என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஆகஸ்ட் 24–30. “அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்”: சங்கீதம் 49–51; 61–66; 69–72; 77–78; 85–86


“ஆகஸ்ட் 24–30. “அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்; சங்கீதம் 49–51; 61–66; 69–72; 77–78; 85–86,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026(2026)

“ஆகஸ்ட் 24–30. ‘அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள் பழைய ஏற்பாடு 2026

இயேசு இரவில் ஒரு விளக்கை பிடித்திருத்தல்

காணாமற் போனதை காத்தல்–மைக்கல் டி. மால்ம்

ஆகஸ்ட் 24–30: ‘அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்”

சங்கீதம் 49–51; 61–66; 69–72; 77–78; 85–86

சங்கீதத்தின் எழுத்தாளர்கள் தங்கள் கவிதைகளில் ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் மனச்சோர்வடைந்து, பயந்து, வருத்தப்படுவதைப்பற்றி எழுதினார்கள். சில சமயங்களில், அவர்களும் கூட தேவனால் கைவிடப்பட்டதாக உணர்ந்தார்கள். சில சங்கீதங்கள் சோர்வு அல்லது விரக்தியின் தொனியைக் கொண்டுள்ளன. உங்களுக்கு இதுபோன்ற உணர்வுகள் எப்போதாவது இருந்தால், நீங்கள் மட்டும் அத்தகைய உணர்வுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிய சங்கீதங்களைப் படிப்பது உங்களுக்கு உதவும். ஆனால் இதுபோன்ற உணர்வுகள் உங்களுக்கிருக்கும்போது உங்களை ஊக்குவிக்கக்கூடிய சங்கீதங்களையும் நீங்கள் காணலாம், ஏனென்றால் சங்கீதக்காரர்களும் கர்த்தருடைய நன்மைக்காக அவரைப் புகழ்ந்து, அவருடைய வல்லமையைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவருடைய இரக்கத்தில் களிகூர்ந்தார்கள். தீமை மற்றும் பாவத்தால் நாம் பாரப்பட்டு இருக்கிறோம் என்றாலும் கர்த்தர் “நல்லவர், மன்னிக்கத் தயாராக உள்ளார்” என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் (சங்கீதம் 86:5). கர்த்தர் மீது நம்பிக்கை வைத்திருப்பது என்பது நீங்கள் ஒருபோதும் கவலையுடனும், பாவத்துடனும், பயத்துடனும் போராட மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அப்படி உணரும்போது நீங்கள் யார் பக்கம் திரும்பவேண்டும் என்று தெரிந்துவைத்திருக்கிறீர்கள் என்பதே இதன் அர்த்தமாம்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

சங்கீதம் 49; 62:5–12

இயேசு கிறிஸ்து மூலமாக மட்டுமே மீட்பு வருகிறது.

தாழ்மையானவர்களுக்கும், உயர்ந்தவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், தரித்திரர்களுக்கும் சங்கீதம் 49 (வசனம் 2)இல் ஒரு செய்தி உள்ளது. இந்த செய்தி என்ன என்று நீங்கள் கூறுவீர்கள்? அந்தச் செய்திக்கு சங்கீதம் 62:5–12 எப்படி வலுசேர்க்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மீட்பைப் பெற தேவன் அல்லாமல் வேறு காரியங்களில் நம்பிக்கை வைக்க நம்மை சோதனைக்கு உட்படுத்துகிற வழிகளை ஆராய்ந்துபார்க்க நாம் இந்த சங்கீதத்தை படிப்பதினிமித்தம் தூண்டப்படலாம். (சங்கீதம் 49:6–7 பார்க்கவும்). “தேவன் [உங்கள்] ஆத்துமாவை பாதாளத்தின் வல்லமையிலிருந்து மீட்டுக்கொள்வார்” என்ற உங்கள் சாட்சியத்தால் உங்கள் வாழ்க்கை எவ்வாறு செல்வாக்கடைகிறது”? சங்கீதம் 49:15.

சங்கீதம் 51; 85–86

இரட்சகரின் இரக்கத்தால், என் பாவங்களிலிருந்து நான் மன்னிக்கப்பட முடியும்.

தாவீது ராஜா தனக்குப் பாவமன்னிப்பு எப்படியாவது கிடைத்திடவேண்டும் என்று எதிர்பார்த்திருந்த சமயத்தில் சங்கீதம் 51ஐ எழுதினான். நம் யாவருக்கும் பாவமன்னிப்புத் தேவைப்படுகிறதாய் இருக்கிறது. நீங்கள் பெற்றிருந்த உணர்வுகளை எந்த வசனங்கள் விவரிக்கின்றன? இந்த சங்கீதத்தில் நீங்கள் பாவமன்னிப்புக்கான நம்பிக்கையை உங்களுக்கு கொடுக்கிற என்னவற்றை காண்கிறீர்கள்?

