“செப்டம்பர் 21-27. “அற்புதமும், அதிசயமுமான கிரியை’: ஏசாயா 13–14; 22; 24–30; 35,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“செப்டம்பர் 21-27. “அற்புதமும், அதிசயமுமான கிரியை,’ என்னைப் பின்பற்றி வாருங்கள்; 2026
பரிசுத்த தோப்பு–ப்ரெண்ட் போருப்
செப்டம்பர் 21-27 : “அற்புதமும், ஆச்சரியமுமான கிரியை”
ஏசாயா 13-14; 22; 24-30; 35
தேவன் தீர்க்கதரிசிகள் செய்யும்படியாக கேட்கும் காரியம் என்னவெனில் பாவத்தின் விளைவுகளைப் பற்றி எச்சரிப்பதே ஆகும். பழைய ஏற்பாடு தீர்க்கதரிசிகளுக்கு இது பலத்த ராஜ்யங்களின் அதிபதிகளிடத்தில் அவர்கள் மனந்திரும்பவேண்டும் என்று பெரும்பாலும் சொல்லவேண்டியதாய் இருந்தது. இது ஒரு ஆபத்தான பணியாக இருந்தது, ஆனால் ஏசாயா அச்சமின்றி இருந்தான், இஸ்ரவேல், யூதா மற்றும் சுற்றியுள்ள நாடுகள் உட்பட அவன் காலத்திலிருந்த ராஜ்யங்களுக்கு அவன் அளித்த எச்சரிக்கைகள் தைரியமானவையாக இருந்தன (ஏசாயா 13–23 பார்க்கவும்).
இருப்பினும், ஏசாயா நம்பிக்கையின் செய்தியையும் வைத்திருந்தான். தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட அழிவுகள் இந்த ராஜ்யங்கள் மீது வந்தபோதிலும், மீட்டெடுப்பதற்கும் புதுப்பிப்பதற்குமான ஒரு வாய்ப்பை ஏசாயா முன்னறிவித்தான். தம்மிடம் திரும்பும்படி கர்த்தர் தம் ஜனத்தை அழைப்பார். “வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகவும்,” அவர் செய்வார் (ஏசாயா 35:7). இஸ்ரவேலுக்கு அவர் வாக்குறுதியளித்த ஆசீர்வாதங்களை மீட்டெடுத்து அவர் “ஒரு அற்புதமான கிரியையும் அதிசயத்தையும்” செய்வார் (ஏசாயா 29:14 ), ஏசாயாவும் அக்காலத்தில் வாழ்ந்த யாரும் இந்த அற்புதமான கிரியை காணும் வரைக்குமாய் உயிரோடிருக்கவில்லை. ஆனால் நாமோ அதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், நாம் அதில் ஒரு பாகமாயிருக்கிறோம்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
ஏசாயா 13:1–11, 19–22; 14:1–20
பெருமையும் உலகத்தன்மையும் வீழும்.
ஏசாயாவின் நாட்களில் பாபிலோன் வல்லமையான அதிபதியை கொண்ட பலத்த ராஜ்யமாய் இருந்தது. பாபிலோன் இப்போதோ பழங்காலத்து வரலாறு. அப்படியிருக்க ஏசாயா 13–14விலுள்ள ஏசாயாவின் பாபிலோனுக்கான செய்தி இன்று நமக்கு ஏன் முக்கியமானதாக இருக்கிறது? ஏனெனில் இன்றும் நம்மை சுழ்ந்துள்ளவைகளான பெருமை பேராசை பாவம் ஆகியவைகளை பாபிலோன் அடையாளப்படுத்துவதால்தான். ஏசாயா 13:1–11, 19–22; 14:1–20 நீங்கள் வாசிக்கும்போது இந்த அடையாளத்தைப்பற்றி சிந்தியுங்கள். இது போன்ற கேள்விகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:
-
பாபிலோனிய ராஜாவின் பெருமைக்கும் சாத்தானின் பெருமைக்கும் இடையே என்ன ஒற்றுமைகளை நீங்கள் காண்கிறீர்கள்? ( ஏசாயா 14:4–20 ; மோசே 4:1–4 பார்க்கவும்). இந்த வசனங்களில் நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கைகள் என எதைக் காண்கிறீர்கள்?
