சுவிசேஷ வகுப்புகள்
அத்தியாயம் 2: வேதங்களைத் தேடுங்கள் மற்றும் தேவனின் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்


“அத்தியாயம் 2: வேதங்களைத் தேடுங்கள் மற்றும் தேவனின் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)

“வேதங்களைத் தேடுங்கள் மற்றும் தேவனின் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

ஜோசப் ஸ்மித் வேதாகமத்தில் ஞானத்தைத் தேடுகிறார்- டேல் கில்போர்ன்

அத்தியாயம் 2

வேதங்களைத் தேடுங்கள் மற்றும் தேவனின் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்

இதைக் கருத்தில் கொள்ளவும்

  • வேதங்களில் உள்ள தேவனுடைய வார்த்தையை தொடர்ந்து படிப்பது ஏன் முக்கியம்?

  • என்னுடைய வேதப் படிப்பை நான் எவ்வாறு மிகவும் பயனுள்ளதாக மாற்ற முடியும்?

  • எனது நோக்கத்தை நிறைவேற்ற தொழில்நுட்பத்தை எவ்வாறு நான் நீதியாகப் பயன்படுத்தலாம்?

  • தேவனின் சர்வாயுத வர்க்கத்தை தரித்துக் கொள்வது என்றால் என்ன?

வேதங்களைத் தேடவும்

இயேசு கிறிஸ்து “அவரே உலகத்தின் ஜீவனும் ஒளியுமானவர். இதோ, அவரே சத்தியம் மற்றும் நீதியின் வார்த்தையானவர்” (ஆல்மா 38:9; யோவான் 1 பார்க்கவும்). பரிசுத்த வேதங்களில்ல் தேவனுடைய வார்த்தையைப் படிப்பது உங்கள் வாழ்க்கையில் ஏராளமான வளத்தைக் கொண்டுவரும் (யோவான் 10:10 ஐப் பார்க்கவும்). அவருடைய வார்த்தைகள்— உங்களையும் நீங்கள் போதிப்பவர்களையும்—ஒளியாலும் சத்தியத்தாலும் நிரப்பும். அவர்கள் உங்களுக்கும்—நீங்கள் கற்பிப்பவர்களுக்கும்—நீதியாக வாழவும், தெய்வீக பாதுகாப்பையும் பலத்தையும் பெறவும் உதவுவார்கள். அவர்கள் அவரை அறிந்துகொள்ளவும், எல்லாவற்றிற்கும் மேலாக இனிமையான அவரது அன்பை ருசிக்கவும் உங்களுக்கு உதவுவார்கள். அவருடைய வார்த்தைகள் உங்கள் ஆத்துமாவை மகிழ்ச்சியால் நிரப்பும் (1 நேபி 8:11–12; வசனங்கள் 1–34 ஐப் பார்க்கவும்).

வேதங்கள் பரலோகத்தின் வரம். உங்கள் பணியின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று, ஒவ்வொரு நாளும் அவற்றைப் படிப்பதற்கு ஒரு திட்டமிடப்பட்ட நேரத்தைக் கொண்டிருப்பது.

நீங்கள் செய்யக்கூடிய மிகவும் பலனளிக்கும் ஆவிக்குரிய பணிகளில் ஒன்று சுவிசேஷப் படிப்பு. இது மன ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது. ஆல்மா கற்பித்தபடி, நீங்கள் தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் “விதைக்கும்” போது, ​​அது “[உங்கள்] புரிதலை விசாலமடையச் செய்யும்” மற்றும் உங்களுக்கு சுவையாக மாறும் (ஆல்மா 32:28; ஏனோஸ் 1:3–4 ஐயும் பார்க்கவும்). நீங்கள் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைப் படித்துப் பிரயோகிக்கும்போது, ​​அது “வேர் விடும்; இதோ, அது நித்திய ஜீவன் வரை வளர்கிற விருட்சமாயிருக்கும்” (ஆல்மா 32:41; 42–43 வசனங்களையும் பார்க்கவும்). உங்கள் அறிவும் சுவிசேஷம் பற்றிய சாட்சியமும் அதிகரிக்கும். உங்கள் ஆர்வமும், சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் திறனும் அதிகரிக்கும்.

ஒரு நல்ல ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்வது முக்கியம், ஆனால் உங்கள் சொந்த வேதப் படிப்பிலிருந்து அர்த்தமுள்ள கற்றல் அனுபவங்களைப் பெறுவதும் முக்கியம். நீங்கள் கற்பிக்கும் மக்களுக்கும் இது உண்மையாயிருக்கிறது.

வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்வது ஆரம்பத்தில் சவாலாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பொறுமையாகப் படிக்கும்போது, ​​உங்கள் புரிதல் வளரும். நீங்கள் வேதங்களுடனான உங்கள் நேரத்தைப் பொக்கிஷமாகக் கருதுவீர்கள். நீங்கள் கற்றுக்கொள்வதையும் அனுபவிப்பதையும் ஆவலுடன் எதிர்நோக்குவீர்கள்.

வேதவாக்கியங்களை அறிந்துகொள்வதும் அவற்றை நேசிப்பதும் உங்கள் ஊழிய சேவையின் வாழ்நாள் முழுவதும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும். உங்கள் ஊழியத்தின் போது வேதப் படிப்பின் ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிக்கும்போது, ​​உங்கள் வாழ்நாள் முழுவதும் அதைத் தொடர விரும்புவீர்கள்.

மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன்

“எல்லா வேதவாக்கியங்களின் மைய நோக்கம், பிதாவாகிய தேவன் மீதும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மீதும் நம் ஆத்துமாக்களை விசுவாசத்தால் நிரப்புவதாகும்—அவர்கள் இருக்கின்றார்கள் என்ற விசுவாசம்; நமது அழியாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் பிதாவின் திட்டத்தில் விசுவாசம்; இந்த மகிழ்ச்சியின் திட்டத்தை உயிர்ப்பிக்கும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் விசுவாசம்; இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நம் வாழ்க்கை முறையாக ஆக்குவதற்கான விசுவாசம்; ‘ஒரே உண்மையான தேவனையும், அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும்’ அறிந்துகொள்வதற்கான விசுவாசம். (யோவான் 17:3)” (D. Todd Christofferson, “The Blessing of Scripture,” Liahona, May 2010, 34).

தனிப்பட்ட படிப்பு

இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஜோசப் ஸ்மித்தின் படத்தைப் பாருங்கள். ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:11–13 வாசிக்கவும். உங்கள் படிப்பு குறிப்பிதழில் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

  • ஜோசப் ஸ்மித்தின் யாக்கோபு 1:5-ஐ வாசித்து சிந்தித்தது அவரை எவ்வாறு வெளிப்படுத்தலைப் பெற வழிநடத்தியது?

  • அவரது ஆய்வு எதிர்கால சந்ததியினரிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?

  • அவர் படித்துத் தேடுவது என்ற முடிவு உங்கள் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

  • உங்கள் சுவிசேஷப் படிப்பு உங்கள் வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் எவ்வாறு பாதித்துள்ளது?

வேதப் படிப்பு

சுவிசேஷப் படிப்பை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி பின்வரும் வேதவாக்கியங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

ஆவியானவரை நாடுங்கள்

சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வது என்பது தகவல்களைப் பெறுவதை விட அதிகம். இது பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின் கீழ் நித்திய சத்தியத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஆவிக்குரிய செயல்முறையாகும். (யாக்கோபு 4:8; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:19–25 பார்க்கவும்). நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, ​​ஆவியானவர் உங்களுக்குப் போதிக்க அவரைத் தேடி நம்புங்கள். நீங்கள் கற்றுக்கொண்டவற்றின்படி செயல்பட உண்மையான நோக்கத்துடன் வேதவாக்கியங்களை உங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு இது நடக்கும் (1 நேபி 19:23; மரோனி 10:4; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:18 பார்க்கவும்).

வேதங்களை ஜெபத்துடன் படிப்பது, ஆவியானவர் உங்கள் மனதுடனும் இருதயத்துடனும் பேசுவதற்கான வெளிப்பாட்டின் ஒரு சாளரத்தைத் திறக்கும். அவர் உங்களுக்கு வழிகாட்டுதல், உணர்த்துதல் மற்றும் உங்கள் கேள்விகளுக்கான பதில்களை வழங்கி ஆசீர்வதிப்பார். வேதங்களைப் படிப்பதன் மூலம், பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பலப்படுத்தி ஆறுதல்படுத்துவார். அவர் உங்களுக்கு அறிவையும், மன உறுதியையும் தருவார், அது உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும் மற்றவர்களை நித்தியமாக ஆசீர்வதிக்க உங்களுக்கு உதவும்.

வேதப் படிப்பு

ஒரு நபர் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள உதவுவதில் பரிசுத்த ஆவியின் பங்கு என்ன?

கேள்விகளுக்கான பதில்களைத் தேடவும்.

