என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜூலை 27–ஆகஸ்ட் 2 “நான் பெரிய வேலையைச் செய்கிறேன்”: எஸ்றா 1; 3–7; நெகேமியா 2; 4–6; 8


“ஜூலை 27–ஆகஸ்ட் 2 “நான் பெரிய வேலையைச் செய்கிறேன்”: எஸ்றா 1; 3–7; நெகேமியா 2; 4–6; 8,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“ஜூலை 27–ஆகஸ்ட் 2 ‘நான் பெரிய வேலையைச் செய்கிறேன்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

எருசலேம் மதில்கள் மறுபடியும் எழுப்பப்படல்

நான் செய்ய பெரிய வேலை ஒன்று உண்டு-டைசன் ஸ்னோ

ஜூலை 27–ஆகஸ்ட் 2: “நான் பெரிய வேலையைச் செய்கிறேன்”

எஸ்றா 1; 3–7; நெகேமியா 2; 4–6; 8

யூத மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக பாபிலோனியாவில் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் எருசலேமையும் ஆலயத்தையும் இழந்துவிட்டார்கள், தேவ நியாயப்பிரமாணம் மீதான தங்கள் ஒப்புக்கொடுத்தலை பலர் மறந்துவிட்டார்கள். ஆனால் தேவன் அவர்களை மறக்கவில்லை. உண்மையில், அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக, “நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பி வரப்பண்ணும்படிக்கு, உங்கள் மேல் என் நல் வார்த்தையை நிறைவேறப் பண்ணுவேன்” என்று அறிவித்தார்(எரேமியா 29:10). இந்த தீர்க்கதரிசனம் மெய்யாகும்பொருட்டு, கர்த்தர் தம் ஜனம், எருசலேமுக்கும் மிக முக்கியமாக தங்களுடைய உடன்படிக்கைகளுக்குமாக, இவ்விரண்டிற்கும் திரும்பும்படியான வழியை ஏற்படுத்தினார். அவர் “பெரிய வேலைகளை” செய்து முடித்த ஊழியக்காரர்களை எழும்பப்பண்ணினார் (நெகேமியா 6:3): செருபாபேல் என்னும் பிரதானி கர்த்தருடைய வீடு திரும்பக் கட்டப்படுவதை மேற்பார்வையிட்டான். ஆசாரியனும், சம்பிரதியுமான எஸ்றா ஜனங்கள் தங்களுடைய இருதயங்களை மறுபடியும் கர்த்தருக்கு நேராகத் திருப்ப அவர்களுக்கு உதவினான். பின்னும் நெகேமியா எருசலேமை சுற்றி அரண்களை மறுபடியும் எழுப்ப முன்னெடுத்தான். அவர்கள் எதிர்ப்பை சந்தித்தனர், ஆனாலும் எதிர்பாராத இடங்களிடமிருந்து உதவிகளையும் பெற்றனர். அவர்களின் அனுபவங்கள் நமது அனுபவங்களுக்குத் தெரியப்படுத்தவும் உணர்த்தவும் முடியும், ஏனென்றால் நாமும் ஒரு பெரிய வேலையைச் செய்கிறோம். அவர்களுடைய வேலையைப் போலவே, நம்முடைய வேலையும் கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய நியாயப்பிரமாணம் மற்றும் அவரிடத்தில் நாம் காணும் ஆவிக்குரிய பாதுகாப்பு ஆகியவற்றுடன் நிறைய தொடர்புடையது.

எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு,“Ezra” and “Nehemiah” in the Bible Dictionary பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

எஸ்றா 1

தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற கர்த்தர் ஜனங்களுக்கு உணர்த்துகிறார்.

பெர்சியா பாபிலோனியாவைக் கைப்பற்றிய பிறகு, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு, ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப யூதர்களைக் கொண்ட ஒரு குழுவை எருசலேமுக்கு அனுப்ப கர்த்தரால் உணர்த்தப்பட்டான். நீங்கள் எஸ்றா 1 வாசிக்கும்போது, இந்த முக்கியமான வேலையில் யூதர்களை ஆதரிக்க கோரேசு என்ன செய்தான் என்பதைக் கவனியுங்கள். கர்த்தர் தம்முடைய சபையில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் உட்பட உங்களைச் சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மூலமாக செயல்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கர்த்தரைப்பற்றியும் அவருடைய வேலையைப்பற்றியும் இது உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கிறது?

