திட்டம்
நான் முன்கூட்டியே திட்டமிடும்போது, நான் நன்றாக உணர்கிறேன், சிறந்த தேர்வுகளை செய்கிறேன்.
எனக்கு கிடார் வாசிப்பது பிடிக்கும், அதில் நான் மிகவும் திறமையானவன். எனக்கு ஒரு நிகழ்ச்சி வரும்போதெல்லாம், நான் பயிற்சி செய்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். தொழில்நுட்பத்திலும் இதுவே நடக்கிறது: நான் முன்கூட்டியே திட்டமிடும்போது, நான் நன்றாக உணர்கிறேன், சிறந்த தேர்வுகளை செய்கிறேன்.
எனது திட்டத்தில் நிலைத்திருக்க உதவும் சில எளிய விதிகளை நான் திட்டமிட்டேன்:
-
திரையில் பார்ப்பதற்கு ஒரு நாளைக்கான ஒரு வரம்பை நானே நிர்ணயித்துக் கொள்கிறேன்.
-
நான் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மட்டுமே “பின்தொடர்ந்து” தொடர்பு கொள்கிறேன்.
-
என் வீட்டில் படுக்கையறை, குளியலறை போன்ற சாதனங்கள் பயன்படுத்தாத பகுதிகளை வைத்திருக்கிறேன்.
-
நான் ஒரு குடும்ப சார்ஜிங் இடத்தை ஏற்படுத்துகிறேன், அதனால் அனைவரின் சாதனங்களும் இரவில் செருகப்பட்டு எட்டாத நிலையில் இருக்கும்.
-
பொருத்தமற்ற அல்லது பாதுகாப்பற்ற செயலிகள் மற்றும் உள்ளடக்கத்தைத் தடுக்க நான் வடிகட்டிகள் பயன்படுத்துகிறேன்.
தொழில்நுட்பம் மூலம் நான் எடுக்கக்கூடிய ஒவ்வொரு தேர்வுக்கும் தெளிவான சரியான அல்லது தவறான முடிவு இல்லை. ஆனால் முன்கூட்டியே திட்டமிடுவது உதவுகிறது. மேலும் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் அவர்களின் யோசனைகளைப் பற்றிப் பேச முடியும்.
இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி.