“செப்டம்பர் 14-20. “தேவனே என் இரட்சிப்பு”: ஏசாயா 1– 12,:” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“செப்டம்பர் 14-20. ‘தேவனே என் இரட்சிப்பு’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
ஏசாயா தீர்க்கதரிசி கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவித்தல்–ஹாரி ஆன்டர்சன்
ஏசாயா 14-20: “தேவனே என் இரட்சிப்பு”
ஏசாயா 1–12
ஏசாயா புத்தகத்தைப் படிப்பது இதுவே முதல் தடவையாக இருந்தாலும், ஏற்கனவே அறிமுகமானதாக தோன்றுகிற பத்திகளை நீங்கள் காணக்கூடும் அது ஏனென்றால், பழைய ஏற்பாடு தீர்க்கதரிசிகள் எல்லாரிலும் ஏசாயா தான் மற்ற எல்லா வேத புத்தகங்களில் இரட்சகர் உள்பட பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படுகிறான். ஏசாயாவின் வார்த்தைகள் பெரும்பாலும் பாடல்களிலும் பிற பரிசுத்த இசையிலும் தோன்றுகின்றன.
ஏசாயா ஏன் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறான்? தேவனுடைய வார்த்தையை தெளிவான, மறக்கமுடியாத மொழியில் வெளிப்படுத்த ஏசாயாவுக்கு ஒரு வரம் இருந்தது என்பது ஓர் நிச்சய காரணம். ஆனால் அதை விட பெரிய காரணங்கள் உண்டு. ஏசாயா போதித்த சத்தியங்கள் அவனுடைய சொந்த தலைமுறையை (கிமு 740 முதல் 701க்கு இடைப்பட்ட காலம்) தாண்டி சென்றதால் பல தலைமுறைகளை கடந்து தீர்க்கதரிசிகளை உணர்த்தியுள்ளான். அவன் தேவனின் மிகப் பெரிய மீட்பின் பணியை குறித்து எழுதினான். அது ஒரு தேசத்தை விட அல்லது ஒரு காலகட்டத்தைவிட மிகப் பெரிது. நேபி தானும் தன்னுடைய ஜனமும் இஸ்ரவேலின் மீதியானவர்களிலிருந்து பிரிந்திருந்தாலும், தேவனின் உடன்படிக்கை ஜனத்தில் ஒரு பகுதியாக இருப்பதை ஏசாயாவிடமிருந்து அறிந்துகொண்டான். ஏசாயாவில், புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் மேசியாவைப்பற்றிய தீர்க்கதரிசனங்களைக் கண்டார்கள், அவை அவர்கள் கண்களுக்கு முன்பே நிறைவேறின. ஏசாயாவில், ஜோசப் ஸ்மித் இஸ்ரவேலைக் கூட்டி சீயோனைக் கட்டியெழுப்புவதற்கான பிற்கால வேலைக்கு உணர்த்துதல் கண்டார். ஏசாயாவைப் படிக்கும்போது, நீங்கள் என்ன காண்பீர்கள்?
ஏசாயா மற்றும் அவனுடைய எழுத்துக்களைப்பற்றி மேலும் அறிய, Isaiah” in the Bible Dictionary“ பார்க்கவும். ஏசாயா வாழ்ந்த காலத்தைப்பற்றிய தகவலுக்கு, 2 இராஜாக்கள் 15-20 மற்றும் 2 நாளாகமம் 26–32 பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
ஏசாயா 1–12
ஏசாயாவின் வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறும்.
ஏசாயாவைப்பற்றிப் பேசிய இரட்சகர்: “அவன் பேசின அனைத்துக் காரியங்களும், அவன் பேசின வார்த்தைகளின்படியே சம்பவித்தும் சம்பவிக்கவும் இருக்கின்றன,” என்றார். (3 நேபி 23:3). ஏசாயாவின் புத்தகத்தை நீங்கள் படிக்கும்போது: ஏசாயாவின் நாள் இரட்சகரின் பூலோக ஊழியம் , மற்றும் பிற்காலங்கள் என்று இம்மாதிரியான தலைப்புகளைக்கொண்ட தீர்க்கதரிசனங்களைப்பற்றிய விளக்க படம் ஒன்றை செய்ய எண்ணவும். ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் ஒரு வழிக்கும் மேலாக நிறைவேறியிருக்கின்றன என்பதை கவனியுங்கள் (Bible Dictionary, “Isaiah” பார்க்கவும்).
