இளைஞர்
தேவனின் ஒளியில் நடவுங்கள்


“தேவனின் ஒளியில் நடவுங்கள்,” இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி, (2022).

“தேவனின் ஒளியில் நடவுங்கள்,” இளைஞரின் பெலனுக்காக

சிவப்பு மரங்களின் வழியாக சூரிய ஒளி ஊடுருவுதல்.

தேவனின் ஒளியில் நடவுங்கள்

கலாத்தியர் 5:25

ஒளி சின்னத்தை நோக்கி நடந்து செல்லும் மக்கள்

நீங்கள் காரியங்களைத் தெளிவாகப் பார்க்கும்போது சிறந்த தேர்வுகளைச் செய்கிறீர்கள். அதனால்தான் ஒளி மிகவும் முக்கியமானது: ஒளி சரியான பாதையைப் பார்ப்பதை எளிதாக்குகிறது. நல்லது கெட்டது, சரி, தவறு என்பதை நீங்கள் தெளிவாகப் பார்க்க உதவும் வகையில், பரலோக பிதா உங்களுக்குப் பரலோக ஒளியை—பரிசுத்த ஆவியின் வரத்தை—வழங்கியுள்ளார்.

நித்திய சத்தியங்கள்

திருவிருந்தின் போது தண்ணீரை எடுக்கும் ஒரு இளம் பெண்.

ஞானஸ்நானத்தின் போது நீங்கள் பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் ஒரு மகிழ்ச்சியான உடன்படிக்கை உறவுக்குள் பிரவேசிக்கிறீர்கள். ஆலயத்தில், உறவை வலுப்படுத்தக்கூடிய கூடுதல் உடன்படிக்கைகளை நீங்கள் செய்வீர்கள். ஒவ்வொரு வாரமும் திருவிருந்தின் போது, ​​நீங்கள் உங்கள் உடன்படிக்கைகளைப் புதுப்பிக்கிறீர்கள். கட்டளைகளைக் கடைப்பிடிக்க உங்கள் விருப்பத்தை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள், மேலும் பரிசுத்த ஆவியானவரை உங்கள் நிலையான துணையாகப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறார். இது அவர் உங்களுக்கு அளித்த மிகப்பெரிய வரங்களில் ஒன்றாகும்.

நல்ல தேர்வுகளைச் செய்வது ஆவியை உணரும் உங்கள் திறனை மேம்படுத்துகிறது. இந்த உலகில் பல நல்ல மற்றும் ஆரோக்கியமான விஷயங்கள் உள்ளன. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன குடிக்கிறீர்களோ அதனால் உங்கள் உடல் பாதிக்கப்படுவது போல, நீங்கள் என்ன படிக்கிறீர்களோ, பார்க்கிறீர்களோ மற்றும் கேட்கிறீர்களோ அது உங்கள் மனதையும் ஆத்துமாவையும் ஆழமாகப் பாதிக்கிறது.

அழைப்புகள்

ஒவ்வொரு நாளும் கர்த்தருக்காக நேரம் ஒதுக்குங்கள். அவரைப் பற்றி அறியுங்கள். அவரை எப்போதும் நினையுங்கள். உங்கள் பரலோக பிதாவிடம் ஜெபியுங்கள். பரிசுத்த வேதங்களையும், ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் படியுங்கள். பிறகு, நீங்கள் கற்றுக்கொண்டவற்றின்படி வாழ முயற்சி செய்யுங்கள்.

ஒரு ஆலயத்துக்கு அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் மூன்று இளைஞர்கள்.

ஆவியை உயர்த்துவதையும், உணர்த்துவதையும், அழைப்பதையும் தேடுங்கள். நீங்கள் எதைப் பார்ப்பது, படிப்பது, கேட்பது அல்லது பங்கேற்பது குறித்து தேர்வுகளைச் செய்யும்போது, ​​அது உங்களுக்கு எப்படி உணர வைக்கிறது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அது நல்ல எண்ணங்களை அழைக்கிறதா? பரிசுத்தமான விஷயங்களை கேலி செய்யும் அல்லது ஒழுக்கக்கேடான எதையும் விட்டு விலகி இருங்கள். வன்முறை, மது மற்றும் தீங்கு விளைவிக்கும் மருந்துகள் போன்ற உங்கள் தீர்மானத்தையோ அல்லது ஆவியின் உணர்திறனையோ மந்தமாக்கும் எதிலும் பங்கேற்காதீர்கள். ஒரு காணொளி அல்லது விளையாட்டை அணைக்க, ஒரு திரைப்படம் அல்லது நடனத்தை விட்டு வெளியேற, உங்கள் இசையை மாற்ற, அல்லது ஆவிக்கு இசைவாக இல்லாத எதையும் விட்டு விலக தைரியம் கொள்ளுங்கள்.

சமூக ஊடக இதய சின்னம்

ஊக்கப்படுத்துவதற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள். சமூக ஊடகங்கள் ஒரு வல்லமைவாய்ந்த தொடர்பு கருவியாக இருக்கலாம். நீங்கள் அதைப் பயன்படுத்தினால், ஒளி, விசுவாசம் மற்றும் சத்தியத்தின் மீது கவனம் செலுத்துங்கள். மற்றவர்கள் அனுபவிப்பதோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள். உங்கள் தகுதி சமூக ஊடகங்களிலிருந்து வரவில்லை, பரலோக பெற்றோரின் குழந்தையாக இருப்பதிலிருந்தே வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான அனுபவங்களையும் உண்மையான மற்றும் நீடித்த உறவுகளையும் தேடுங்கள். உங்களுடைய தொழில்நுட்பம் மற்றும் ஊடகங்களின் பயன்பாடு, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரில் செலவிடும் நேரத்தை மாறவிடாமல் இருப்பது குறித்து கவனமாக இருங்கள். சமூக ஊடகங்களும் பிற தொழில்நுட்பங்களும் அதிக மதிப்பை வழங்காமல் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ளும். மெய்நிகர் உலகத்திலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு, நிஜ வாழ்க்கையில் மக்களுடன் இணையுங்கள்.

வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.

உங்களுடன் பரிசுத்த ஆவியை எப்போதும் பெற்றிருக்க முடியும். பரிசுத்த ஆவியானவர் பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி உங்களுக்குச் சாட்சி கொடுப்பார். அவர் உங்களை ஆறுதல்படுத்துவார், வழிநடத்துவார், எச்சரிப்பார், பரிசுத்தப்படுத்துவார். அவர் சத்தியத்தை அடையாளம் காணவும், உலகில் உள்ள நல்லதைக் காணவும் உங்களுக்கு உதவுவார்.

கேள்விகளும் பதில்களும் சின்னம்

கேள்விகளும் பதில்களும்

நான் பரிசுத்த ஆவியை உணர்கிறேனா என்பதை எப்படி அறிந்து கொள்வது? ஆவியைப் பற்றி அறிந்திருக்கக் கற்றுக்கொள்வதற்கு நேரம், பயிற்சி மற்றும் பொறுமை தேவை. அவர் வெவ்வேறு மக்களிடம் வெவ்வேறு வழிகளில் பேசுகிறார். எளிய விஷயங்களைக் கவனிக்காமல் விடாதீர்கள்—ஒருவரின் சாட்சியத்தைக் கேட்ட பிறகு நீங்கள் பெறும் சமாதான உணர்வு அல்லது தவறான தேர்வு செய்த பிறகு நீங்கள் பெறும் அமைதியற்ற உணர்வு. ஆவியானவர் தொடர்பு கொள்ளும் பல்வேறு வழிகளுக்கு வேதங்களைத் தேடுங்கள், அதைப் பற்றி ஜெபிக்கவும், ஆவியானவரை உணரவும் வாய்ப்புகளைத் தேடுங்கள்.

ஒரு இளம் பெண் தன் படுக்கையருகில் மண்டியிட்டு ஜெபித்தல்.

ஆபாசம் என்றால் என்ன? நான் ஏன் அதைத் தவிர்க்க வேண்டும்? ஆபாசம் என்பது பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட படங்கள் அல்லது வார்த்தைகளில் பிரதிநிதித்துவமாகும். ஆபாசம் பல வடிவங்களில் வருகிறது, அவற்றில் காணொளிகள், படங்கள், புத்தகங்கள் மற்றும் இசை ஆகியவை அடங்கும். இது நண்பர்களிடையே அனுப்பப்படும் செய்திகள் அல்லது படங்களாகவும் இருக்கலாம். ஆபாசம் பரிசுத்தமான விஷயங்களை—நமது உடல் மற்றும் பாலியல் உணர்வுகளை—அவமரியாதையுடன் நடத்துகிறது. நீங்கள் அறியாமலேயே ஆபாசப் படங்களைப் பார்க்க நேரிடலாம். நீங்கள் வேண்டுமென்றே ஆபாச படத்தைப் பார்த்தாலும், இல்லாவிட்டாலும், உடனடியாக விலகிச் செல்லுங்கள். நீங்கள் ஒரு பெற்றோரிடமோ அல்லது நம்பகமான பெரியவரிடமோ பேச விரும்பலாம். வேண்டுமென்றே ஆபாசப் படங்களைப் பார்ப்பது பாவமானது, மேலும் அது ஆவியை உணரும் உங்கள் திறனுக்கு தீங்கு விளைவிக்கும். இது உங்கள் சுயக்கட்டுப்பாட்டை பலவீனப்படுத்துகிறது மற்றும் உங்களையும் மற்றவர்களையும் நீங்கள் பார்க்கும் விதத்தை சிதைக்கிறது. ஆபாசத்தை எதிர்த்து மனந்திரும்ப இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவும் வல்லமை படைத்தவர். அவரை நோக்கித் திரும்புங்கள்; இருளிலிருந்து விலகிச் செல்லுங்கள். இரட்சகர் மூலம் பலத்தையும் மன்னிப்பையும் பெற உங்கள் ஆயர் உங்களுக்கு உதவ முடியும்.

ஆமோஸ் 5:14 (நன்மையானதை நாடுங்கள்); கலாத்தியர் 5:22–23 (ஆவியின் கனிகள்); மரோனி 7:18–19 (கிறிஸ்துவின் ஒளி); கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:23 (கர்த்தர் சமாதானம் பேசுகிறார்); 20:77, 79 (திருவிருந்து ஜெபங்கள்) பார்க்கவும்.

ஆலய சின்னம்

ஆலயப் பரிந்துரை கேள்விகள்

அவருக்கு முன்பாக சகல காரியங்களும் “சுத்தமாகச் செய்யப்படவேண்டுமென” கர்த்தர் சொல்லியிருக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:41). உங்கள் எண்ணங்களிலும் நடத்தையிலும் ஒழுக்க தூய்மைக்கு நீங்கள் முயற்சிக்கிறீர்களா? கற்புடமை நியாயப்பிரமாணத்திற்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா?

வீ்ட்டிலும் சபையிலும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்கவும், உங்கள் கூட்டங்களில் பங்கேற்கவும், திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்தவும் தகுதியுள்ளவராக பங்கெடுக்கவும், சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுடனும் கட்டளைகளுடனும் இணக்கத்துடன் உங்கள் வாழ்க்கையை வாழ நீங்கள் முயற்சிக்கிறீர்களா?