ஏசாயா 44:24–28ஐயும் பார்க்கவும்.

எஸ்றா 3:8–13; 6:16–22

கர்த்தரின் வீடு மகிழ்ச்சியின் இடமாக இருக்கிறது.

பாபிலோனியர்கள் எருசலேமை படையெடுத்தபோது, அவர்கள் ஆலயத்தைக் கொள்ளையடித்து எரித்துத் தரைமட்டமாக்கினார்கள். (2 இராஜாக்கள் 25:1–10; 2 நாளாகமம் 36:17–19 பார்க்கவும்). இதைக் கண்ட யூதர்களில் நீங்களும் ஒருவராய் இருந்திருந்தால் நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறீர்கள்? (சங்கீதம் 137 பார்க்கவும்). பல தசாப்தங்கள் கழித்து, யூதர்கள் திரும்பி வந்து ஆலயத்தை திரும்பக் கட்டியெழுப்ப அனுமதிக்கப்பட்டபோது அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதைக் கவனியுங்கள் (எஸ்றா 3:8–13; 6:16–22 பார்க்கவும்). அது உங்களை கர்த்தரையும் அவருடைய வீட்டையும் பற்றிய உங்களுடைய சொந்த உணர்வுகளை ஆராய்ந்து அறியத் தூண்டலாம். ஏன் ஆலயத்தை கட்டுவது கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைகிறது?

செருபாபேல் ஆலயத்தின் வெளியே ஆசாரியர்கள்

செருபாபேல் ஆலயம் பட விளக்கம்–சாம் லாலர்

எஸ்றா 4-7; நெகேமியா 2; 4; 6

வேத பாட வகுப்பு சின்னம்
கர்த்தர் நான் செய்வதற்கு ஒரு முக்கியமான வேலையை வைத்திருக்கிறார்.

கர்த்தருடைய கிரியை சில சமயங்களில் மாத்திரம் எதிர்ப்பு இல்லாமல் இருக்கிறது. இது செருபாபேல் மற்றும் நெகேமியா முன்னெடுத்த முயற்சிகளில் நிச்சயமாக உண்மையாகும். இதோ இந்தக் கதைகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டு எதிர்ப்புகள் இருப்பினும் கர்த்தருடைய பணியை உங்களால் எப்படி செய்யக்கூடும் என்று யோசித்திருக்க உங்களுக்கு உதவும்படியான ஓர் எளிய அணுகுமுறை.

செருபாபேலுக்கான தேவனின் பணி (எஸ்றா 4:3):

நெகேமியாவுக்கான தேவனின் பணி (நெகேமியா 2:17-18):

எனக்கான தேவனின் பணி

செருபாபேல் சந்தித்த எதிர்ப்புகள் (எஸ்றா 4:4–24):

நெகேமியா சந்தித்த எதிர்ப்புகள்நெகேமியா 2:19; 4:1–3, 7–8; 6:1–13

நான் சந்திக்கிற எதிர்ப்புகள்

செருபாபேல் எப்படி எதிர்கொண்டான் (எஸ்றா 5:1–2):

நெகேமியா எப்படி எதிர்கொண்டான்நெகேமியா 2:20; 4: 6, 9; 6:3-15):

நான் எப்படி எதிர்கொள்ளமுடியும்:

நெகேமியாவின் அனுபவத்தை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்க உதவி தேவைப்பட்டால் நீங்கள் தலைவர் டியட்டர் எப். உக்டர்ப்பின் செய்தியைப் படிக்கலாம் “We Are Doing a Great Work and Cannot Come Down” (Liahona, May 2009, 59–62), குறிப்பாக கடைசி இரண்டு பிரிவுகள். தேவன் உங்களுக்கு கொடுத்த பணியை குறித்து நீங்கள் யோசிக்கையில், நீங்கள் “Young Women Theme” அல்லது “Aaronic Priesthood Quorum Theme ” படிக்கலாம் (Gospel Library). அல்லது “As Sisters in Zion” (Hymns, no. 309) அல்லது “Ye Elders of Israel” (Hymns, no. 319) போன்ற பாடலைக் காணலாம்

இரட்சகரின் ஊழியத்தில் “மனமுவந்திருத்தல்” என்பதற்கான அர்த்தம் என்னவென்று நினைக்கிறீர்கள்? நெகேமியா 4:6). அவருடைய வேலையை நீங்கள் செய்யும்போது “தேவனுடைய தயவுள்ள கரம் உங்கள் மேல் இருப்பதாக“ என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கக்கூடும்? நெகேமியா 2:8; நெகேமியா 2:18; எஸ்றா7:6,9,27-28 மேலும் பார்க்கவும்). அவரை சேவிக்கும்படியான உங்களுடைய முயற்சிகளில் அவருடைய கரத்தை எப்படி கண்டிருக்கிறீர்கள்?

