“ஆகஸ்ட் 3–9. எஸ்தர்: ‘நீ இப்படிப்பட்ட காலத்துக்கு … வந்திருக்கிறாய்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“ஆகஸ்ட் 3–9 ‘நீ இப்படிப்பட்ட காலத்துக்கு … வந்திருக்கிறாய்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
எஸ்தர் ராணி யெகோவாவின் ஜனத்தை இரட்சித்தல் –சாம் லாலர்
ஆகஸ்ட் 3–9: எஸ்தர்: “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு … வந்திருக்கிறாய்”
எஸ்தர்
எஸ்தர் புத்தகத்தில் பல நிகழ்வுகள் அதிர்ஷ்டம் அல்லது தற்செயல் நிகழ்வு போல் தோன்றலாம். ஒரு அனாதை யூதப் பெண் தனது ஜனங்களை படுகொலை செய்யப்படாமல் காப்பாற்ற சரியான நேரத்தில் பெர்சியாவின் ராணியாக ஆனது எப்படி என்பதை வேறு எப்படி விளக்கமுடியும் ? ராஜாவை படுகொலை செய்வதற்கான ஒரு சதியை ஒட்டுக்கேட்க எஸ்தரின் சகோதரனாகிய மொர்தெகாய்க்கு என்ன வாய்ப்புகள் உள்ளன? இவை தற்செயல் நிகழ்வுகளா, அல்லது தெய்வீகத் திட்டத்தின் ஒரு பகுதியா? மூப்பர் ரொனால்ட் எ. ராஸ்பான்ட்: “ஒரு சீரற்ற வாய்ப்பாகத் தோன்றுவது உண்மையில், அன்பான பரலோக பிதாவால் கண்காணிக்கப்படுகிறது. … கர்த்தர் நம் வாழ்வின் சிறிய விவரங்களில் இருக்கிறார்” (“By Divine Design,” Liahona, Nov. 2017, 56). இந்த “சிறிய விவரங்களில்” கர்த்தரின் செல்வாக்கை நாம் எப்போதும் அடையாளம் காண முடியாது. ஆனால் அவருடைய நோக்கங்களை நிறைவேற்ற நாம் அவருடைய கைகளில் கருவிகளாக இருக்கும்போது, அவர் நம் பாதையை வழிநடத்தி “அத்தகைய நேரத்திற்கு”(எஸ்தர் 4:14) நம்மை தயார்படுத்த முடியும் என எஸ்தரின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.
எஸ்தரின் புத்தகத்தைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு “Esther, book of” in the Bible Dictionary பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
எஸ்தர்
நான் மற்றவர்களுக்கு அசீர்வாதமாக இருக்கும்படியான சூழ்நிலைகளில் கர்த்தர் என்னை வைக்கிறார்.
“நாம் ஒவ்வொருவரும் நமக்கே உரிதான இடத்தில் நின்று நாம் மட்டுமே செய்யத்தக்கதான முக்கிய பொறுப்பைப் பெற்றிருக்கிறோம். கர்த்தர் உங்கள் பொறுப்புகளை உங்களிடத்தில் ஒரு காரணத்திற்காக கொடுத்திருக்கிறார். நீங்கள் மாத்திரம் அறிந்து தொடக்கூடிய ஜனங்களும் இருதயங்களும் அங்கே இருக்க கூடும். நீங்கள் செய்வதைப்போன்று ஒருவேளை வேறு எவரும் செய்யக் கூடாமற் போகலாம் என்று தலைவர் டியட்டர் எப். உக்டர்ப் போதித்தார்.” (“Lift Where You Stand,” Liahona, Nov. 2008, 56 பார்க்கவும்).
எஸ்தரின் கதையை நீங்கள் வாசிக்கும்போது, இந்த வாசகம் அவளுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். யூதர்களைக் காப்பாற்ற கர்த்தர் அவளுக்கு சாத்தியப்படுத்திய வழிகளைத் தேடுங்கள் (உதாரணமாக, எஸ்தர் 2:21–23; 3:10–14; 4:14–16 பார்க்கவும்). பின்பு நீங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உங்களுக்கு சந்தர்ப்பங்களை அவர் எப்படி அருளியுள்ளார் என்று தியானிக்கவும். “இது போன்ற ஒரு காலத்திற்காக” அவர் உங்களை எந்த சில சூழ்நிலைகள் அல்லது உறவுகளுக்கு அழைத்துச்சென்றார். (எஸ்தர் 4:14) உங்களிடம் கோத்திரப் பிதா ஆசீர்வாதம் இருந்தால், நீங்கள் செய்து முடிக்க கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் கிரியையைப் பற்றி அறிந்துகொள்ள அதை வாசிக்க எண்ணிப்பாருங்கள். இந்த கிரியையை நிறைவேற்ற நீங்கள் என்ன செய்ய முடியும்?