தலைவர் டாலின் எச் ஓக்ஸ்: “ஏசாயாவின் புத்தகம் பற்பல நிறைவேறுதல்களை கொண்ட எண்ணிறந்த தீர்க்கதரிசனங்களை பெற்றுள்ளது. அதில் ஒன்று ஏசாயாவின் நாளில் இருந்த ஜனங்களையோ அல்லது மறு தலைமுறையின் சூழ்நிலைகளையோ கருத்தில்கொள்வதாகும். தேவகுமாரனின் சிலுவையில் அறைதலுக்கு பிற்பாடு எருசலேம் அழிக்கப்பட்டு அவள் ஜனங்கள் சிதறடிக்கப்பட்டு போன போது காலாந்தரத்தில் சம்பவித்த நிகழ்ச்சிகளை, பெரும்பாலும் அடையாளங்களாக குறிப்பனவாக இருப்பது மற்றுமொரு அர்த்தம். அதே தீர்க்கதரிசனத்தின் இன்னமும் மற்றுமொரு அர்த்தம் அல்லது நிறைவேறுதல் இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு பொருந்துவனவாயும் இருக்கிறது. இந்த தீர்க்கதரிசனங்களில் அநேகம் பற்பல அர்த்தங்களை கொண்டிருக்கக்கூடியவை என்ற காரணத்தால் அவைகளை வியாக்கியானம் செய்ய நமக்கு உதவிட பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு பெறுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது” (“Scripture Reading and Revelation,” Ensign, Jan. 1995, 8).
ஏசாயாவை புரிந்துகொள்ளல் இரட்சகர்: “இக்காரியங்களைக் கருத்தாய் ஆராய வேண்டும்; ஏனெனில் ஏசாயாவின் வார்த்தைகள் விசேஷித்தவையாய் இருக்கின்றன” என்று சொன்னார்,( 3 நேபி 23: 1 ; வசனங்கள் 2–3 பார்க்கவும்). இருப்பினும் பலருக்கு, ஏசாயாவைப் புரிந்துகொள்வது கடினமாய் இருக்கலாம். . பின்வரும் யோசனைகள் உதவக்கூடும்:
-
ஏசாயா பயன்படுத்திய சின்னங்களையும் உருவகங்களையும் சிந்தியுங்கள்.
-
“இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?” என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ( 1 நேபி 19:23 பார்க்கவும்).
-
நம்முடைய காலத்தோடு தொடர்புடைய தலைப்புகளைத் தேடுங்கள்.
-
அகராதி, வேதாகம அடிக்குறிப்புகள், அதிகார தலைப்புகள் மற்றும் வேதவாக்கியங்களுக்கான வழிகாட்டி போன்ற படிப்பு உதவிகளை பயன்படுத்துங்கள்
ஏசாயா 1; 3–5
தீர்க்கதரிசிகள் பாவத்தை குறித்து எச்சரித்து, பாவமன்னிப்பின்முலம் நம்பிக்கையை வாக்களிக்கிறார்கள்.
எல்லா காலங்களிலுள்ள தீர்கதரிசிகளைப்போல, ஏசாயா ஜனங்களை அவர்களுடைய ஆவிக்குரிய நிலைமையை குறித்து தொடர்ந்து எச்சரித்தான். நீங்கள் ஏசாயா 1; 3; 5, வாசிக்கும்போது ஜனங்கள் ஆவிக்குரிய ரீதியில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை விவரிக்கும் சொற்றொடர்களைத் தேடுங்கள் (உதாரணமாக,ஏசாயா 1:2–4, 21–23; 3:9, 16–17; 5:11–12, 20–23 பார்க்கவும்). இதே போன்ற பிரச்சனைகளை நீங்கள் நம் காலத்தில் என்ன பார்க்கிறீர்கள்? இஸ்ரவேலரின் ஆவிக்குரிய நிலையின் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கும் வசனங்களையும் நீங்கள் தேடலாம் (ஏசாயா 1:7; 3:17–26; 5:5–7, 13–15 போன்றவை).
எச்சரிக்கைகளுக்கு மேலதிகமாக, இரட்சகர் மூலம் மீட்பதற்கான நம்பிக்கையின் செய்திகளை ஏசாயா வழங்கினார் (எடுத்துக்காட்டாக, ஏசாயா 1:16–19, 25–27; 3:10; 4 பார்க்கவும்). இந்த செய்திகளிலிருந்து தேவனைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இந்த வசனங்களில் உள்ள கர்த்தரின் செய்தி நாம் நம்ப வேண்டும் என்று சாத்தான் விரும்புவதில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
ஏசாயாவைப் போலவே, இன்று தீர்க்கதரிசிகள் பாவத்தையும் அதன் விளைவுகளையும் பற்றி நம்மை எச்சரிக்கிறார்கள், மேலும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்பிக்கையின் செய்திகளை வழங்குகிறார்கள் நீங்கள் சிந்திக்க கூடிய உதாரணங்கள் யாவை? அத்தகைய எச்சரிக்கைகள் மற்றும் வாக்குறுதிகளைத் தேட நீங்கள் கடந்த பொது மாநாட்டின் செய்தியை மதிப்பாய்வு செய்ய விரும்பலாம்.