-
இரட்சகர், “உன் துக்கத்தையும் உன் தத்தளிப்பையும் நீக்கி இளைப்பாறப்பண்ணுவது” எப்படி? (ஏசாயா 14:3).
“அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்”(ஏசாயா 25:8).
ஏசாயா 22:22–23;24:21–23; 25:6–8; 26:19; 28:16
இயேசு கிறிஸ்துதான் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா.
ஏசாயாவின் போதனைகள் பெரும்பாலும் இரட்சகரின் பாவநிவாரண பலி, உயிர்த்தெழுதல் மற்றும் இரண்டாம் வருகை உள்ளிட்ட அவரின் ஊழியத்தைக் குறிக்கின்றன. பின்வரும் வசனங்களைப் நீங்கள் படிக்கும்போது அவனுடைய ஊழியத்தின் என்ன அம்சங்கள் நினைவுக்கு வருகின்றன: ஏசாயா 22:22–23; 24:21–23; 25:6–8; 26:19; 28:16 ? இரட்சகரை நினைவூட்டுகின்ற வேறு எந்த பத்திகளைக் காண்கிறீர்கள்?
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியத்தை கொடுக்க கற்பவர்களுக்கு வாய்ப்பளிக்கவும். “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்பிப்பவராக இருத்தல், அவருடைய போதனைகள், மீட்பின் வல்லமை மற்றும் பரிபூரண அன்பு ஆகியவற்றை மற்றவர்கள் புரிந்துகொண்டு அதன்மீது சார்ந்திருக்க உதவுவதாகும்” (Teaching in the Savior’s Way, 8). இதைச் செய்வதற்கான ஒரு எளிய வழி, “இந்த வாரத்தில் உங்களுக்கு இரட்சகரைப் பற்றி எதாவது கற்றுக்கொடுத்த வேதங்களில் நீங்கள் கண்டுகொண்டதென்ன?” போன்ற கேள்வியைக் கேட்பதாகும். பின்னர் கற்பவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கையைப் பலப்படுத்தட்டும்.
ஏசாயா 24:1–12; 28:1–8; 29:7-13; 30:8–14
கர்த்தரை விட்டு விலகுவது ஆவிக்குரிய ஆபத்தை கொண்டு வருகிறது.
தம்மிடமிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கர்த்தர் தம்முடைய இரக்கத்தில், உடன்படிக்கையின் ஜனங்களை எச்சரிக்க ஏசாயாவை அனுப்பினார். ஏசாயா 24:5; 29:13; 30:8–12இல் இதன் ஆவிக்குரிய எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள். இந்த மனப்பான்மையும் செயல்களும் ஏன் ஆவிக்குரிய ரீதியில் ஆபத்தானவை?
கர்த்தரை விட்டு விலகுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எச்சரிக்க, ஏசாயா சில மறக்கமுடியாத ஒப்பீடுகளைப் பயன்படுத்தினார். நீங்கள் அவற்றைப் படிக்கும்போது, தேவனிடமிருந்து விலகிச் செல்வது எதைப்போன்றது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:
-
வாடிய வெறுமையான பூமி (ஏசாயா 24:1–12).
-
வெறித்திருத்தல் (ஏசாயா 28:7-8).
-
பசியும் தாகமும் (ஏசாயா 29:7–10).
-
உடைந்த சுவர் அல்லது பாத்திரம் (ஏசாயா 30:13–14).
கர்த்தருடன் நெருக்கமாக இருப்பது உங்களுக்கு ஏன் முக்கியம்?
ஏசாயா 29; 30:18-26; 35
இழந்த அல்லது உடைந்த விஷயங்களை தேவன் மீட்டெடுக்க முடியும்.