“இது போன்ற ஒரு காலத்திற்காக” {காணொளி)யும் காணவும். ChurchofJesusChrist.org.
For Such a Time as This
நாம் காதால் கேட்பதைவிட ஒரு காரியத்தை செய்வதால் அதிகம் கற்றுக்கொள்கிறோம். மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் ஆசிரியர்களுக்கு: “நமது நோக்கம் ‘நான் அவர்களுக்கு என்ன சொல்வது?’ என்பதாக இருக்கக்கூடாது. பதிலாக, நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் ‘நான் அவர்களை என்ன செய்ய அழைக்க முடியும்? அவர்கள் கீழ்ப்படிய மனதுள்ளவர்களாய் இருந்து, அவர்கள் தங்களுடைய வாழ்வில் பரிசுத்த ஆவியை அழைக்கத் துவங்கத்தக்கதாக நான் எத்தகைய உணர்த்தப்பட்ட கேள்விகளைக் கேட்கக்கூடும்?’” என்பதாக இருக்கவேண்டும் என்று ஆலோசனை கூறினார். (in Teaching in the Savior’s Way, 25) நீங்கள் உங்கள் குடும்பத்திலோ அல்லது ஒரு வகுப்பிலோ எஸ்தரைப் பற்றி போதித்தால், அவர்கள் கற்க உதவியாக அவர்கள் செய்யும்படி நீங்கள் கேட்டுக்கொள்ளுவது என்னவாய் இருக்கும்?
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, ஆமான் மூர்க்கம் நிறைந்தவனானான்.(எஸ்தர் 3:5)
எஸ்தர் 3; 5:9–14; 7
பெருமையும் கோபமும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
எஸ்தர் புத்தகத்தில், எஸ்தர் மற்றும் மொர்தெகாயின் விசுவாசத்திலிருந்து மாத்திரமல்ல, ஆமானின் பெருமை மற்றும் கோபத்திலிருந்தும் நாம் கற்றுக்கொள்கிறோம். எஸ்தர் 3; 5:9–14, நீங்கள் வாசிக்கும்போது, ஆமானின் உணர்வுகளையும், வார்த்தைகளையும், செயல்களையும் கருத்தில் கொள்ளவும். அவனைப்பற்றியும் அவனுடைய உந்துதல்களைப்பற்றியும் அவை என்ன வெளிப்படுத்துகின்றன? அவன் என்ன விளைவுகளை சந்தித்தான்? (எஸ்தர் 7 பார்க்கவும்). ஆமானைப்பற்றி படிப்பதினிமித்தம் உங்கள் உணர்வுகளையும் செயல்களையும் எது தூண்டுகிறது என்று மதிப்பீடு செய்ய நீங்கள் ஏவப்படக்கூடும். ஏதேனும் மாற்றங்களைச் செய்ய நீங்கள் உணர்த்தப்படுகிறீர்களா? உதவிக்காக நீங்கள் எப்படி பரலோக பிதாவிடம் திரும்ப முடியும்?
நீதிமொழிகள் 16:32; ஆல்மா 5:28ஐயும் பார்க்கவும்.
எஸ்தர் 3–4; 5:2–3; 8:11–12
கர்த்தரை நான் நம்பி சார்த்திருப்பதை உபவாசம் காட்டுகிறது.
எஸ்தரும் மற்ற யூதர்களும் ஏன் உபவாசமிருந்தார்கள் என்று கவனியுங்கள். (எஸ்தர் 3:13; 4:1–3, 10–17 பார்க்கவும்). உபவாசம் எப்படி அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தது? (எஸ்தர் 5:2–3; 8:11–12 பார்க்கவும்). கர்த்தர் ஏன் நம்மை உபவாசிக்கச் சொல்கிறார்?(Topics and Questions,“Fasting and Fast Offerings,” Gospel Library பார்க்கவும்). எப்படி உபவாசத்தை உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய ஆசீர்வாதமாக்கக்கூடும் என்று எண்ணிப்பாருங்கள்.
