“நவம்பர் 23–29. ‘கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்,’: ஆமோஸ்; ஒபதியா; யோனா,’ என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“நவம்பர் 23–29. ‘கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
நினிவே கடற்கரையில் யோனா–டேனியல் லூயிஸ்
நவம்பர் 23–29: “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்”
ஆமோஸ்;ஒபதியா;யோனா
யோனா தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் இருந்தான். தர்ஷீசுக்குப் பயணம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை ஆனால் அது தேவனின் செய்தியை வழங்க யோனா செல்ல வேண்டிய நினிவேவிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. ஆகவே, கப்பல் ஒரு பெரிய புயலை எதிர்கொண்டபோது, அது தன் கீழ்ப்படியாமையினிமித்தம்தான் என யோனா அறிந்திருந்தான். யோனாவின் வற்புறுத்தலின் பேரில், அவனது சக பயணிகள் புயலை நிறுத்த அவனை கடலின் ஆழத்தில் தள்ளினர். இது யோனாவுக்கும் அவன் ஊழியத்திற்கும் முடிவு போல தோன்றிற்று. ஆனால் கர்த்தர் நினிவேயின் ஜனத்தையும் இஸ்ரவேல் வீட்டாரையும் அல்லது நம்மில் எவரையும் அவர் கைவிடாதது போல அவர் யோனாவையும் கைவிடவில்லை.
ஆகவே, நாம் மனந்திரும்பினால் என்றென்றும் கைவிடப்பட மாட்டோம் என்ற செய்தியுடன் அவர் யோனா, ஆமோஸ், ஒபதியா போன்ற தீர்க்கதரிசிகளையும் மற்றும் நம்முடைய இக்கால தீர்க்கதரிசிகளையும் தொடர்ந்து அனுப்புகிறார். இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் நாம் மனமாற காலதாமதம் கிடையாது: தேவன் வெளிப்படுத்தும் அனைத்து “இரகசியங்களில்“ (ஆமோஸ் 3:7ஐப் பார்க்கவும்), இது மிகவும் விலைமதிப்பற்ற ஒன்றாகும். அவருடன் நாம் செய்த உடன்படிக்கைகளின்படி வாழ அவர் இன்னும் நமக்கு உதவ விரும்புகிறார், மேலும் அவர் நமக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க மனதுள்ளவராக இருக்கிறார்.
இந்த புத்தகங்கள்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு, “ஆமோஸ்,” “ஒபதியா,”மற்றும் “யோனா” Bible Dictionary பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
ஆமோஸ் 3:1–8; 7:10–15
கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்.
ஆமோஸ் 3:3-6இல், தீர்க்கதரிசியான ஆமோஸ், நாம் கேட்கும் அல்லது பார்க்கும் அடையாளங்களிலிருந்து நாம் எடுக்கக்கூடிய முடிவுகளின் உதாரணங்களை முன்வைத்தார்: சிங்கம் கர்ஜிக்கும் போது, அது இரையைப் பிடித்திருக்க வேண்டும்; ஒரு பறவை வலையில் சிக்கினால், அங்கே தூண்டிலிரை இருந்திருக்க வேண்டும். வசனங்கள் 7–8இல் இந்த தர்க்கத்தைத் தீர்க்கதரிசிகளுக்கு ஆமோஸ் பயன்படுத்தினான். தீர்க்கதரிசி ஒருவர் தீர்க்கதரிசனமுறைத்தால் நாம் என்ன முடிவுக்கு வர முடியும்? ஆமோஸ் 7:10–15ஐ நீங்கள் வாசிக்கும்போது தீர்க்கதரிசிகளைப்பற்றி வேறு எதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்?
கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் எதை வெளிப்படுத்தினார்?
“தீர்க்கதரிசிகள் இருப்பது தேவனுடைய அன்பின் அடையாளம்“ “பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தீர்க்கதரிசிகள் பேசுகிறார்கள்,“ லியாஹோனா, மே 2018, 99) என்று மூப்பர் உலிசஸ் சோயர்ஸ் கூறினார். இந்த வாக்கியத்தை நீங்கள் எவ்வாறு முடிப்பீர்கள் என்பதைக் கவனியுங்கள்: “தேவன் என்னை நேசிக்கிறார் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் அவர் அனுப்புகிற தீர்க்கதரிசிகள் …” உதவக்கூடிய சில வசனங்கள் இங்கே உள்ளன: உபாகமம் 18:18; எசேக்கியேல் 3:16–17; எபேசியர் 4:11–14; 1 நேபி 22:2; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:4–6; 84:36–38; 107:91–92.
இன்று தீர்க்கதரிசிகள் தேவையில்லை என்று நினைக்கும் ஒருவருக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?
கருத்துகளையும் கேள்விகளையும் பார்க்கவும், “Prophets,” Gospel Library.
ஆமோஸ் 4–5
“கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.”
ஆமோஸ் 4:6–13இன் படி, இஸ்ரவேலர் சோதனைகளை அனுபவித்த பிறகு என்ன நடக்கும் என்று கர்த்தர் எதிர்பார்த்தார்? (ஏலாமான் 12:3ஐயும் பார்க்கவும்). உங்கள் சோதனைகள் தேவனால் அனுப்பப்படவில்லையென்றாலும், அவரிடம் திரும்புவதற்கு அவை உங்களுக்கு எப்படி வாய்ப்புகளை அளித்தன?
நீங்கள் ஆமோஸ் 5: 4, 4–15ஐ வாசிக்கும்போது, கர்த்தர் உங்களுக்கு எப்படி கிருபை செய்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவரைத் தேடுவது உங்களுக்கு எப்படி வாழ்வளித்தது?
ஆமோஸ் 8:11–12
ஆவிக்குரிய பசியையும் தாகத்தையும் கர்த்தருடைய வார்த்தை திருப்தியாக்கும்.
ஆமோஸ் 8:11–12ஐ நீங்கள் வாசிக்கும்போது, தேவனின் வார்த்தையின்றி வாழ்வதற்கு பஞ்சம் ஏன் ஒரு நல்ல ஒப்பீடு என்பதைப்பற்றி சிந்தியுங்கள் (யோவான் 6:26–35; 2 நேபி 9:50–51; 32:3; ஏனோஸ் 1:4–8ஐயும் பார்க்கவும்). நீங்கள் ஆவிக்குரிய பசியுடன் இருக்கும்போது உங்களுக்கு எப்படித் தெரியும்?
இந்த வசனங்கள் மகா மத மாறுபாடுகளுக்கும் பொருந்தும் (Topics and Questions, “Apostasy,” Gospel Library பார்க்கவும்). அந்த ஆவிக்குரிய “பஞ்சம்” தேவனுடைய பிள்ளைகளை எவ்வாறு பாதித்திருக்கிறது? மறுஸ்தாபிதம் உங்கள் ஆவிக்குரிய பசியை எவ்வாறு திருப்திப்படுத்தியது?
“The Great Apostasy” (video), Gospel Library ஐயும் பார்க்கவும்.
The Great Apostasy
ஒபதியா 1:21
“சீயோன் பர்வதத்தில் இரட்சகர்கள் யார்”?
ஒபதியா 1:21ஐக் குறிப்பிட்டு, மரித்தவர்களுக்காக ஆலயத்தில் நாம் நியமங்களைப் பெறும்போது சீயோன் பர்வதத்தில் இரட்சகர்களாகிறோம் என்று தலைவர் கார்டன் பி ஹிங்கிலி விவரித்தார் (“Closing Remarks,” Liahona, Nov. 2004, 105 பார்க்கவும்). நாம் செய்கிற அக்கிரியை ஒரு சின்ன விதத்தில் எப்படி இரட்சகர் செய்த கிரியைக்கு ஒப்பாய் இருக்கிறது? இந்த அக்கிரியைச் செய்வது எப்படி இரட்சகருடன் நெருக்கமாக உணர உங்களுக்கு உதவியது?
“Holy Temples on Mount Zion,” Hymns, no. 289 ஐயும் பார்க்கவும்.
யோனா 1–4
தம்மிடத்தில் திரும்பும் அனைவருக்கும் கர்த்தர் இரக்கமுள்ளவராயிருக்கிறார்.
