என்னைப் பின்பற்றி வாருங்கள்
செப்டம்பர் 7-13. “அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்: நீதிமொழிகள் 1–4; 15–16; 22; 31; பிரசங்கி 1–3; 11–12


“செப்டம்பர் 7-13. “அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்: நீதிமொழிகள் 1–4; 15–16; 22; 31; பிரசங்கி 1–3; 11–12,’ என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“செப்டம்பர் 7-13. “அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்,’என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

பிள்ளைகளுடன் இயேசு

பிள்ளைகளுடன் இயேசு–டிலீன் மார்ஷ்

செப்டம்பர் 7–13: “அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்”

நீதிமொழிகள் 1–4; 15–16; 22; 31; பிரசங்கி 1–3; 11–12

நீங்கள் நீதிமொழிகள் புத்தகத்தை அன்பான பெற்றோரின் ஞானமான அறிவுரைகளின் தொகுப்பென கருதலாம் (நீதிமொழிகள் 1:8 பார்க்கவும்). ஞானத்தை, குறிப்பாக தேவ ஞானத்தை தேடினால் வாழ்க்கை நன்றாக செல்லும் என்பதே அதன் முக்கிய செய்தி. ஆனால், நீதிமொழிகள் புத்தகத்தைத் தொடருகிற பிரசங்கி “அது அவ்வளவு எளிதானதல்ல” என சொல்வதாகத் தோன்றுகிறது. பிரசங்கியில் மேற்கோள்காட்டப்பட்ட அறிவிப்போன், “ஞானத்தை அறிகிறதற்கு [தன்னுடைய] மனதை பிரயோகம்பண்ணினான்”, இருந்தும் “மனதுக்கு சஞ்சலமாயிருக்கிறதையும் அதிக சலிப்பையும்” கண்டான் (பிரசங்கி 1:17–18). பல்வேறு வழிகளில், “எல்லாமுமே வீணானதாகவும், தற்காலிகமாகவும், நிச்சயமற்றவையாகவும் தோன்றுகிற ஒரு உலகில் உண்மையான அர்த்தம் இருக்க முடியமா?” என்று இந்த புத்தகம் கேட்கிறது

இப்படியிருக்க, இரண்டு புத்தகங்களும் வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும்போதிலும், அவை ஒத்த சத்தியங்களை கற்பிக்கின்றன. பிரசங்கி அறிவிப்பதாவது: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (பிரசங்கி 12:13). இந்த கொள்கையே நீதிமொழிகள் முழுவதிலும் காணப்படுகிறது: “உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” (நீதிமொழிகள் 3:5; வசனம் 7ஐயும் பார்க்கவும்). நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி பின்பற்றும்போது வாழ்க்கை பூரணமாயிராவிட்டாலும், சிறப்பானதாக அமையும்.

இந்த புத்தகங்களின் மேலோட்டமான பார்வைக்காக, “நீதிமொழிகள், புத்தகம்” மற்றும் “பிரசங்கி ” in the Bible Dictionary பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

நீதிமொழிகள் 1:-4; 15:-16; பிரசங்கி 1:-3; 11:-12

“உன் செவியை ஞானத்திற்குச் சாய்.”

நீதிமொழிகள், பிரசங்கி ஆகிய புத்தகங்கள் ஞானத்தைப்பற்றிய உட்கருத்துக்களால் நிரம்பியுள்ளன. நீதிமொழிகள் 1–4; 15–16; பிரசங்கி 1–3; 11–12ஆகியவைகளில் “ஞானம்” மற்றும் அதனுடன் தொடர்புடைய வார்த்தைகளான “அறிவு,” “புரிதல்” போன்றவற்றை காணும்போது, அவைகளை அடையாளப்படுத்த கருத்தில் கொள்ளவும். ஞானத்தைப்பற்றி நீங்கள் சிந்திக்கிற வழியை இந்த அதிகாரங்கள் எவ்வாறு பாதிக்கின்றன? நீங்கள் கண்டுபிடிக்கிறவற்றின் அடிப்படையில், கர்த்தர் கொடுக்கிற ஞானத்தை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? (நீதிமொழிகள் 2:6). தேவனுடைய ஞானத்திலிருந்து என்ன ஆசீர்வாதங்கள் வருகின்றன?

மத்தேயு 7:24-27; 25:1-13ஐயும் பார்க்கவும்.