ஒரு ஊழியக்காரராக, நீங்கள் பல கேள்விகளைக் கேட்பீர்கள். உங்களுக்கும் உங்களுடைய சொந்த கேள்விகள் இருக்கும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களுக்காக வேதங்களையும் பிற அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களையும் தேடுவது படிப்பதற்கான ஒரு வல்லமைவாய்ந்த வழியாகும். கேள்விகளையும், நீங்கள் கற்றுக்கொண்டவற்றையும் உணருவதையும் உங்கள் படிப்பு குறிப்பிதழில் பதிவு செய்யுங்கள்.

உங்கள் ஆய்வில் துல்லியமான, நம்பகமான ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள்—முதன்மையாக வேத வாக்கியங்கள், ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் மற்றும் என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். சுவிசேஷ நூலகத்தில் உள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தவும், எடுத்துக்காட்டாக Guide to the Scriptures, Bible Dictionary, index to the triple combination, Gospel Topics, and Gospel Topics essays. நீங்கள் கற்பிக்கும் மக்களின் மொழிகளில் என்னென்ன ஆதாரங்கள் கிடைக்கின்றன என்பதை அறிக.

தலைவர் எம். ரசல் பல்லார்ட்

“வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், கர்த்தர் நம் கேள்விகளுக்கு எவ்வளவு அடிக்கடி பதிலளிக்கிறார், வேதவாக்கியங்கள் மூலம் நமக்கு ஆலோசனை வழங்குகிறார் என்பதுதான். … அப்படியானால், நாம் ஜெபத்தில் கர்த்தரிடம் சென்று, உதவி அல்லது பதில்களுக்காக மன்றாடுவோம்; நாம் வேதங்களைத் திறந்து அவற்றைப் படிக்கத் தொடங்கும்போது அந்த பதில்கள் வரும். சில நேரங்களில் அது நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு பத்தியானது நமது கேள்விக்கு பதிலளிக்க குறிப்பாக கட்டளையிடப்பட்டது போல் இருக்கும்” (M. Russell Ballard, “Be Strong in the Lord, and in the Power of His Might” [Brigham Young University fireside, Mar. 3, 2002], 5, speeches.byu.edu).

நீங்கள் கற்பதன்படி வாழுங்கள்

“சுவிசேஷத்தைப் புரிந்துகொள்வதிலிருந்து வருகிற மகிழ்ச்சியை நீங்கள் உணரும்போது, நீங்கள் கற்றவற்றைப் பிரயோகிக்க விரும்புவீர்கள்” உங்கள் புரிதலுக்கு இசைவாக வாழ முயற்சி செய்யுங்கள். அவ்வாறு செய்வது உங்கள் நம்பிக்கை, அறிவு மற்றும் சாட்சியத்தை பலப்படுத்தும். நீங்கள் கற்றுக்கொண்டவற்றின்படி செயல்படுவது கூடுதல் மற்றும் நீடித்த புரிதலைக் கொண்டுவரும். (யோவான் 7:17 பார்க்கவும்.)

தலைவர் பாய்ட் கே. பாக்கர்

“உண்மையான கோட்பாடு, புரிந்து கொள்ளப்பட்டது, மனப்பான்மைகளையும் நடத்தையையும் மாற்றுகிறது. நடத்தை பற்றிய ஆய்வு நடத்தையை மேம்படுத்துவதை விட, சுவிசேஷத்தின் [கோட்பாட்டை] படிப்பது நடத்தையை விரைவாக மேம்படுத்தும்” (Boyd K. Packer, “Little Children,” Ensign, Nov. 1986, 17).

தனிப்பட்ட படிப்பு

சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வது பற்றி பின்வரும் வேதவாக்கியங்கள் என்ன கற்பிக்கின்றன?

சுவிசேஷ நூலகத்தை பயன்படுத்தவும்

சுவிசேஷ நூலகம் என்பது உங்கள் படிப்பு மற்றும் கற்பித்தலை பெரிதும் மேம்படுத்தக்கூடிய ஒரு இணையவழி வளமாகும். அதன் பல அம்சங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் படிப்பு மற்றும் கற்பித்தலின் ஒரு பகுதியாக சுவிசேஷ நூலகத்தைப் பயன்படுத்துவதன் சில நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • இது வேத வாக்கியங்கள், ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் மற்றும் பிற சபை உள்ளடக்கங்களை பல மொழிகளில் உரை, ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்களில் அணுக அனுமதிக்கிறது.

  • நீங்கள் கற்றுக்கொண்டவற்றையும், நீங்கள் பெற்ற எண்ணங்களையும் சுவிசேஷ நூலகத்தில் பதிவு செய்தால், உங்கள் ஊழியத்திற்க்குப் பிறகு அந்தத் தகவலை நீங்கள் தொடர்ந்து பெறலாம் மற்றும் பலப்படுத்தப்படலாம்.