நினிவே பட்டணம் வன்முறைக்கும் கொடுமைத்தனத்திற்கும் அறியப் பெற்றதாய் இஸ்ரவேலருக்கு பகையாய் இருந்தது. யோனாவுக்கு, அவர்கள் மனந்திரும்புவதற்குத் தயாராக இருப்பது நம்பத்தகாததாகத் தோன்றியது. யோனாவின் அணுகுமுறையை (யோனா1; 3–4ஐ பார்க்கவும்) ஆல்மா மற்றும் மோசியாவின் குமாரரின் உணர்வுகளுடன் ஒப்பிடுவது சுவாரஸ்யமாக இருக்கலாம் (மோசியா 28:1–5; ஆல்மா 17:23–25ஐ பார்க்கவும்). மாறத் தயாராக இல்லை என்று தோன்றாதவர்களுடன் கூட சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள உங்களைத் தூண்டும் யோனா 3லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
நீங்கள் யோனாவைப் படிக்கும்போது, கர்த்தருடைய கிருபைக்கான உதாரணங்களைத் தேடுங்கள். நினிவே ஜனங்களுக்கு கர்த்தர் இரக்கம் காட்டியபோது, ஏன் யோனா “அதிருப்தியும்” “மிகுந்த கோபமுமடைந்தான்” என்று உணர்கிறீர்கள்? (யோனா 4: 1). அதிகாரம் 4இல் கர்த்தர் அவனுக்கு என்ன கற்பிக்க முயற்சிக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் அவருடைய கிருபையை நீங்கள் எவ்வாறு அனுபவித்தீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் அதிக இரக்கமுள்ளவராக இருக்க உதவும் எதை யோனாவிடமிருந்து கற்றுக்கொள்கிறீர்கள்?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
இந்த ஞாயிற்றுக்கிழமை மாதத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் “பிற்சேர்க்கை B: தேவனின் உடன்படிக்கைப் பாதையில் வாழ்நாள் முழுவதற்குமாக பிள்ளைகளைத் தயார்படுத்துதல்” இல் கற்றல் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஆமோஸ் 3:7.
தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் தூதுவர்கள்.
-
உங்கள் பிள்ளைகள் ஆமோஸ் 3:7ஐப் புரிந்துகொள்ள உதவும்படியாய் அவர்களில் ஒருவரிடம் நீங்கள் ஒரு எளிய செய்தியைக் கிசுகிசுத்து, அந்தச் செய்தியை மற்ற பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளச் சொல்லலாம். இந்தச் செயலில் தூதுவர் எப்படி ஒரு தீர்க்கதரிசியைப் போல் இருக்கிறார்? கர்த்தர் நமக்கு ஏன் தீர்க்கதரிசிகளைக் கொடுக்கிறார்?
-
தீர்க்கதரிசிகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி மேலும் அறிய, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சபையின் தற்போதைய தலைவரின் சமீபத்திய செய்திகளை மதிப்பாய்வு செய்யலாம். “Follow the Prophet” (Children’s Songbook, 110–11) போன்ற ஒரு பாடலைப் பாடலாம். நீங்கள் ஏன் தேவனுடைய தீர்க்கதரிசியைப் பின்பற்ற விரும்புகிறீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பிள்ளைகளுக்கு வேதவாக்கியங்களை மனப்பாடம் செய்ய உதவுங்கள். “ஒரு வேதவாக்கியத்தை மனப்பாடம் செய்வதென்பது ஒரு புதிய நட்பை உருவாக்குவதாகும். இது, தக்க நேரத்தில் உதவுகிறவரும் உணர்த்துதலையும், ஆறுதலையும் கொடுக்கிறவரும் மாற்றத்திற்குத் தேவையான ஊக்குவித்தலின் ஆதாரமாயுமிருக்கிற ஒரு புதிய தனிப்பட்டவரைக் கண்டுபிடிப்பதைப் போலாகும்” என்று மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் பகிர்ந்துகொண்டார் (“The Power of Scripture,” Ensign Nov. 2011, 6). உங்கள் பிள்ளைகள் ஆமோஸ் 3:7ஐ முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ மனப்பாடம் செய்ய உதவ, நீங்கள் அதை எழுதி மீண்டும் மீண்டும் ஒருமித்து வாசிக்கலாம். உங்கள் பிள்ளைகள் முழு வசனத்தையும் நினைவிலிருந்து திரும்பத் திரும்பச் சொல்லும் வரை நீங்கள் ஒரு நேரத்தில் சில வார்த்தைகளை அழிக்கவோ அல்லது மறைக்கவோ செய்யலாம்.
ஆமோஸ் 8:11–12
சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் மத மாறுபாடுகளிலான பஞ்சத்தை தீர்த்தது.
-
நீங்கள் ஆமோஸ் 8:11–12ஐ வாசிக்கும்போது பசியாக இருப்பது போல் நடிக்க உங்கள் பிள்ளைகளை அழைக்கவும் தேவனுடைய வார்த்தைக்காக நாம் பசியாக இருக்கும் உணர்ச்சி எப்படிப்பட்டது? உங்களுக்குப் பிடித்த சில வசனங்களை நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும்போது உங்கள் பிள்ளைகள் சாப்பிடுவது போல் நடிக்கலாம்.
-
மகா மதமாறுபாடுவிலிருந்து “பஞ்சம்“ வந்ததென்றும் அது மறுஸ்தாபித்தலுடன் எப்படி முடிந்தது என்றும் உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவ, வேதவாக்கியங்களுக்கான வழிகாட்டியை“Apostasy“ (Gospel Library), அல்லது “After the New Testament“ (in New Testament Stories, 167–70) நீங்கள் பயன்படுத்தலாம். கர்த்தர் தம்முடைய சுவிசேஷத்தை நம்முடைய நாளில் மறுஸ்தாபிதம் செய்ததற்குநீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கக் காரணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
2:52After the New Testament
யோனா 1-3
கர்த்தருக்குக் கீழ்ப்படிவது கடினமாயிருந்தாலும் அப்படிச்செய்ய அவர் எனக்கு உதவுவார்.
-
உங்கள் பிள்ளைகள் யோனாவின் கதையைக் கற்றுக்கொள்வதற்கு உதவ, நீங்கள் பழைய ஏற்பாட்டுக் கதைகளில் “யோனா தீர்க்கதரிசியை“ மதிப்பாய்வு செய்யலாம் Old Testament Storiesஉள்ள Jonah the Prophet“; இந்த வார நிகழ்ச்சிப் பக்கத்தையும் பார்க்கவும்). பின்பு நீங்கள்:
-
யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படியாதபோது என்ன நடந்தது? (யோனா 1:4–17ஐ பார்க்கவும்).
-
மனந்திரும்புவதற்கு யோனா என்ன செய்தான்? யோனா 1:10–12; 2:1–4, 9; 3:1–4ஐ பார்க்கவும்)
-
யோனா கீழ்ப்படிந்தபோது என்ன நடந்தது? என்று கேட்கலாம்(யோனா 3:5ஐ பார்க்கவும்).
2:30Jonah the Prophet
-
-
உங்கள் பிள்ளைகள் யோனாவின் கதையை மீண்டும் கூறுவதையோ அல்லது நடிப்பதையோ விரும்பலாம். உங்களுக்கு கடினமாயிருக்கின்ற ஒன்றை கர்த்தர் நீங்கள் செய்யவேண்டுமென்று விரும்பின சில அனுபவங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். அவருக்குக் கீழ்ப்படிய அவர் உங்களுக்கு எப்படி உதவினார்?
யோனா 1–4
தம்மிடத்தில் திரும்பும் அனைவருக்கும் கர்த்தர் இரக்கமுள்ளவராயிருக்கிறார்.
-
ஒருவேளை உங்கள் பிள்ளைகள் யோனாவின் அனுபவத்தைப் பற்றி நேர்காணல் செய்வதாக பாசாங்கு செய்யலாம். அவரிடம் என்ன கேள்விகள் கேட்பார்கள்? கர்த்தரைப் பற்றி யோனா என்ன கற்றுக்கொண்டான் என்பதைக் கண்டறிய கேள்விகளைக் கேட்க அவர்களை ஊக்குவிக்கவும். உதாரணமாக, கர்த்தருடைய இரக்கத்தைப் பற்றி யோனா என்ன சொல்லலாம்? ( யோனா 2:7–10; 3:10; 4:2ஐப் பார்க்கவும்).
கிறிஸ்துவும் முடக்குவாதமுள்ள மனிதனும் – ஜெ. கிர்க் ரிச்சர்ட்ஸ்
-
மாற்கு 2:3–12; லூக்கா 23:33–34; மற்றும்யோவான் 8:1–11போன்ற இரட்சகர் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டிய உதாரணங்களைப் பற்றி சிந்திக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இந்த எடுத்துக்காட்டுகளின் படங்களைத் தேடலாம். மற்றவர்களிடம் இரக்கம் காட்ட நமக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.