“நவம்பர் 16–22. ‘அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்”: ஓசியா 1–6; 10–14; யோவேல்,’ என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“நவம்பர் 16–22. ‘அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
நவம்பர் 16-22: “அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்”
ஓசியா 1–6; 10–14; யோவேல்
கர்த்தருடனான இஸ்ரவேலின் உடன்படிக்கை மிகவும் ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தபடியால் கர்த்தர் அதை ஒரு திருமணத்துடன் ஒப்பிட்டார். இந்த உடன்படிக்கையில், ஒரு திருமணத்தைப் போலவே, நித்திய அர்ப்பணிப்பு, பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்கள், ஒன்றாக ஒரு வாழ்க்கையை உருவாக்குதல், முற்றிலுமான விசுவாசம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, முழு மனதுடன் கூடிய அன்பு ஆகியவை அடங்கும். துரதிர்ஷ்டவசமாக, இஸ்ரவேலர் தங்கள் உடன்படிக்கைக்கு உண்மையாக இருக்கவில்லை. இருப்பினும் அவருடைய செய்தி “நான் உங்களை என்றென்றும் நிராகரிப்பேன்” என்பது அல்ல. அதற்கு பதிலாக “நான் உங்களை திரும்ப அழைப்பேன்” என்பதாகும் ( ஓசியா 2: 14–15 பார்க்கவும்). “உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்” என அவர் ஓசியா தீர்க்கதரிசியின் மூலம் அறிவித்தார் (ஓசியா 2:19). “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” (ஓசியா 14:4). நம்முடைய உடன்படிக்கைகளின்படி அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வாழ முற்படுகையில், இன்று அவர் நமக்கு அளிக்கும் செய்தி இதுதான்.
இதேபோன்ற ஒரு செய்தியை யோவேல் பகிர்ந்து கொண்டான்: “ உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்” (யோவேல் 2:13). இந்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப் படிப்பது, தேவனுடனான உங்கள் சொந்த உறவைப் பற்றி சிந்திக்க உங்களைத் தூண்டலாம் - அவர் உங்களுக்கு விசுவாசமாக இருப்பது எப்படி நீங்கள் அவருக்கு விசுவாசமாய் இருக்க உங்களைத் தூண்டுகிறது என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.
ஓசியா மற்றும் யோவேல் புத்தகங்களின் மேலோட்டப் பார்வைக்கு, “Hosea, or Hoshea” and “Joel” in the Bible Dictionary பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
ஓசியா 1–3; 14
கர்த்தர் தம்மிடத்தில் திரும்பும்படி எப்போதும் என்னை அழைக்கிறார்.
ஓசியாவின் மனைவி கோமர் அவனுக்கு விசுவாசமாக இல்லை, தேவன் இந்த சோகமான நிகழ்வை இஸ்ரவேலரைப்பற்றியும் தம்முடனான அவர்களது உடன்படிக்கைகளைப்பற்றியும் தாம் எப்படி உணர்ந்தார் என்பதை கற்பிக்க சுட்டிக்காட்டினார். நீங்கள் ஓசியா 1–3 வாசிக்கும்போது, கர்த்தர் தம்முடைய உடன்படிக்கை ஜனங்களுடனான உறவை எவ்வாறு கருதுகிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். தேவனுடன் உடன்படிக்கை செய்வது எப்படி திருமணத்திற்குள் நுழைவதைப் போன்றது? அந்த உடன்படிக்கையைக் கைக்கொள்ளத் தவறுவது எப்படி ஒரு வாழ்க்கைத்துணைக்கு துரோகம் செய்வது போன்றது? (ஓசியா 2:5–7, 13ஐ பார்க்கவும்). ஓசியா 2:14–23 கர்த்தருடைய அன்பையும் இரக்கத்தையும்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? உங்கள் அன்பையும் விசுவாசத்தையும் அவருக்கு எப்படி காட்டுகிறீர்கள்?
ஓசியா 14இல், கர்த்தர் தம்மிடம் திரும்பி வருபவர்களுக்கு அளிக்கும் பல நேர்த்தியான வாக்குறுதிகளைத் தேடுங்கள். “அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” என்ற சொற்றொடர் உங்களுக்கு என்ன அர்த்தத்தை கொடுக்கிறது? (வசனம் 4). வசனங்கள் 5–8இல் உள்ள தாவர உருவகங்கள், மனந்திரும்புதலின் ஆசீர்வாதங்கள் உட்பட தேவனின் ஆசீர்வாதங்களைப் பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கின்றன? உங்கள் கற்றலின் ஒரு பகுதியாக “Come unto Jesus” (Hymns, no. 117) போன்ற இரட்சகரின் இரக்கத்தைப் பற்றிய ஒரு பாடலைப் பாடவோ அல்லது கேட்கவோ எண்ணுங்கள்.
