இடைநிறுத்தவும்
நான் இடைநிறுத்தி ஓய்வு எடுப்பது சரிதான்.
சில நேரங்களில் மகிழ்ச்சியாக உணர அல்லது மற்றவர்களுடன் இணைந்திருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. அல்லது நான் தனிமையாகவோ அல்லது சலிப்பாகவோ உணருவதால் ஸ்க்ரோல் செய்கிறேன். சில நேரங்களில் வன்முறை, பயமுறுத்தும் அல்லது பாலியல் ரீதியான விஷயங்களை நான் சந்திக்கிறேன், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.
நான் இடைநிறுத்தி ஓய்வு எடுப்பது சரியென்று கற்றுக்கொண்டேன். ஆவியானவர் என்னை வழிநடத்தி எச்சரிப்பார், மேலும் நான் எப்படி நடந்துகொள்கிறேன், உணர்கிறேன் என்பதைப் பற்றி சிந்திக்க அது எனக்கு உதவும். பிறகு நான் வேறு தேர்வு செய்ய வேண்டுமா என்று முடிவு செய்யலாம்.
இது எனக்கு உதவியாக இருந்தது:
-
வெளிப்படையாகச் சொல்லுவது: வெளிப்படையான அல்லது என்னை மோசமாக, தனிமையாக அல்லது வித்தியாசமாக உணர வைக்கும் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது, “இது சரியானதாகத் தோன்றவில்லை” என்று நான் சொல்லலாம்.
-
சிறந்த தேர்வை செய்வேன்: நான் சாதனத்தை அணைக்க முடியும் அல்லது எனது அறிவிப்புகளை அமைதிப்படுத்த முடியும். ஒரு சாதனம் இல்லாமலேயே நான் வெளியே செல்லலாம் அல்லது வேறு அறைக்குச் செல்லலாம்.
-
ஒருவருடன் தொடர்பில் இருக்கலாம்: நான் எப்படி உணர்கிறேன் என்பதைப் பற்றி ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் பேச முடியும். சில நேரங்களில் நான் திரை வழியாக அல்ல, நேரில் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
நோக்கம். திட்டம். இடைநிறுத்தல். மூன்று சிறிய வார்த்தைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான உங்கள் திட்டம் என்ன? குறிப்புகளை எடுக்க அல்லது சில நினைவூட்டல்களை எழுத இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.