுருக்கமான சுவிசேஷ விளக்கக்காட்சியைக் கொடுக்கலாம்.)
-
தேவைப்பட்டால், புதிய உறுப்பினர்கள் சாட்சியம் அளித்தல்.
-
ஒரு நிறைவுப் பாடலும் ஜெபமும்
-
பின்னிசை
நீங்கள் ஞாயிற்றுக்கிழமை ஞானஸ்நானத்தைத் திட்டமிட்டால், வழக்கமான ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுடன் குறைந்த அளவில் முரண்படும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
திடப்படுத்தல்
ஒரு நபர் ஞானஸ்நானம் பெற்ற பிறகு திடப்படுத்தல் நியமத்தைப் பெறுகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:41 ஐப் பார்க்கவும்). ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் ஆகிய இரண்டும் பூர்த்தி செய்யப்பட்டு முறையாகப் பதிவு செய்யப்பட்ட பின்னரே, ஒரு புதிய மனமாறியவர் சபையின் உறுப்பினராகக் கருதப்படுகிறார்.
திடப்படுத்தல்கள் ஆயரின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளன. இருப்பினும், திடப்படுத்தலுக்காக அவர் தனி நேர்காணலை நடத்துவதில்லை.
புதிய மனமாறியவர்கள் திடப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, ஆயர் மற்றும் தொகுதி ஊழியத் தலைவருடன் (ஒருவர் அழைக்கப்பட்டால்) நெருக்கமாகப் பணியாற்றுங்கள். ஞானஸ்நானம் பெற்ற உடனேயே, அடுத்த ஞாயிற்றுக்கிழமை திடப்படுத்தல் நிகழ வேண்டும். இருப்பினும், விதிவிலக்காக ஞானஸ்நான ஆராதனையில் திடப்படுத்தல் நடைபெற ஆயர் அனுமதிக்கலாம் (பொது கையேடு, 18.8 ஐப் பார்க்கவும்).
மனமாறியவர்கள் பொதுவாக அவர்கள் வசிக்கும் தொகுதியில் ஒரு திருவிருந்துக் கூட்டத்தில் திடப்படுத்தப்படுகிறார்கள். வழக்கமாக தொகுதியில் சேவை செய்யும் ஊழியக்காரர் மூப்பர்களை திடப்படுத்தலில் பங்கேற்க ஆயர் அழைக்கிறார். ஒரு ஊழியக்காரர் திடப்படுத்தலைச் செய்தால், அவருக்கு ஊழியத் தலைவரின் ஒப்புதலும் தேவை (பொது கையேடு, 18.8.1 ஐப் பார்க்கவும்). ஆயத்தில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது பங்கேற்கிறார்.
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் படிவத்தை நிரப்பவும்.
ஒரு நபர் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்ட பிறகு, உறுப்பினர் பதிவை உடனடியாக உருவாக்குவது மிக முக்கியம். தனது காலத்தில் இருந்த இத்தகைய பதிவுகளைப் பற்றி, மரோனி எழுதினார், புதிய உறுப்பினர்கள் “அவர்கள் கிறிஸ்துவினுடைய சபையின் ஜனங்களோடே எண்ணப்பட்டார்கள்; அவர்கள் நினைவுகூரப்பட்டு தேவனுடைய நல்வசனத்தினால் போஷிக்கப்படவும், அவர்களை நல்வழியில் வைத்திருக்கவும், அவர்களுடைய பெயர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன” (மரோனி 6:4).
ஞானஸ்நானம் பெறத் தயாராகும் ஒருவருக்கு நீங்கள் கற்பிக்கும்போது, என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் செயலியில் ஞானஸ்நானம் மற்றும் உறுதிப்படுத்தல் படிவத்தை நிரப்பத் தொடங்குங்கள். உறுப்பினர் பதிவை உருவாக்க இந்தப் படிவம் பயன்படுத்தப்படும் என்பதை விளக்குங்கள். இந்தப் பதிவில் ஒருவர் பெறும் நியமங்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் இருக்கும். சபை உறுப்பினர்கள் இடம் மாறும்போது, உள்ளூர் தலைவர்களும் உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவளிக்க அவர்களின் உறுப்பினர் பதிவு அவர்களின் புதிய தொகுதிக்கு அனுப்பப்படும்.
