என்னைப் பின்பற்றி வாருங்கள்
நவம்பர் 30–டிசம்பர் 6 “அவர் கிருபைசெய்ய விரும்புகிறார்”: மீகா; நாகூம்; ஆபகூக்; செப்பனியா


நவம்பர் 30–டிசம்பர் 6 “அவர் கிருபைசெய்ய விரும்புகிறார்”: மீகா; நாகூம்; ஆபகூக்; செப்பனியா,‘என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)

நவம்பர் 30–டிசம்பர் 6 “அவர் கிருபைசெய்ய விரும்புகிறார்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

ஒருவன் கரங்களை விரித்து நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைப் பார்க்கிறான்

ஆதியிலே வார்த்தை இருந்தது–இவா டிமோத்தி

நவம்பர் 30–டிசம்பர் 6: “அவர் கிருபைசெய்ய விரும்புகிறார்”

மீகா; நாகூம்; ஆபகூக்; செப்பனியா

பழைய ஏற்பாட்டை வாசித்தல் என்பது பெரும்பாலும் அழிவைப்பற்றிய தீர்க்கதரிசனங்களை வாசிப்பதாகும். தம்முடைய நியாயத்தீர்ப்புகள் பற்றி துன்மார்க்கரை எச்சரிக்க கர்த்தர் அடிக்கடி தீர்க்கதரிசிகளை அழைத்தார். மீகா, நாகூம், ஆபகூக், மற்றும் செப்பனியாவின் ஊழியங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள். அந்த நேரத்தில், நினிவே, பாபிலோன் மற்றும் எருசலேம் ஆகிய வலுவானதாகவும் வல்லமை வாய்ந்ததாகவும் தோன்றிய நகரங்களின் வீழ்ச்சியை இந்த தீர்க்கதரிசிகள் பயங்கரமான விவரங்களுடன் முன்னறிவித்தனர். ஆனால் அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு. இன்று இந்த தீர்க்கதரிசனங்களைப் படிப்பது ஏன் மதிப்புமிக்கது?

அந்த பெருமைமிக்க, பொல்லாத நகரங்கள் அழிக்கப்பட்டாலும், பெருமைமிக்க துன்மார்க்கம் நீடிக்கிறது. அவற்றின் தடயங்களை நம் இருதயத்தில் கூட நாம் கண்டறியலாம். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் இந்த தீமைகளிலிருந்து நாம் எவ்வாறு திரும்ப முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுடைய வார்த்தைகளை இன்றும் நாம் படிக்க ஒருவேளை இது ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் வெறும் அழிவின் தீர்க்கதரிசிகள் அல்ல, அவர்கள் விடுதலையின் தீர்க்கதரிசிகள். கிறிஸ்துவிடம் வந்து அவருடைய மன்னிப்பைப் பெறுவதற்கான அழைப்புகளால் அழிவின் விளக்கங்கள் மென்மையாகின்றன.` மீகா போதித்தபடி, கர்த்தர் நம்மைக் கண்டனம் செய்வதில் மகிழ்ச்சியடையவில்லை, ஆனால் “அவர் கிருபை செய்ய விரும்புகிறார்”(மீகா 7:18). பூர்வகாலத்தில் இது கர்த்தருடைய வழியாக இருந்தது, அது இன்றும் அவருடைய வழி. “அவருடைய வழிகள் நித்தியமானவை” ( ஆபகூக் 3: 6).

இந்த புத்தகங்கள்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு, “மீகா,” “நாகூம்,” “ஆபகூக்,” மற்றும் “செப்பனியா” Bible Dictionary பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

மீகா 6:1–8

“கர்த்தர் உன்னிடம் என்ன கேட்கிறார்?”

“ கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வது” எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய மீகா நம்மை அழைக்கிறான்( மீகா 6:6). உங்கள் வாழ்க்கையை மதிப்பிடும்போது கர்த்தருக்கு என்ன முக்கியம் என்பதைப்பற்றி வசனங்கள் 6–8 உங்களுக்கு என்ன அறிவுறுத்துகிறது?

டேல் ஜி. ரென்லன்ட், “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக தாழ்மையாய் நட,” லியஹோனா, நவம்பர் 2020, 109–12 ஐயும் பார்க்கவும்.

