என்னைப் பின்பற்றி வாருங்கள்
நவம்பர் 9–15. “இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை”: தானியேல் 1-7


“நவம்பர் 9–15. ‘இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை”: தானியேல் 1-7”என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

“நவம்பர் 9–15. ‘இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை,”என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

நேபுகாத்நேச்சார் தானியேல் சொல்வதைக் கவனமாகக் கேட்கிறான்

தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்துக்கு விளக்கமளித்தல்–க்ராண்ட் ரோம்னி க்ளாசன்

தானியேல் 9-15: “இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை”

தானியேல் 1-7

இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிப்பதால் உங்களை கொடிய சூளை அல்லது சிங்கங்களின் குகையில் தள்ளுவதாக யாரும் அச்சுறுத்தவது வெகுவாக நிகழாது. ஆனால் விசுவாசத்தின் சோதனை இல்லாமல் நாம் யாரும் இந்த வாழ்க்கையை முடிப்பதில்லை. வலிமைமிக்க பாபிலோனிய சாம்ராஜ்யத்தால் இளைஞர்களாக சிறைபிடிக்கப்பட்ட தானியேல், சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ போன்றவர்களின் உதாரணத்திலிருந்து நாம் அனைவரும் பயனடையலாம் ( 2 இராஜாக்கள் 24:10–16ஐ பார்க்கவும்). இந்த இளைஞர்கள் வெவ்வேறு விழுமியங்களைக் கொண்ட அறிமுகமில்லாத கலாச்சாரத்தால் சூழப்பட்டு அவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும் சன்மார்க்க மரபுகளையும் கைவிட பெருஞ்சோதனையை எதிர்கொண்டனர். ஆனாலும் அவர்கள் தங்கள் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருந்தார்கள். இதை அவர்கள் எப்படிச் செய்தார்கள்? ஜெபம், உபவாசம், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது, தேவன்மீது நம்பிக்கை வைப்பது, மற்றவர்களுக்கு ஒளியாக இருப்பது போன்ற சிறிய மற்றும் எளிமையான காரியங்களை செய்ய தேவன் நம் அனைவரிடமும் கேட்டவற்றை அவர்கள் செய்தார்கள். எகிப்தில் யோசேப்பு போலவும் பெர்சியாவில் எஸ்தரைப் போலவும் பாபிலோனில் தானியேலும் அவனுடைய நண்பர்களும் தேவன்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள், தேவன் செய்த அற்புதங்கள் இந்நாள் வரை விசுவாசிகளை உணர்த்துகிறது.

தானியேல் புத்தகத்தின் மேலோட்டமான பார்வைக்கு, “தானியேல்” in the Bible Dictionary பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

தானியேல் 1; 36

வேத பாட வகுப்பு சின்னம்
என் விசுவாசம் சோதிக்கப்படும்போது நான் கர்த்தரை நம்ப முடியும்.

ஒரு விதத்தில், நாம் அனைவரும் பாபிலோனில் வாழ்கிறோம். நம்முடைய தராதரங்களை சமரசம் செய்துகொள்வதற்கும், கிறிஸ்துவில் விசுவாசத்தை விட்டு விலகுவதற்கும் நாம் அடிக்கடி சோதனைகளை எதிர்கொள்கிறோம். நீங்கள் தானியேல் 1, 3 , மற்றும் 6 ஆகியவற்றைப் படிக்கும்போது, தானியேல், ஷாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ ஆகியோர் தங்களுக்குத் தவறு எனத்தெரிந்த விஷயங்களைச் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்ட வழிகளைக் கவனியுங்கள். இந்த சூழ்நிலைகளுக்கு அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள்? (தானியேல் 1:10–13; 3:15–18; 6:10ஐ பார்க்கவும்). அவர்களுடைய நம்பிக்கையின் பலன் என்ன? நீங்கள் எதிர்ப்பை எதிர்கொள்ளும்போது கர்த்தரில் நம்பிக்கை வைக்க உதவும் இந்த அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? பின்வரும் கேள்விகளைக் கருத்தில்கொள்ளவும்:

  • தவறு என்று உங்களுக்குத் தெரிந்த ஒன்றைச் செய்ய நீங்கள் எப்போது அழுத்தம் பெற்றீர்கள்? கர்த்தர் தம்முடைய கட்டளைகளைக் கைக்கொண்டதற்காக உங்களை எவ்வாறு ஆசீர்வதித்தார்?