ஏசாயா 2; 4; 11-12
தேவன் பிற்காலத்தில் ஒரு பெரிய வேலையைச் செய்வார்.
ஏசாயாவின் பல தீர்க்கதரிசனங்கள் நம் நாளுக்கான குறிப்பிட்ட அர்த்தம் கொண்டவை. அவற்றைக் கண்டுபிடிக்க, எதிர்கால-கால வினைச்சொற்களைத் தேடுங்கள் (“உள்ளது“ அல்லது “செல்லும்“ போன்றவை). எடுத்துக்காட்டாக, நீங்கள் படிக்கும்போது இந்த வினைச்சொற்களைத் தேடுங்கள் ஏசாயா 2; 4; 11–12. நீங்கள் அவற்றை நிகழ்கால வினைச்சொற்களால் மாற்ற முயற்சி செய்யலாம் (l(போன்றதுஅல்லது போகிறது). எந்த தீர்க்கதரிசனங்கள் விசேஷமாக உங்களுக்கு ஊக்கமளிக்கின்றன? இந்த தீர்க்கதரிசனங்களிலிருந்து நீங்கள் சீயோன், ஆலயங்களை கட்டுதல், இஸ்ரவேலை கூட்டுதல் ஆகியவைகளை பற்றி என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
ஏசாயா 2:2-3 பிற்கால பரிசுத்தவான்களுக்கு மிகவும் பொருத்தமானது. இந்தத் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறுகின்றன? கர்த்தருடைய வீட்டில் அவருடைய “வழிகள்“ மற்றும் “பாதைகள்“ பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (வசனம் 3).
ஏசாயா 5:26; “High on the Mountain Top,” Hymns, no. 5. ஐயும் பார்க்கவும்.
ஏசாயா 6.
தீர்க்கதரிசிகள் தேவனால் அழைக்கப்படுகிறார்கள்.
அதிகாரம் 6 இல், ஏசாயா தீர்க்கதரிசியாக தனது அழைப்பைக் குறித்து விவரித்தான். இந்த அதிகாரம் வாசிக்கும்போது, ஏசாயா அனுபவித்ததில் உங்களைக் கவர்ந்தது எது? கர்த்தரைப் பற்றியும், அவருடைய தீர்க்கதரிசிகளைப் பற்றியும், அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிற ஊழியத்தைப் பற்றியும், நீங்கள் நினைக்கும் விதத்தை இந்த அதிகாரம் எவ்வாறு பாதிக்கிறது?
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்” (ஏசாயா 9:6).
ஏசாயா 7–9
என் இரட்சகராக இயேசு கிறிஸ்து இருக்கும்படி தேவன் அவரை அனுப்ப வாக்குத்தத்தம்பண்ணினார்.
ஏசாயாவின் ஊழியத்தின் போது, இஸ்ரவேல் அசீரியாவுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள சிரியாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கியது. இஸ்ரவேலும் சிரியாவும் யூதாவின் ராஜாவான ஆகாஸை தங்கள் கூட்டணியில் சேர கட்டாயப்படுத்த விரும்பின. ஆனால் கூட்டணி தோல்வியடையும் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் கூறி, ஆகாஸை கர்த்தரை நம்பும்படி அறிவுறுத்தினான் ( ஏசாயா 7:7–9; ஏசாயா 8:12-13).
ஏசாயா ஆகாஸுக்கு அறிவுரை வழங்கியபடியே, ஏசாயா 7:14 ;8: 13–14; 9: 2, 6–7இல் காணப்பட்ட பல பிரபலமான தீர்க்கதரிசனங்களை அவன் சொன்னான். ஆகாஸின் காலத்தில் இந்த தீர்க்கதரிசனங்கள் எதைக் குறித்தன என்பது முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், அவை இயேசு கிறிஸ்துவுக்கு தெளிவாகப் பொருந்தும் (மத்தேயு 1:21–23; 4:16; 21:44; லூக்கா 1:31–33). இரட்சகருக்கு “இம்மானுவேல்“ ஏன் ஒரு நல்ல பட்டமாக இருக்கிறது?( மத்தேயு 1:23பார்க்கவும்). அவர் உங்களுக்கு எப்படி “ஆலோசகராக“ அல்லது “சமாதானத்தின் பிரபு“ ஆக இருக்கிறார்? (ஏசாயா 9:7). இந்த வசனங்களிலிருந்து இரட்சகரைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கான ஆலோசனைகள்
ஏசாயா 1:2–4; 16:-19.
இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக, நான் மனந்திரும்பி சுத்தமாக முடியும்.
