“நவம்பர் 2–8. ‘ஒரு புதிய ஆவியை உங்களுக்குள் நான் வைப்பேனோ,”: எசேக்கியேல் 1–3; 33–34; 36– 37;47’ என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“நவம்பர் 2–8. ‘ஒரு புதிய ஆவியை உங்களுக்குள் நான் வைப்பேனோ,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
நவம்பர் 2–8: “ஒரு புதிய ஆவியை உங்களுக்குள் நான் வைப்பேனோ”
எசேக்கியேல் 1–3; 33–34; 36–37; 47
எசேக்கியேல் நாடுகடத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. மற்ற இஸ்ரவேலர்களுடன் சேர்ந்து, அவன் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு அனுப்பப்பட்டான். எருசலேமில், எசேக்கியேல் ஆலயத்தில் சேவை செய்யும் ஒரு ஆசாரியனாக இருந்திருப்பான். பாபிலோனில் அவன் “சிறைப்பிடிக்கப்பட்டவர்களில்” ஒருவனாக தேவனின் அன்பான வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில், திரும்புவதற்கான சிறிதே நம்பிக்கை கொண்டவனாக “அவர்கள் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்தான்” (எசேக்கியேல் 3:15). பின்னர் ஒரு நாள் எசேக்கியேலுக்கு ஒரு தரிசனம் உண்டானது. எருசலேமில் உள்ள ஆலயத்தில் அல்ல, ஆனால் பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்கள் மத்தியிலே, “கர்த்தருடைய மகிமையை” அவன் கண்டான்(எசேக்கியேல்1:28). எருசலேமிலுள்ள துன்மார்க்கம் அங்கே தேவனின் பிரசன்னம் இனியும் இல்லாத அளவுக்கு மிக மோசமாயிருந்தது என்று அவன் அறிந்துகொண்டான் (எசேக்கியேல் 8–11; 33:21 பார்க்கவும்).
ஆயினும் எசேக்கியேலின் செய்தியில் ஏதோ நம்பிக்கை இருந்தது. உடன்படிக்கை ஜனம் எவ்வளவு தூரம் விலகிப்போயிருந்தாலும், தேவன் அவர்களை முற்றிலுமாக கைவிடவில்லை. அவர்கள் “கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க” (எசேக்கியேல் 37:4) மனதுள்ளவர்களாய் இருந்தால், ஒருதரம் மரித்ததுகூட உயிர்பிக்கப்படக்கூடுமே ஒரு கல் இருதயம் நவமான இருதயத்தால் மாற்றியமைக்கப்படலாம்” (எசேக்கியேல் 36:26). எதிர் காலத்தில் ஒரு புதிய ஆலயத்தையும் ஒரு புதிய பட்டணத்தையும் கர்த்தர் நிர்மாணிப்பார் “அந்நாள் முதல் நகரத்தின் பெயர் கர்த்தர் அங்கிருக்கிறார் என அழைக்கப்படும்” (எசேக்கியேல் 48:35).
எரேமியா புத்தகத்தின் மேலோட்டமான பார்வைக்கு, “எசேக்கியேல்” in the Bible Dictionary பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
எசேக்கியேல் 3; 34
அவரது ஆடுகளை போஷிக்க கர்த்தர் என்னை அழைக்கிறார்.
எசேக்கியேல் 3மற்றும் 34இல் கர்த்தர் தம்முடைய ஜன தலைவர்களை “மேய்ப்பர்கள் எனவும் காவற்காரர்களெனவும் குறிப்பிடுகிறார். நீங்கள் இந்த அதிகாரங்களை வாசிக்கும்போது, ஒரு தலைவராக இருப்பதன் அர்த்தம் குறித்து இந்த தலைப்புகள் உங்களுக்கு என்ன அறிவுறுத்துகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
கர்த்தர் நீங்கள் போஷிக்க வேண்டும் என்று விரும்பும் ஆடுகள் யார்? ஒருவர் ஊழியம் செய்யவோ பிள்ளைகளை வளர்க்கவோ அல்லது ஒரு ஊழியப்பொறுப்பை நிறைவேற்றவோ உதவத்தக்கதாக எசேக்கியேல் 34இல் நீங்கள் எதை காண்கிறீர்கள்? நமது மேய்ப்பராக இரட்சகரின் உதாரணத்தை உங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்? (வசனங்கள் 11–31 பார்க்கவும்).