நீங்கள் தொலைத்த எதையேனும் நீங்கள் கண்டுபிடிக்கலாகாது என்று நினைத்ததுண்டா? அல்லது ஏதாவது உடைந்தபோது, அதை பழுதுபார்த்திடக்கூடுமோ என்று நீங்கள் அங்கலாய்த்திருக்கலாம். நாம் கர்த்தரிடமிருந்து விலகிச் செல்லும்போது, நாம் ஒருபோதும் திரும்பவோ அல்லது குணமடையவோ முடியாது என்று நாம் நினைக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். இருப்பினும், கர்த்தரிடம் திரும்ப நமக்கு உதவ அவர் செய்யும் சில அற்புதமான காரியங்களை ஏசாயா விவரித்தார். ஏசாயா 29:13–24; 30:18–26;35விலிருந்து கர்த்தரைப் பற்றியும், அவர் அன்பைப்பற்றியும் அவர் வல்லமையைப்பற்றியும் நீங்கள் கற்றுக்கொள்வதென்ன? உங்களுக்கு ஆரோக்கியம் தேவைப்படும்போது உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிற ஒரு சொற்றொடரை நீங்கள் ஒருவேளை இந்த பத்திகளில் காணக்கூடும். நீங்கள் சகோதரி ஏமி ஏ. ரைட்டின் செய்தியையும் பார்க்கலாம் “நொறுங்கியதை கிறிஸ்து குணப்படுத்துகிறார்” (லியஹோனா, மே 2022, 81–84).
கர்த்தர் தம்முடைய வல்லமையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தும் ஒரு வழி அவருடைய சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்வதாகும். ஏசாயா 29 அந்த மறுஸ்தாபித நிகழ்வுகளுக்கு இணையான பல பத்திகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக:
-
ஏசாயா 29:11–12வுடன் 2 நேபி 27:6–26 மற்றும் ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:63–65 ஒப்பிடவும்.
-
ஏசாயா 29:13–14வுடன் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4 மற்றும் ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:17–19 ஒப்பிடவும்.
-
ஏசாயா 29:18–24வுடன் மார்மன் புஸ்தகத்தின் தலைப்பு பக்கத்தை ஒப்பிடவும்.
உங்கள் கருத்துப்படி, ஏன் “அற்புதமும்“ “அதிசயமும்“ (ஏசாயா 29:14) தேவன் தமது சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்தலை விவரிக்க ஏற்ற வார்த்தைகள்? நீங்கள் எவ்வாறு மறுஸ்தாபிதம் பற்றிய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற உதவக்கூடும்? யோசனைகளுக்கு, மூப்பர் கெரிட் டபிள்யூ. காங்கின் செய்தியைப் பார்க்கவும்சகல ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரர்கள்( லியஹோனா, நவம்பர் 2020, 38–41).
“The Restoration of the Fulness of the Gospel of Jesus Christ: A Bicentennial Proclamation to the World” (Gospel Library); “The Morning Breaks,” Hymns, no 1 பார்க்கவும்.
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கான ஆலோசனைகள்
ஏசாயா 14:3; 25:8-9; 28:16
இயேசு கிறிஸ்து என்னை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிக்கக்கூடும்.
-
உங்கள் பிள்ளைகள் ஏசாயாவின் எழுத்துக்களில் இரட்சகரைக் காண எப்படி உதவுவீர்கள்? ஏசாயா 14:3; 25:8; அல்லது28:16 ஆகியவைகளில் அவரை நினைவூட்டும் சொற்றொடர்களைக் கண்டறிய நீங்கள் அவர்களுக்கு உதவலாம். .அவர்கள் இரட்சகரைப் பற்றி போதிக்கும் வசனங்களான மத்தேயு 11:28–30; 1 கொரிந்தியர் 15:53–57; ஏலாமான் 5:12 போன்ற மற்ற வசனங்களுடன் ஏசாயாவின் வசனங்களைப் பொருத்தலாம். நமக்காக கர்த்தர் என்ன பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்?