  • நீங்கள் கற்பிக்கும் நபர்களுடன் வேத வாக்கியங்கள், ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் மேற்கோள்கள் மற்றும் காணொளிகளை எளிதாகப் பகிர்ந்து கொள்ள இது உங்களை அனுமதிக்கிறது.

  • நீங்கள் கற்பித்து ஞானஸ்நானம் கொடுக்கும் பெரும்பாலான மக்கள் சபை ஆதாரங்களைப் பெற சுவிசேஷ நூலகத்தைப் பயன்படுத்துவார்கள். சுவிசேஷ நூலக அம்சங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள், இதன் மூலம் அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவலாம்.

தனிப்பட்ட படிப்பு

Gospel Library User Guide” ஐப் பரிசீலிக்கவும். உங்கள் அடுத்த தனிப்பட்ட மற்றும் தோழமைப் படிப்பில் முயற்சிக்க சுவிசேஷ நூலகத்தில் ஒரு அம்சத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த அம்சம் உங்கள் படிப்புக்கு எவ்வாறு உதவியது? அடுத்த முறை என்ன முயற்சி செய்வீர்கள்? நீங்கள் கற்றுக்கொண்டதை மற்ற ஊழியக்காரர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்.

தொழில்நுட்பத்தை நீதியாகப் பயன்படுத்துங்கள்

கர்த்தரும் அவருடைய தீர்க்கதரிசிகளும் அவருடைய பணியை நிறைவேற்ற உதவும் தொழில்நுட்பத்தை உங்களிடம் ஒப்படைத்துள்ளனர். தொழில்நுட்பம் உங்கள் வேதங்கள் மற்றும் என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் படிப்பை மேம்படுத்தும். திட்டமிட டிஜிட்டல் ஆதாரங்களும் உங்களுக்கு உதவும். அவை நீங்கள் கற்பிப்பதிலும், கற்பிக்க ஆட்களைக் கண்டுபிடிக்கும் உங்கள் முயற்சிகளிலும் உதவ முடியும்.

தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும் பயன்படுத்துவது உங்கள் ஊழிய நோக்கத்தை நிறைவேற்றவும் நேரத்தை திறம்பட பயன்படுத்தவும் உதவும். இது பொருத்தமற்ற நூல்களைத் தவிர்க்கவும் உதவும்.

இயேசு கிறிஸ்து மீதான உங்கள் விசுவாசத்தையும், நீங்கள் சேவை செய்து கற்பிப்பவர்களின் விசுவாசத்தையும் வலுப்படுத்த உதவும் வழிகளில் தொழில்நுட்பத்தை எப்போது, ​​எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆவியைப் பின்பற்றுங்கள்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.

கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நான்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்த உங்களுக்கு உதவும். இந்தப் பாதுகாப்புகளைப் பின்பற்றுவது, “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்வது” (எபேசியர் 6:11) ஒரு முக்கியமான வழியாகும்.

ஆவிக்குரிய தூண்டுதல்களுக்கு இசைவாக இருங்கள்

நேபி வாக்களித்தான், “நீங்கள் இந்த வழியாய் உட்பிரவேசித்து, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டால், அது நீங்கள் செய்யவேண்டிய சகல காரியங்களையும் உங்களுக்குக் காண்பிக்கும்” (2 நேபி 32:5). உங்கள் பரலோக பிதா உங்களுக்கு உதவும் இரண்டு வல்லமைவாய்ந்த வரங்களை வழங்கியுள்ளார்: ஒழுக்க சுயாதீனம் மற்றும் பரிசுத்த ஆவியின் வரம். பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைப் பின்பற்றத் தேர்ந்தெடுக்கும் வல்லமை உங்களிடம் உள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீங்கள் நல்லது செய்ய உதவுவதில் அவரது வழிகாட்டுதல் மிக முக்கியமானது. இது தீமையிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

உங்கள் ஊழிய நோக்கத்தில் கவனம் செலுத்துங்கள்

கர்த்தர் சொன்னார், “என்னுடைய மகிமைக்கென்று உங்கள் கண் ஒரே நோக்கத்திலிருந்தால் உங்களுடைய முழு சரீரங்களும் ஒளியால் நிரப்பப்படும், உங்களில் இருளிருக்காது, ஒளியால் நிரப்பப்பட்ட அந்த சரீரம் சகல காரியங்களையும் அறியும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:67). தேவனின் மகிமையின் மீது உங்கள் கண்களை ஒருமுகப்படுத்துவது என்பது தேவனின் நோக்கத்தின் மீது முழுமையாக கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது, இது ஒரு ஊழியக்காரராக உங்கள் நோக்கமாகவும் இருக்கிறது.