இஸ்ரவேல் வீட்டாரையும் அவர்களின் உடைந்த உடன்படிக்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கோமருக்கு, கர்த்தரால் மீட்பு வழங்கப்பட்டது. படவிளக்கம்–டேப் மின்னார்ட், goodsalt.com-அனுமதி பெறப்பட்டது.
ஓசியா 6:4–7; யோவேல் 2:12–13
தேவன் மீதான பக்தியை வெளிப்படையாக மட்டும் வெளிப்படுத்தாமல், உள்ளுக்குள்ளும் உணரப்பட வேண்டும்.
ஓசியாவின் நாளில் இருந்த ஜனங்கள் மிருக பலிகளைச் செலுத்தினார்கள், ஆனாலும் அவர்கள் மிக முக்கியமான கட்டளைகளை மீறினார்கள். “பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்” என கர்த்தர் சொன்னதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (ஓசியா 6:6). நீதியானது மேகத்தையோ அல்லது பனியையோ போன்றது என்ற அர்த்தம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (ஓசியா 6:4). நம்முடைய நீதி எப்படியிருக்க வேண்டும்? (ஏசாயா 48:18; 1 நேபி 2:9–10 பார்க்கவும்).
கர்த்தர் தமது ஊழியத்தின்போதுஓசியா 6:6ஐ எப்படி பயன்படுத்தினார் என பார்க்க, நீங்கள் மத்தேயு 9:10–13; 12:1–8ஐ வாசிக்கலாம். ஓசியாவின் சொற்களைப் புரிந்துகொள்ள இந்த வாசகங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன?
யோவேல் 2: 12–13ஐ வாசிக்கும்போது, ஒருவரின் ஆடைகளை சிதைத்தல் அல்லது கிழிப்பது துக்கம் அல்லது வருத்தத்தின் வெளிப்புற அறிகுறியாகும் என்பதை அறிய இது உதவக்கூடும். நம்முடைய ஆடைகளை சிதைப்பதில் இருந்து நம் இருதயங்களை சிதைப்பது எவ்வாறு வேறுபட்டது?
யோவேல் 2
“நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்”
நமது நாளுக்கும் யோவேல் முன்னறிவித்த நாளுக்கும் என்ன ஒற்றுமைகள் உள்ளன? (குறிப்பாக யோவேல் 2:1–2, 11, 18–32ஐப் பார்க்கவும்). வசனங்கள் 18-32இல் கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின ஆசீர்வாதங்களில் உங்களைக் கவர்ந்தது எது? இந்த ஆசீர்வாதங்கள் இன்று ஏன் குறிப்பாக மதிப்புமிக்கதாக இருக்கலாம்?
1823இல் ஜோசப் ஸ்மித்தை சந்தித்தபோது யோவேல் 2ஐ பற்றி மரோனி கூறியதைப் படிப்பது சுவாரஸ்யமாக இருக்கலாம் (ஜோசப் ஸ்மித்-வரலாறு 1:41ஐ பார்க்கவும்). யோவேல் 2:28–32இல் உள்ள தீர்க்கதரிசனங்கள் நம் நாளில் நிறைவேறுவதை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? (அப்போஸ்தலர் 2:1–21ஐயும் பார்க்கவும்). கர்த்தர் “[அவருடைய] ஆவியை மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவார்” என்பதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (யோவேல் 2:28).
தலைவர் ரசல் எம். நெல்சனின் இந்த வார்த்தைகளை நீங்கள் சிந்திக்கலாம்: “வருகிற நாட்களில், வழிகாட்டுதலில்லாமல், வழிநடத்துதலில்லாமல், ஆறுதலில்லாமல், பரிசுத்த ஆவியின் நிரந்தர செல்வாக்கில்லாமல் ஆவிக்குரியவிதமாக பிழைத்திருப்பது சாத்தியமாகாது” என நமது தீர்க்கதரிசி ரசல் எம். நெல்சன் நமக்குப் போதித்தார்.” (“Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 96). நாம் ஆவிக்குரிய விதமாக பிழைத்திருப்பதற்கு வெளிப்படுத்தல் ஏன் அத்தியாவசியம்?
