“பிரதான தலைமையிலிருந்து செய்தி,” இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி (2022)
“பிரதான தலைமையிலிருந்து செய்தி,” இளைஞரின் பெலனுக்காக
பிரதான தலைமையிலிருந்து செய்தி
எங்கள் அன்பான இளம் சகோதர சகோதரிகளே,
நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் உண்மையிலேயே பரலோக பிதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவிகளில் ஒருவராக இருக்கிறீர்கள், முக்கியமான காரியங்களைச் செய்ய இந்த நேரத்தில் பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் வலிமையாகவோ அல்லது திறமையாகவோ உணராத நேரங்கள் இருக்கலாம். அது சரிதான். விசேஷமாக அந்த தருணங்களில், இரட்சகரிடம் திரும்புங்கள். அவர்தான் “இளைஞரின் பெலன்.”
உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருப்பதற்கான தேர்வுகளை செய்வதற்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்க இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும். ஆலயத்தில் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்யத் தயாராகவும், ஊழியத்திற்குச் செல்ல தயாராகவும், உங்கள் வாழ்நாள் முழுவதும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் மகிழ்ச்சியைக் காணவும் இது உதவும். நீங்கள் இரட்சகரின் சபையைச் சேர்ந்தவர் என்றும், உங்களுக்கான அவருடைய நோக்கங்களை நிறைவேற்ற அவரிடமிருந்து வல்லமை பெற்றிருக்கிறீர்கள் என்றும் நீங்கள் உணருகிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
தேவன் ஜீவிக்கிறார் என நாங்கள் அறிகிறோம். உங்கள் பரலோக பிதாவிடம் திரும்பிச் செல்லும் உடன்படிக்கைப் பாதையில் நீங்கள் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் ஜெபம். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, மகிழ்ச்சியுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து, இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு உலகை ஆயத்தப்படுத்தி, நீங்கள் நன்மைக்கான ஒரு செல்வாக்கு செலுத்துபவராக இருப்பீர்கள்.
பிரதான தலைமை