கற்பவர்கள் தாங்கள் கற்றவைகளை பகிர்ந்துகொள்ள உதவுங்கள். “இரட்சகரையும் அவருடைய சுவிசேஷத்தையும் பற்றி தாங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறார்களோ அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள கற்பவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குங்கள். இதைச் செய்வது அவர்கள் கற்பிக்கப்பட்ட சத்தியங்களை உள்வாங்கி அவற்றை வெளிப்படுத்த அவர்களுக்கு உதவும். மற்ற சந்தர்ப்பங்களில் சத்தியங்களைப் பகிரும் அவர்களின் திறனில் அவர்கள் நம்பிக்கையைப் பெறவும் இது உதவும்”. (Teaching in the Savior’s Way26). எடுத்துக்காட்டாக, கற்பவர்கள் தாங்கள் தேவனின் ஞானத்தைக் குறித்த உட்கருத்துக்களைக் கண்டெடுத்த நீதிமொழிகளிருந்தோ, அல்லது பிரசங்கியிலிருந்தோ சில குறிப்புகளை எழுதும்படி அவர்களை அழைக்கலாம். பின்பு கற்பவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதைப் பற்றி பேச அழைக்கவும்.

நீதிமொழிகள் 1:7; 2:5; 3:7; 15:33; 16:6;31:30;பிரசங்கி 12:13

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே: கர்த்தருக்குப் பயந்திரு.”

நீதிமொழிகள் மற்றும் பிரசங்கி முழுவதும் காணப்படும் மற்றொரு கருப்பொருள் “கர்த்தருக்கு பயப்படுதல்“.ஆகும். நீங்கள் படிக்கும்போது இந்த சொற்றொடரைப் பாருங்கள். கர்த்தருக்கு பயப்படுதல் என்றால் என்ன அர்த்தம் என்று உணர்கிறீர்கள்? மூப்பர் டேவிட் ஏ. பெட்னாரின் செய்தியில் உள்ள உட்கருத்துக்களைத் தேடுங்கள்“Therefore They Hushed Their Fears(லியஹோனா , மே 2015, 46–49). மற்ற வகையான பயத்திலிருந்து கர்த்தருக்கு பயப்படுதல் எவ்வாறு வேறுபட்டது?

நீதிமொழிகள் 8:13ஐயும் பார்க்கவும்.

நீதிமொழிகள் 3:5-7; 4.

வேத பாட வகுப்பு சின்னம்
“உன் முழுஇருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.”

“[நம்] சுயபுத்தியின்மேல் சாய்வதை விட“ “கர்த்தரில் நம்பிக்கையாயிருத்தல்“ சிறந்தது என்று ஒருவரை எப்படி நம்ப வைக்க முயற்சிப்பீர்கள்? (நீதிமொழிகள் 3:5). என்ன ஒப்பீடுகள் அல்லது பொருள் பாடங்களைப் பயன்படுத்துவீர்கள்? நீங்கள் நீதிமொழிகள் 3:5–7ஐ தியானிக்கும் போது, கர்த்தரை நம்புவது _______ போன்றது, நம்முடைய சுயபுத்தியில் செய்வது ___________ போன்றது என்ற இந்த வாக்கியங்களை நிரப்ப வழிகளை யோசிக்கவும்.

ஏன் [நமது] “சுயபுத்தியின்மேல் சாய்வது விவேகமற்றது? கர்த்தர் நம்பகமானவர் என்பதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள்?

இருப்பினும், சமயசமயங்களில் கர்த்தரை நம்புவது கடினமாயிருப்பதாக நாம் காணலாம். அது ஏன் அப்படி? மூப்பர் கெரிட் டபிள்யூ. காங் “மீண்டும் நம்புங்கள்” (லியஹோனா, நவம்பர் 2021, 97–99)ல் சில காரணங்களையும், பயனுள்ள ஆலோசனைகளையும் பரிந்துரைக்கிறார். இந்தச் செய்தியில் ஒருவருக்கு தேவன் மீதுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் எந்தக் கதைகள் அல்லது போதனைகளை நீங்கள் காண்கிறீர்கள்?

நீதிமொழிகள் 3:6மற்றும்நீதிமொழிகள் 4 ஆகியவைகள் வாழ்க்கையை ஒரு “பாதை“ அல்லது “வழி“யுடன் ஒப்பிடுகின்றன கர்த்தர் “உன் பாதைகளை செவ்வைப்படுத்தட்டும்” என்பற்கான அர்த்தம் என்னவென்று நினைக்கிறீர்கள்? (நீதிமொழிகள் 3:6). “[உங்கள்] கால் நடையைச் சீர்தூக்கிப்பார்க்க” உங்களுக்கு உதவுகிற எதை நீங்கள் அதிகாரம் 4இல் காணுகிறீர்கள்? வசனம் 26 உதாரணமாக, சரியான பாதையைப் பின்பற்றுவதில் வருகிற ஆசீர்வாதங்களைப்பற்றி வசனங்கள் 11–12 மற்றும் 18–19 என்ன போதிக்கின்றன? வசனங்கள் 26–27 உங்களுக்கு என்னவாக அர்த்தமாகிறது?