  • உங்கள் நம்பிக்கை நீங்கள் தேடும் அற்புதங்களுக்கு வழிவகுக்காவிட்டால் என்ன செய்வது? (எடுத்துக்காட்டாக, ஆல்மா 14:8–13 பார்க்கவும்). தானியேல் 3:13–18இல் நீங்கள் படித்தவற்றின் அடிப்படையில், இந்த கேள்விக்கு ஷாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ எப்படி பதிலளித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அவர்களின் உதாரணம் எப்படி உங்களின் விசுவாச சோதனைகளுக்கான அணுமுறையை பாதிக்கிறது?

  • உங்களின் நீதியுள்ள தேர்வுகள் எவ்வாறு மற்றவர்களை தேவன் மீது அதிக நம்பிக்கை வைக்க வழிநடத்தும்? (தானியேல் 2:47; 3:28–29ஐ பார்க்கவும்). உங்கள் தேர்ந்தெடுப்புகளால் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை சிந்தித்துப் பாருங்கள்.

Dieter F. Uchtdorf, “Be Not Afraid, Only Believe,” Liahona, Nov. 2015, 76–79. ஐயும் பார்க்கவும்.

அனைவரையும் ஈடுபடுத்த முயற்சி செய்யுங்கள். இயேசு கிறிஸ்து “அனைவரையும் தம்மிடத்தில் வருமாறும் அவருடைய நன்மையில் புசிக்குமாறும்” அழைக்கிறார் (2 நேபி 26:33). உங்கள் குடும்பத்திற்கோ அல்லது சபை வகுப்பிற்கோ நீங்கள் கற்பிக்கிறீர்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான வழிகளைப் பற்றி சிந்தியுங்கள். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு நபருக்கும் நீங்கள் ஒரு வசனத்தின் ஒரு பகுதியையோ, ஒரு மாநாட்டுச் செய்தியின் ஒரு பகுதியையோ அல்லது ஒரு பாடலிலிருந்து ஒரு வசனத்தையோ சிந்திக்கவும் கருத்து தெரிவிக்கவும் கொடுக்கலாம். பங்கேற்க யாரையும் அழுத்தம் கொடுக்காதீர்கள், ஆனால் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவும்.

உலையில் சாத்ராக்கும், மேஷாக்கும், ஆபேத்-நேகோவும், நான்காவது உருவம் ஒன்றும்

எரிகிற அக்கினிச்சூளையில் சாத்ராக்கும்,மேஷாக்கும், ஆபேத்-நேகோவும்,-வில்லியம் மௌகன்

தானியேல் 2

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியின்மேல் தேவனுடைய ராஜ்யம்.

நேபுகாத்நேச்சாரின் சொப்பனம் வருங்கால உலக ராஜ்யங்களையும், “என்றென்றைக்கும் அழியாது” என்ற தேவனுடைய எதிர்கால ராஜ்யத்தையும் முன்னறிவிப்பதை வெளிப்பாடு மூலம் தானியேல் கண்டான் ( தானியேல் 2:44). மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் “மனுஷனால் உண்டாக்கப்படாமல் பரலோக தேவனால் ஏற்படுத்தப்பட்டு கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்த ஒரு கல்லாக உருண்டு, பூமியை நிரப்பும் தீர்க்கதரிசனமுறைக்கப்பட்ட பிற்கால ராஜ்யம் இந்த சபை தான்” என்று கற்பித்தார் (“Why the Church,” Liahona Nov. 2015, 111). தானியேல் 2:34–35, 44–45இல் கல்லின் விவரிப்புகளை நீங்கள் வாசிக்கும்போது தேவனின் பிற்கால ராஜ்யத்தைப்பற்றி சிந்தியுங்கள். இந்த தீர்க்கதரிசனம் நிறைவேற உதவுவதில் உங்கள் பங்கு என்ன?

