“ஆகஸ்ட் 10–16. ‘அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்”: யோபு 1–3; 12–14; 19; 21–24; 38–40; 42,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“ஆகஸ்ட் 10–16. ‘அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
யோபுவின் தீர்ப்புக்கள்–ஜோசப் பிரிக்கி
ஆகஸ்டு 10– 16:“அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்”
யோபு 1–3; 12–14; 19; 21–24; 38–40; 42
சன்மார்க்கருக்கு ஏன் பொல்லாப்பு சம்பவிக்கிறது என்றும், இப்படியாக நன்மையானவை ஏன் துன்மார்க்கருக்கு சம்பவிக்கிறது என்றும் ஆச்சரியப்படுவது இயல்பானதே. நீதியுள்ள தேவன் அதை ஏன் அனுமதிக்கிறார்? யோபின் புத்தகம் இப்படிப்பட்ட கேள்விகளை ஆராய்கிறது. பொல்லாதவைகள் வெகுவாய் சம்பவித்த சன்மார்க்கர்களில் யோபுவும் ஒருவன். யோபுவின் பாடுகள் காரணமாக, அவன் உண்மையிலேயே நல்லவனா என்று அவனது நண்பர்கள் யோசித்தார்கள். யோபு தனது சொந்த நீதியை உறுதிப்படுத்திக் கொண்டு, தேவன் உண்மையிலேயே நியாயமாய் இருக்கிறாரா என்று சிந்தித்தான். ஆயினும் யோபு தனக்கு வேதனையும், கலக்கமும் இருந்தபோதிலும், தன்னுடைய உத்தமத்தையும் இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொண்டான். யோபு புத்தகத்தில், விசுவாசம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு சோதிக்கப்படுகிறதே தவிர, ஒருபோதும் முற்றிலுமாக நீங்கிப்போவதில்லை அது எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது என அர்த்தமல்ல. அவை பதில் பெறும்வரை கேள்விகள் விசுவாசத்துடன் கூடியிருக்கலாம் என்று இப்படியாக யோபின் புத்தகம் போதிக்கிறது. இதற்கிடையில் என்ன நடந்தாலும், “நான் அவர் மீது நம்பிக்கையாயிருப்பேன்” என்று நம்முடைய கர்த்தரைப்பற்றி நாம் சொல்லலாம், (யோபு 13:15).
யோபுவின் புத்தகத்தைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு “Job” in Guide to the Scriptures (Gospel Library) பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
யோபு 1–3; 12–13
அனைத்து சூழ்நிலைகளிலும் நான் தேவனை நம்பியிருக்கக்கூடும்.
யோபின் துவக்க அதிகாரங்களில் நம்முடைய சத்துருவாக அல்லது குற்றம்பிடிப்பவனாக சாத்தானின் பங்கு கவிதையின் வாயிலாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவை தேவனும் சாத்தானும் உண்மையில் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை விவரிப்பதில்லை. யோபுவைப்பற்றி சாத்தான் சொன்னவற்றை நீங்கள் படிக்கும்போது ( யோபு 1: 9–11 ; 2: 4–5 பார்க்கவும்), “நான் ஏன் தேவனுக்கு விசுவாசமுள்ளவனாய் நிலைத்திருக்கிறேன்?” என்று உங்களையே நீங்கள் கேட்கக் கூடும். சாத்தான் குறிப்பிட்ட காரணத்திற்காக மாத்திரம் கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஏன் ஆபத்தாகக்கூடும்?
யோபு தனது பாடுகளுக்குள்ளும் சொன்ன பதில்கள் எப்படி உங்களை ஈர்க்கிறது? (யோபு 1:20–22;யோபு 2:9–10 பார்க்கவும்).
யோபின் நண்பர்களோ தேவன் அவனைத் தண்டிப்பதாகக் கூறினார்கள் (யோபு 4–5; 8; 11 பார்க்கவும்). இந்த யோசனையில் என்ன சிக்கல்கள் இருப்பதாக நீங்கள் காண்கிறீர்கள்? அதிகாரங்கள் 12-13இல் உள்ள யோபின் பதில்களை வாசிக்கவும். தேவனை விடாது நம்பியிருக்கும்படியாக அவரைப்பற்றி யோபு அறிந்திருந்ததென்ன? சவால்களை எதிர்கொள்ள உங்களுக்கு உதவும் படியாக தேவனைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறதென்ன?