உங்கள் தொழில்நுட்ப பயன்பாடு உங்கள் நோக்கத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் சாதனத்தை எந்த ஊழிய நோக்கத்திற்காகப் பயன்படுத்துவீர்கள் என்பதை நீங்கள் அடையாளம் கண்ட பின்னரே அதை இயக்கவும். அந்த நோக்கம் முடிந்ததும் அதை அணைக்கவும்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொள்ளாமல் சாதாரணமாக இணையத்தில் உலாவும்போது, ​​இணையத்தில் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.

ஊழியக்காரர்கள் தொலைபேசியைப் பார்த்தல்

ஒழுக்கமாக இருங்கள்

மார்மன் எழுதினான்: “தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சீஷன் நான். அவருடைய ஜனங்கள் நித்திய ஜீவனைப் பெறும்படிக்கே, அவருடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்காக, அவரால் அழைக்கப்பட்டிருக்கிறேன்.(3 நேபி 5:13). மார்மனைப்போல நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர். முழுநேர ஊழியக்காரராக சேவை செய்வது உங்கள் சீஷத்துவத்தை ஆழப்படுத்த ஒரு சிறப்பு வாய்ப்பாகும்.

“சீஷன்” மற்றும் “ஒழுக்கம்” என்ற சொற்கள் “கற்பவர்” அல்லது “மாணவர்” என்று பொருள்படும் அதே மூல வார்த்தையிலிருந்து வந்தவை. கிறிஸ்துவின் சீஷராக இருப்பது என்றால், நீங்கள் அவரைப் பின்பற்றி அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முயல்வதாகும். நீங்கள் தொடர்ந்து கிறிஸ்துவைக் கற்றுக்கொண்டு கற்பிக்கிறீர்கள் என்பதே இதன் பொருள்.

தொழில்நுட்பத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதில் நீதியாக இருங்கள் மற்றும் நீதியான தேர்வுகளை எடுங்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றத் தேர்வுசெய்யுங்கள். நீங்கள் மக்களுடன் நேருக்கு நேர் பேசும்போது, ​​செய்திகளைப் பார்க்கவோ அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ வேண்டாம். இந்த சாதனங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்துங்கள். அவை உங்களை கட்டுப்படுத்த விடாதீர்கள்.

கர்த்தர் அறிவித்தார், “எனது நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறவனே எனது சீஷனாயிருக்கிறான்; அதை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி அதன்படி நடக்காதவன் எனது சீஷனாயிருக்கமாட்டான்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41:5). யாரும் பரிபூரணர் அல்ல என்றாலும், தம்மைப் பின்பற்றுவதற்கு நிலையான, விடாமுயற்சியை கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

நாம் மனந்திரும்பும்போது மன்னிக்கப்பட முடியும் என்பதே சுவிசேஷத்தின் அழகு—மேலும் நாம் தாமதமின்றி மனந்திரும்ப வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:21 ஐப் பார்க்கவும்). நீங்கள் ஒரு தவறு செய்தால், தொழில்நுட்பத்தை முறையற்ற முறையில் பயன்படுத்துவது உட்பட, அந்த தருணத்தில் மனந்திரும்பி, அவருடைய நியாயப்பிரமாணத்தின்படி வாழ முயற்சி செய்யுங்கள். இது கிறிஸ்துவின் சீஷராக இருப்பதன் ஒரு பகுதியாகும்.

ஒன்றாக இருங்கள்

கர்த்தர் சொன்னார், “ஒன்றாயிருங்கள் நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்களல்ல.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:27). உங்கள் ஊழியத்தில் ஒற்றுமை, நம்பிக்கை, பொறுப்பேற்றல் மற்றும் மனதுருக்கம் ஆகியவற்றின் கலாச்சாரத்தை வளர்க்க உதவுங்கள், இதன் மூலம் நீங்கள் ஒருவரையொருவர் வலுப்படுத்தவும் ஆதரிக்கவும் முடியும்.

தேவைப்படும்போது உதவி கேட்பதற்கு அனைத்து ஊழியக்காரர்களும் சௌகரியமாக உணர வேண்டும். ஆவியில் பலமான ஒரு ஊழியக்காரன் பலவீனமாக உணருபவருக்கு உதவ முடியும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:106 பார்க்கவும்). நீங்கள் சோதிக்கப்பட்டால், உங்கள் தோழரிடம் அல்லது ஊழியத் தலைவரிடம் உதவி கேளுங்கள்.