Hark, All Ye Nations!,” Hymns, no. 264; “God Gave Them Knowledge” (video), ChurchofJesusChrist.org.

13:49

God Gave Them Knowledge

தானியேல் 2: 1-30ஐயும் பார்க்கவும்.

வெளிப்பாடு பெறுவதற்கு ஆவிக்குரிய ஆயத்தம் தேவை

தானியேல் 2:1–15ஐ நீங்கள் மறுபரிசீலனை செய்யும்போது, ​​தானியேலின் நிலையில் நீங்கள் இருப்பதைக் கண்டால் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்று சிந்தியுங்கள். தானியேல் என்ன செய்தான்? (தானியேல் 2:16 -18 பார்க்கவும்). தேவன் தானியேலை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பதைப் பற்றி தானியேல் 1:17இலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? கர்த்தருடைய உதவியைப் பெற்ற தானியேலின் வார்த்தைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (தானியேல் 2:19 -30 ஐ பார்க்கவும்).

தானியேல் 7:13-14

இயேசு கிறிஸ்து நித்திய பிதாவின் குமாரன்.

இரட்சகரின் பூமிக்குரிய ஊழியத்தின் போது, ​​பல யூதர்கள் தானியேல் 7:13இலிருந்து “மனுஷகுமாரன்“ என்ற பட்டத்தை வரவிருக்கும் மேசியாவைக் குறிக்க கருதினர். தானியேல் 7:13–14இலிருந்து மேசியாவைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (மோசே 6:57ஐயும் பார்க்கவும்).

இரட்சகர் தம்மை “மனுஷகுமாரன்“ என்று அடிக்கடி குறிப்பிடுகிறார். சில உதாரணங்களைச் சிந்தித்துப் பாருங்கள்: மத்தேயு 25:31; மாற்கு 9:31; 10:45. இந்த வசனங்களில் அவர் தம்மைப் பற்றி என்ன போதிக்கிறார்? மாற்கு 14:61–64இல் இயேசு தம்முடைய அநித்திய வாழ்வின் கடைசி நாளில் இந்தப் பட்டத்தைப் பயன்படுத்தினார். அவருடைய பிரகடனத்தைக் கேட்ட ஜனங்களின் எதிர்வினையைக் கவனியுங்கள். மனுஷகுமாரனைப் பற்றிய தானியேலின் தீர்க்கதரிசனம், மாற்கு 15இல் அவருக்கு நடந்ததை பற்றிய உங்கள் உணர்வுகளை எவ்வாறு பாதிக்கிறது? ?

இயேசு தாம் “மனுஷகுமாரன்” என்று அறிவித்ததற்காக வெறுக்கப்பட்டதைப் போலவே, சத்தியத்தை அறிவித்ததற்காக நீங்கள் துன்புறுத்தலை சந்திக்க நேரிடும். தானியேல் 7:13–14இல் உள்ள தீர்க்கதரிசனத்தை கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:29, 46இல் உள்ள வாக்குத்தத்தங்களுடன் ஒப்பிடவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:65, Guide to the Scriptures, “Son of Man,” Gospel Library,” ஐயும் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 01

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

தானியேல் 1; 36

கடினமாக இருந்தாலும் சரியானதைச் செய்ய இயேசு எனக்கு உதவுவார்.

  • தானியேல் புத்தகத்தில் உள்ள உற்சாகமூட்டும் கதைகளில் இருந்து உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள உதவ தானியேல் 1, 3, மற்றும் 6இல் உள்ள நிகழ்வுகளின் படங்களை நீங்கள் காணலாம் (இந்த வார நிகழ்ச்சிப் பக்கம் அல்லது Gospel Art Book, எண். 23, 2526ஐ பார்க்கவும்). பிறகு, நீங்கள் படங்களைக் கீழ்மேலாக வைத்து, ஒரு குழந்தையை அழைத்து அதில் ஒன்றை மேற்பக்கமாய் திருப்பவும், அது பிரதிபலிக்கும் கதையைப் பற்றி பேச அழைக்கலாம். (உதவிக்கு பழைய ஏற்பாட்டு கதைகளில் 154–56, 160–62, 163–65 வரையிலுள்ள “Daniel and His Friends,” “Shadrach, Meshach, and Abed-nego,” மற்றும் “Daniel and the Lions’ Den ஆகியவைகளை பார்க்கவும்).