யோபு 19
இயேசு கிறிஸ்து என் மீட்பராயிருக்கிறார்.
சிலசமயங்களில் மிக முக்கியமான சத்தியங்களை நம்முடைய மிகவும் கடினமான காலங்களின் போது கற்றுக்கொள்கிறோம். யோபு 19: 1–22இல் யோபு விவரித்த சோதனைகளையும் வசனங்கள் 23-27இல் அவன் அறிவித்த சத்தியங்களையும் தியானிக்கவும். உங்கள் மீட்பர் ஜீவிக்கிறார் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? இதை தெரிந்துகொள்வதினிமித்தம் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும்?
“I Know That My Redeemer Lives” (Hymns, no. 136) போன்ற இயேசு கிறிஸ்துவை பற்றிய ஒரு பாடலைப் பாடவோ அல்லது கேட்கவோ கருத்தில் கொள்ளுங்கள். அவரைப் பற்றிய உங்கள் உணர்ச்சிகளை இந்தப் பாடலில் எந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:1–12122ஐயும் பார்க்கவும்.
யோபு 21–24
“அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.”
யோபு 21-24இல் யோபுக்கும் அவன் நண்பர்களுக்குமிடையேயான விவாதத்தைக் காண்பீர்கள். இந்த விவாதத்தின் முக்கிய தலைப்பு அநேகர் கேட்ட கேள்வியான: ஏன் நீதிமான்கள் சில சமயங்களில் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்? என்பதே.
நாம் எல்லாவற்றுக்குமான தீர்வை பெற்றிருக்கவில்லையென்றாலும், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் துன்பத்தைப்பற்றியும் வேதனையைப்பற்றியும் புரிந்துகொள்ள நமக்கு உதவ சில சத்தியங்கள் உள்ளன. இந்த சத்தியங்களில் சிலவற்றை கொண்டுள்ள பிற்கால வேதவாக்கியங்கள் கீழே உள்ளன: பரலோக பிதா மற்றும் அவருடைய திட்டத்தைப்பற்றி இந்த வேதவாக்கியங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன?
“Tragedy or Destiny?”இல் துன்பம் பற்றிய தலைவர் ஸ்பென்சர் டபுள்யு கிம்பலின் போதனைகளையும் நீங்கள் படிக்கலாம். Teachings of Presidents of the Church: Spencer W. Kimball (2011), 11-21.
“ஏன் நீதிமான்கள் துன்பப்பட தேவன் இடங்கொடுக்கிறார்“ என்ற கேள்விக்கு நீங்கள் படித்தவைகளை கொண்டு, எப்படி நீங்கள் பதிலளிப்பீர்கள்?
அமைதியும் நட்சத்திரங்களும் –யாங்சுங் கிம். இப்படத்தைக் கொடுத்த havenlight.comக்கு நன்றி
யோபு 38-40;42
தேவனின் கண்ணோட்டம் என்னுடையதை விட பெரியது.
தன்னுடைய நண்பர்களின் குற்றஞ்சுமத்தலால் ஏமாற்றமடைந்து (யோபு 16:1–5; 19:1–3பார்க்கவும்), யோபு தான் ஏன் இவ்வளவாய் துன்பப்படவேண்டும் என்று தேவனிடம் திரும்பத் திரும்ப கேட்கலானான். (யோபு 19:6–7; 23:1–9; 31 பார்க்கவும்). கர்த்தர் யோபின் புத்தகத்தில் ஒரு தெளிவான காரணத்தைக் கொடுக்கவில்லை. ஆயினும் அவர் ஒரு முக்கியமான செய்தியை அதிகாரங்கள் 38-40இல் போதித்தார். இந்த செய்தியை நீங்கள் எவ்வாறு சுருக்கமாகக் கூறுவீர்கள்? உதாரணமாக, யோபு 38:1–7, 18–24இல் கர்த்தருடைய கேள்விகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
கர்த்தர் யோபிடம் தம்முடைய சிருஷ்டிப்புகள் சிலவற்றை குறித்தும், மற்ற மகத்துவமான கிரியைகளைக் குறித்தும் பேசினதை நீங்கள் கவனிப்பீர்கள் (யோபு 38-39 பார்க்கவும்). நீங்கள் அந்த சிருஷ்டிப்புகளில் சிலவற்றை (அல்லது அவைகளை படங்களில்) காணக்கூடும். இவைகள் தேவனைப் பற்றியும் உங்களுடைய சோதனைகள் பற்றியும் நீங்கள் வேறுவிதமாய் யோசிக்க உங்களுக்கு எவ்வாறு உதவும்? அவைகள் யோபின் கண்ணோட்டத்தை எவ்வாறு மாற்றின? (யோபு 42:1-6 பார்க்கவும்; மோசே 1:8–10ஐயும் பார்க்கவும்.