நெகேமியா 8

நான் வேதங்களைப் படிக்கும்போது ஆசீர்வதிக்கப்படுகிறேன்.

அநேகந் தலைமுறைகளாக சிறைத்தனத்திலிருந்த யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்துடன் குறைந்த அளவிலான தொடர்பையே பெற்றிருந்தார்கள்.( நெகேமியா 8: 1 ). நெகேமியா 8ல், எஸ்றா தேவனின் வார்த்தையைக் ஜனங்களுக்கு வாசித்தான். எஸ்றாவும் அவனது ஜனத்தாரும் தேவனையும் அவருடைய வார்த்தையையும் குறித்து எப்படி உணர்ந்தார்களென்று தெரியப்படுத்துகிறதாக இந்த அதிகாரத்தில் நீங்கள் காண்கிறது என்ன? (குறிப்பாக வசனங்கள் 1–12 பார்க்கவும்). எது உங்கள் வாழ்க்கையில் தேவனையும் அவருடைய வார்த்தையையும் குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று காண்பிக்கிறது?

மேலும் Teachings of Presidents of the Church: Ezra Taft Benson (2014), 115–24 பார்க்கவும்.

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம்

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

எஸ்றா 3:8–13; 6:16–22

கர்த்தரின் வீடு ஒரு மகிழ்ச்சியின் இடமாக இருக்கிறது.

  • ஆலயம் மறுபடியும் எழுப்பப்பட்டபோது யூதர்கள் கொண்ட சந்தோசத்தைக் குறித்து உங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்க, கீழே உள்ளதைப்போல ஒரு படத்தை நீங்கள் அவர்களுக்கு காண்பிக்கலாம். இந்த ஜனங்கள் கர்த்தருடைய வீட்டில் இருக்க ஏன் சந்தோசப்பட்டிருப்பார்கள் என்பதைக் குறித்துப் பேசவும். ஆலயம் ஏன் உங்களுக்கு சந்தோசத்தின் ஸ்தலமாய் இருக்கிறதென்று நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லலாம். பரலோக பிதாவுடனும் இரட்சகருடனும் நெருக்கமாக உணர ஆலயம்எவ்வாறு உங்களுக்கு உதவியிருக்கின்றன?

  • நீங்கள் எஸ்றா 3;10-13 உங்கள் பிள்ளைகளோடு படிக்கும்போது, யூதர்கள் ஆலயம் மறுபடியும் கட்டின சமயத்தில் எப்படி உணர்ந்தார்கள் என்று தெரிவிக்கிற வார்த்தைகளைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவவும். வசனம் 13 இறுதியை அடைந்தவுடன், நீங்கள் ஒருமித்து சந்தோசமாய் கெம்பீரிக்கலாம். கர்த்தர் நமக்கு ஆலயங்களை கொடுத்தார் என்று சந்தோசப்படுபடியான காரணங்களை உங்கள் பிள்ளைகள் எண்ணிப்பார்க்க உதவுங்கள். அந்த சந்தோசத்தை எப்படி நாம் காண்பிக்க முடியும்?

  • சுவிஷேச நூலகத்திலுள்ள “இல்லத்திற்கு நல்வரவு” “Welcome Home” பாடலின் இரண்டாம் வசனம் போன்ற ஆலயத்தை பற்றிய பாடலை உங்கள் பிள்ளைகளோடு பாடுவதற்கு சிந்தித்திருங்கள். ஒவ்வொரு வரிக்குப் பின்பும், நீங்கள் நிறுத்தி பிள்ளை ஆலயத்தை பற்றி தான் விரும்புகிறதென்னவென்று கேட்கலாம் நீங்கள் ஆலயத்தின் படங்களை பார்த்துக்கொண்டே பாடலாம்.

புன்முறுவலோடு ஒரு குடும்பம் ஆலயத்தின் அருகே நடந்துசெல்லுதல்.

நெகேமியா 2:17-206:1-9

கர்த்தர் தம்முடைய “பெரிய வேலையைச்” செய்ய எனக்கு உதவுவார்.

