நோக்கம்
நான் தொழில்நுட்பத்தை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்த முடியும். அது என்னைக் கட்டுப்படுத்துவதில்லை.
தொழில்நுட்பம் என்னை சில அற்புதமான மனிதர்களுடன் (சுமார் இரண்டு மில்லியன் கேட் காணொளிகளுடன்) இணைக்கிறது. ஆனால் சில நேரங்களில் நான் ஸ்க்ரோலிங் செய்வதிலோ அல்லது மக்களுக்கு பதிலளிப்பதிலோ சிக்கிக் கொள்கிறேன். இது நடக்கும் போதெல்லாம், நான் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துகிறேன் என்பதை நினைவில் கொள்ள இது உதவுகிறது. அது என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. எனக்குத் தேவையானதற்கு அதைப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு வேறு ஏதாவது ஒன்றிற்கு நகரலாம்.
எனக்குதவுகிற சில கேள்விகள் இதோ:
-
நான் இப்போது ஏன் இந்த சாதனத்தைப் பயன்படுத்துகிறேன்?
-
நான் என்ன செய்கிறேனோ அது நல்லதென்று உணர்கிறேனா?
-
இந்தச் சாதனத்தில் நான் எவ்வளவு நேரம் செலவிடுவேன்?
சில நேரங்களில் நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிப்பது எனக்கு கடினமாக இருக்கும். இந்த காணொளி அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த எனக்கு உதவியது. ஒருவேளை அவை உங்களுக்கும் உதவும்.