அப்படிப்பட்ட வெளிப்பாட்டின் ஊற்றுதலை நீங்கள் பெறவில்லை என நீங்கள் உணர்ந்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்? உதவக்கூடிய சில எடுத்துக்காட்டுகள் இங்கே. இந்த வேதவாக்கியங்களில் உள்ளவர்கள் கர்த்தருடைய ஆவியின் ஊற்றைப் பெற என்ன செய்தார்கள்?
மூப்பர் டேவிட் ஏ. பெட்னாரின் இந்த வார்த்தைகளை நீங்கள் படிக்கும்போது, உங்கள் அன்றாட வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் ஊற்றுதலை உணர்வதன் அர்த்தம் என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள்:
“தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெறுவதை நாமே அடிக்கடி கடினமாக்குகிறோம். அது என்னவெனில் நாம் நம்முடைய உடன்படிக்கைகளை கனம்பண்ணும்போது, நாம் எப்போதும் பரிசுத்த ஆவியை நம்முடைய நீங்காத துணையாக கொண்டிருப்போம் என்பதே அந்த உடன்படிக்கையின் வாக்குத்தத்தமாய் இருக்கிறது. கர்த்தருடைய சத்தத்தை அவருடைய ஆவியானவரின் முலமாக கேட்டலை அரிதான நிகழ்வாக நாம் பேசவும் எண்ணவும் செய்கிறோம். [ஆவியானவர்] எப்பொழுதும் நம்முடன் இருக்க வேண்டும். ஒரு சிறிய நொடிபொழுதுமாய் அல்ல. ஒருவர் தன்னால் முடிந்ததை செய்தால் போதுமானது. நீங்கள் பூரணமாய் இருக்கவேண்டுமென்பதல்ல, நாம் கொடிய மீறுதல்களை செய்யாமல் நம்மால் முடிந்ததை நீங்களும் நானும் செய்கிறபோது நாம் பரிசுத்த ஆவி நம்மை வழிநடத்துகிறார் என்று எண்ணிக்கொள்ளமுடியும்.
பரிசுத்த ஆவி பிரமாண்டமும், வியப்பும் திடீரெனவும், இருப்பதாக கருதுகிறோம், ஆனால் அது அமர்ந்த, மெல்லிய காலத்திற்கேற்ப வளர்வதாய் இருக்கிறது” (“மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் கலந்துரையாடல்” [evening with a General Authority, Feb. 7, 2020], broadcasts.ChurchofJesusChrist.org).
கேரி ஈ. ஸ்டீவன்சன் “Promptings of the Spirit,” Liahona, Nov. 2023, 42–45; “Enemy Territory” (video), Gospel Libraryஐ மேலும் பார்க்கவும்.
Enemy Territory
ஆவிக்குரிய சூழலை உருவாக்குங்கள். “சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வதற்கான ஆவிக்குரியச் சூழலுக்கு எது வழிவகுப்பதாக நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்? அதிலிருந்து எது விலகச் செய்கிறது? நீங்கள் பெரும்பாலும் கற்பிக்கும் (அல்லது கற்கும்) சுற்றமைப்புப்பற்றி சிந்தியுங்கள். நீங்கள் அங்கிருக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? அங்கு இருக்கும்படி ஆவியானவரை நீங்கள் எவ்வாறு மிகத் திறம்பட அழைக்கலாம்? (இரட்சகரின் வழியில் போதித்தல், 7)
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
ஓசியா 2:19–20.
நான் எப்போதும் என் உடன்படிக்கைகளை காத்துக் கொள்ளலாம்.
-
ஓசியா புத்தகத்தில், கர்த்தர் தம் ஜனங்களுடன் செய்த உடன்படிக்கைகளை ஒரு திருமணத்திற்கு ஒப்பிட்டார். இந்த ஒப்பீட்டிலிருந்து கற்றுக்கொள்ள, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மணமகள் மற்றும் மணமகனின் படத்தைப் பார்த்து, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று பரலோக பிதா விரும்புகிறார் என்பதைப் பற்றி பேசலாம். கர்த்தர் நம்மைப் பற்றி எப்படி உணருகிறார் என்பதை விவரிக்கும் வார்த்தைகளை ஓசியா 2:19–20இல் கண்டுபிடிக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நாம் கர்த்தரை நேசிக்கிறோம், அவருக்கு உண்மையாக இருப்போம் என்பதை எப்படிக் காட்டலாம்?