இந்த அதிகாரத்தில் நீங்கள் காணும் குறியீட்டையும் நீங்கள் சிந்திக்கலாம். வசனம் 14இல் உள்ள “நல்ல மேய்ச்சலும்” “நல்ல தொழுவமும்” எதைக் குறிக்கின்றன? “காணாமற்போன ஆடுகளுக்கும் “துரத்துண்ட“ ஆடுகளுக்கும் என்ன வித்தியாசம்? (வசனம் 16). என்ன பிற குறியீடுகளை நீங்கள் பார்க்கிறீர்கள்?
யோவான் 21:15–17; Gerrit W. Gong, “Ministering,” Liahona, May 2023, 16–19ஐயும் பார்க்கவும்.
எசேக்கியேல் 33:10–19
கர்த்தர் மன்னிக்க விரும்புகிறார்.
“நம் பாவங்கள் நம்மீதிருந்தால், நாம் பிழைப்பது எப்படி” என சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர் வினவினார்கள்?” (எசேக்கியேல் 33:10). பதிலாக, கர்த்தர் அவர்களுக்கு மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பைக் குறித்து போதித்தார். அவர் போதித்தவைகளை நீங்கள் சிந்திக்க இந்த கேள்விகள் உங்களுக்கு உதவமுடியும்:
-
“[உங்களுடைய] சொந்த நீதியை நம்புவதென்பதற்கு” அர்த்தம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்”? (எசேக்கியேல் 33:12–13 பார்க்கவும்).
-
எசேக்கியேல் 33:12–19இல் விவரிக்கப்பட்டுள்ள ஜனம் நியாயமாக நடத்தப்படவில்லை என உணருகிற ஒருவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? (மத்தேயு 21:28–31; லூக்கா 18:9–14 ஐயும் பார்க்கவும்)
-
இந்த வசனங்களில் மனந்திரும்புதல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகிறவைகளாக நீங்கள் காண்பது யாவை? எசேக்கியேல் 36:26–27 மற்றும் ஆல்மா 7:14–16இல் என்ன கூடுதல் உட்கருத்துக்களை நீங்கள் கண்டீர்கள்?
எசேக்கியேல் 37.
கர்த்தர் தம்முடைய ஜனங்களை கூட்டிச்சேர்த்து அவர்களுக்கு புதிய ஜீவனைக் கொடுக்கிறார்.
இரண்டு அடையாளங்கள் மூலம் எசேக்கியேல் 37இல் இஸ்ரவேலின் கூடிச்சேர்தல் சித்தரிக்கப்பட்டது. செத்த எலும்புகள் ஜீவனுடன் மீட்கப்படும் (வசனங்கள் 1–14ஐ பார்க்கவும்) என்று முதலாவது அடையாளத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, திரையின் இருபுறமும் இஸ்ரவேலின் கூடுகையைப்பற்றி அது என்ன ஆலோசிக்கிறது என்று நீங்கள் சிந்திக்கவும் (எசேக்கியல் 36:24–30 ஐயும் பார்க்கவும்). இது போன்ற கேள்விகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:
-
கர்த்தர் இஸ்ரவேலின் கூடுகையின் மூலம் நிறைவேற்ற முயற்சிப்பதென்ன?
-
இதை அவர் எப்படிச் செய்தார்?
வசனங்கள் 15–28இல் இரண்டாவது அடையாளத்தைக் குறித்து நீங்கள் வாசிக்கும்போது இந்த அதே கேள்விகளை நீங்கள் தங்களுக்கு தாங்களே கேட்டுக்கொள்ளலாம். ஒரு கீல் இணைந்த மர எழுத்து பலகைகள் என்று பல அறிஞர்கள் விளக்குகிற இரண்டு கோல்களை இந்த அடையாளம் உள்ளடக்கியிருக்கிறது. வேதாகமத்தின் பெரும்பகுதி யூதாவின் சந்ததியினரால் எழுதப்பட்டது என்பதால் யூதாவின் கோல் வேதாகமத்தைக் குறிக்கலாம், லேகியின் குடும்பம் எகிப்தின் யோசேப்பின் சந்ததியினர் என்பதால் யோசேப்பின் கோல் மார்மன் புஸ்தகத்தைக் குறிக்கலாம் இதை மனதில் கொண்டு, இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்ப்பதில் வேதங்களின் பங்கைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றன?