ஒரு கோட்டையின் கல் சுவர்கள்

“கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை” (நாகூம் 1:7).

நாகூம் 1

கர்த்தர் வல்லமையும், இரக்கமுமுள்ளவர்.

இஸ்ரவேலை சிதறடித்து யூதாவைக் கொடுமைப்படுத்திய வன்முறை சாம்ராஜ்யமான அசீரியாவின் தலைநகரான நினிவேயின் அழிவை முன்னறிவிப்பதே நாகூமின் நோக்கம். தேவனின் கோபத்தையும் ஒப்பில்லா வல்லமையையும் விவரிப்பதன் மூலம் நாகூம் தொடங்கினான், ஆனால் அவன் தேவனின் இரக்கம் மற்றும் நன்மையைப்பற்றியும் பேசினான். இந்த ஒவ்வொரு பண்புகளையும் நீங்கள் கவனிக்கும் தேவனின் மற்ற பண்புகளையும் புரிந்துகொள்ள உதவியாக அதிகாரம் 1இல் உள்ள வசனங்களைத் தேடுங்கள். கர்த்தரைப்பற்றிய இந்தக் காரியங்கள் ஒவ்வொன்றையும் அறிந்துகொள்ள இது முக்கியமானதென ஏன் உணருகிறீர்கள்?

ஆபகூக்

வேத பாட வகுப்பு சின்னம்
கர்த்தருடைய சித்தத்தையும் அவருடைய நேரத்தையும் என்னால் நம்ப முடியும்.

தீர்க்கதரிசிகள் கூட சில நேரங்களில் கர்த்தருடைய வழிகளைப்பற்றி கேள்விகளை வைத்திருக்கின்றனர். யூதாவில் பரவலான துன்மார்க்கத்தின் போது வாழ்ந்த ஆபகூக், கர்த்தரிடம் கேள்விகளுடன் தனது பதிவைத் தொடங்கினான் (ஆபகூக் 1: 1–4 பார்க்கவும்). ஆபகூக்கின் அக்கறைகளை நீங்கள் எவ்வாறு சுருக்கமாகக் கூறுவீர்கள்? இதுபோன்ற என்ன கேள்விகளை இன்று ஜனங்கள் தேவனைப் பற்றி கேட்கிறார்கள்? நீங்கள் எப்போதாவது இது போன்ற உணர்வுகளை பெற்றிருக்கிறீர்களா? மாற்கு 4:37–38 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:1–6 போன்ற வேதவாக்கியங்களில் உள்ள மற்றவைகளுடன் அவருடைய கேள்விகளை நீங்கள் ஒப்பிடலாம்.

யூதாவைத் தண்டிக்க கல்தேயர்களை (பாபிலோனியர்களை) அனுப்புவேன் என்று கூறி ஆபகூக்கின் கேள்விகளுக்கு கர்த்தர் பதிலளித்தார் (ஆபகூக் 1: 5–11பார்க்கவும்). ஆனால் ஆபகூக் இன்னும் கலக்கமடைந்தான், ஏனென்றால் “துன்மார்க்கனைப் [பாபிலோன்] பார்க்கிலும் நீதிமானை [யூதா] விழுங்கும்போது” (வசனங்கள் 12–17 பார்க்கவும்) கர்த்தர் சும்மாயிருப்பது அநியாயமாகத் தோன்றியது. உங்களுக்கு விடை தெரியாத கேள்விகள் இருக்கும்போது கர்த்தரை நம்புவதற்கு உங்களைத் தூண்டும் ஆபகூக் 2: 1-4இல் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? (மார்க் 4:39–40; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7–8; “God Will Lift Us Up” [video], Gospel Library ஆகியவற்றையும் பார்க்கவும்).