    1:39

    Daniel and His Friends

    1:39

    Shadrach, Meshach, and Abed-nego

    1:45

    Daniel and the Lions’ Den

  • தானியேலும் அவருடைய நண்பர்களும் தானியேல் 1, 3, மற்றும் 6இல் இருந்ததைப் போல, உங்கள் பிள்ளைகளும் தவறான தேர்வு செய்ய தாங்கள் அழுத்தம் பெறும் சூழ்நிலைகளைப் பற்றி சிந்திக்க உதவுங்கள். கடினமாக இருந்தபோதும் சரியான தேர்வு செய்ததற்காக நீங்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். “Choose the Right” (Hymns, no. 239) போன்ற இந்தத் தலைப்புடன் தொடர்புடைய பாடலையும் நீங்கள் ஒன்றாகப் பாடலாம்.

மாமிசம் சாப்பிட மறுக்கும் இளைஞர்கள்

ஞான வார்த்தைகளை நம்புதல்

தானியேல் 1: 1-17

பரலோக பிதா நாம் நம் உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார்.

  • தானியேலும் அவனது நண்பர்களும் இராஜா கொடுக்கும் மாமிசத்தையும் மதுவையும் உட்கொள்ளாமலிருந்த கதையைப் படிக்கும்போது, பரலோக பிதா இன்று நமக்கு வழங்கியிருக்கும் ஆரோக்கியத்தின் நியாயப்பிரமாணத்தைப் பற்றிய சம்பாஷணையை தூண்டக்கூடும் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89ஐ பார்க்கவும்). தானியேலும் அவனது நண்பர்களும் பெற்ற ஆசீர்வாதங்களை நீங்கள் ஞான வார்த்தையில் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் (Daniel 1:15–17மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:18–21 பார்க்கவும்).

தானியேல் 2

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியின்மேல் தேவனுடைய ராஜ்யம்.

  • தானியேல் 2:31–35, 44–45ஐ உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் படிக்கும்போது, ​​நேபுகாத்நேச்சரின் சொப்பனத்தின் படத்தை வரைய அவர்களை அழைக்கலாம். சொப்பனத்தில் இருந்த கல் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையை பிரதிபலிக்கிறது. இந்தச் சொப்பனத்தைக் கொண்டு சபையைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? பிற்காலங்களில் பரலோக பிதா தம்முடைய சபையை ஸ்தாபிக்க செய்த சில காரியங்களை உங்கள் பிள்ளைகள் சொல்லலாம். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் சபையினுடைய மறுஸ்தாபித்தலின் நிகழ்வுகள் பற்றிய படங்களை காண்பிக்கலாம் (Gospel Art Book, nos. 90–95ஐ பார்க்கவும்).

தானியேல் 6

நான் அடிக்கடி ஜெபிக்க வேண்டும் என்று பரலோக பிதா விரும்புகிறார்.

  • பரலோக பிதாவிடம் ஜெபிப்பது ஏன் தானியேலுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது? நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தானியேல் 6ஐ ஒன்றாகப் படிக்கும்போது அந்தக் கேள்வியைப் பற்றிப் பேசலாம். பின்பு ஜெபம் செய்வது ஏன் முக்கியம் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் சொல்லலாம். உங்கள் பிள்ளைகள் பல்வேறு சூழ்நிலைகளில் பிரார்த்தனை செய்யும் படங்களை வரைய விரும்பலாம். நாம் எங்கிருந்தாலும் அல்லது நமக்கு என்ன தேவைப்பட்டாலும் பரலோக பிதாவிடம் ஜெபிக்கலாம் என்பதை ஒருவருக்கொருவர் கற்பிக்க அவர்கள் தங்கள் வரைபடங்களைப் பயன்படுத்தலாம்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

தானியேல் சிங்கக் கூட்டத்திற்கு முன்னால் நிற்கிறான்.

சிங்கக்குகையில் தானியேல்-பிரிட்டன் ரிவியர்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: நான் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றத் தேர்ந்தெடுக்கும்போது தேவன் என்னை ஆசீர்வதிப்பார்.