“கிறிஸ்துவில் சந்தோஷத்தைக் காணுங்கள்,” இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி, (2022)
“கிறிஸ்துவில் சந்தோஷத்தைக் காணுங்கள்,” இளைஞரின் பெலனுக்காக
கிறிஸ்துவில் சந்தோஷத்தைக் காணுங்கள்
தேர்வுகள் முக்கியம். சுவிசேஷ போதனைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள், உங்கள் பரலோக பிதாவிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் உங்களை நெருக்கமாகக் கொண்டு செல்லும் படிகளாகும். இயேசு சொன்னார், “உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11). அவரை நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், நீங்கள் ஆவியானவருக்கு நெருக்கமாக உணருவீர்கள், மேலும் தேவனுடனான உங்கள் உடன்படிக்கை உறவு வலுவடையும்.
ஆனால் அதற்காக அந்தப் பாதை பிரச்சனையற்றதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. யாரும் சரியான நேர்கோட்டில் நடப்பதில்லை என்பதால், உங்கள் திசையை தொடர்ந்து சரிபார்த்து, தேவனின் கட்டளைகளை மதிக்கவும். தேவனுடன் உங்கள் உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளுங்கள், மேலும் அதிகமாகச் செய்யத் தயாராகுங்கள். உடன்படிக்கைகள் உங்களை பரலோக பிதாவுடனும் இரட்சகருடனும் இணைக்கின்றன. அவை உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை அதிகரித்து, நித்திய ஜீவனைப் பெற உங்களைத் தயார்படுத்துகின்றன.
சாத்தியமான அனைத்து தேர்வுகளிலும், மிக முக்கியமானது இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான தேர்வாகும். இயேசு கிறிஸ்துதான் இளைஞர்களின் பெலன். அவருடைய சுவிசேஷம் உங்கள் பரலோக பிதாவிடம் திரும்புவதற்கான மகிழ்ச்சியான வழியாகும்.