2 நேபி 31:18–21; “Lord, I Would Follow Thee,” Hymns, no. 220ஐயும் பார்க்கவும்.

நீதிமொழிகள் 15; 16:24–32

“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்.”

நீதிமொழிகள் 15-16லிலுள்ள சில நீதிமொழிகள் மற்றவர்களுடன் குறிப்பாக அன்பானவர்களுடன் நீங்கள் தொடர்புகொள்ளுகிற வழியை மேம்படுத்த உங்களை உணர்த்தக்கூடும். உதாரணமாக, “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றிப்போட” உதவிய குறிப்பிட்ட தருணங்களைப்பற்றி சிந்தியுங்கள் (நீதிமொழிகள் 15:1).

நீதிமொழிகள் 15:1–4, 18லிலுள்ள போதனைகளை இரட்சகர் முன்மாதிரியாகக் காட்டிய தருணங்களைப்பற்றியும் நீங்கள் சிந்திக்கலாம் ( மாற்கு 12:13–17; யோவான் 8:1–11 பார்க்கவும்). நாம் பிறருடன் உறவாடும்போது, நாம் அவரது எடுத்துக்காட்டை எவ்வாறு பின்பற்ற முடியும்?

நீதிமொழிகள் 15; 16:24–32லிலுள்ள ஆலோசனை எப்படி இன்றைய எண்மமுறை தொடர்புக்கு பொருந்தும்? சமூக ஊடகங்கள் அல்லது உரை மூலம் தொடர்புகொள்வது குறித்த ஆலோசனையாக இந்த அத்தியாயங்களில் சொற்றொடர்களை சற்று மாற்றி அமைத்திட ஒரு வசனத்தை நீங்கள் காண முடியுமா என்று பார்க்கவும்.

நீல் எல். ஆன்டர்சென், “இயேசுவைப் பின்பற்றுதல்: சமாதானம் செய்பவராக இருத்தல்,” லியஹோனா, மே 2022, 17–20; மூப்பர் ரொனால்ட் எ. ராஸ்பாண்ட், “வார்த்தைகள் முக்கியம்,” லியஹோனா, மே 2024, 70–77; For the Strength of Youth: A Guide for Making Choices (2022), 11–12 கூட பார்க்கவும்.

பெண்ணும் கடற்பறவைகளும்

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? II,–லூயிஸ் பார்க்கர்

நீதிமொழிகள் 31:10–31

“கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.”

“ஒரு குணசாலியான ஸ்திரீ,” அல்லது சிறந்த ஆவிக்குரிய பெலன், திறன் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு ஸ்திரீயை நீதிமொழிகள் 31:10–31 விவரிக்கிறது. இந்த வசனங்கள் ஒவ்வொன்றும் குணசாலியான ஸ்திரீயைப்பற்றி என்ன சொல்கின்றன என்பதை உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கமாகக் கூற நீங்கள் முயற்சி செய்யலாம். இந்தப் பண்புகளில் எதை நீங்கள் பின்பற்றலாம்?

பிரசங்கி 1–3;12

அநித்திய வாழ்க்கை தற்காலிகமானது.

பிரசங்கி 1–2 வலியுறுத்துவதைப்போல இந்த உலகத்தில் பெரும்பாலானவை வீணானதும், தற்காலிகமானதும், பொதுவாக முக்கியமற்றதாயும் இருக்கிறது என்று நீங்கள் நினைவில் வைத்திருப்பது ஏன் மதிப்புமிக்கது? வாழ்க்கைக்கு நித்திய மதிப்பைக் கொடுக்கிறதென்பதில் பிரசங்கி 12இல் நீங்கள் எதைக் காண்கிறீர்கள்?

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம்

பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கான ஆலோசனைகள்

நீதிமொழிகள் 1:7; 2:5; 15:33; 16:6; பிரசங்கி 12:13

தேவனுக்கு பயப்படுதல் என்பது அவரை நேசித்து கீழ்ப்படிவதாகும்.