ஏசாயா 58:6–12; “Fasting: Young Single Adult Ward, Amanda” (video), ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.
Fasting: Young Single Adult Ward, Amanda
எஸ்தர் 3:1–11; 4:10–17; 5:1–4; 9:17–19
சரியானவற்றை செய்ய வெகு சமயங்களில் மிகுந்த தைரியம் தேவைப்படுகிறது.
மொர்தெகாயும் எஸ்தரும் தங்கள் நம்பிக்கைகளுக்காகவும், தங்கள் ஜனங்களுக்காகவும் எழுந்து நின்றபோது, அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். நாம் தேர்ந்தெடுப்பவை தீவிரமற்ற விளைவுகளைதான் ஏற்படுத்தக்கூடுமென்றாலும் கூட சரியான காரியத்தை செய்ய தைரியம் தேவை. எஸ்தர் 3:1–4; 4:10–17ல் சரியானதைச் செய்ய தைரியம் கொண்டிருப்பதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? தைரியத்தைக் காட்டிய பிறகு மொர்தெகாயும் எஸ்தரும் அனுபவித்த வெவ்வேறு விளைவுகளை கவனியுங்கள் (எஸ்தர் 3:5–11; 5:1–4 பார்க்கவும்). எஸ்தரும் மொர்தெகாயும் தங்களுடைய தெரிவுகளை தேர்வுசெய்ய தேவனைப் பற்றி என்ன தெரிந்திருக்க வேண்டியதாய் இருந்தது?
சரியானவைக்காக நிற்கவேண்டி தைரியம் தேவைப்படுகிற சூழ்நிலைகளை யோசித்துப்பாருங்கள். கர்த்தரில் தைரியம்கொண்டிருக்க உங்களுக்கு உதவும்படியானவைகளை எஸ்தர் மற்றும் மொர்தெகாயிடம் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?
எஸ்தரின் தைரியம் “பூரிப்பின் நாளுக்கு” வழிவகுத்தது (எஸ்தர் 9:17–19பார்க்கவும்). கிறிஸ்துவைப்போல இருப்பதினால் வருகிற தைரியம் உங்களுக்கு “பூரிப்பின் நாளை” எப்படி கொடுத்திருக்கிறது?
“Courage,” “Dare to Stand Alone” (videos), Gospel Library; “True to the Faith,” Hymns, no. 254 ஐயும் பார்க்கவும்
Courage
Dare to Stand Alone
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
எஸ்தர் 2:5-7
நான் என் குடும்பத்தை சேவிக்க முடியும்.
-
மொர்தெகாயு எஸ்தருக்கு செய்ததுபோல தேவை வேண்டி இருக்கும் குடும்பத்தினருக்கு உதவி செய்வது பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க எஸ்தர் 2:7ஐ பயன்படுத்தும்படி நீங்கள் உணர்த்தப்படலாம். நீங்கள் வசனத்தை ஒன்றாய் வாசிக்கலாம் அல்லது உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறலாம். பின்பு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் உதவி தேவைப்படும் குடும்பத்தினரை பற்றி யோசிக்கலாம். . அவர்களுக்கு உதவ ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.
எஸ்தர் 3:1-11; 4:10-17
திடன்கொண்டிருக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
-
திடன்கொண்டிருத்தல் என்பதற்கு பயப்பட்டாலும் சரியானதை செய்வது என்று உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள எஸ்தர் மற்றும் மொர்தெகாயின் எடுத்துக்காட்டுக்கள் உதவலாம். மொர்தெகாய் தான் …திடன்கொண்டிருந்தான்மற்றும்எஸ்தர் தான் …திடன்கொண்டிருந்தாள் என்ற சொற்தொடர்களை எழுத யோசித்திருங்கள். நீங்கள் ஒருமித்து எஸ்தரின் கதையை கற்கும் வேளையில், உங்கள் பிள்ளைகள் வாக்கியங்களை பூர்த்திசெய்ய வழிகளை ஆலோசிக்கலாம். Esther 3:1–11; 4:10–17 or “Queen Esther” (in Old Testament Stories, 166–70 நீங்கள் வாசிக்கலாம்) அல்லது இந்தப் பாட சுருக்கத்திலுள்ள படங்களைப் பார்க்கலாம். பின்பு நான் … மூலம் திடன்கொண்டிருப்பேன் என்று எழுதி, உங்கள் பிள்ளைகளைத் தைரியம் கொண்டு செய்ய பரலோக பிதா விரும்புகிற காரியங்களைக் பட்டியலிடும்படி அவர்களை அழைக்கவும். “Dare to Do Right” (Children’s Songbook, 158), போன்ற தைரியத்தைப் பற்றிய பாடல் உதவலாம்.