இணையம் அல்லது ஆபாச படத்துடன் தொடர்புடைய கிட்டத்தட்ட அனைத்து சவால்களும் தனிமையில் இருக்கும்போது நிகழ்கின்றன. ஒருவருக்கொருவர் திரைகளைப் பார்க்க முடிந்தால் மட்டுமே சாதனங்களைப் பயன்படுத்தவும். தைரியமாக இருங்கள், ஒருவருக்கொருவர் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

உங்களையும் சேர்த்து, கர்த்தர் தாம் அழைத்த ஒவ்வொரு ஊழியக்காரர் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். உங்களைப் பாதுகாக்கவும் ஆதரிக்கவும் அவர் உங்களுக்கு தோழர்களையும் தலைவர்களையும் வழங்கியுள்ளார். ஆல்மா தனது தோழரான அமுலேக்கை ஆதரித்ததைப் போலவே, ஒருவரையொருவர் பலப்படுத்த முயலுங்கள் (ஆல்மா 15:18 ஐப் பார்க்கவும்).

நீங்கள் பாதிக்கப்படக்கூடியவராகவோ அல்லது எளிதில் தாக்கப்படக்கூடியவராகவோ உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்த நான்கு பாதுகாப்புகளைப் பின்பற்றக் கற்றுக்கொள்வதற்கு முயற்சி, ஒழுக்கம் மற்றும் பயிற்சி தேவை. பாதுகாப்பு நடவடிக்கைகள் நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் மற்றும் செயல்படுகிறீர்கள் என்பதன் இயல்பான பகுதியாக மாறிய பிறகும், நீங்கள் பாதிக்கப்படக்கூடியவராகவோ அல்லது எளிதில் தாக்கப்படக்கூடியவராகவோ உணரக்கூடிய நேரங்கள் இருக்கும். உங்கள் ஊழியத்திற்கு முன்பு உங்களுக்கு சில மோசமான தொழில்நுட்ப பழக்கங்கள் இருந்திருக்கலாம், அவற்றை ஜெயிப்பது கடினமாக இருந்திருக்கலாம். சில ஊழியக்காரர்கள் தங்கள் அழைப்புக்கு முன்பு ஆபாச படத்துடன் போராடினர், மேலும் முந்தைய நடத்தை முறைகளுக்குத் திரும்பத் தூண்டப்படலாம்.

கீழே உள்ள கொள்கைகள் பாதுகாப்புகளின்படி வாழவும், சோதனையிலிருந்து உங்களைப் பலப்படுத்தவும் உதவும்:

  • உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு அவை உங்களை எவ்வாறு அதிக பாதிப்புக்குள்ளாக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

  • செயல்பட தேர்வு செய்யுங்கள். நீங்கள் உணருவதற்கு நீதியான, ஆக்கபூர்வ வழிகளில் பதிலளிக்கவும்.

  • கற்றுக்கொள்ளுங்கள், மனந்திரும்புங்கள், மேம்படுங்கள். உங்கள் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து கற்றுக் கொள்ளவும் மேம்படவும் முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் சொந்தமாக சவால்களை வெல்ல வேண்டியதில்லை. இரட்சகரின் பாவநிவர்த்தியின் மூலமாகவும், நீங்கள் அவரோடு செய்த உடன்படிக்கைகளின் மூலமாகவும் வரும் பலத்தை நம்புங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை கர்த்தர் அறிவார், மேலும் இந்த மகத்தான வேலையில் அவர் உங்களுக்கு உதவுவார்.

எப்போதும் இரட்சகரை நினைவில் கொள்வது தொழில்நுட்பத்தை நீதியாகப் பயன்படுத்த உங்களுக்கு உதவும். அவர் உங்களுக்குக் கொடுத்த நம்பிக்கைக்கு உண்மையாக இருங்கள். “அவருக்கு முன்பாக தலைநிமிர்ந்து நடக்க” தீர்மானியுங்கள் (ஆல்மா 53:21; வசனம் 20 ஐயும் பாரக்கவும்). அவரும் பிதாவும் உங்களுக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றியுணர்வை உணருவது, நீங்கள் டிஜிட்டல் ஆதாரங்களை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது குறித்து நல்ல தேர்வுகளைச் செய்ய உதவும்.

தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள உங்கள் பணி ஒரு சிறந்த வாய்ப்பாகும். உங்கள் ஊழியத்தின் போது நீங்கள் வளர்த்துக் கொள்ளும் ஒப்புக்கொடுத்தல் மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பயனளிக்கும்.

