என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6. “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக”: சங்கீதம் 102–103; 110; 116–119; 127–128; 135–139; 146–150


“ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6. “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக”: சங்கீதம் 102–103; 110; 116–119; 127–128; 135–139; 146–150,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6. ‘சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

இயேசு ஒரு ஸ்திரீக்கு உதவ கையை நீட்டுதல்

பயபக்தியுடனே திரும்புதல்- கெல்சி மற்றும் ஜெஸ்ஸி லைட்வேவ்

ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6: “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக”

சங்கீதம் 102–103; 110; 116–119; 127–128; 135–139; 146–150

சங்கீத புத்தகத்திற்கான பாரம்பரிய யூத பெயர், “ஸ்தோத்திரம்” என்று அர்த்தம் கொண்ட எபிரேய வார்த்தையான டெஹில்லியம், ஆகும். அது கூக்குரலாய் கூறப்படும் வார்த்தையான அல்லேலுயா உடன் தொடர்புடையது (“யேகோவாவுக்கு ஸ்தோத்திரம்” அல்லது “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்பது அதன் அர்த்தமாகும்). சங்கீதத்தின் முக்கிய செய்தியைச் சுருக்க நீங்கள் ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தால், ஸ்தோத்திரம் என்பது ஒரு நல்ல தேர்ந்தெடுப்பாக இருக்கும். சில சங்கீதங்களில் “கர்த்தரைத் துதியுங்கள்” (குறிப்பாக சங்கீதம் 146–50 பார்க்கவும்) நேரடி அழைப்பைக் கொண்டுள்ளது, மேலும் அவை அனைத்தும் ஆராதிக்கவும் துதிக்கவும் உணர்த்தலாம். கர்த்தருடைய வல்லமையையும், அவருடைய இரக்கத்தையும், அவர் செய்த பெரிய காரியங்களையும் ஏற்றுக்கொள்ள சங்கீதம் நம்மை அழைக்கிறது. இதற்காக நாம் ஒருபோதும் எதையும் அவருக்கு திருப்பிச் செலுத்த முடியாது, ஆனால் அவரை நாம் ஸ்தோத்தரிக்கலாம். அந்த துதியை வெவ்வேறு ஜனங்கள் வித விதமான வடிவங்களில் ஏறெடுக்கக்கூடும், அதில் பாடுவதும், ஜெபிப்பதும், அல்லது சாட்சியம் அளிப்பதும் அடங்கும். இது பெரும்பாலும் கர்த்தரிடம் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கும் அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதற்கும் வழிவகுக்கிறது. உங்கள் வாழ்க்கையில் “கர்த்தரைத் துதியுங்கள்” என்பது எந்த அர்த்தம் கொண்டதாயிருந்தாலும், நீங்கள் சங்கீதங்களைப் படித்து தியானிக்கும் போது அதைச் செய்யும்படியான அதிக உணர்த்துதலைக் காணலாம்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

சங்கீதங்கள் 102–3; 116

என் துன்பத்தில் கர்த்தர் என்னை ஆறுதல்படுத்த முடியும்.

சவால்களின் போது அடிக்கடி வருகிற கவலை, தனிமை உணர்வுகளை சங்கீதம் 102: 1–11 விவரிப்பதை கவனியுங்கள். நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த மற்றவர்களோ அத்தகைய உணர்வுகளை அனுபவித்திருக்கலாம். சங்கீதம் 102:12–28; 103116, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் சோதனைகளில் “கர்த்தருடைய நாமத்தை அழைக்க” முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் சொற்றொடர்களைத் தேடுங்கள் (சங்கீதம் 116: 13 ). நீங்கள் அவரில் நம்பிக்கையைத் தரும் சொற்றொடர்களைக் குறித்துக்கொள்ளவோ மனப்பாடம் செய்யவோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ விரும்பலாம்.

ஏசாயா 25:8; எபிரேயர் 2:17–18; ஆல்மா 7:11–13; கமிலா என் ஜான்சன், “Christ Is Relief,” லியஹோனா, மே 2023, 81–83; “Where Can I Turn for Peace?”ஐயும் பார்க்கவும். (துதிப்பாடல்கள், no. 129).