  • தேவனுக்கு பயப்படுதலைப்பற்றிய பத்திகளை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவத்தக்கதாக நீங்கள் “பயம்“ என்ற வார்த்தைக்கு பதிலாக பயபக்தி, அன்பு, அல்லது கீழ்ப்படிதல் பயன்படுத்தலாம். (எபிரெயர் 12:28ஐயும் பார்க்கவும்). இந்த வசனங்களைப்பற்றி நாம் சிந்திக்கிற விதத்தை இது எவ்வாறு பாதிக்கிறது? கர்த்தருக்கு நாம் பயப்படுகிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்டுகிறோம்?

நீதிமொழிகள் 3:5-7

நான் கர்த்தரை என் முழு இருதயத்தோடும் நம்ப முடியும்

  • நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நீதிமொழிகள் 3:5–7கான ஏற்ற செய்கைகளை - உங்கள் கைகளினால் இருதயம் ஒன்றை செய்தல், ஒரு பக்கம் சாய்தல், நின்ற இடத்தில் நடத்தல், உங்கள் கண்களை சுட்டிக்காண்பிப்பது போன்றவற்றை செய்யலாம். நம் முழுஇருதயத்தோடும் நாம் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்டமுடியும்?

  • உன் சுயபுத்தியின்மேல் சாயாதே (நீதிமொழிகள் 3:5) என்பதின் அர்த்தத்தை காட்சிப்படுத்த, ஒரு சுவர் போன்ற உறுதியான மற்றும் நிலையான ஒன்றுக்கு எதிராக சாய்வதற்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளை அழைக்க எண்ணலாம். பின்னர் அவர்கள் ஒரு துடைப்பம் போன்ற உறுதியில்லாத ஒன்றின் மீது சாய்ந்து கொள்ள முயற்சி செய்யலாம். அல்லது ஒரு புத்தகம் இல்லாவிடில் ஒரு துண்டு காகிதம் போன்ற பல்வேறு உறுதியுடைய பொருட்களுக்கு எதிராக ஒரு குச்சி அல்லது எழுதுகோலை சாய்த்து வைக்க முயற்சி செய்யலாம். ஏன் நம்முடைய “சுயபுத்தியை“ நம்பாமல் “கர்த்தரை நம்புவது“ (verse 5) முக்கியம்?

சிந்தையில் மூழ்கிய பெண் ஒரு மலரோடு

கர்த்தரை நம்ப கற்றுக்கொள்ளுதல்-கேத்லீன் பீட்டர்சன்

நீதிமொழிகள் 15:1,18

நான் இரக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

  • எந்தெந்த சூழ்நிலைகளில் நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளோ கோபப்படக்கூடும் என்பதை ஒருவேளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள் சிந்தித்து பார்க்கலாம். நீதிமொழிகள்15:1ஐ ஒன்றாக வாசித்து, உங்கள் பிள்ளைகள் நினைத்திருந்த சூழ்நிலைகளில் இந்த வசனத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவுங்கள். ‘மெதுவானப் பிரதியுத்தரங்கள்’ சிலவற்றை கொண்டு அவர்கள் பயிற்சியெடுத்துக்கொள்ளலாம். “Love Is Spoken Here”(Children’s Songbook, 190– 91) போன்ற இரக்கத்தை பற்றிய பாடல் ஒன்று இந்த கொள்கையை வலுவூட்டக்கூடும்.

  • “நீடிய சாந்தம்” (நீதிமொழிகள் 15:18) என்பதின் அர்த்தத்தைக் கற்றுக்கொள்ள நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவரோ கோபத்தை உணர்ந்தும் இரக்கமாய் இருக்க தெரிவுசெய்த சமயங்களைக் குறித்து நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பகிரலாம். நீடிய சாந்தமாய் இருந்தால் எந்தெந்த காரியங்களில் நாம் துரிதமாக இருக்கக்கூடும் என்று உங்கள் பிள்ளைகள் யோசிக்க அவர்களுக்கு உதவுங்கள். உதாரணத்திற்கு, இயேசுவைக் குறித்து நினைத்தல், பரலோக பிதாவினிடத்தில் உதவியை வேண்டுதல், ஆரம்ப வகுப்பு பாடல் ஒன்றை நினைத்தல், அல்லது, முடியுமானால் அவ்விடம் விட்டு செல்லுதல் போன்றவற்றை துரிதமாக செய்யலாம்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

இரண்டு ஆடுகளை இயேசு வழிநடத்துதல்

“உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதிமொழிகள்3:6). என்னை அவர் வழிநடத்துகிறார் – யாங்சுங் கிம் இப்படத்தைக் கொடுத்த havenlight.comக்கு நன்றி

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: நான் இரக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும்.