“ஆகஸ்ட் 17–23. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்”: சங்கீதம் 1–2; 8; 19–33; 40; 46.”என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“ஆகஸ்ட் 17–23. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்–யாங்சங் கிம் இப்படத்தைக் கொடுத்த havenlight.comக்கு நன்றி
ஆகஸ்டு 17– 23: “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்”
சங்கீதம் 1–2; 8; 19–33; 40; 46
சங்கீதங்களை எழுதியவர் யார் என்பது நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. சில தாவீது ராஜா எழுதியது என்று கூறப்படுகிறது, ஆனால் அவைகளில் பெரும்பாலானவற்றுக்கு எழுத்தாளர்கள் அநாமதேயர்களாகவே இருக்கிறார்கள். சங்கீதங்களை வாசித்த பிறகு, அவர்களின் பெயர்களை நாம் அறியாவிட்டாலும் சங்கீதக்காரர்களின் உள்ளங்களை நாம் அறிந்தது போல உணர்கிறோம். சங்கீதங்கள் இஸ்ரவேலர்களுக்குள்ளே வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன என்பது நமக்குத் தெரியும், இரட்சகர் அவற்றை அடிக்கடி மேற்கோள் காட்டினார் என்பதை நாம் அறிவோம். சங்கீதத்தில், தேவனுடைய பூர்வகால மக்களின் ஆத்துமாவை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் தேவனைப்பற்றி எப்படி உணர்ந்தார்கள், அவர்கள் எதைப்பற்றி கவலைப்பட்டார்கள், அவர்கள் எவ்வாறு சமாதானம் கண்டார்கள் என்பதைப் பார்க்கிறோம். இன்று விசுவாசிகளாக, உலகெங்கிலும், தேவனை ஆராதனை செய்வதில் இந்த வார்த்தைகளை இன்னும் பயன்படுத்துகிறோம். சங்கீதங்களை எழுதினவர்கள் நம்முடைய ஆத்துமாவிற்கு ஒரு ஜன்னலை கொண்டிருப்பதைப்போன்று தேவனை பற்றி நாம் எவ்வாறு உணர்கிறோம், நாம் எதை குறித்து வருத்தப்படுகிறோம், சமாதானத்தை எவ்வாறு பெறுகிறோம் என்று வெளிப்படுத்தினார்கள்.
சங்கீதப் புத்தகத்தின் ஒரு மேலோட்டமான பார்வைக்கு “Psalms” in the Bible Dictionary பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
சங்கீதம் 1; 23; 26–28; 46
“நான் கர்த்தரை நம்பி இருக்கிறேன்.”
சங்கீதங்களை வாசிக்கும்போது எழுத்தாளர்கள் அடிக்கடி பயம், துக்கம் அல்லது பதட்டத்தை வெளிப்படுவதை நீங்கள் கவனிக்கலாம். இத்தகைய உணர்வுகள் விசுவாசமுள்ளவர்களுக்கும் கூட இயல்பானவை. ஆனால், கர்த்தரில் முழுமையான நம்பிக்கை உட்பட அவர்கள் வழங்கும் தீர்வுகள் சங்கீதங்களை உணர்த்துவனவாக்குகின்றன. நீங்கள் சங்கீதம் 1; 23; 26–28; 46,: படிக்கும் போது, கீழே இவைகளை எழுதவும்:
-
தேவனை நம்புவதற்கான அழைப்புகள்:
-
அவரை விவரிக்கும் வார்த்தைகள்
-
அவர் வழங்கும் சமாதானம், பெலன், மற்றும் பிற ஆசீர்வாதங்களை விவரிக்கும் வார்த்தைகள்:
-
அவரை நம்புகிற ஜனங்களை விவரிக்கும் வார்த்தைகள்
இரட்சகரைப் பற்றி சங்கீதம் பயன்படுத்துகிற தெளிவான படங்களையும் அடையாளங்களையும் கவனியுங்கள். எடுத்துக்காட்டாக சங்கீதம் சங்கீதம் 23இல் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அல்லது அமர்ந்த தண்ணீர்கள் வசனம் 2 போன்ற சொற்தொடர்கள் மனதிற்கு கொண்டுவருவதென்ன? தேற்றுகிற கோலும் தடியும் எதற்கு அடையாளங்களாக இருக்கக் கூடும்?(வசனம் 4) பாத்திரம் நிரம்பி வழிகிறது (வசனம் 5) என்பதற்கு அர்த்தம் என்னவாக இருக்கக் கூடும்?