இயேசு நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு உதவுதல்

காரல் ஹெய்ன்ரிச் ப்ளாக் (1834-1890), கிறிஸ்து பிணியாளரை பெதஸ்தாவில் குணமாக்குதல், 1883, oil on canvas, 100 ¾ x 125 ½ inches. ப்ரிகாம் யங் யுனிவர்சிட்டி மியூசியம் ஆஃப் ஆர்ட், ஜாக் ஆர். மற்றும் மேரி லோயிஸ் வீட்லி, 2001 வழங்கிய நிதியில் வாங்கப்பட்டது.

சங்கீதம் 110; 118

இயேசு கிறிஸ்து சங்கீதங்களிலுள்ள தீர்க்கதரிசனகளை நிறைவேற்றினார்.

சங்கீதம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் குறிக்கும் பத்திகளைக் கொண்டுள்ளது. சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • சங்கீதம் 110:1–4 (மத்தேயு 22:41–45; எபிரெயர் 5:4–10; 6:20 பார்க்கவும்)

  • சங்கீதம் 118:22 (மத்தேயு 21:42; அப்போஸ். 4:10–11; 1 பேதுரு 2:7 பார்க்கவும்)

  • சங்கீதம் 118:25–26 (மத்தேயு 21:9 பார்க்கவும்)

இயேசு கிறிஸ்துவைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றன? அவரைப் பற்றியதான இதை நாம் அறிந்துகொள்வது ஏன் முக்கியமானதாயிருக்கிறது?

சங்கீதம் 119

வேத பாட வகுப்பு சின்னம்
தேவனின் வார்த்தை என்னை அவருடைய பாதையில் வைத்திருக்கும்.

சங்கீதம் 119இல் நம் வாழ்க்கையை பரலோக பிதாவிடம் திரும்பி செல்லும் பயணத்துடன் ஒப்பிடுகிற பல சொற்றொடர்கள் உள்ளன நீங்கள் வாசிக்கும்போது நட, பாதை, வழி, பாதங்கள், மற்றும் அலைந்து திரிதல், போன்ற வார்த்தைகளைத் தேடவும். உங்கள் சொந்த வாழ்க்கைப் பயணத்தை யோசித்துப் பாருங்கள், நீங்கள் எங்கிருந்தீர்கள், இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எந்த திசையில் செல்கிறீர்கள். வீடு திரும்பும் பயணத்தைப்பற்றி இந்த சங்கீதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? மற்றவர்களுடைய பாதைகளைக் கவனித்ததின்முலம் நீங்கள் கற்றுக்கொண்டதென்ன? இந்த சங்கீதத்தின்படி, சரியான பாதையில் நிலைத்திருக்க உங்களுக்கு தேவன் என்ன வழங்கியுள்ளார்?

ஒரு பாதையோ அல்லது வரைபடமோ உங்களுக்கு வெற்றிகரமாக எங்காவது பயணிக்க உதவிய நேரத்தைப் பற்றி சிந்தியுங்கள். அந்த அனுபவம் தேவனுடைய பாதையைப் பின்பற்றுவது பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது?

மற்ற பல வேதவாக்கியங்களில், கர்த்தரும் அவருடைய தீர்க்கதரிசிகளும் ஒரு பாதையைப் பற்றி பேசுகிறார்கள். சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வசனங்களை ஆராய்ந்து, நீங்கள் கற்றுக்கொண்டதை எழுதவோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ எண்ணவும்.

வேதம்

தேவனிடம் வழிநடத்துகிற பாதை பற்றி நான் என்ன கற்றுக்கொள்கிறேன்

வேதம்

நீதிமொழிகள் 4:11–19

வேதம்

மத்தேயு 7:13-14

வேதம்

1 நேபி 8:20-28

வேதம்

2 நேபி 31:17–21.

வேதம்

ஆல்மா 7:9, 19-20

வேதம்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:2

தேவனுடைய பாதையில் நிலைத்திருக்க இந்த சத்தியங்கள் உங்களுக்கு எப்படி உதவும்?

கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர் ரசல் எம். நெல்சனின் ஆலோசனையிலிருந்து நீங்கள் என்ன கூடுதல் உட்கருத்துக்களைக் கற்றுக்கொள்ளலாம்?

“வாழ்க்கையினுடனான நம்முடைய பயணம் வெற்றியுள்ளதாக இருக்கவேண்டுமானால் நாம் தெய்வீக வழிநடத்துதலைப் பின்பற்றவேண்டும். “ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே” [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36] என கர்த்தர் சொன்னார். ‘உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது’ [சங்கீதம் 119:105]] என்று சங்கீதக்காரன் எழுதினான்.