-
ஏசாயா 1:2–4இல் கர்த்தர் மக்களைக் குறித்து மகிழ்ச்சியாக இல்லை என்பதற்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் காரணங்களைக் காணலாம். வசனம் 3இல் மிருகங்களுடன் ஒப்பிடுவதைக் கவனியுங்கள்—நம்முடைய “எஜமானர்“ யார்? நாம் அவரை அறிந்திருக்கிறோம் என்பதை எவ்வாறு காட்டுகிறோம்?
-
ஏசாயா 1:16–18ஐ கற்பனை செய்து பார்க்க, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பிரகாசமான சிவப்பு நிறத்தையும் களங்கமில்லா வெள்ளை நிறத்தையும் பார்க்கலாம். அல்லது எதையாவது கழுவ நீங்கள் ஒன்றாக வேலை செய்யலாம். ஆவிக்குரிய ரீதியில் நாம் எவ்வாறு அசுத்தமுள்ளவர்களாக மாறுகிறோம்? நாம் சுத்தமாக இருக்க இயேசு எப்படி உதவுகிறார்? இந்த வசனங்களிலிருந்து இரட்சகரைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? அவரைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதையும் அவர் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையும் உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஏசாயா 2:2-4
ஆலயத்தில் நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்கிறேன்.
-
“கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம்“ “எல்லா தேசங்களிலிருந்தும்“ ஜனங்களை ஈர்க்கும் ஒரு காலத்தை ஏசாயா முன்னறிவித்தார் (ஏசாயா 2:2). கர்த்தருடைய வீட்டிற்குச் செல்வதில் உங்கள் பிள்ளைகள் உற்சாகமாக உணர நீங்கள் எப்படி உதவலாம்? அவர்களின் வீட்டின் படத்தை வரைய நீங்கள் அவர்களை அழைக்கலாம். பிறகு ஏசாயா 2:2ஐ ஒன்றாகப் படித்து, “கர்த்தருடைய ஆலயத்தின்” படம் ஒன்றை வரைய அவர்களை அழைக்கவும். ஏசாயா 2:3 ஒன்றுகூடி வாசியுங்கள். அவர்களது குடும்பங்கள் உட்பட ஆலயத்திற்கு வரும் பலரை தங்கள் படங்களில் சேர்க்க அவர்களை அழைக்கவும்.
-
நீங்கள் ஏசாயா 2:2–3ஐ ஒன்றாகப் படித்து, உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் ஆலயத்திற்கு செல்ல தூண்டும் ஒன்றை அடையாளம் காணலாம். பிறகு ஏசாயா 2:4ஐ ஒன்றாகப் படித்த பிறகு, ஆலயம் அவர்களுக்கு எப்படிச் சமாதானத்தைக் கொண்டுவருகிறது என்பதை நீங்கள் கலந்தாலோசிக்கலாம். “I Love to See the Temple” (Children’s Songbook, 95) போன்ற ஆலயத்தைப்பற்றிய பாடலைப் பாடுவதைக் கருத்தில் கொள்ளவும். ஆலயம் என்றால் என்ன, அங்கு என்ன செய்கிறோம் என்று பாடலில் உள்ள வார்த்தைகளை கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்.
சால்ட் லேக் ஆலயம்
ஏசாயா 7:14; 9:6–7.
எனது இரட்சகராயிருக்க இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தார்.
-
கிறிஸ்துவைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களை அறிமுகப்படுத்த, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தலைவர், ஆயர், அல்லது ஆசிரியர் போன்ற நபர்களின் பட்டங்களைப் பற்றி பேசலாம். இவர்களைப் பற்றி இந்த பட்டங்கள் நமக்கு என்ன சொல்கின்றன? ஏசாயா 7:14 மற்றும் 9:6–7இல் இயேசு கிறிஸ்துவின் பட்டங்களைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள் (இந்த வார நிகழ்ச்சிப் பக்கத்தையும் பார்க்கவும்). அவரைப்பற்றி இந்த பட்டங்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? இந்த வசனங்களிலிருந்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாம் வேறு என்ன கற்றுக்கொள்ளுகிறோம்?
-
நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் “Isaiah the Prophet” (in Old Testament Stories, 150–51) பகிர்ந்து கொள்ளலாம். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே அவரை பற்றி ஏசாயாவுக்கு என்ன தெரியும் என்று அவ்வப்போது இடைநிறுத்தி கேட்கவும். பிறகு நீங்கள்ஏசாயா 7:14; 9:6–7இல் ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறியது என்று பேச மத்தேயு 1:21–23; லூக்கா 1:31–33 உபயோகிக்கவும்.
1:18Isaiah the Prophet
கூடுதலாத, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.