மனந்திரும்புதலில் என்னென்ன அடங்கியுள்ளது என்று அறிந்துகொள்ள நீங்கள் சங்கீதம் 51ஐ ஆராயலாம். நீங்கள் கண்டுபிடித்தவற்றைப் பட்டியலிடவும். தலைவர் ரசல் எம். நெல்சனின் செய்தியினை ஆராய்வதினிமித்தம் உங்கள் பட்டியலில் சேர்க்கக்கூடியவை என்னென்னவென்று பார்க்கவும்.We Can Do Better and Be Better( Liahona, May 2019, 67–69 பார்க்கவும்.

கிறிஸ்துவின் மூலம் பெறுகிற மன்னிப்பு எப்பேர்ப்பட்ட உணர்ச்சிபூர்வமாகயிருக்கிறதென்று நீங்கள் விவரிப்பீர்கள்? உங்கள் உணர்ச்சிகளை விவரிக்க உங்களுக்கு உதவி தேவைப்படுமாயின், நீங்கள் Psalms 51:1–2, 7–12; 85:2–9ஐ பார்க்கலாம். சிலர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த படங்களை வரைவார்கள் அல்லது தேடுவார்கள். நீங்கள் அதை செய்ய முயற்சிக்கலாம். “I Stand All Amazed” (Hymns, no. 193).போன்ற இரட்சகரைப் பற்றிய பாடல் ஒன்றை நீங்கள் பாடலாம் அல்லது கேட்கலாம்.

மனந்திரும்ப, இயேசு கிறிஸ்து நம்மை சுத்திகரிக்கக்கூடும் என்ற விசுவாசம் மட்டும் அல்ல அவர் நம்மை சுத்திகரிப்பார் என்ற விசுவாசமும் தேவை. இரட்சகர் மன்னிக்க வல்லவரும் மன்னிக்க மனதுள்ளவருமானவர் என்று நீங்கள் அறிந்துகொள்ள உதவியாய் நீங்கள் சங்கீதம் 86:5, 13, 15இல் காண்பதென்ன?

Alma 36; Peter F. Meurs, “He Could Heal Me!,” லியஹோனா, மே 2023, 39–41 ஐயும் பார்க்கவும்.

சங்கீதம் 51:13–15; 66:5-20; 71:15–24

எனது இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியம் மற்றவர்கள் அவரிடம் வர உதவ முடியும்.

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய உங்கள் சாட்சியத்தையும் அவருடைய பிராயச்சித்த வல்லமையையும் நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். பின்னர் நீங்கள் சங்கீதம் 51:13–15; 66:5-20; 71:15–24 படிக்கும்போது, ”தேவனின் கிரியைகளை வந்து பாருங்கள்” என்று மற்றவர்களை நீங்கள் எவ்வாறு அழைக்கலாம் என்பதைப்பற்றி சிந்தியுங்கள் (சங்கீதம் 66:5). “(கர்த்தர்) (உங்கள்) ஆத்துமாவுக்குச் செய்ததை நீங்கள் சொல்ல” நேர்ந்தால் (சங்கீதம் 66:16), என்னவற்றை அறிவிப்பீர்கள்?

“[அவருடைய] நீதியைப்பற்றி நாள் முழுவதும் பேசுவது” என்றால் என்ன என நீங்கள் நினைக்கிறீர்கள்? (சங்கீதம் 71:24).

ஆல்மா 26 ஐயும் பார்க்கவும்.

வாலிபன் ஒருவர் வேதவாக்கியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்

“வந்து கேளுங்கள், …அவர் (தேவன்) என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்” (சங்கீதம் 66:16).

சங்கீதம் 63; 69; 77–78

என் அவசர தேவை நேரத்தில் கர்த்தர் எனக்கு உதவுவார்.

தேவனிடத்திலிருந்து விலகி போனபின்பு அவருடைய உதவியை எப்படியாவது பெறவேண்டும் என்ற உணர்வு எப்படிப்பட்டது என்று அநேக சங்கீதங்கள் விவரிக்கின்றன (சங்கீதம் 63:1, 8; 69:1–8, 18–21; 77:1–9 பார்க்கவும்). சங்கீதம் 63; 69; 77–78இல் சங்கீதக்காரர்களுக்கு எது திடநம்பிக்கையைக் கொடுத்தது என்று பார்க்கிறீர்கள்?

