இளைஞர்
இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவுவார்


“இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவுவார்,” இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி (2022)

“இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவுவார்,” இளைஞரின் பெலனுக்காக

இயேசு கிறிஸ்துவின் ஓவியம்

இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவுவார்

சங்கீதம் 147:3.

இயேசு கிறிஸ்துவே உங்கள் பெலன்! இந்த வாழ்க்கையிலும் என்றென்றும் நீங்கள் மகிழ்ச்சியைப் பெறுவதற்குத் தேவையான அனைத்தையும் அவர் செய்துள்ளார். அவரையும் அவருடைய சுவிசேஷத்தையும் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் நித்திய மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

இயேசுவின் கை, ஒரு மனிதனின் மூடிய கண்ணைத் தொடும்  ஓவியம்.

நல்ல தேர்வுகளைச் செய்ய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சித்தாலும், சில நேரங்களில் நீங்கள் தவறுகளைச் செய்வீர்கள். நீங்கள் செய்ய விரும்பாத விஷயங்களைச் செய்வீர்கள். எல்லோரும் செய்கிறார்கள். அது நடக்கும்போது, ​​அதைரியமடைவதாக உணர்வது அல்லது நீங்கள் எப்போதாவது நல்லவராக இருப்பீர்களா என்று யோசிப்பது எளிது. ஆனால் ஒரு நல்ல செய்தி இருக்கிறது—அற்புதமான, நம்பிக்கையூட்டும் செய்தி! தேவன் உங்களை நேசிப்பதால், அவர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார், அவர் உங்கள் பாவங்களைத் தம்மேல் ஏற்றுக்கொண்டார், அதனால் நீங்கள் மனந்திரும்பி முன்னேற முடியும்.

நித்திய சத்தியங்கள்

இயேசு கிறிஸ்து உங்களைப் பலப்படுத்த முடியும். உங்கள் ஆசைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களை மாற்ற அவர் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் கவலைப்பட்டாலோ, பயப்பட்டாலோ, அல்லது எந்த விதத்திலாவது போராடினாலோ, அவர் உங்களை ஆறுதல்படுத்துவார். உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அவர் உங்களுக்கு உதவுவார்.

மனந்திரும்புதல் பாவத்திற்கான தண்டனை அல்ல; அது இரட்சகர் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கும் வழி. மனந்திரும்புதல் என்பது மாறுவது—பாவத்திலிருந்து விலகி தேவனை நோக்கி திரும்புதல். அது மன்னிப்பை மேம்படுத்துதல் மற்றும் பெறுதல் என்பதாகும். இந்த மாதிரியான மாற்றம் ஒருமுறை நடக்கும் நிகழ்வு அல்ல; இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.

அழைப்புகள்

மனந்திரும்புங்கள் முன்னேற வேண்டும் என்ற விருப்பத்துடன் கர்த்தரிடம் திரும்புங்கள். நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை தேவனுக்கு முன்பாகவும், தேவைக்கேற்ப, உங்கள் ஆயரிடமும், நீங்கள் தீங்கு செய்திருக்கக்கூடிய எவரிடமும் நேர்மையாக ஒப்புக்கொள்ளுங்கள். காரியங்களைச் சரியாகச் செய்ய உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

சிறப்பாகச் செய்து சிறப்பாக இருப்பதற்கான வரத்தில் களிகூருங்கள். அது எளிதாய் இல்லாமல், நீங்கள் விரும்புவதை விட அதிக நேரம் எடுத்தாலும் கூட, முயற்சிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். தொடர்ந்து உழைத்து, கர்த்தரை நம்புங்கள். இரட்சகர் வழியின் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு உதவுவார்.

வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.

நீங்கள் மனந்திரும்பும்போது இயேசு கிறிஸ்து உங்களை மன்னித்து குணமாக்குவார். அவர் உங்கள் குற்ற உணர்வை சமாதானத்தாலும் மகிழ்ச்சியாலும் மாற்றுவார். அவர் இனிமேலும் உங்கள் பாவங்களை நினைவில் கொள்ளமாட்டார். அவருடைய பலத்தில், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும் உங்கள் விருப்பம் அதிகரிக்கும்.