  • நெகேமியாவின் கதையை உங்கள் பிள்ளைகளுடன் பகிருங்கள்.நெகேமியா 2:17-20;6:1-9;அல்லது” நெகேமியாபழைய ஏற்பாட்டின் கதைகள்,173-74) பார்க்கவும். நெகேமியா 2:20வாசிக்கும் போது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எழுந்து எருசலேமின் மதில்களைக் கட்டுவதுபோன்று பாசாங்கு செய்யலாம். அல்லது உங்கள் பிள்ளைகள் பொம்மை கற்களாலோ அல்லது பிற பொருட்களாலோ ஒரு சுவரை எழுப்ப ஆசைப்படலாம். அவர்கள் அவ்வாறு செய்கிற வேளையில் நீங்கள் அவர்களுக்கு பரலோக பிதா நாம் செய்யவேண்டும் என்று விரும்புகிற முக்கியமானவைகளை யோசிக்க உதவலாம்.

    1:38

    Nehemiah

  • நீங்கள் நெகேமியா 6:9வாசிக்கும் போது உங்கள் பிள்ளைகள் “என் கைகளைத் திடப்படுத்தியருளும்” என்று நீங்கள் சொல்வதை கேட்கும்போது அவர்கள் தாங்கள் கைகளை உயர்த்துமாறு அவர்களை அழையுங்கள். தேவன் தம்முடைய ஊழியத்தை செய்ய உங்கள் கைகளைத் திடப்படுத்தியருளினதாக நீங்கள் உணர்ந்த சமயம் ஒன்றைக்குறித்து பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்.

நெகேமியா 8:1-12

வேதவாக்கியங்கள் ஆசீர்வாதமாயிருக்கிறது.

  • எஸ்றா வேதங்களை வாசித்தபோது ஜனங்கள் என்ன செய்தார்கள் என்று விவரிக்கிற சொற்றொடர்களை நெகேமியா 8:2-3; 5-6, 8-9, 12இல் உரக்க வாசிக்கவும். நீங்கள் வாசித்தபோது உங்கள் பிள்ளைகள் சொற்றொடர்களுக்கு ஏற்ப நடித்துக் காட்டலாம். பின்பு நீங்கள் வேதவாக்கியங்களைப் படிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ எப்படி உணர்கிறீர்கள் என்று ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளலாம்.

  • நீங்கள் ஒன்றாக நெகேமியா 8:8 வாசிக்கும்போது நீங்கள் உங்கள் பிள்ளைகளிடத்தில் எது அவர்களுக்கு வேதங்களை புரிந்துகொள்ள உதவுகிறதென்று கேட்கலாம். Guide to the Scriptures Topics and Questions (Gospel Library) போன்ற வேத கற்றல் ஆதாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். வேதங்களிலிருந்து இரட்சகரைப் பற்றி பிள்ளைகள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதை பகிர்ந்து கொள்ள அவர்களை அழைக்கவும்.

வேதங்களிலிருக்கும் நித்திய சத்தியங்களைக் காணுங்கள். “வேதங்கள் சுவிசேஷ சத்தியங்களால் நிரப்பப்பட்டுள்ளன, ஆனால் சில சமயங்களில் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு உணர்வுள்ள முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் வேதங்களிலிருந்து ஒன்றாகக் கற்கும்போது, நீங்கள் கற்பவர்களை நிறுத்தி, அவர்கள் கவனித்த சுவிசேஷ சத்தியங்களைப்பற்றிக் கேளுங்கள். இந்த சத்தியங்கள் பரலோக பிதாவின் இரட்சிப்பின் திட்டத்துடன் எவ்வாறு தொடர்புள்ளன என்பதைப் பார்க்க அவர்களுக்கு உதவுங்கள். சில சமயங்களில் நித்திய சத்தியங்கள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன, சில சமயங்களில் அவை நாம் படிக்கும் ஜனங்களின் கதைகளிலும் வாழ்க்கையிலும் விவரிக்கப்பட்டுள்ளன. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வசனங்களின் வரலாற்றுப் பின்னணியையும், வசனங்களின் அர்த்தத்தையும், அவை இன்று நமக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் கூட சேர்த்து ஆராய்வது உதவியாக இருக்கும்” (Teaching in the Savior’s Way22).

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

எஸ்றா ஒரு சுருளை படித்தல்

தண்ணீர் வாசலில் எஸ்றா © Providence Collection/licensed from goodsalt.com

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: வேதவாக்கியங்கள் ஆசீர்வாதமாயிருக்கிறது