சங்கீதம் 2; 22
இயேசு கிறிஸ்துதான் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட மேசியா.
சங்கீதம் பல இயேசு கிறிஸ்துவின் பூலோக வாழ்க்கையை சுட்டிக்காட்டுகின்றன. புதிய ஏற்பாடு காலத்திலுள்ள கிறிஸ்துவர்களும் இந்த தொடர்பினைக் கண்டார்கள். பின்வரும் வசனக் குறிப்புகளைப் படிக்க கருத்தில் கொள்ளவும். சங்கீதத்தில் உள்ள இந்த வார்த்தைகளுக்கும் இரட்சகரின் வாழ்க்கைக்குமிடைய உள்ள தொடர்புகளைக் கவனிக்கவும்.
-
சங்கீதம் 2:1–3 மற்றும் அப்போஸ்தலர் 4:24–28
-
சங்கீதம் 2: 7 மற்றும் அப்போஸ்தலர் 13:30-33
-
சங்கீதம் 22:1 மற்றும் மத்தேயு 27:45-46
-
சங்கீதம் 22:7-8 மற்றும் மத்தேயு 27:39 -43
-
சங்கீதம் 22:16 மற்றும் லூக்கா 23:32–33
-
சங்கீதம் 22:18 மற்றும் மத்தேயு 27:35
-
சங்கீதம் 31:5 மற்றும் லூக்கா 23:46
அந்த இணைச் செய்திகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? இன்னும் நிறைவேறாத வேதவாக்கிய தீர்க்கதரிசனங்களும் வாக்குத்தத்தங்களும் எவை? இந்த வாக்குத்தத்தங்களில் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தரும் என்ன விஷயங்களை நீங்கள் காண்கிறீர்கள்?
சங்கீதம் 8; 19; 33
“பூமி கர்த்தரின் நன்மையால் நிறைந்திருக்கிறது.”
சங்கீதம் 8; 19; மற்றும் 33 வாசித்தல் கர்த்தருடைய பல அற்புதமான படைப்புகளைக் கருத்தில் கொள்ள உங்களைத் தூண்டக்கூடும். நீங்கள் அப்படி செய்யும் போது உங்கள் உணர்ச்சிகளைக் கவனித்துப்பாருங்கள். “How Great Thou Art” (Hymns, 86) போன்ற இந்த சங்கீதங்களுடன் தொடர்புடைய ஒரு பாடலின் வார்த்தைகளைப் பாடவோ அல்லது சிந்திக்கவோ நீங்கள் விரும்பலாம். கர்த்தருடைய சிருஷ்டிப்புகள் உங்களுக்கு எவ்வாறு “தேவனின் மகிமையை அறிவிக்கின்றன” சங்கீதம் 19:1.
சங்கீதத்தால் ஈர்க்கப்பட்ட வேறு சில பாடல்கள் இங்கே:
-
சங்கீதம் 23: “The Lord Is My Shepherd” (Hymns, no. 108)
-
சங்கீதம் 23:6; 150: “Praise to the Lord, the Almighty” (Hymns, no. 72)
-
சங்கீதம் 26:8: “We Love Thy House, O God” (Hymns, no. 247)
-
சங்கீதம் 27:1: “The Lord Is My Light” (Hymns, no. 89)
-
சங்கீதம் 33:1–6; 95:1–6: “For the Beauty of the Earth” (Hymns, no. 92)
-
சங்கீதம் 37:3–9: “Be Still, My Soul” (Hymns, no. 124)
-
சங்கீதம் 148: “All Creatures of Our God and King” (Hymns, no. 62)
இசையைப் பயன்படுத்தவும். தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் கூறினார்: பாடல்களைப் பாடுவது நாம் கர்த்தருடைய ஆவியுடனே இசைந்திருப்பத்திற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். … கர்த்தருக்கு நம்முடைய அன்பின் உணர்ச்சிகளைத் தெரிவிக்கக்கூடிய தனித்துவமான திறனைப் பரிசுத்த இசை கொண்டிருக்கிறது. இப்பேற்பட்ட தொடர்பு நம்முடைய ஆராதனைக்கு அருமையாக உதவிபுரிகிறது. நம்முடைய துதிப்பாடல்கள் ஒப்பற்ற கோட்பாடு அடங்கிய பிரசங்கங்களை கொண்டிருக்கின்றன. இவைகள் சத்தியத்திலும் கவித்திறனிலும் வேதவாக்கியங்களுக்கு அடுத்தவையாய் இருக்கின்றன. (“Worship through Music,” Ensign, Nov. 1994, 10, 11). இந்த வாரம் உங்கள் ஆராதனையை மேம்படுத்த சங்கீதத்துடன் தொடர்புடைய எந்த பாடல்களை நீங்கள் கேட்கவோ பாடவோ செய்யலாம்?
