என்னைப் பின்பற்றி வாருங்கள்
மனதில் வைக்க வேண்டிய எண்ணங்கள்: பழைய ஏற்பாட்டில் கவிதை வாசித்தல்


“மனதில் வைக்க வேண்டிய எண்ணங்கள்: பழைய ஏற்பாட்டில் கவிதை வாசித்தல்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

பழைய ஏற்பாட்டில் கவிதை வாசித்தல்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

எண்ணங்கள் சின்னம்

மனதில் வைக்க வேண்டிய எண்ணங்கள்

பழைய ஏற்பாட்டில் கவிதை வாசித்தல்

நாம் ஆதியாகமம் முதல் எஸ்தர் வரைக்குமான பழைய ஏற்பாட்டின் புத்தகங்களில் பெரும்பாலும் வரலாற்று நிகழ்வுகளை ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் விவரிக்கும் தொகுப்புகளான கதைகளைக் காண்கிறோம். நோவா ஒரு பேழையைக் கட்டினான், மோசே இஸ்ரவேலை விடுவித்தான், அன்னாள் ஒரு மகனைப் பெற ஜெபித்தாள், மற்றும் பல. யோபு துவங்கி நாம் வேறுவித எழுத்து நடையைக் காண்கிறோம். இந்தப் புத்தகங்களில் பழைய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் ஆழ்ந்த உணர்வுகளை அல்லது மிகப்பெரும் தீர்க்கதரிசனங்களை மறக்கமுடியாத வகையில் வெளிப்படுத்த கவிதை நடையை கையாளுகிறார்கள்.

பழைய ஏற்பாட்டின் வரலாற்றுப் புத்தகங்கள் முழுவதும் தெளிக்கப்பட்ட கவிதைகளின் சில எடுத்துக்காட்டுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். யோபு புத்தகம் துவங்கி, அவைகளை அதிகமாய் காண்போம். யோபு, சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் புத்தகங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் கவிதையாகவே இருக்கின்றன. தீர்க்கதரிசனப் புத்தகங்களான ஏசாயா, எரேமியா, ஆமோஸ் போன்றவைகளின் சில பகுதிகளும் அப்படியே ஆகும். கவிதை வாசிப்பது ஒரு கதையை வாசிப்பதில் இருந்து வேறுபட்டது என்பதால் அதைப் புரிந்துகொள்வதற்குப் பெரும்பாலும் வேறுவகையான அணுகுமுறை தேவைப்படுகிறது. பழைய ஏற்பாடு கவிதையில் மிகுந்த அர்த்தத்தை கண்டடைய உங்களுக்கு உதவக்கூடிய சில யோசனைகள் இதோ.

எபிரேய கவிதைகளைப்பற்றி அறிந்து கொள்ளுதல்

முதலாவதாக, பழைய ஏற்பாட்டில் உள்ள எபிரேய கவிதைகள் வேறு சில வகையான கவிதைகளைப் போல சந்த அடிப்படையிலானவை அல்ல என்பதை நினைவில் கொள்ள இது உங்களுக்கு உதவக்கூடும். பண்டைய எபிரேய கவிதைகளின் பொதுவான அம்சங்கள் தாளம், சொல்நயம் மற்றும் பலவிசை ஒலி என்றாலும், அவை பொதுவாக மொழிபெயர்ப்பில் தொலைந்துபோகின்றன. இருப்பினும், நீங்கள் கவனிக்கும் ஒரு அம்சம், எண்ணங்கள் அல்லது கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறுவது, சில சமயங்களில் “இணைவாதம்” என்று அழைக்கப்படுகிறது. ஏசாயாவிலிருந்து ஒரு எளிய உதாரணம் இதோ:

சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்;

எருசலேமே உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக் கொள். (ஏசாயா 52:1)

சங்கீதம் 29 பல இணையான வரிகளைக் கொண்டுள்ளது, இங்கே ஒரு எடுத்துக்காட்டு:

கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது,

கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. (சங்கீதம் 29:4)

இரண்டாவது வாக்கியம் முதல் வாக்கியத்தின் இணைவாதம் என்று தெரிந்துகொள்வது புரிதலை எளிதாக்குகிறது என்பதற்கான ஒரு உதாரணம் இங்கே:

நான் உங்கள் பட்டணங்களிலெல்லாம் உங்கள் பற்களுக்கு ஓய்வையும்,

உங்கள் ஸ்தலங்களிலெல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன் (ஆமோஸ் 4:6)

கவிஞன் ஒரு யோசனையை சிறிய வேறுபாடுகளுடன் மறுபடியும் தரலானான். இந்த நுட்பம் வேறுபாடுகளை முழுமையாக விவரிக்க அல்லது விருத்திசெய்ய பயன்படுத்தும்போது மீண்டும் மீண்டும் யோசனையை வலியுறுத்த முடியும்.