நீங்கள் துன்பப்படுகையில், “கர்த்தருடைய கிரியைகளையும் அவருடைய “பூர்வகால அதிசயங்களையும்” நினைவில் கொள்வதற்கு இது எவ்வாறு உதவுகிறது? (சங்கீதம் 77:11). சங்கீதம் 78இல் அந்த அதிசயங்களில் சில விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, “தேவன்மீது [உங்கள்] நம்பிக்கையை வைக்க” உங்களுக்கு எது உதவுகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள் (வசனம் 7).

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம்

பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கான ஆலோசனைகள்

இந்த ஞாயிற்றுக்கிழமை மாதத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் “பிற்சேர்க்கை B: தேவனின் உடன்படிக்கைப் பாதையில் வாழ்நாள் முழுவதற்குமாக பிள்ளைகளைத் தயார்படுத்துதல்” இல் கற்றல் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சங்கீதம் 51; 86:5,13,15

நான் தவறாக தெரிவுசெய்யும் போது, என்னை நான் மாற்றிக்கொள்ள இயேசு எனக்கு உதவுவார்.

  • சங்கீதம் 51ல் மனந்திரும்புதல் பற்றிய சத்தியங்களை உங்கள் பிள்ளைகள் கண்டெடுக்க நீங்கள் ஒரு பெரிய இருதயத்தை வரையலாம். பின்பு அந்த இருதயத்தினுள்ளே சாத்தான் நம்மை செய்யும்படி சோதிக்கும் கெட்ட காரியங்களை உங்கள் பிள்ளைகள் எழுத நீங்கள் உதவலாம். நம் இருதயங்களைவிட்டு இந்தக் காரியங்களை எப்படி நாம் நீக்கமுடியும்? உங்கள் பிள்ளைகளை சங்கீதம் 51:10, 17இல் இருதயம் என்ற வார்த்தையைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். இந்த வசனங்கள் மனந்திரும்புதல் பற்றி என்னவற்றை போதிக்கின்றன என்று பேசுங்கள். உங்கள் பிள்ளைகள் இருதயத்திலுள்ள வார்த்தைகளை அழித்துவிட்டு, நாம் மனந்திரும்பும்போது இயேசு நம்மை மாற்றக்கூடிய வழிகளை விவரிக்கும் புதிய வார்த்தைகளை எழுதவும்.

  • “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயம்” பெற்றிருப்பதென்றால் என்ன என்று உங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ள நீங்கள் உதவலாம் (சங்கீதம் 51:17). குடும்ப உறுப்பினர்கள் ஒரு முட்டை அல்லது கொட்டை போன்ற கடினமான ஓடு உள்ள ஒன்றை உடைத்துத் திறக்க மாறி மாறி வாய்ப்பு எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் அந்த மேல் ஓடு பரலோக பிதாவின் அன்பை உணர்வதிலிருந்து நம்மை விலக்கிவைக்கிறவைகளுக்கு ஒப்பிடச்செய்ய உதவலாம். நாம் அவருக்கு நம் இருதயங்களை எவ்வாறு திறக்க முடியும்?

  • நீங்கள் இரட்சகரின் வரைபடம் ஒன்றை ஒன்றாகப் பார்த்து, உங்கள் பிள்ளைகள் அவரை விவரிக்க என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள் என்று அவர்களைக் கேட்கவும். சங்கீதம் 86: 5, 5, 13இல் அவரை விவரிக்கிற வார்த்தைகளைக் கண்டுபிடிக்க அவர்களை அழைக்கவும். ஏன் அவரைப் பற்றிய இக்காரியங்களைத் தெரிந்துகொள்வது முக்கியமாய் இருக்கிறது?

சங்கீதம் 61:2–3 .

இயேசு கிறிஸ்து என் கன்மலையாய் இருக்கிறார்.

  • சங்கீதம் 61:2–3இல் உள்ள அடையாளங்களின் படங்களை வரைவதை உங்கள் பிள்ளைகள் விரும்பலாம். இயேசு கிறிஸ்து எப்படி ஒரு உயரமான “கன்மலையாயும்” (வசனம் 2), “அடைக்கலமாயும்,” “பெலத்த கோபுரமாயும்” இருக்கிறார்? (வசனம் 3)

கல்லினால் கட்டப்பட்ட கடிகாரகோபுரம்

“நீரே எனக்கு அடைக்கலமும் பெலத்த கோபுரமுமாய் இருக்கிறீர்”(சங்கீதம் 61:3).

சங்கீதம் 66:16; 77:11; 78:6-7

“கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன்.”