தேவனின் சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்ளுங்கள்

வேத வாக்கியங்கள், ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள், என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கான ஊழிய தரநிலைகள் மற்றும் இந்த அத்தியாயத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பாதுகாப்புகளைப் படித்துப் பயன்படுத்தும்போது சோதனையை எதிர்க்கும் உங்கள் திறன் அதிகரிக்கும்.

ஊழியக்காரர்கள் மனிதனை வாழ்த்துதல்

“தேவனின் சர்வாயுத வர்க்கத்தையும்” தரித்துக் கொள்ளுவதால் பிழையிலிருந்து சத்தியத்தைப் பிரித்தறிய உங்களால் முடியும். உங்கள் பாதங்களுக்கு “சமாதானத்தின் சுவிசேஷம்” என்ற பாதரட்சை அணிவிக்கப்படும். “நீதியின் மார்புக் கவசத்தைத்” தரித்துக்கொள்வது உங்களைப் பாதுகாக்கும். “விசுவாசத்தின் கேடயத்தால்”, நீங்கள் சத்துருவின் அக்கினி அம்புகளை அணைக்க முடியும். சத்தியத்தை வல்லமையுடனும் அதிகாரத்துடனும் போதிக்க நீங்கள் “[அவருடைய] ஆவியின் பட்டயத்தை” எடுப்பீர்கள். உலக செல்வாக்குகளுக்கு எதிராக நீங்கள் பலப்படுத்தப்படுவீர்கள், இல்லையெனில் அவை உங்களை அலைக்கழிக்கவும், தனிமைப்படுத்தவும், அந்நியப்படுத்தவும் கூட வழிவகுக்கும். (எபேசியர் 6:10–18 பார்க்கவும்; மேலும் 1 நேபி 8:20, 30; 15:24–25; ஏலமன் 3:29–30; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:15–18; ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:37; 2 தீமோத்தேயு 3:15–17 பார்க்கவும்.)

தனிப்பட்ட படிப்பு

இந்த வாரம் கவனம் செலுத்த வேண்டிய பாதுகாப்புகளில் ஒன்றை ஜெபத்துடன் அடையாளம் காணுங்கள். கர்த்தரின் உதவியை நாடுங்கள் உங்கள் உணர்வுகளையும் நீங்கள் கற்றுக்கொண்டவற்றையும் பதிவு செய்யுங்கள்.


படிப்பு மற்றும் பயன்படுத்துவதற்கான யோசனைகள்

தனிப்பட்ட படிப்பு

  • உங்கள் படிப்பை மேம்படுத்த பின்வரும் ஆலோசனைகளில் சிலவற்றை முயற்சி செய்யுங்கள்.

    • கேள்விகள் மற்றும் கவலைகளை மனதில் கொண்டு வேதவாக்கியங்களைப் படியுங்கள்.

    • நீங்கள் கற்றுக்கொள்வதை மற்ற ஊழியக்காரர்களுடனும், நீங்கள் கற்பிப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு கோட்பாடு அல்லது கொள்கையை விளக்குவது அதை நினைவில் வைத்துக் கொள்ளவும் தெளிவு பெறவும் உதவும்.

    • தலைப்புவாரியாக படிக்கவும் உங்களுக்கும் நீங்கள் கற்பிக்கும் மக்களுக்கும் உதவும் தலைப்புகளில் கவனம் செலுத்துங்கள்.

    • உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், “ஆசிரியர் என்ன சொல்கிறார்? முக்கிய செய்தி என்ன? இந்த ஆலோசனை எனக்கு எப்படி பொருந்தும்? இது நாம் கற்பிக்கும் ஒருவருக்கு எப்படிப் பொருந்தும்?

    • நீங்கள் படிப்பதை காட்சிப்படுத்துங்கள் அல்லது வரையுங்கள். உதாரணமாக, லாமானிய ராஜாவுக்கு முன்பாக அம்மோன் நின்றது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

    • ஒரு பத்தியின் முக்கிய கருத்தை ஒரு வாக்கியத்தில் அல்லது குறுகிய பத்தியில் எழுதுங்கள்.

    • நீங்கள் கற்பிக்கும் நியமங்களை விளக்கும் மற்றும் ஆதரிக்கும் வேதவாக்கியங்களை மனப்பாடம் செய்யுங்கள்.

  • பின்வருவனவற்றில் உங்களை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளுங்கள் (1=ஒருபோதும் இல்லை, 3=சில நேரங்களில், மற்றும் 5=கிட்டத்தட்ட எப்போதும்).