4:59

God Will Lift Us Up

அதிகாரம் 3 ஆபகூக்கின் துதியும் விசுவாசமுமான ஜெபம் அதிகாரம் 3இல் உள்ள ஆபகூக்கின் தொனி, அதிகாரம் 1இல் இருந்து எப்படி வேறுபட்டது? வசனங்கள் 17-19ஐ சிந்திக்க உங்களுக்கு உதவும் ஒரு யோசனை இங்கே உள்ளது: தேவன் உங்களுக்கு வழங்கிய லௌகீக மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களின் பட்டியலை உருவாக்கவும். நீங்கள் லௌகீக ஆசீர்வாதங்களை இழந்துவிட்டீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். மற்ற ஆசீர்வாதங்களைப் பற்றி அது உங்களை என்ன உணரச்செய்யும்? வசனம் 17இல் விவரிக்கப்பட்டுள்ளதைப் போன்ற கஷ்டங்களின் போது “கர்த்தருக்குள் மகிழ்வது” (வசனம் 18) ஏன் கடினமாக இருக்கலாம்? வாழ்க்கை நியாயமற்றதாகத் தோன்றினாலும், நீங்கள் எவ்வாறு தேவன்மீது அதிக நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கெரிட் டபிள்யூ. காங், “நமது நன்மைக்கு ஏதுவாக சகல காரியங்களும்,” லியஹோனா, மே 2024, 41–44; “Lead, Kindly Light,” Hymns, no. 97; Topics and Questions, “Seeking Answers to Questions,” Gospel Library யும் பார்க்கவும்.

பொறுமையாக இருங்கள். சில நேரங்களில் நம்முடைய கேள்விகளுக்கான பதில்களை இப்போதே பெற விரும்புகிறோம், ஆனால் ஆவிக்குரிய உள்கருத்துகள் நேரம் பிடிக்கும், கட்டாயப்படுத்த முடியாது. கர்த்தர் ஆபகூக்கிடம் சொன்னது போல், “அதற்குக் காத்திரு, அது நிச்சயமாய் வரும்.”(ஆபகூக் 2: 3).

செப்பனியா

“தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தரைத் தேடுங்கள்.”

செப்பனியாவின் தீர்க்கதரிசனங்களைப் படிக்கும்போது, ​​அழிவுக்கு வழிவகுத்த மனப்பாங்குகளையும் நடத்தைகளையும் கவனியுங்கள்- குறிப்பாக செப்பனியா 1:4-6, 12; 2:8, 10, 15; 3:1–4ஐ பார்க்கவும். தேவன் பாதுகாக்கும் மக்களின் குணாதிசயங்களைத் தேடுங்கள், செப்பனியா 2:1–3; 3:12–13, 18–19ஐ பார்க்கவும். இந்த வசனங்களில் கர்த்தர் உங்களுக்கு என்ன செய்தி வைத்திருக்கிறார் என உணர்கிறீர்கள்?

செப்பனியா 3:14–20.

கர்த்தர் சீயோனில் தம்முடைய ஜனங்களோடு களிகூருவார்.

செப்பனியா 3:14–20ஐப் படித்த பிறகு, இந்த வாக்கியத்தை நீங்கள் எத்தனை வழிகளில் முடிக்கலாம் என்பதைப் பாருங்கள்: “மகிழ்ச்சியாயிருந்து முழு இருதயத்தோடும் களிகூருங்கள்” ஏனெனில் … மகிழ்ச்சியடைவதற்கு இந்தக் காரணங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? இந்த வசனங்களை 3 நேபி 17இல் விவரிக்கப்பட்டுள்ள அனுபவங்களுடன் ஒப்பிட்டு, இயேசு கிறிஸ்து தம்முடைய ஜனங்களைப்பற்றி, உங்களையும் சேர்த்து எப்படி உணருகிறார் என்று சிந்தித்து பாருங்கள்.

கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம்

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

மீகா 5:2.

இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார்.

  • பெத்லகேமில் குழந்தை இயேசுவைக் கண்டுபிடிக்க ஞானிகளுக்கு உதவியது மீகாவின் தீர்க்கதரிசனம் என்பது உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியாமலிருக்கலாம். மீகா 5:2 மற்றும் மத்தேயு 2:1–6 ஆகியவற்றைப் பயன்படுத்தி, உங்கள் பிள்ளைகள் தங்கள் அனுபவத்தை மீண்டும் வெளிப்படுத்தலாம். இயேசுவின் பிறப்பு ஏன் மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம், அவர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் அதைப் பற்றி அறிந்திருந்தனர்.

