“உணர்த்தப்பட்ட தேர்வுகளைச் செய்யவும்,” இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி. (2022)
“உணர்த்தப்பட்ட தேர்வுகளைச் செய்யவும்,” இளைஞரின் பெலனுக்காக
உணர்த்தப்பட்ட தேர்வுகளைச் செய்யவும்
இளைஞரின் பெலனுக்காக வில், இயேசு கிறிஸ்து மற்றும் அவரது தீர்க்கதரிசிகளின் போதனைகளை நீங்கள் காண்பீர்கள். இந்த சத்தியங்களை உங்கள் வழிகாட்டியாகக் கொண்டு, இப்போதும் நித்தியம் முழுவதும் உங்களை ஆசீர்வதிக்கும் உணர்த்தப்பட்ட தேர்வுகளை நீங்கள் செய்யலாம்.
நித்திய மகிழ்ச்சிக்கு இயேசு கிறிஸ்துவே வழி. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற உங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் நித்திய மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் பாதையில் இருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவை உங்கள் தரமாகவும், உங்கள் உறுதியான அடித்தளமாகவும் ஆக்குங்கள். அவருடைய போதனைகளின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையைக் கட்டமைத்து, அவற்றைக் கொண்டு உங்கள் தேர்வுகளை அளவிடவும். ஞானஸ்நானத்திலும், திருவிருந்தின் போதும், ஆலயத்திலும் நீங்கள் செய்யும் உடன்படிக்கைகள் கிறிஸ்துவில் உங்கள் உறுதியான அடித்தளத்தின் கட்டுமானக் கற்களாகும். நீங்கள் இன்னும் போராட்டங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்வீர்கள், ஆனால் பரலோக பிதாவும் இரட்சகரும் அவை அனைத்தினூடாகவும் உங்களுக்கு உதவுவார்கள்.
நீங்கள் தேவனின் அன்பான ஆவிக் குழந்தை. அவருடைய மகத்தான மகிழ்ச்சியின் திட்டம் நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் வளரவும், உங்கள் தெய்வீக திறனை வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது. இதனால்தான், இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக இருக்க அவர் அனுப்பினார்.
உங்கள் பரலோக பிதா உங்களை நம்புகிறார். உங்களை அவருடன் பிணைக்கிற, அவருடைய வல்லமையை உங்கள் வாழ்வில் கொண்டுவரும் சுவிசேஷத்தின் பரிபூரணம் மற்றும் பரிசுத்த நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் உட்பட, அவர் உங்களுக்கு பெரும் ஆசீர்வாதங்களை அளித்துள்ளார். அந்த ஆசீர்வாதங்களுடன் கூடுதல் பொறுப்பும் வருகிறது. நீங்கள் உலகில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவர் அறிவார், அதற்கு பல சமயங்களில் உலகத்திலிருந்து வேறுபட்டிருப்பது தேவைப்படுகிறது. நீங்கள் தேர்வுகளைச் செய்யும்போது உங்கள் பரலோக பிதாவின் வழிகாட்டுதலைத் தேடுங்கள். அவர் பரிசுத்த ஆவியின் மூலம் உணர்த்துதலுடன் உங்களை ஆசீர்வதிப்பார்.
இளைஞர்களின் பெலனுக்காக- வின் நோக்கம், நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய ஒவ்வொரு சாத்தியமான தேர்விற்கும் “ஆம்” அல்லது “இல்லை” என்று பதிலளிப்பது அல்ல. அதற்கு பதிலாக, கர்த்தர் உங்களை உயர்ந்த மற்றும் பரிசுத்தமான அவருடைய வழியில்—வாழ அழைக்கிறார் இந்த வழிகாட்டி அவருடைய வழியைப் பற்றி உங்களுக்குக் கற்பிக்கும். அவர் வெளிப்படுத்திய சத்தியங்களை இது விளக்குகிறது. ஆலயத்தில் உடன்படிக்கைகளைச் செய்வது மற்றும் ஒரு ஊழியம் செய்வது போன்ற பெரிய தேர்வுகள், மக்களை எவ்வாறு நடத்துவது அல்லது உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுவது போன்ற அன்றாட தேர்வுகள் ஆகிய தேர்வுகளைச் செய்வதற்கு இந்த சத்தியங்களை உங்கள் வழிகாட்டியாக ஆக்குங்கள்.
மற்றவர்கள் உங்களுக்கு உதவ முடியும் என்றாலும், உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சி தனிப்பட்டது. அது உங்களுக்கும் கர்த்தருக்கும் இடையிலானது. அவர் உங்கள் இருதயத்தை அறிவார், அவரால் மட்டுமே இறுதி நீதிபதியாக இருக்க முடியும். ஒவ்வொரு நாளும் முன்னேறவும், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும், உங்கள் உடன்படிக்கைகளை மதிக்கவும், மற்றவர்கள் இரட்சகரிடம் நெருங்கி வர உதவவும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.
மோசியா 4:29–30 (பாவம் செய்வதற்கான வழிகள் எண்ணற்றவை, எனவே நாம் நம்மைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.); ஏலமன் 5:12 (கிறிஸ்துவின் மீது உங்கள் அடித்தளத்தைக் கட்டுங்கள்.); கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:57 (பரிசுத்த ஆவியை உங்கள் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள்.); 82:15 (உடன்படிக்கைகள் மூலம் உங்களை கர்த்தருடன் பிணைத்துக் கொள்ளுங்கள்) பார்க்கவும்.
இந்த வழிகாட்டி எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு தலைப்பும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:
-
நித்திய சத்தியங்கள், அல்லது இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் கோட்பாடு
-
இந்த சத்தியங்களின்படி செயல்பட அழைப்புகள்
-
கர்த்தர் தம்முடைய போதனைகளின்படி வாழ்பவர்களுக்கு அளிக்கும் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்கள்