-
ஏசாயா 25:8–9ஐ ஒன்றாகப் படித்த பிறகு, இரட்சகரின் கெத்செமனேயிலும், சிலுவையிலும் மற்றும் தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகுமான படங்களை நீங்கள் பார்க்கலாம். உங்கள் பிள்ளைகள் படங்களில் என்ன நடக்கிறது என்பதையும், அவர்கள் ஏன் இயேசுவை நேசித்து, “அவருடைய இரட்சிப்பில் களிகூருகிறார்கள்“ என்பதையும் உங்கள் பிள்ளைகள் பேசட்டும்.(வசனம் 9).
-
நீங்கள் விரும்பும் ஒருவர் இறந்தபோது நீங்கள் அடைந்த சோகத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல தேர்ந்தெடுக்கலாம். இயேசு கிறிஸ்துவினிமித்தம் நீங்கள் பெறும் ஆறுதலை சாட்சி பகருங்கள். உங்கள் பிள்ளைகள் அழும் முகம் ஒன்றை வரைந்து, பின்பு ஏசாயா 25:8ஐ நீங்கள் ஒன்றாகப் படிக்கும்போது கண்ணீரைத் துடைத்திருக்கலாம்.
உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக-கென் ஸ்பென்சர்
ஏசாயா 25:4-6
இயேசு “புயலில் இருந்து அடைக்கலம்” தருகிறார்.
-
புயலின் போது பாதுகாப்பான தங்குமிடத்தையும் வெப்பமான கோடை நாளில் நிழலையும் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஆசீர்வாதமாக எப்போதேனும் அனுபவித்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் பசித்திருந்தபோது நல்ல உணவை உண்டு மகிழ்ந்திருக்கிறீர்களா? நீங்கள் ஏசாயா 25:4–6 வாசிக்கும்போது இந்த அனுபவங்களைப் பற்றி பேசுங்கள். கர்த்தர் எவ்வாறு இவற்றைப் போன்று இருக்கிறார்?
ஏசாயா 29; 11-18, 24
சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் “அற்புதமான ஒரு கிரியை”
-
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஏசாயா 29:14ஐ வாசிக்கும்போது, “அற்புதம்“ மற்றும் “அதிசயம்“ என்று பொருள்படும் மற்ற வார்த்தைகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இந்த பிற்காலங்களில் கர்த்தரின் அற்புதமான செயல்கள் சிலவற்றைப் பிரதிபலிக்கும் பொருட்களையோ படங்களையோ கண்டுபிடிக்க அவர்கள் உங்களுக்கு உதவட்டும். இதில் மார்மன் புஸ்தகத்தின் நகல், ஒரு ஆலயத்தின் படம் அல்லது முதல் தரிசனத்தின் படம் (இந்த பொருட் சுருக்கத்தின் தொடக்கத்தில் ஒன்று உள்ளது) ஆகியவை அடங்கும். உங்கள் பிள்ளைகள் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து, அது ஏன் அவர்களுக்கு அற்புதமாக இருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்ளலாம்.
-
“On a Golden Springtime” (Children’s Songbook, 88) போன்ற ஏசாயா 29 உடன் நன்றாகப் ஒத்துபோகக்கூடிய சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தைப் பற்றிய ஒரு பாடல். ஒருவேளை ஒரு தனிப்பட்ட அனுபவம் பிள்ளைகள் மறுஸ்தாபிதம் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவும். உதாரணமாக, நீங்கள் இழந்த ஒன்றைப் பற்றியும் அதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்பதைப் பற்றியும் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேசலாம். இதை சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்துடன் ஒப்பிட உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். ஏசாயா 29:13–15ன்படி, நமக்கு ஏன் மறுஸ்தாபிதம் தேவை? கர்த்தர் தம்முடைய சுவிஷேசத்தை மறுஸ்தாபிக்க என்ன அற்புதமான செயல்களைச் செய்கிறார்? (இந்த வார நிகழ்ச்சி பக்கத்தைப் பார்க்கவும்).
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.