புதிய உறுப்பினர் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்டவுடன், ஒவ்வொரு நியமம் பற்றிய தகவலுடன், அதைச் செய்தவர் உட்பட, படிவத்தைப் புதுப்பிக்கவும். நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்தவுடன், என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் செயலியில் தகவலைப் பதிவுசெய்து, அதை தொகுதி எழுத்தரிடம் மின்னணு முறையில் சமர்ப்பிக்கவும். எழுத்தர் படிவத்தைப் பெற்றவுடன், அவர் அதை பரிசீலனை செய்து உறுப்பினர் பதிவை உருவாக்குகிறார்.
உறுப்பினர் பதிவு உருவாக்கப்பட்ட பிறகு, ஒரு எழுத்தர் ஒரு ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் சான்றிதழைத் தயாரிக்கிறார். இந்த சான்றிதழ் ஆயரால் கையொப்பமிடப்பட்டு அந்த நபருக்கு வழங்கப்படுகிறது.
உறுப்பினர் பதிவேடு மற்றும் சான்றிதழில் உள்ள பெயர் மற்றும் பாலினம், நபரின் பிறப்புச் சான்றிதழ், சமூக பிறப்புப் பதிவேடு அல்லது தற்போதைய சட்டப்பூர்வப் பெயருடன் பொருந்த வேண்டும்.
தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு
மோசியா 6:1–3 மற்றும் மரோனி 6:1–4. ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்களின் துல்லியமான பதிவுகளை வைத்திருப்பதோடு இந்தப் பத்திகள் எவ்வாறு தொடர்புடையவை?
ஞானஸ்நானமும் திடப்படுத்தலும்
தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள்
புதிய உறுப்பினர்கள் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்ட பிறகு, அவர்களுடன் தொடர்ந்து ஐக்கியம் கொண்டு ஆதரவளியுங்கள். அவர்கள் சபைக்குச் சென்று உறுப்பினர்களுடன் உறவுகளை உருவாக்க உதவுங்கள். அவர்களுடன் மார்மன் புஸ்தகத்தைப் படியுங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு உதவுங்கள். அவர்களுக்கு எனது உடன்படிக்கை பாதை சிற்றேட்டை அறிமுகப்படுத்துங்கள். திருவிருந்துக் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டது மற்றும் அவர்கள் பெற்ற பாடங்கள் போன்ற அவர்களின் முன்னேற்றத்தைப் பதிவு செய்ய, என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தவும்.
திடப்படுத்தப்பட்ட பிறகு, ஊழியப் பாடங்களை மீண்டும் கற்பிக்கவும். நீங்கள் கற்பிப்பதில் முன்னிலை வகியுங்கள். இருப்பினும், தொகுதி ஊழியக்காரர்கள் அல்லது பிற உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் தொகுதி தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுங்கள். நீங்கள் கற்பிக்கும்போது, புதிய உறுப்பினர்கள் பாடங்களில் உள்ள அனைத்து ஒப்புக்கொடுத்தல்களையும் கடைப்பிடிக்க ஊக்குவிக்கவும்.
வாராந்திர ஒருங்கிணைப்பு கூட்டங்களில், உறுப்பினர்கள் புதிய மனமாறியவர்களை எவ்வாறு ஆதரிக்கலாம் மற்றும் அவர்கள் சபையில் தீவிரமாக ஈடுபட உதவலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்குங்கள். குழு அல்லது அமைப்புத் தலைவர்களுக்கு யார் அவர்களை அறிமுகப்படுத்துவார்கள் என்பதைத் திட்டமிடுங்கள். நீங்கள் மீண்டும் பாடங்களைக் கற்பிக்கும்போது மற்ற உறுப்பினர்களின் பங்கேற்பை ஒருங்கிணைக்கவும். ஊழிய சகோதரர்களை நியமிக்கச் சொல்லுங்கள் (மற்றும் பெண்களுக்கு ஊழிய சகோதரிகளை நியமிக்கச் சொல்லுங்கள்).
ஒரு ஆண் திடப்படுத்தப்பட்ட பிறகு, அந்த ஆண்டின் இறுதிக்குள் அவருக்கு குறைந்தது 12 வயது இருந்தால், அவர் ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பெறத் தகுதியுடையவர். ஆரோனிய ஆசாரியத்துவ நியமனங்கள் ஆயரின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளன (பொது கையேடு, 38.2.9.1 ஐப் பார்க்கவும்).
பொருத்தமானபடி, நீங்கள் கற்பித்தவர்களுடன் உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்பு கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற அவர்களுக்கு ஆதரவளியுங்கள்.