“தமாரா டபிள்யூ. ரூனியா, மேலோட்ட உருப்பெருக்கி மூலம் தேவனின் குடும்பத்தைப் பார்த்தல்” (லியஹோனா, நவம்பர் 2023, 62–69); ரசல் எம். நெல்சன், “சிலஸ்டியலாக சிந்தியுங்கள்!” ஆகிய இவ்விரண்டு பொது மாநாட்டு செய்திகள் உங்கள் கண்ணோட்டத்தை மாற்ற உதவக்கூடியவை. (லியஹோனா, நவம்பர். 2023, 117-20). அடுத்த முறை உங்கள் சோதனைகள் மிகுதியாய் இருக்க நேரிட்டால் மனதில் வைக்கத்தக்கதாக இந்த இரு செய்திகளிலிருந்து ஏதேனும் கண்டறியவும். நீங்கள் கற்றுக்கொண்டதை எவ்வாறு தங்களுக்கு தாங்களே நினைவுபடுத்திக்கொள்வீர்கள்?
ஆக்கப்பூர்வமாயிருங்கள். வாசித்தல், யோசித்தல், பேசுதல் ஆகியவை மாத்திரம் கற்றலில் உள்ளடக்கம் என்பதில்லை. சிலசமயங்களில் மறக்கமுடியாத கற்றல் உடல் ரீதியாக சுறுசுறுப்பான வழிகளில் வருகிறது. உதாரணமாக, கர்த்தர் எவ்வாறு யோபின் கண்ணோட்டத்தை மாற்றினார் என்பதை யோபு 38–40ஐ படிக்கும் போது, நீங்கள் சற்று நடந்து, கர்த்தருடைய பெரிதும் சிறிதுமான சிருஷ்டிப்புகளைக் காணலாம். அல்லது நீங்கள் ஒரு பொருளை மேலிருந்து, கீழிருந்து, அருகாமையிலிருந்து, தூரத்திலிருந்து, இதுபோன்ற வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கலாம்.
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கான ஆலோசனைகள்
யோபு 1; 12; 19
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கடினமான தருணங்களில் எனக்கு உதவும்.
-
உங்கள் பிள்ளைகள் தாங்கள் யோபுவைப் பற்றி தெரிந்தவற்றை உங்களிடம் சொல்ல ஊக்குவியுங்கள். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் அவர்களை யோபு 1:1, 13–22; 2:7–10 அல்லது “யோபு ” (பழைய ஏற்பாடு கதைகள், 145–47)க்கு வழிநடத்தவும். சவால்களுக்கு யோபு எவ்வாறு பதிலளித்தான்? (யோபு 1:21; 2:10 பார்க்கவும்).
1:55Job
-
யோபு கர்த்தரைக் குறித்து தான் அறிந்துவைத்திருந்தவைகளினிமித்தம் தன்னுடைய சவால்களுக்குள்ளும் உண்மையுள்ளவனாய் இருந்தான். ஒருவேளை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இயேசு கிறிஸ்து மற்றவரிடம் உறவாடுவதைப்பற்றிய படங்களை (கீழே கொடுக்கப்பட்டதைப் போலவோ அல்லது சுவிசேஷ கலை புத்தகத்தில் உள்ளதைப் போலவோ) பார்க்கலாம். அவரைப் பற்றி நீங்கள் அறிந்தவற்றையும், அவர் எப்பேர்பட்டவர் என்பதையும் குறித்து சொல்லுங்கள். யோபு கர்த்தரைப் பற்றி என்ன அறிந்திருந்தான் என்பதை காட்டும் சில வசனங்கள் இதோ: யோபு 12:10, 13, 16,19:25-27 அவரைப் பற்றிய இந்த காரியங்களைக் அறிந்துகொள்வது ஏன் விலைமதிப்புள்ளதாய் இருக்கிறது?