மற்ற சந்தர்ப்பங்களில், இரண்டு இணையான சொற்றொடர்களும் இந்த உதாரணத்தைப் போலவே மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்க ஒத்த மொழியைப் பயன்படுத்துகின்றன:

மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்,

கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். (நீதிமொழிகள் 15:1)

இந்த இணையானது தற்செயலாக நடக்கவில்லை. எழுத்தாளர்கள் வேண்டுமென்றே கொடுத்திருக்கிறார்கள். ஆவிக்குரிய உணர்வுகளை அல்லது சத்தியங்களை வல்லமையாகவும் அழகாகவும் தோன்றும் வகையில் தெரியப்படுத்த அவர்களுக்கு இது உதவியது எனவே பழைய ஏற்பாட்டு எழுத்தில் இணைவாதத்தை நீங்கள் கவனிக்கும்போது, எழுத்தாளரின் செய்தியைப் புரிந்துகொள்ள இது எவ்வாறு உதவுகிறது என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஏசாயா “வலிமையை” “அழகான ஆடைகளுடனும்”, “சீயோனை” “எருசலேமுடனும்” தொடர்புபடுத்தி என்ன சொல்ல முயற்சித்திருக்கலாம்? (ஏசாயா 52:1). “கடுமையான வார்த்தைகள்” அதன் எதிர் என்று நமக்குத் தெரிந்தால் “மென்மையான பதில்” என்ற சொற்றொடரைப்பற்றி நாம் என்ன ஊகிக்க முடியும்? (நீதிமொழிகள் 15:1).

ஒரு பழைய ஏற்பாடு எழுத்தாளர் எழுத்தாணி மற்றும் சுருளுடன்

அவர் என் ஆத்துமாவைத் உயிர்ப்பிக்கிறார் -வால்ட்டர் ரானே

புதிய நண்பனாக எபிரேய கவிதை

சிலர் கவிதை வாசிப்பை ஒரு புதிய நபரைச் சந்திப்பதற்கு ஒப்பிடுகிறார்கள். தூர தேசத்தானும் நாம் பேசும் அதே மொழியைப் பேசாது வேற்று மொழியை பேசுகிற அந்நிய கலாசாரத்தைக் கொண்ட ஈராயிர வருஷத்திற்கும் அதிகமான வயதையுடைய ஒருவரை சந்திப்பதைப் போல பழைய ஏற்பாட்டு கவிதைகளைப் படிப்பது இருக்கக்கூடும். இந்த நபர் நாம் புரிந்துகொள்ளமுடியாதவைகளை முதலில் சொல்லக் கூடும். ஆனாலும் அவர்கள் சொல்லுவதற்கு விலைமதிப்புள்ள ஒன்றும் இல்லை என்று அது அர்த்தமாகாது. அவர்களுடைய பார்வையில் இருந்து விஷயங்களைக் காண முயற்சித்து, நாம் சிறிது நேரம் அவர்களுடன் ஒன்றாகச் நேரத்தை செலவழிக்க வேண்டும். நம் இருதயத்தில் நாம் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொள்கிறோம் என்பதை நாம் காணக்கூடும். நாம் பொறுமையுடனும் மனதுருக்கத்தோடுமிருந்தால், நமக்கு புதிதாக அறிமுகமானவர் காலப்போக்கில் உற்ற நண்பராகக்கூடும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஏசாயாவிலிருந்து ஒரு பத்தியை வாசிக்கும்போது அதை புதிதாக பரிச்சயமானவரிடத்திலான உங்களின் முதல் அறிமுகம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். “எனது பொதுவான உள்ளான உணர்வு என்னவாய் இருந்தது?“ என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்குப் புரியவில்லை என்றாலும், அப்பாகம் உங்களை எவ்வாறு உணரச்செய்கிறது? முடிந்தால் பல முறை திரும்பப் படிக்கவும். அதை உரக்கமாய் படிக்க எண்ணிப்பார்க்கவும்; கூடுதலான அர்த்தத்தை சிலர் இப்படி கண்டடைகிறார்கள். ஏசாயா தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாக உங்கள் மனதில் ஒரு படத்தை வரையச்செய்கிற சொற்களைக் கவனியுங்கள். அந்தப் படங்கள் உங்களை எவ்விதமாய் உணரச்செய்கிறது? அவைகள் ஏசாயாவின் உணர்ச்சிகளைப் பற்றி என்னவற்றைக் வெளிக்கொணர்கின்றன? இந்தப் பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்களின் சொற்களை நீங்கள் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறீர்களோ, அவ்வளவு ஆழமான ஆவிக்குரிய செய்தியை வெளிப்படுத்த அவர்கள் வேண்டுமென்றே தங்கள் சொற்களையும் நுட்பங்களையும் தேர்ந்தெடுத்ததை நீங்கள் காண்பீர்கள்.