2:45Queen Esther
-
இயேசு கிறிஸ்து தைரியமாய் இருந்த சமயங்களைக் குறித்தும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்- உதாரணத்திற்கு அவர் நம்முடைய பாவங்களுக்காக கெத்சமனேவிலும் சிலுவையிலும் பாடனுபவித்த சமயம்.(மத்தேயு 26:36–39; 27:33–35ஐ பார்க்கவும்). உங்கள் பிள்ளைகளை அவர்கள் திடன்கொண்டிருத்த சமயம் ஒன்றைப் பற்றி பகிர சொல்லுங்கள். அப்படியே உங்களுடைய அனுபவங்களையும் பகிரவும்.
எஸ்தர் 4:1-3, 10–17
உபவாசம் கர்த்தருடைய ஆசீர்வாதங்களை வரவழைக்கும்.
-
எஸ்தர் 4:1–3, 10–17ஐ வாசிப்பது உபவாசத்தைப்பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் போதிக்க உதவும். எஸ்தரும் யூதர்களும் ஏன் உபவாசித்தார்கள்? நீங்கள் ஏன் உபவாசிக்கிறீர்கள் என்று உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள். முன்பு ஒருபோதும் உபவாசமிருந்திராத ஒரு நண்பர் ஒருவருக்கு அவர்கள் உபவாசத்தைப் பற்றி எப்படி விவரிப்பார்கள் என்று நீங்கள் அவர்களைக் கேட்கலாம். உபவாசத்தால் வருகிற அசீர்வாதங்களைப் புரிந்துகொள்ள நம்முடைய நண்பர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
-
கர்த்தருடைய சகாயம் தேவைப்படக்கூடிய காரியத்தை யோசிக்க உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கவும். அதை அவர்கள் அடுத்த உபவாச ஞாயிறுவின்போது தங்களின் உபவாசத்தின் ஒரு பங்காக்கிட பரிந்துரைக்கவும்.
எஸ்தர் திடன்கொண்டிருந்ததால் அவள் கர்த்தரின் ஜனத்தை காப்பாற்ற முடிந்தது.
எஸ்தர் 4:14.
நான் தேவனின் கைகளில் ஒரு கருவியாக இருக்க முடியும்.
-
எஸ்தர் பயப்பட்டபோது அவள் “இப்படிப்பட்ட காலத்துக்காக” கர்த்தர் அவளை ராணியாகிட உதவினார் என்று விவரிப்பதின் மூலம் மொர்தெகாய் அவளை ஊக்குவித்தான் என்று உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவுங்கள்.(எஸ்தர் 4:14). இதன் மூலம் மொர்தெகாய் எதை அர்த்தப்படுத்தினார்? எஸ்தர் எப்படி கர்த்தருக்கு ஒரு கருவியாக இருந்தாள் என்பதைப்பற்றி ஒருவருக்கொருவர் பேசுங்கள். நாம் எப்படி கர்த்தருக்காக கருவிகளாக இருக்கமுடியும்?
-
ஒரு கருவி என்றால் என்ன என்று உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள நீங்கள் எப்படி உதவலாம்? ஒரு பாடலை இசை கருவி ஒன்றில் வாசிக்க நீங்கள் ஒருவரை அழைக்கலாம் அல்லது யாரேனும் ஒரு கருவியைப் பயன்படுத்துகிற ஒரு படத்தைக் காண்பிக்கலாம். பின்பு நீங்கள் தேவனின் கைகளில் ஒரு கருவியாக இருப்பதன் அர்த்தம் என்ன என்று பேசலாம்.
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.