உங்கள் வாழ்க்கையினுடனான பயணத்தில், நீங்கள் பல தடைகளைச் சந்தித் து சில தவறுகளைச் செய்கிறீர்கள். வேதவாக்கியங்களின் வழிகாட்டுதல், நீங்கள் தவறை அடையாளம் கண்டு, தேவையான திருத்தங்களைச் செய்ய உதவுகிறது. நீங்கள் தவறான திசையில் செல்வதை நிறுத்துவீர்கள். நீங்கள் வேதப் பாதை வரைபடத்தைக் கவனமாகப் படிப்பீர்கள். பின்பு ‘நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற நெருக்கமும் இடுக்கமுமான பாதையில்’ செல்ல தேவையான பாவமன்னிப்பையும் மறுசீரமைப்பையும் செய்து நீங்கள் முன்னேறுவீர்கள். [2 நேபி 31:18]” (“Living by Scriptural Guidance,” என்சைன், நவம்பர். 2000, 17).

டியட்டர் எப். உக்டர்ப், “The Prodigal and the Road That Leads Home,” லியஹோனா, நவம்பர். 2023, 86–88ஐயும் பார்க்கவும்

சங்கீதம் 134–36

யாதொரு விக்கிரகத்தைக் காட்டிலும் கர்த்தர் வல்லமையானவர்.

சங்கீதம் 135: 15–18 ன் படி ஏன் கள்ளத் தெய்வங்களை நம்புவது முட்டாள்தனம் என்பதை கவனியுங்கள். விக்கிரகங்களுக்கு ஒத்ததாக இருக்கும் எதை நீங்கள் நம்புமாறு சோதனைக்குட்படுத்தப்படுவீர்கள்? சங்கீதம் 134–36இல் சங்கீதக்காரர்கள் செய்ததுபோல கர்த்தர் செய்யக்கூடிய காரியங்களின் பட்டியலை நீங்கள் உருவாக்கலாம். அவர் உங்களுக்காக என்ன வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறார்?

சங்கீதம் 139

கர்த்தர் உங்கள் இருதயங்களை அறிந்து வைத்திருக்கிறார்.

உங்கள் எண்ணங்களானாலும், செயல்களானாலும், பெலங்களானாலும், பெலவீனங்களானாலும் உங்களை கர்த்தர் தெரிந்துவைத்திருக்கிறார் என்று சங்கீதம் 139 இல் நீங்கள் காணும் எது புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகிறது? இந்த சத்தியம் உங்கள் வாழ்க்கையிலும் தேர்ந்தெடுப்புகளிலும் எவ்வாறு செல்வாக்கு பெறுகிறது?

சங்கீதம் 146–50

“கர்த்தரை ஸ்தோத்தரி.”

ஸ்தோத்திரம் செலுத்தும் இந்த இறுதி சங்கீதங்களை நீங்கள் படிக்கும்போது, நீங்கள் கர்த்தரைத் துதிக்க வேண்டிய காரணங்களைப்பற்றி சிந்தியுங்கள். அவரைத் துதிப்பது ஏன் முக்கியமானதாயிருக்கிறது? நீங்கள் அவரை ஸ்தோத்தரிக்கக்கூடிய வழிகள் யாவை?

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம்

பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கான ஆலோசனைகள்

சங்கீதம் 102:1-2 .

கர்த்தர் எனக்கு ஆறுதலளித்து எனக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.

  • நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளில் ஒருவரோ கர்த்தர் நம்முடைய கஷ்டங்களின் போது எவ்வாறு உதவிசெய்கிறார் என்பதைக் கவனித்தபடியே சங்கீதம் 102:1–2 ஐ படிக்கலாம். அவருடைய உதவியை நாம் எப்படிக் காணலாம்? உங்களுக்கு உதவி தேவைப்பட்ட போது தேவன் உங்கள் ஜெபங்களைக் கேட்டதாக நீங்கள் உணர்ந்த சமயங்களைக் குறித்து ஒருவருக்கொருவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்

சங்கீதம் 119:105.

தேவனின் வார்த்தை ஒளி போன்றது.