இரண்டு பெண்கள் வேதங்களைப் படித்துக்கொண்டிருத்தல்

கவிதைகள் அற்புதமான நண்பர்களாக இருக்கலாம், ஏனென்றால் அவை நம் உணர்வுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள உதவுகின்றன. பழைய ஏற்பாட்டு கவிதைகள் குறிப்பாக விலைமதிப்புள்ளவை, ஏனென்றால் அவை நம்முடைய மிக முக்கியமான உணர்வுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள உதவுகின்றன, அவை தேவனுடனான நமது உறவோடு தொடர்புடையவை.

பழைய ஏற்பாட்டில் உள்ள கவிதைகளைப் படிக்கும்போது, இயேசு கிறிஸ்துவிடம் நம்மை நடத்திச் செல்லுகிற வேதப் படிப்பு மிகவும் மதிப்புமிக்கது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்மீது உங்கள் நம்பிக்கையை வளர்க்கும் அடையாளங்கள் அணிநலம் மற்றும் சத்தியங்களைத் தேடுங்கள். நீங்கள் படிக்கும்போது பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களைக் கவனித்திருங்கள்.

ஞான இலக்கியம்

ஒரு வகை பழைய ஏற்பாட்டு கவிதைகளை அறிஞர்கள் “ஞான இலக்கியம்” என்று அழைக்கிறார்கள். யோபு, நீதிமொழிகள், பிரசங்கி ஆகியவை இந்த வகைக்குள் அடங்கும். சங்கீதம் ஸ்தோத்திரம், துக்கம் மற்றும் ஆராதனை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் அதே வேளையில், ஞான இலக்கியம் காலம்கடந்த ஆலோசனை அல்லது ஆழமான, தத்துவ கேள்விகளில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, யோபுவின் புத்தகம் தேவனின் நீதியையும் மனித துன்பங்களுக்கு பின்னால் உள்ள காரணங்களையும் ஆராய்கிறது. முந்தைய தலைமுறையினரிடமிருந்து சேகரிக்கப்பட்டதும் வழிவழியாய் கொடுக்கப்பட்டதுமான ஞான வார்த்தைகளை உள்ளடக்கி, எப்படி சிறப்பாக வாழ்வது என்பதற்கான ஆலோசனையை நீதிமொழிகள் வழங்குகிறது. சகலமும் நிரந்தரமற்றதாயும் நிதானிக்கமுடியாததாயும் இருக்கும்போது, உண்மையான அர்த்தத்தை நாம் எங்கு காண்போம்? என்று பிரசங்கி வாழ்க்கையின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறான். ஞான இலக்கியத்தை, தேவனைப்பற்றியும் அவர் சிருஷ்டித்த உலகத்தைப்பற்றியுமான கருத்துக்களைப் பகிரவேண்டும் என்று இருக்கிற உணர்த்தப்பட்ட வழிகாட்டிகளுடனான யோசனையுள்ள சம்பாஷணைகள் என நீங்கள் எண்ணலாம். இப்படியாக இந்த காரியங்களை முன்பைவிட சற்று நன்றாக புரிந்துகொள்ள உங்களுக்கு உதவலாம்.