  • உங்கள் பிள்ளைகளை தங்களுக்கு பிடித்த வேதவாக்கிய கதைகளைப் பகிரச் சொல்லவும். சுவிசேஷ கலை புத்தகத்திலிருக்கும்படங்கள் உதவக்கூடும். இக்காரியங்கள் இரட்சகரைப்பற்றி நமக்கு என்ன போதிக்கின்றன? நீங்கள் ஒன்றாக சங்கீதம் 66:16ஐ படித்து “கர்த்தர் என் ஆத்துமாவிற்காக என்ன செய்தார்”? என்ற கேள்விக்கு பதிலளிக்க மாறி மாறி வாய்ப்பு எடுத்துக்கொள்ளவும். Psalm 66:16

  • நீங்கள் ஒன்றாக சங்கீதம் 77:11; 78:6–7ஐ வாசிக்கும் போது உங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய கிரியைகள் உள்பட “அவருடைய கிரியைகளை நினைவுகூர“ (சங்கீதம் 77:11) எப்படி முயற்சிக்கிறீர்கள் என்று ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளலாம். திருவிருந்து எப்படி நம்மை “எப்போதும் நினைவுகூர” உதவுகிறது? (மரோனி 4:3; 5:2).

சங்கீதம் 71:8.

இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் மற்றவர்களுக்குச் சொல்ல முடியும்.

  • உங்கள் பிள்ளைகளோடு சங்கீதம் 71:8.ஐ வாசித்த பிறகு அவர்கள் ஒரு பெரிய வாயை வரைய அழைக்கவும். அந்த வாயில் இயேசு கிறிஸ்துவை பற்றி நாம் மற்றவர்களுக்கு சொல்லக்கூடிய காரியங்களை குறிக்கிற படங்களையோ வார்த்தைகளையோ கொண்டு நிரப்ப உங்களுக்கு உதவுமாறு அவர்களைக் கேட்கவும்.

  • நீங்கள் இயேசு கிறிஸ்துவின் படத்தை மற்றவர்களிடம் பகிரவும். படத்தைப் பிடித்திருக்கும் அந்நபர் அவரைப் பற்றி தாம் அறிந்த ஒரு காரியத்தை சொல்லலாம். மற்ற ஜனமும் இக்காரியங்களை அறிந்துகொள்ள நாம் எப்படி உதவலாம்?

பிள்ளைகள் பகிர்ந்துக் கொள்ள நிறைய இருக்கிறது. பிள்ளைகள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டால், அவர்கள் இயல்பாகவே அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். சுவிசேஷக் கொள்கைகளை ஒருவருக்கொருவருடனும், தங்கள் குடும்ப உறுப்பினருடனும், மற்றும் தங்கள் நண்பர்களுடனும் போதிக்கும்படியான வாய்ப்புகளைப் பிள்ளைகளுக்கு வழங்கி இந்த ஆர்வத்தை ஊக்குவிக்கவும். நீங்கள் கற்பிக்கும் கொள்கைகள் தொடர்பான அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படியும் அவர்களிடம் கேளுங்கள். அவர்களிடம் எளிமையான, தூய்மையான மற்றும் ஆற்றல்மிக்க உள்ளுணர்வுகள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள் (Teaching in the Savior’s Way32).

சங்கீதம் 86:7.

பரலோக பிதா என் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார்.

  • அநேக சங்கீதங்கள் தேவனுக்கு ஏறெடுக்கும் ஜெபங்கள் போன்றவை. உங்கள் பிள்ளைகளோடு சங்கீதங்களைப் படிக்கும்போது நாம் தூரத்திலிருப்போரிடம் தொடர்புகொள்ள பயன்படுத்தப்படும் பொருட்களான தொலைபேசி அல்லது கடிதம் போன்றவற்றை அவர்களுக்கு காண்பிக்கலாம். பின்பு சங்கீதம் 86:7ஐ வாசிக்கவும். பரலோக பிதாவை நோக்கி நாம் எப்படி கூப்பிடுவது? அவர் எவ்வாறு நமக்கு பதிலளிக்கிறார்?

  • ஒரு குழந்தையின் ஜெபம்“ போன்ற ஜெபத்தைப் பற்றியப் பாடலை நீங்கள் ஒன்றாகப் பாடலாம். (Children’s Songbook, 12–13; see also Susan H. Porter, “Pray, He Is There,” லியஹோனா, May 2024, 77–79). தேவன் உங்களுடைய ஜெபங்களுக்குப் பதிலருளிய தருணங்களைக் குறித்து ஒருவருக்கொருவர் பகிருங்கள்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

கிறிஸ்துவின் சித்திரம்

கிறிஸ்துவிடம் வாருங்கள்–காஸ்சே சைல்ட்ஸ்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: நான் தவறாக தெரிவுசெய்யும் போது, என்னை நான் மாற்றிக்கொள்ள இயேசு எனக்கு உதவுவார்