“நொறுங்கிய இருதயங்களுடனும் நருங்கிய ஆவிகளோடும் நாம் வரும்போது இயேசு கிறிஸ்துவில் குரலை நாம் கண்டு, பாதுகாப்பின் அவருடைய புரிந்துகொள்ளுதலின் கரங்களால் நாம் சூழப்படுவோம். உள் நோக்கத்தையும் வெளிப்புற செயலையும் பரிசுத்தப்படுத்த, உடன்படிக்கையை சொந்தமாக்குதலையும் ‘தெய்வீக வல்லமையையும்’ பரிசுத்த நியமங்கள் வழங்குகின்றன [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20]. அவருடைய அன்புள்ள தயவாலும் நீடிய பொறுமையாலும், அவருடைய சபை நமது சத்திரமாக மாறுகிறது” (Gerrit W. Gong, “Room in the Inn,” Liahona, May 2021, 27).
புதிய உறுப்பினர்கள் ஆலய ஆசீர்வாதங்களில் பங்கேற்க உதவுங்கள்.
பொருத்தமான வயதில் உள்ள புதிய உறுப்பினர்கள், மரித்த தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக ஞானஸ்நானம் பெற அனுமதிக்கும் ஒரு ஆலய பரிந்துரையைப் பெறலாம் (பொது கையேடு, 26.4.2 ஐப் பார்க்கவும்). அவர்கள் இந்தப் பரிந்துரையை ஆயரிடமிருந்து பெறுகிறார்கள். நியாயமான முறையில் விரைவில் ஆலய பரிந்துரையைப் பெற புதிய உறுப்பினர்களை ஊக்குவிக்கவும். ஒரு ஆலயம் அருகில் இருந்தால், புதிய உறுப்பினர்கள் மரித்த மூதாதையர்களுக்கு ஞானஸ்நானம் செய்ய ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அழைப்பை வழங்குவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தைப் பயன்படுத்தி, புதிய உறுப்பினர்கள் குடும்ப வரலாறு தலைவர் மற்றும் தொகுதி ஆலயத்திற்கு யார் அவர்களை அறிமுகப்படுத்துவார் என்பதைத் திட்டமிடுங்கள். இந்தத் தலைவர் அவர்கள் சொந்த ஆலய உடன்படிக்கைகளைச் செய்வதன் மூலம் ஆலயத்தின் ஆசீர்வாதங்களைப் பெறத் தயாராக அவர்களுக்கு உதவ முடியும்.
படிப்பு மற்றும் பயன்படுத்துவதற்கான யோசனைகள்
தனிப்பட்ட படிப்பு
-
ஞானஸ்நானம் பெற விரும்புவோர் சந்திக்கக்கூடிய சவால்களைப் பட்டியலிடுங்கள். ஒரு நபர் சபை உறுப்பினர்களின் அன்பையும் நட்பையும் உணருவது ஏன் முக்கியம்?
-
மரோனி 6; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:68–69 பார்க்கவும். ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்கு மக்கள் தயாராக உதவுவது பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? நீங்கள் கற்றுக்கொண்டவற்றை எழுதவும். தோழமைப் படிப்பின் போது உங்கள் எண்ணங்களை உங்கள் தோழருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தோழமை படிப்பு மற்றும் தோழமை பரிமாற்றம்
-
சுவிசேஷ தரநிலைகள் ஏன் முக்கியம் என்பதை தலைவர் ஹென்றி பி. ஐரிங் விளக்கினார். பின்வரும் ஆலோசனையைப் பற்றி கலந்துரையாடவும். இந்த தரங்களை பூர்த்தி செய்ய மக்கள் விருப்பப்படுவதற்கு நீங்கள் எவ்வாறு ஊக்குவிக்க முடியும்?
“கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்படி தம்முடைய தரங்களை அமைக்கிறார். அந்த ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: தரங்களை பூர்த்தி செய்பவர்களுக்கு பரிசுத்த ஆவியின் உதவியை அவர் வாக்குறுதி அளிக்கிறார். அவர் தனிப்பட்ட சமாதானத்தை உறுதியளிக்கிறார். அவருடைய வீட்டில் பரிசுத்த நியமங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை அவர் வாக்களிக்கிறார். மேலும், அவருடைய தரங்களை நிலைநிறுத்தி வாழ்வோருக்கு நித்திய ஜீவன் கிடைக்கும் என்று அவர் வாக்குறுதி அளிக்கிறார். …
“நாம் சேவை செய்யும் மக்களை நேசிப்பதால், நமது பரலோக பிதாவின் பிள்ளைகளை கர்த்தருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் பெற அவர்களுக்குத் தேவையான விசுவாசத்துக்கும் பரிசுத்தத்துக்கும் உயர்த்துவதில் நாம் அனைவரும் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறோம். …
“… நீங்கள் கர்த்தருடைய தரங்களை தெளிவாகவும் மனம் வருந்தாமலும் நிலைநிறுத்துவதன் மூலம் தொடங்குகிறீர்கள். உலகம் அவர்களிடமிருந்து எவ்வளவு விலகிச் சென்று அவர்களைக் கேலி செய்கிறதோ, அவ்வளவுக்கு நாம் அதைச் செய்வதில் துணிச்சலாக இருக்க வேண்டும்” (“Standards of Worthiness,” First Worldwide Leadership Training Meeting, Jan. 2003, 10–11).
-
ஞானஸ்நான நேர்காணல் கேள்விகளை பரிசீலனை செய்யவும். பின்வருபவை போன்ற சூழ்நிலைகளை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்:
-
அந்த நபர் ஒரு குற்றத்திற்காக தான் சோதனை காலத்தில் இருப்பதாக உங்களிடம் சொல்லவில்லை.
-
ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி என்று ஜெபித்ததற்கு அந்த நபருக்கு பதில் கிடைக்கவில்லை.
-
அந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சிகரெட் புகைத்தார்.
-
அந்த நபருக்கு தனது ஜெபங்களுக்கு பதில் கிடைத்ததா என்று உறுதியாகத் தெரியவில்லை.
-
குடும்பத்தினர் நண்பர்களிடமிருந்து அழுத்தத்தை உணர்ந்தனர், மேலும் அவர்கள் ஞானஸ்நானத்திற்குத் தயாராக இருக்கிறார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை.
-
-
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் படிவத்தை பரிசீலனை செய்யவும். நீங்கள் வழங்கும் தகவல்கள் ஏன் சரியாகவும் முழுமையாகவும் இருக்க வேண்டும்?
சேகர ஆலோசனைக்குழு, மண்டல மாநாடுகள், ஊழியத் தலைமை ஆலோசனைக்குழு
-
ஞானஸ்நான நேர்காணலின் முக்கியத்துவத்தை பரிசீலனை செய்யவும். நேர்காணலுக்குத் தயாராவதற்கு ஊழியக்காரர்கள் எவ்வாறு மக்களுக்கு உதவ முடியும் என்பதைப் பற்றி கலந்துரையாடவும்.
-
ஞானஸ்நான ஆராதனைகளையும், திடப்படுத்தல்களையும் கண்டுபிடிக்கும் வாய்ப்புகளாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி கலந்துரையாடவும்.
ஊழியத் தலைவர்கள் மற்றும் ஊழிய ஆலோசகர்கள்
-
உள்ளூர் ஆசாரியத்துவம் மற்றும் அமைப்புத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி, அவர்கள் உடன்படிக்கைப் பாதை முன்னேற்ற அறிக்கையை திறம்பட பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
-
ஞானஸ்நான நேர்காணலுக்கு மக்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பதை சேகரத் தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் சகோதரி பயிற்சித் தலைவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். இந்த நேர்காணலுக்கு மக்களை தயார்படுத்த மற்ற ஊழியக்காரர்களுக்கு பயிற்சி அளிக்க அவர்களை அழைக்கவும்.
-
மாவட்ட மற்றும் மண்டலத் தலைவர்களுக்கு ஞானஸ்நான நேர்காணல்களை எவ்வாறு நடத்துவது என்று கற்றுக்கொடுங்கள்.
-
ஒரு நபர் ஒரு கடுமையான பாவத்தைச் செய்ததாக தெரிவிக்கும்போது, ஞானஸ்நான நேர்காணலில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுங்கள்.
-
முடிந்த போதெல்லாம், புதிய உறுப்பினர்களுக்கான ஞானஸ்நான ஆராதனைகளில் கலந்து கொள்ளுங்கள். புதிய உறுப்பினர்களுடன் பேசி அவர்களின் மனமாற்ற அனுபவங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்டதை உங்கள் தோழருடனும் ஊழியக்காரர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.