அவர் அவர்கள் அனைவரையும் குணப்படுத்தினார்—மைக்கல் மால்ம்
யோபு 14:14.
நான் மரித்தபின்பும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் மறுபடியும் வாழ்வேன்.
-
யோபு 14:14இல் யோபு ஒரு முக்கிய கேள்வியைக் கேட்டான். ஒருவேளை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யோபுக்கு எப்படி பதிலளிப்பீர்கள் என்று பகிர்ந்துகொள்ள மாறி மாறி முறைகளைக் எடுத்துக்கொள்ளவும். நீங்கள் யோசனைகளை ஆல்மா 11:42–44, “வருகிற நாட்கள்” காணொளி (சுவிசேஷ நூலகம்), அல்லது “இயேசு மெய்யாகவே மறுபடியும் வாழ்ந்தாரா?” என்பதை போன்ற உயிர்த்தெழுதல் பற்றிய பாடல் ஆகியவைகளில் காண முற்படலாம். (பிள்ளைகளின் பாட்டுப்புத்தகம். 64).
#BECAUSEofHIM: An Easter Message of Hope and Triumph
யோபு 16:1-5; 22:5
நல்ல நண்பர்கள் ஒருவரையொருவர் முன்னேற ஊக்குவிப்பார்கள்.
-
யோபு துக்கமாய் இருந்தபோது, அவன் நண்பர்கள் அவன் பாவம்செய்ததாலே தேவன் அவனைத் தண்டிக்கிறார் என்று சொன்னார்கள் (யோபு 22:5 பார்க்கவும்). நாம் யோபின் நண்பர்களாய் இருந்தால், நாம் எவ்வாறு அவனுக்கு உதவ முயற்சிப்போம்? மற்றவர்களின் துயரத்தில் நம் வார்த்தைகள் எவ்வாறு உதவ முடியும்? (யோபு 16:5 பார்க்கவும்). இந்த கேள்விகளை நீங்கள் கலந்துரையாடும்போது இந்தக் குறிப்பிலுள்ள படங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களைக் காண்பிக்கக் கருத்தில் கொள்ளுங்கள்.
-
நல்ல நண்பனுக்கான சில குணங்களைப் பட்டியலிடவும் இந்தக் குணங்களைக் கொண்ட ஒரு நண்பனின் பெயரை சொல்லவும் உங்கள் பிள்ளைகளிடத்தில் கேட்கும்படியாக நீங்கள் கருத்தில் கொள்ளவும் பின்பு நீங்கள் இயேசு கிறிஸ்துவின் படத்தைக் காணலாம். எந்தெந்த வழிகளில் இயேசு நம் ஒவ்வொருவருக்கும் நல்ல நண்பராக இருக்கிறார்? கஷ்டகாலத்தில் இருக்கும் ஒருவரை நீங்கள் நினைத்துப்பார்க்கலாம். அவர்களுக்கு எப்படி நீங்கள் கிறிஸ்துவைப்போன்ற நண்பனாக இருப்பீர்கள் என்று திட்டமிடுங்கள்.
யோபு 19:23-27
இயேசு கிறிஸ்து என் மீட்பராயிருக்கிறார்.
-
யோபு 19:23–27ஐ வாசித்த பிறகு, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மீட்பர் ஜீவிக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்பதைக் குறித்து பேசலாம். உங்கள் சாட்சியத்தை (அல்லது இரட்சகரின் வரைபடங்களை) ஒரு புத்தகத்தில் வைக்க நீங்கள் ஒன்றாய் செயல்படலாம். (வசனம் 23 பார்க்கவும்).
-
“I Know That My Redeemer Lives” (Hymns, no. 136), போன்ற இரட்சகரின் சாட்சியமளிக்கும் பாடல் ஒன்றை நீங்கள் பாடலாம். அவரில் உங்கள் விசுவாசத்தை வலுப்படுத்தும் சொற்றொடர்களைப் பகிரவும். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதை அறிந்துகொள்வது ஏன் முக்கியமாக இருக்கிறது?
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.