    • நான் என் விசுவாசத்தில் வளர்ந்து வருகிறேன், பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் நன்றாக அறிந்துகொள்கிறேன்.

    • நான் படிக்கும்போது, ​​நான் கற்பிக்கும் மக்களைப் பற்றி யோசிப்பேன்.

    • நாள் முழுவதும், நான் காலையில் படித்ததைப் பற்றி யோசிப்பேன்.

    • நான் படிக்கும்போது, ​​இதற்கு முன்பு எனக்குத் தோன்றாத எண்ணங்கள் என் மனதில் வருகின்றன.

    • நான் ஆவிக்குரிய பதிவுகள் மற்றும் கருத்துக்களை பொருத்தமான இடத்தில் பதிவு செய்கிறேன்.

    • நான் படிக்கும்போது விழித்திருப்பேன்.

    • நான் தனிப்பட்ட படிப்பை எதிர்நோக்குகிறேன்.

    • நான் தோழமை படிப்பை எதிர்நோக்குகிறேன்.

    உங்கள் பதில்களை மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் எதை நன்றாக செய்கிறீர்கள்? நீங்கள் எப்படி மேம்படலாம்? உங்கள் படிப்பின் தரத்தை மேம்படுத்த ஒன்று அல்லது இரண்டு இலக்குகளை அமைக்கவும்.

தோழமை படிப்பு மற்றும் தோழமை பரிமாற்றம்

சேகர ஆலோசனைக்குழு, மணடல மாநாடுகள், ஊழியத் தலைமை ஆலோசனைக்குழு

  • 3 ஆம் அத்தியாயத்தில் உள்ள ஒரு பாடத்திலிருந்து சுவிசேஷத்தைப் பற்றிய ஒன்று அல்லது இரண்டு கேள்விகளை எழுத ஊழியக்காரர்களிடம் கேளுங்கள். இந்தக் கேள்விகள் தனிப்பட்டதாகவோ அல்லது அவர்கள் கற்பிக்கும் நபர்களிடமிருந்து வந்ததாகவோ இருக்கலாம். ஊழியக்காரர்கள் தங்கள் கேள்விகளைக் குழுவுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கவும். ஒவ்வொரு கேள்விக்கும், பின்வருவனவற்றைப் பற்றி கலந்துரையாடவும்:

    • இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது ஊழியக்காரரின் வாழ்க்கையை எவ்வாறு ஆசீர்வதிக்கும்?

    • அவர் கற்பிக்கும் மக்களின் வாழ்க்கையை அது எவ்வாறு ஆசீர்வதிக்க முடியும்?

    • ஒரு ஊழியக்காரர் எப்படி பதிலைக் கண்டுபிடிக்க முடியும்?

  • ஊழியக்காரர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் நான்கு பாதுகாப்பு விதிகளில் ஒன்றையும் அதனுடன் இணைந்த வேத வாக்கியங்களையும் படிக்க பணிக்கவும். ஊழியக்காரர்கள் தாங்கள் கற்றுக்கொண்டவற்றையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் அவர்களுக்கு எவ்வாறு உதவின என்பதையும் பகிர்ந்து கொள்ள அழைக்கவும்.

ஊழியத் தலைவர்கள் மற்றும் ஊழிய ஆலோசகர்கள்

  • எப்போதாவது ஊழியக்காரர்களை அவர்களுடைய தோழமைகளுடன் படிப்பில் சேருங்கள்.

  • நேர்காணல்கள் அல்லது உரையாடல்களின் போது, ​​பின்வரும் கேள்விகளில் சிலவற்றைக் கேளுங்கள்:

    • சமீபத்தில் உங்கள் வேதப் படிப்பில் உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்பட்டன?

    • கடந்த இரண்டு வாரங்களில் என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்களின் எந்த அத்தியாயம் அல்லது பகுதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது? இது எவ்வாறு உங்களுக்கு உதவியது?

    • உங்கள் தனிப்பட்ட படிப்பில் நீங்கள் கற்றுக்கொள்ள உதவுவதற்காக என்ன செய்கிறீர்கள்?

  • நேர்காணல்களில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்புகளை மதிப்பாய்வு செய்வதையும், ஊழியக்காரர்கள் அவற்றைப் பயன்படுத்தும்போது அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கேட்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

  • உங்கள் தனிப்பட்ட படிப்பிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் படிப்பு குறிப்பிதழிலிருந்து பதிவுகளையும், சுவிசேஷ படிப்பின் முக்கியத்துவம் குறித்த உங்கள் சாட்சியங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.