அவர் உங்கள் இருதயத்தையும் உங்கள் வாழ்க்கையையும் மாற்றுவார். நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவரைப் போலாவீர்கள். அவருடனான உங்களின் உடன்படிக்கை இணைப்பு அவருடைய வல்லமையை நீங்கள் அதிகமாகப் பெற உதவும்.

கேள்விகளும் பதில்களும் சின்னம்

கேள்விகளும் பதில்களும்

தேவன் என்னை மன்னித்துவிட்டாரா என்று எனக்கு எப்படித் தெரியும்? மனந்திரும்புபவர்களை மன்னிப்பதாக தேவன் வாக்குறுதி அளிக்கிறார். நீங்கள் ஆவியானவரிடமிருந்து ஆறுதலை உணரும்போது, ​​இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமை உங்கள் வாழ்க்கையில் செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மனந்திரும்புவதற்கு எனக்கு எப்போது ஆயரின் உதவி தேவை? நீங்கள் மனந்திரும்ப உதவ, உங்கள் ஆயர் ஆசாரியத்துவ திறவுகோல்களையும் ஆவிக்குரிய வரங்களையும் தரித்திருக்கிறார். நீங்கள் எந்த நேரத்திலும் அவருடைய உதவியையும் ஆலோசனையையும் நாடலாம். கற்புடைமை நியாயப்பிரமாணத்தை மீறுவது போன்ற கடுமையான தவறுகளை நீங்கள் செய்திருந்தால், உங்கள் ஆயரைச் சந்திக்கவும். அவர் உங்களைக் கண்டிக்க மாட்டார். அவர் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி, முழுமையாக மனந்திரும்பி இரட்சகரின் குணப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் வல்லமையை எவ்வாறு பெறுவது என்பதை அறிய உங்களுக்கு உதவுவார்.

நான் மனந்திரும்ப முயற்சிக்கிறேன், ஆனால் நான் அதே தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறேன். இப்போது நான் என்ன செய்யவேண்டும்? நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், கெட்ட பழக்கங்களை முறிக்கவும் நேரம் எடுக்கும், எனவே விட்டுவிடாதீர்கள். கிறிஸ்துவை நோக்கித் திரும்புங்கள். அவரது கிருபை போதும். திரும்ப முயற்சி செய்யுங்கள். முன்னேறுவதற்கான உங்கள் முயற்சிகளில் நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை. இயேசு கிறிஸ்து எப்போதும் உங்களுடன் இருக்கிறார்.

சீற்றத்துடன் எழும் அலைகளுக்கு மத்தியில் பேதுருவின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் இயேசுவின் ஓவியம்.

ஏனோஸ் 1:6 (குற்ற உணர்வை துடைத்துவிடலாம்); மோசியா 4:3 (பரிசுத்த ஆவியின் மூலம், நீங்கள் மன்னிக்கப்பட்டதை தேவன் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.); 26:30 (நாம் மனந்திரும்பும் போதெல்லாம் இரட்சகர் மன்னிக்கிறார்.); ஏத்தேர் 12:27 (இரட்சகரின் கிருபை பலவீனமானவற்றை வலிமையாக்கும்); மரோனி 6:8 (மனந்திரும்புபவர்கள் மன்னிக்கப்படுகிறார்கள்.); 10:32 (கிறிஸ்துவில் பூரணப்படுங்கள்.); கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:32 (மனந்திரும்புபவர்களை கர்த்தர் மன்னிக்கிறார்.); 58:42–43 (மனந்திரும்புதல் என்பது பாவத்தை ஒப்புக்கொள்வதும், அதை விட்டுவிடுவதும் ஆகும்) பார்க்கவும்.

ஆலய சின்னம்

ஆலயப் பரிந்துரை கேள்விகள்

நித்திய பிதாவாகிய தேவன், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியில் உங்களுக்கு விசுவாசமும் சாட்சியுமுண்டா?

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியிலும் உங்களுடைய இரட்சகராகவும் மீட்பராகவும் அவருடைய பாத்திரத்திலும் உங்களுக்கு சாட்சியுண்டா?