மூன்று ஞானிகள் புதிய நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள்

பரிசுத்த குழந்தை பிறந்தது–டானா வூட்

நாகூம் 1:7.

“கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை”.

  • நாகூம் 1:7ஐப் படித்த பிறகு, உங்கள் பிள்ளைகள் ஒரு எளிய “அரணையோ“ அல்லது கோட்டையையோ செய்யலாம் அல்லது வரையலாம் (இந்த பட சுருக்கத்தில் ஒன்றின் படம் உள்ளது). ஜனங்களுக்கு ஒரு கோட்டை தேவைப்படுவதற்கான சில காரணங்கள் யாவை? நம் நாளை “இக்கட்டின் நாளாக” ஆக்குவது எது? இயேசு கிறிஸ்து எப்படி நமக்கு அரணாக இருக்கிறார்?

ஆபகூக் 2:3

தேவன் தமது வாக்குறுதிகளை என்றுமே நிறைவேற்றுவார்.

  • ஆபகூக் 2:3ஐ அறிமுகப்படுத்த பழுக்க வேண்டிய பழத்தையோ அல்லது சுட வேண்டிய மாவையோ போல காத்திருந்த பிறகுதான் நன்மை பயக்கும் விஷயங்களைப் பற்றி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேசலாம். பழம் அல்லது மாவை அது தயாராகும் முன் சாப்பிட முயற்சித்தால் என்ன நடக்கும்? அப்போது உலகத்தில் உள்ள அக்கிரமத்தை கர்த்தர் எப்போது நிறுத்துவார் என்பதை அறிய விரும்பின ஆபகூக் தீர்க்கதரிசியைப் பற்றி பின்பு நீங்கள் பேசலாம். ஆபகூக் 2:3இலுள்ள கர்த்தருடைய பதிலைப் படியுங்கள். தேவன் வாக்குத்தத்தம்பண்ணின விஷயங்களைப் பற்றி சிந்திக்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவலாம். ஒவ்வொரு உதாரணத்துடனும், நீங்கள் ஒன்றாகச் சொல்லலாம், “அதற்குக் காத்திரு, அது நிச்சயமாய் வரும்.”.

ஆபகூக் 2:14.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவால் பூமியை நிரப்ப என்னால் உதவ முடியும்.

  • ஆபகூக் 2:14ஐ விளக்குவதற்கு, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஒரு ஜாடி அல்லது வேறு பாத்திரத்தில் இயேசு செய்த அல்லது கற்பித்த விஷயங்களைக் குறிக்கும் படங்களையோ வார்த்தைகளையோ கொண்டு நிரப்பலாம். தேவனைப் பற்றிய அறிவால் உலகை நிரப்ப நாம் எவ்வாறு உதவலாம்?

  • உங்கள் பிள்ளைகளுக்கு உலக வரைபடத்தையும் காட்டலாம் (Church History Maps, no. 7, “Map of the World” பார்க்கவும்). அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் அவர்களுக்குத் தெரிந்த ஊழியக்காரர்கள் சேவை செய்த இடங்களைக் கண்டறிய உதவுங்கள். சுவிசேஷத்தைப் பகிர்வது பற்றிய “We’ll Bring the World His Truth” (Children’s Songbook, 172–73) பாடலையும் நீங்கள் பாடலாம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாம் மற்றவர்களுக்கு என்ன சொல்லலாம்?

செப்பனியா 3:14–20.

இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களுடன் களிகூருகிறார்.

  • செப்பனியா 3:14-20இல், உங்கள் பிள்ளைகள் “முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு” என்று அவர்களைப் பாட வைக்கிற காரியம் ஏதேனும் தேடலாம். ஒருவேளை நீங்கள் சில மகிழ்ச்சியான துதிப்பாடல்களையோ அல்லது பாடல்களையோ ஒன்றாகப் பாடி இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நீங்கள் காணும் மகிழ்ச்சியைப் பற்றி பேசலாம்.

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

குழந்தைகளை பார்த்து இயேசு புன்னகைத்தல்

அவர் அவர்களுடைய சிறுபிள்ளைகளை ஒவ்வொருவராய் எடுத்தார்-கேசி சைல்ட்ஸ்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: கர்த்தரைத் தேடுங்கள்