உங்கள் வாழ்க்கையில் வேதாகமும் மார்மன் புஸ்தகமும் எவ்வாறு இணைந்து குறிப்பாக, நீங்கள் கிறிஸ்துவிடம் வர உங்களுக்கு உதவ செயல்பட்டன என்று சிந்தித்துப் பாருங்கள். எந்த வாசகங்கள் உங்களுக்கு குறிப்பாக அர்த்தமுள்ளவையாய் இருந்தன?
2 நேபி 3:11–13; 29:14; “Israel, Israel, God Is Calling,” Hymns, no. 7; Topics and Questions, “வேதாகமம்,” “மார்மன் புஸ்தகம்,” Gospel Library; “The Book of Mormon Gathers Scattered Israel” (video), Gospel Libraryஐயும் பார்க்கவும்.
The Book of Mormon Gathers Scattered Israel
ஆலயத்திலிருந்து ஒரு நதி பாய்ந்து சவக்கடலை குணமாக்குவதை எசேக்கியேல் தரிசனமாகக் கண்டான்.
எசேக்கியேல் 47:1-12
கர்த்தருடைய வீட்டில் நான் ஆவிக்குரிய சுகத்தை காண முடியும்.
நீங்கள் எசேக்கியேல் 47:1–12 ஐ வாசிக்கும்போது, சவக்கடலில் மீன் மற்றும் தாவரங்கள் வாழ முடியாத அளவுக்கு அது உப்பு நிறைந்தது என்று தெரிந்துகொள்வது உதவும். வசனங்கள் 1–12இல் விவரிக்கப்பட்ட தண்ணீரைப் பற்றி உங்களைக் கவர்ந்தது எது? (see also வெளிப்படுத்தின விசேஷம் 22:1ஐயும் பார்க்கவும்). இந்த தண்ணீர் எதைக் குறிக்கலாம்? வசனம் 12இல் விவரிக்கப்பட்டுள்ள மரங்கள் எதைக் குறிக்கலாம்?
மூப்பர் டேல் ஜி. ரென்லண்டின் செய்தி “Family History and Temple Work: Sealing and Healing” உங்கள் புரிதலுக்கு எதை சேர்க்கிறது? (Liahona, May 2018, 47–48 பார்க்கவும்). ஆவிக்குரிய வாழ்க்கையையும் சுகத்தையும் நீங்கள் எப்படி ஆலயத்தினால் கண்டடைந்தீர்கள் என்று சிந்தியுங்கள்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
எசேக்கியேல் 3:17; 33:1–5
தீர்க்கதரிசிகள் நம்மை ஆபத்தை குறித்து எச்சரிக்கும் காவலாளிகளைப் போன்றவர்கள்.
-
சிறு பிள்ளைகள் எசேக்கியேல் 3:17ளுடன் பொருந்தும் செயல்களை செய்து மகிழ்வார்கள். உதாரணமாக, “காவலர்,” “கேட்க,” மற்றும் “வாய்” என்ற வார்த்தைகளை நீங்கள் படிக்கும்போது அவர்கள் தங்கள் கண்கள், காதுகள் மற்றும் வாயை சுட்டிக்காட்டலாம் அவர்கள் வெளியிலோ அல்லது அறையைச் சுற்றியோ நடக்க விரும்பலாம். அவர்கள் நடந்து செல்லும்போது, ஆறுகளை கடந்து போதல், மரக்கிளைகளுக்கு கீழே குனிந்து செல்லுதல், விலங்குகளை தவிர்த்தல் (இது நிதர்சனமாகவோ பாசாங்காகவோ அமையப்பெறலாம்) போன்ற பாதையில் எதிர்கொள்ளக்கூடியவைகளைக் குறித்து அவர்களை எச்சரிக்கவும். நாம் பார்க்க முடியாத ஆபத்துக்களைப் பற்றி கர்த்தருடைய தீர்க்கதரிசி எவ்வாறு நம்மை எச்சரிக்கிறார் என்பதைப் பற்றிய உரையாடலுக்கு இது வழிவகுக்கும்.