ஓசியா 10:12.
“இது கர்த்தரைத் தேடக் காலமாயிருக்கிறது.”
-
ஓசியா 10:12 விதைத்தல், அறுவடை செய்தல், நேரம் மற்றும் மழை ஆகியவற்றை குறிப்பிட்டு தேவனைத் தேட நம்மை அழைக்கிறது. இந்த வசனத்தைப் படிக்கும் போது, பிள்ளைகள் அவரைத் தேடுவதற்கு என்ன ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றுகின்றன? உதாரணமாக, உங்கள் பிள்ளைகள் ஒரு கடிகாரத்தை வரைந்து, நாள் முழுவதும் வெவ்வேறு நேரங்களில் கர்த்தரைத் தேடுவதற்கான வழிகளைத் திட்டமிடலாம். “Anytime, Anywhere” (Gospel Library) போன்ற பாடல், கர்த்தரைத் தேடுவதற்கு எப்போதும் நல்ல நேரம் என்று கற்பிக்க உதவும்.
-
அல்லது உங்கள் பிள்ளைகள் வசனத்துடன் ஒத்துபோகிற வண்ணம் விதைகளை நடுவது போல பாசாங்கு செய்வது, காய்கறிகளைப் பறிப்பது அல்லது மழையில் நிற்பது போன்ற எளிய செயல்களைச் செய்ய முடியும். ஒரு விதையை நட்டு நற்பயிரை அறுவடை செய்வதை, நீதியுள்ளவர்களாய் வாழ்ந்து தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு ஒப்பிட்டுப் பார்க்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நீங்கள் கர்த்தரைத் தேட முயற்சித்தபோது, அவர் உங்கள் மேல் பொழிந்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி நீங்கள் ஒருவருக்கொருவர் சொல்லலாம்.
ஓசியா 13:4,14
இயேசு கிறிஸ்து என் இரட்சகரும் மீட்பருமானவர்.
-
இயேசு கிறிஸ்துவை அன்றி வேறு இரட்சகர் இல்லை என்ற ஓசியா 13:4இல் உள்ள உண்மையை வலியுறுத்த இயேசு கிறிஸ்து உட்பட பல நபர்களின் படங்களை உங்கள் பிள்ளைகளுக்குக் காட்டலாம். பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் வல்லமையுடைய நபரை உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவராய் சுட்டிக்காட்டலாம். இயேசு கிறிஸ்துவையும் அவரது பாவநிவர்த்தியையும் பற்றிய உங்கள் சாட்சியைப் பகிரவும்.
-
உங்கள் பிள்ளைகள் ஓசியா 13:4, 14இல் இயேசு கிறிஸ்துவை விவரிக்கும் வார்த்தைகளைத் தேடலாம். இந்த வார்த்தைகள் அவரைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கின்றன?? இயேசுவே நமது இரட்சகரும் மீட்பருமானவர் என்று போதிக்கும் மற்ற வேதவாக்கியங்களைக் கண்டறிய, Guide to the Scripturesஐ பயன்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு உதவ எண்ணுங்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
யோவேல் 2:28–29.
பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்துவார்.
-
உங்கள் பிள்ளைகள் ஒரு திரவத்தை ஊற்றி அது சொட்டுச்சொட்டாய் விழுவதையும் ஒழுகுவதையும் வேறுபடுத்திக் காட்டி யோவேல் 2:28–29ஐ அவர்கள் புரிந்துகொள்ள நீங்கள் உதவலாம். ஆவியானவர் நம்மீது “ஊற்றப்படுவார்” என்பதன் அர்த்தம் என்ன?
-
நீங்கள் யோவேல் 2:28–29ஐ ஒன்றாகப் படிக்கும்போது, “உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும்“ என்ற சொற்றொடர்களுக்குப் பதிலாக உங்கள் பிள்ளைகள் தங்கள் பெயர்களைச் செருக அவர்களை அழைக்கலாம். ஆவியானவர் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கண்டறிய யோவான் 14:16; மரோனி 10:5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:17போன்ற வசனங்களைத் தேட அவர்களுக்கு உதவுங்கள்
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.