சங்கீதம் 19:7–11; 29
கர்த்தருடைய வார்த்தை வல்லமையானது, “இருதயத்தை மகிழ்விக்கிறது.”
சங்கீதத்தில், சாட்சியம், சட்டங்கள், கட்டளை, மற்றும் தீர்ப்புகள் போன்ற வார்த்தைகள் கர்த்தருடைய வார்த்தையைக் குறிக்கலாம். நீங்கள் சங்கீதம் 19:7–11 வாசிக்கும்போது இதை மனதில் வையுங்கள். கர்த்தருடைய வார்த்தையைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கின்றன? சங்கீதம் 29 அவருடைய சத்தத்தைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? உங்கள் அனுபவத்தில், கர்த்தரின் வார்த்தை அல்லது சத்தம் இந்த விவரிப்புகளுடன் எவ்வாறு பொருந்தியுள்ளது?
சங்கீதம் 24; 26–27
தேவனுடைய பிரசன்னத்திற்குள் நான் பிரவேசிக்க இரட்சகர் என்னை சுத்தமாக இருக்க உதவக்கூடும்
எருசலேமில் உள்ள ஆலயம் ஒரு மலையில் கட்டப்பட்டதால், “கர்த்தருடைய பர்வதம்” ( சங்கீதம் 24:3) என்ற சொற்றொடர் ஆலயத்தைக் குறிக்கலாம் அல்லது தேவ பிரசன்னத்தைக் குறிக்கலாம். சங்கீதம் 24 ஐ பற்றிய உங்கள் புரிதலுக்கு இது என்ன சேர்க்கிறது? “சுத்தமான கைகள், தூய்மையான இருதயம்” வைத்திருப்பது என்றால் அர்த்தம் என்ன”? சங்கீதம் 26–27இல் கர்த்தருடைய வீட்டைப்பற்றி நீங்கள் வேறென்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
தேவனுடைய பிரசன்னத்தில் பிரவேசிக்க நாம் சுத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதை காதுபட கேட்பதால் சில சமயங்களில் நாம் மனச்சோர்வு அடையக்கூடும். எப்படியாயினும் நாம் யாவரும் போராடுகிறோம், நம்மில் ஒருவரும் பூரணரல்லவே. தலைவர் டேவிட் ஏ. பெட்னாரின் செய்தியில் நீங்கள் எத்தகைய நம்பிக்கையை காண்கிறீர்கள் “Clean Hands and a Pure Heart”? (Liahona, Nov. 2007, 80-83). பூரணமாய் இருக்க அதீத விருப்பத்தை உணர்கிற ஒருவருக்கு உதவ நீங்கள் இந்த செய்தியை எப்படி பயன்படுத்தலாம்? “சுத்தமான கைகளையும் தூய்மையான இருதயத்தையும்“ கொண்டிருக்க உங்களுடைய முயற்சியில் இரட்சகரின் உதவியை நீங்கள் எப்படி பெறமுடியுமென்று எண்ணிப்பாருங்கள்.
பிராட்லி ஆர். வில்காக்ஸ், “தகுதி, குறைபாடற்ற தன்மை அல்ல,” லியஹோனா, நவம்.2021, 61–67 ஐயும் பார்க்கவும்.
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
சங்கீதம் 23; 27–28; 32; 46
கர்த்தர் எனக்கு சமாதானத்தையும், பெலனையும், வழிநடத்துதலையும் அருளுகிறார்.
-
கர்த்தர்…என்று நீங்கள் எழுதி உங்கள் பிள்ளைகள் சங்கீதம் 23:1; 27:1; 28:1; 28:7; 32:7; 46:1 போன்ற வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி அந்த வாக்கியத்தை முடிக்கத்தக்கதாக அவர்கள் வழிகளைக் காண அழைக்கவும். தேவன் நமக்கு எப்படி உதவ முடியும் என்று இந்த வசனங்கள் நமக்கு என்ன கற்பிக்கின்றன?