-
எசேக்கியேல் 3:17; 33:1–5ஐ விளக்குவதற்கு இதோ மற்றொரு வழி. உங்கள் பிள்ளைகளில் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே பார்த்துவிட்டு, வெளியே என்ன நடக்கிறது என்பதை மற்றவர்களிடம் சொல்வதன் மூலம் ஒரு “காவலாளியாக” பாசாங்கு செய்யலாம். “Watchman on the Tower” (ChurchofJesusChrist.org)( காணொளியையும் நீங்கள் காணலாம். நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசி நமக்கான ஒரு காவலாளியைப்போல எவ்வாறிருக்கிறார்?
4:17Watchman on the Tower
எசேக்கியேல் தீர்க்கதரிசி - லைல் பெடஸ்
எசேக்கியேல் 37:15-23
வேதாகமும் மார்மன் புஸ்தகமும் நம்மை இயேசு கிறிஸ்துவினிடத்தில் கூடிச்சேர உதவுகிறது.
-
எசேக்கியேல் 37:15–23ஐ ஒன்றாகப் படித்த பிறகு, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இரண்டு கோல்களை கண்டுபிடித்து ஒன்றில் யூதாவுக்காகவும் (வேதாகமம்) மற்றொன்றில் யோசேப்பிற்காகவும் (மார்மன் புஸ்தகம்) என்று எழுதலாம். இரட்சகரிடத்தில் நெருக்கமாக உணரவும், “[அவருடைய] ஜனங்களாக” மாறவும் அவர்களுக்குதவ ( வசனங்கள் 23) வேதாகமத்திலிருந்தும் மார்மன் புஸ்தகத்திலிருந்தும் கதைகளையோ அல்லது வேதவாக்கியங்களையோ நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம். இந்த இரண்டு வேதப் புத்தகங்களையும் வைத்திருப்பது ஏன் நல்லது?
எல்லாவற்றையும் கற்பிக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுடன் எசேக்கியேலில் உள்ள சத்தியங்கள் அனைத்தையும் ஆராய உங்களால் முடியாமலிருக்கக்கூடும். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதை ஜெபத்துடன் சிந்தித்து, எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஆவிக்குரிய வழிகாட்டுதலைத் தேடுங்கள். (Teaching in the Savior’s Way, 17ஐ பார்க்கவும்.)
எசேக்கியேல் 47:1-12
நம்முடைய இருதயங்களும் குடும்பங்களும் கர்த்தருடைய வீட்டிலேயே குணமடையும்.
-
ஆலயத்திலிருந்து தண்ணீர் பாய்ந்து, மீன் மற்றும் தாவரங்கள் அதில் வாழ முடியாத அளவுக்கு உப்பு நிறைந்த கடலான சவக்கடலை குணப்படுத்துவதைப்பற்றிய எசேக்கியேலின் பார்வையை எசேக்கியேல் 47 விவரிக்கிறது. உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தரிசனத்திலிருந்து ஆலயம், ஆறு, பாலைவனம், சவக்கடல், திரளான மீன்கள் அல்லது பலன்தரும் மரம் போன்ற ஒன்று அல்லது இரண்டு பொருட்களை ஒவ்வொருவரும் தரிசனத்திலிருந்து வரையலாம். பிறகு, நீங்கள் வசனங்கள் 1-12ஐ ஒன்றாகப் படிக்கும்போது, எந்த பொருள் குறிப்பிடப்படுகிறதோ அதை அவர்கள் தங்கள் வரைபடமாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த தரிசனத்தில் நதியிலிருந்து என்ன ஆசீர்வாதம் கிடைத்தது? இந்த ஆசீர்வாதங்கள் ஆலய உடன்படிக்கைகளைக் கைகொள்ளுபவர்களுக்கு இரட்சகர் அளிக்கும் ஆசீர்வாதங்களைப் போன்றது என்பதைப் பார்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். “And the River Will Grow” (Gospel Library) காணொளி உங்களுக்கு உதவலாம்.
3:43And the River Will Grow
-
“Families Can Be Together Forever” (Children’s Songbook, 188) போன்ற ஆலய ஆசீர்வாதங்களை விவரிக்கும் பாடலையும் நீங்கள் ஒன்றாகப் பாடலாம். கர்த்தர் தம்முடைய பரிசுத்த வீட்டில் நம்மை எப்படி ஆசீர்வதிக்கிறார் என்பதைப் பற்றி இந்தப் பாடல் என்ன கற்பிக்கிறது?
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.