  • உங்கள் பிள்ளைகள் இருட்டில் இருப்பதைப் பற்றி பேசுவதில் குதூகலம் கொள்ளலாம். அல்லது அவர்கள் இருட்டில் செய்ய கஷ்டமான காரியங்களைக் குறித்து ஆலோசிக்கலாம். தங்கள் கண்களை மூடியபடியே ஒரு படம் வரைவது போன்று ஏதாவது செய்ய நீங்கள் அவர்களை அழைக்கலாம். ஒளியைப்பற்றியும் தேவனுடைய வார்தையைப்பற்றியும் சங்கீதம் 119: 105 லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • பரலோக பிதா நாம் அவருடைய பாதையில் நிலைநிற்கும்படியாக நமக்கு உதவ அருளியதை பின்வரும் வசனங்களில் காண்க: சங்கீதம் 119:47–48; 119:105;1 நேபி 11:25; 2 நேபி 31:20. நாம் தேவனுடைய பாதையில் நிலைநிற்க என்ன செய்யலாம்?

  • Psalm 119:105இல் குறிப்பிட்டவைகளின் படங்களைப் பார்ப்பதை உங்கள் பிள்ளைகள் விரும்பலாம். அவர்கள் வசனங்களைப் படிக்கும்போது அதன் ஒழுங்கிலே படங்களை வைக்கலாம். “Teach Me to Walk in the Light” (Children’s Songbook, 177) அல்லது “I Will Walk with Jesus” (சுவிசேஷ நூலகம்) போன்ற தொடர்பையுடைய பாடல் ஒன்றை நீங்கள் ஒன்றாகப் பாடலாம்.

தகப்பன் பிள்ளைக்கு வாசித்தல்

சங்கீதம் 139:1– 3, 23–24

பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் என்னை அறிந்துகொண்டு என்னை நேசிக்கிறார்கள்.

  • உங்கள் பிள்ளைகளை ஒவ்வொருவரைப் பற்றியும் நீங்கள் அறிந்திருக்கிற காரியங்களைச் சிறியதாகப் பட்டியலிட எண்ணவும். அந்தப் பட்டியல்களை ஒன்றின் பின் ஒன்றாகப் படிக்கும்போது நீங்கள் யாரை விவரிக்கிறீர்கள் என்று பிள்ளைகள் யூகிக்கும்படிக் கேட்கவும். சங்கீதம் 139:1–3ஐ ஒன்றாக வாசித்த பிறகு நீங்கள் பரலோக பிதாவும், இயேசு கிறிஸ்துவும் நம்மைப் பற்றி அறிந்தவைத்திருப்பவைகளைப் பட்டியலிடலாம்.

  • சங்கீதம் 139:23–24இன் வார்த்தைகளை ஒரு காகித தாளிலோ அல்லது எழுத்து பலகையிலோ எழுதவும். தேவன் நமக்காகச் செய்யக்கூடியவற்றை விவரிக்கும் வார்த்தைகளை அடிக்கோடிட்டுக் காட்ட உங்கள் பிள்ளைகளை அழைக்கவும். தேவன் இவற்றை செய்ய வேண்டும் என்று ஏன் நாம் விரும்புகிறோம்?

சங்கீதம் 146:1, 5-9

கர்த்தரை நான் துதிக்கட்டும்.

  • உங்கள் பிள்ளைகள் தங்களை யாராவது பாராட்டிய அனுபவங்களையோ அல்லது அவர்கள் அருமையாய் வேலையைச் செய்தார்கள் என்று சொன்ன அனுபவங்களையோ பகிரலாம். சங்கீதம் 146:6–9இலிருந்து கர்த்தர் செய்த நல்ல காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (அறிமுகமில்லாத வார்த்தைகளை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவுங்கள்). அவர் நமக்காக செய்யும் மற்ற காரியங்களைப் பற்றிப் பேச உங்கள் பிள்ளைகளை அழைக்கவும். அவைகளுக்காக அவரை நாம் எவ்வாறு துதிக்கலாம்?

வீட்டில் கற்றுக்கொள்ளுங்கள்; மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். “சுவிசேஷக் கற்றலின் மையமாக” வீடு இருக்க வேண்டும் என்று தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார் (“உதாரணமான பிற்காலப் பரிசுத்தவான்கள் ஆகுதல்,” லியஹோனா, நவம்பர் 2018, 13). சங்கீதத்தைப் பற்றிய உங்களது தனிப்பட்ட அல்லது குடும்ப படிப்பை ஆழப்படுத்த இந்த வாரம் நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் படிப்புக்குப் பிறகு, நீங்கள் கற்றுக்கொண்டதையும் உணர்ந்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் சம்பாஷணைகளாக செய்தி வாயிலாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ, அல்லது சபையிலும் செய்யலாம்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.