-
ஆட்டுக்குட்டி பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க என்ன தேவைப்படுகிறது என்பதை உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் கலந்தாலோசிக்கலாம். பின்னர், நீங்கள் சங்கீதம் 23ஐ ஒன்றாக வாசிக்கும்போது, மேய்ப்பன் ஆட்டுக்குட்டிக்கு செய்வதை இயேசு நமக்கு செய்வதோடு ஒப்பிட்டுப் பார்க்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். ஆவிக்குரிய ரீதியில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நமக்கு என்ன தேவை? “I Feel My Savior’s Love” (Children’s Songbook, 74–75) போன்ற கருத்துக்களை அவர்களுக்குத் தரக்கூடிய ஒரு பாடலை ஒன்றாகப் பாடுங்கள்.
கான்செப்சன் சிலி ஆலயம்
சங்கீதம் 24:3-4 .
ஆலயத்தினுள்ளே பிரவேசிக்க நாம் “சுத்தமான கைகள், தூய்மையான இருதயம்” கொண்டிருக்கவேண்டும்.
-
நீங்கள் ஒன்றாக சங்கீதம் 24:3 வாசிக்கிற வேளையில், உங்கள் பிள்ளைகள் ஆலயத்தைப் பற்றி நினைவூட்டுகிற வார்த்தைகளைக் கண்டுபிடிக்கலாம். அவர்கள் ஆலயத்தின் படத்தையும் காணலாம். ஆலயத்தில் யார் பிரவேசிக்கலாம் என்று அறிந்துகொள்ள நீங்கள் பின்பு வசனம் 4ஐ ஒருமித்து படிக்கலாம். நீங்கள் கைகளில் எப்படி கறை படிகிறதென்றும் அவைகளை எப்படி சுத்தப்படுத்துகிறோம் என்றும் எடுத்துரைக்கலாம். நாம் எப்படி ஆவிக்குரிய ரீதியில் கறைபடிந்தவர்களாகிறோம்? ஆவிக்குரிய வகையில் நாம் சுத்தமாகிட இரட்சகர் எப்படி உதவிசெய்கிறார்?
சங்கீதம் 30:5.
இயேசு கிறிஸ்து துக்கத்தை சந்தோசமாக மாற்ற முடியும்.
-
உங்களுக்கு சிறு பிள்ளைகளிருந்தால், ”சாயங்காலத்தில் அழுகை தங்கும்” என்று சங்கீதம் 30:5லிருந்து நீங்கள் வாசிக்கும்போது அவர்கள் அழுகும்படியாக பாசாங்கு செய்ய அவர்களை அழைக்கவும். விடியற்காலத்திலே களிப்புண்டாகும் என்று நீங்கள் படிக்கும் போது அவர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்துமாறு அவர்களுக்கு சொல்லவும். இந்த சொற்தொடரைக் கொஞ்ச தடவை திரும்பத் திரும்ப சொல்லவும்.
-
இரட்சகரின் படத்தைக் காட்டி, உங்களுக்கு சந்தோசத்தை கொண்டு வரத்ததக்கதாக எதை அவர் செய்திருக்கிறார் என்று உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இரட்சகரின் படத்தைக் `காண்பித்து உங்களுக்கு சந்தோசத்தைக் கொண்டுவரத்தக்கதாக அவர் செய்தது என்ன என்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லவும்.
சங்கீதம் 46:10.
“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்”
-
சங்கீதம் 46:10லிருந்து முதல் வரியான “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்” என்பதை உங்கள் பிள்ளைகள் மனப்பாடம் செய்ய அவர்களுக்கு உதவுங்கள் “அமர்ந்திருந்து” என்றால் என்ன? அமர்ந்திருந்து கொஞ்ச நேரத்தை செலவிடலாம். அமர்ந்திருந்த போது தேவனுடனான உங்கள் உறவு பெலப்பட்டதைக் குறித்த அனுபவங்களை ஒருவருக்கொருவர் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். பரலோக பிதாவுடனான நெருக்கத்தை உணரத்தக்கதாக ஒரு நாள் பொழுதில் எந்தெந்த சமயங்களில் உங்கள் பிள்ளைகள் அமர்ந்திருக்ககூடும் என்று யோசிக்க அவர்களுக்கு உதவுங்கள்.
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.