“டிசம்பர் 14–20. “நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்’: மல்கியா,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“டிசம்பர் 14–20. “நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
டிசம்பர் 14–20: “நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்”
மல்கியா
“நான் உங்களைச் சிநேகித்தேன்” என்று கர்த்தர் தம் ஜனத்திடம் மல்கியா தீர்க்கதரிசி மூலம் கூறினார். ஆனால், பல தலைமுறை துன்பங்களையும் சிறைப்பிடிப்புகளையும் அனுபவித்த இஸ்ரவேலர், கர்த்தரை நோக்கி, “எங்களை எப்படிச் சிநேகித்தீர்?” என கேட்டார்கள். மல்கியா 1:2). எல்லாவற்றினூடே இஸ்ரவேல் கடந்து வந்தபின், பண்டைய இஸ்ரவேலின் வரலாறு உண்மையில் தேவனின் உடன்படிக்கை ஜனம் மீதான அன்பின் கதையா என்று அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம். சில வழிகளில், மனுஷ பெலவீனத்தினாலும் கலகத்தினாலுமான கதையாக இதைப் பார்ப்பது எளிது. ஆயினும் அவை அனைத்திலும் கூட, தேவன் ஒருபோதும் அன்பினால் நெருங்கிவருவதை நிறுத்தவில்லை. யாக்கோபின் புத்திரர் தங்கள் சகோதரன் யோசேப்பிடம் தவறாக நடந்துகொண்டபோதும், கர்த்தர் அவர்களைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றினார் (ஆதியாகமம் 45:4–8ஐ பார்க்கவும்). இஸ்ரவேலர் வனாந்தரத்தில் முணுமுணுத்தபோது, தேவன் அவர்களுக்கு மன்னாவைக் கொடுத்தார் (யாத்திராகமம் 16:1–4ஐ பார்க்கவும்). இஸ்ரவேலர் அவரைக் கைவிட்டு, மற்ற தேவர்களிடம் திரும்பி, சிதறடிக்கப்பட்டபோதும் அவர்கள் மனந்திரும்பினால் தேவன் அவர்களைக் கூட்டிச்சேர்த்து “மிகுந்த இரக்கத்துடன்” மீட்டுக்கொள்வதாக வாக்குத்தத்தம்பண்ணினார் (ஏசாயா 54:7ஐ பார்க்கவும்). உண்மையிலே, பழைய ஏற்பாடு தேவனின் பொறுமையையும், நீடித்த அன்பையும்பற்றிய கதை. அந்த கதை இன்றும் தொடர்கிறது. மல்கியா “நீதியின் சூரியன்“ என்று அழைத்த இயேசு கிறிஸ்து “அவரது சிறகுகளில் குணப்படுத்துதலுடன்“ வந்திருக்கிறார் (மல்கியா 4:2). பண்டைய இஸ்ரவேலுக்கும் நம் அனைவருக்கும் தேவன் அன்பு காட்டியதற்கு அவர் மிகப் பெரிய சான்று.
மல்கியா புத்தகத்தைப்பற்றிய கூடுதல் தகவலுக்கு, “Bible Dictionary, மல்கியா” பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
மல்கியா 1–4
“என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது நான் உங்களிடத்திற்குத் திரும்புவேன்”
மல்கியாவின் நாளில், இஸ்ரவேலர் ஏற்கனவே எருசலேமில் உள்ள ஆலயத்தை மீண்டும் கட்டியிருந்தார்கள், ஆனால் ஒரு ஜனமாக அவர்கள் கர்த்தருடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. நீங்கள் மல்கியாவைப் படிக்கும்போது, கர்த்தர் இஸ்ரவேலரிடம் கேட்ட கேள்விகள் அல்லது அவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளைத் தேடுங்கள். கர்த்தருடனான உங்கள் உறவை மதிப்பிடுவதற்கும் அவருடன் நெருங்கி வருவதற்கும் உங்களுக்கு உதவ இதே போன்ற கேள்விகளைக் கேளுங்கள் (சில எடுத்துக்காட்டுகள் கீழே பரிந்துரைக்கப்படுகின்றன).
-
என் மீதான கர்த்தருடைய அன்பை நான் எப்படி உணர்ந்தேன்? (மல்கியா 1: 2 ஐ பார்க்கவும்).
-
கர்த்தருக்கு நான் கொடுத்த காணிக்கைகள் அவரை உண்மையிலேயே கனம் பண்ணுகிறதா? (மல்கியா 1: 6–11ஐ பார்க்கவும்).
-
எந்த வழிகளில் நான் கர்த்தரிடம் “திரும்ப” வேண்டும்? (மல்கியா 3: 7 ஐ பார்க்கவும்).
-
நான் எந்த வகையிலாகிலும் தேவனிடத்தில் திருடுகிறேனா? (மல்கியா 3:8–11ஐ பார்க்கவும்).
-
கடினமான காலங்களில் என் மனநிலை கர்த்தர் மீதான என் உணர்வுகளை எவ்வாறு பிரதிபலிக்கிறது? ( மல்கியா 3:13–15ஐ பார்க்கவும்; 2:17ஐயும் பார்க்கவும்).
மல்கியா 1:6–14
கர்த்தர் “சுத்தமான காணிக்கையைக்” கேட்கிறார்.
மல்கியா 1இல் விவரிக்கப்பட்டுள்ள காணிக்கைகளைப் பற்றி நீங்கள் படிக்கும்போது, ஆசாரியர்கள் செலுத்தும் பலிகளைப் பற்றி நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள்? கர்த்தர் மீதான ஆசாரியர்களின் உணர்வுகளைப்பற்றி இந்த பலிகள் என்ன கூறுகின்றன? (மல்கியா 1:13ஐ பார்க்கவும்). நீங்கள் கர்த்தருக்குச் செய்யும் காணிக்கைகளையோ அல்லது தியாகங்களையோ பட்டியலிட எண்ணுங்கள். பட்டியலில் உள்ள ஒவ்வொரு காரியமும் “அசுத்தமான காணிக்கையாகயோ அல்லது “சுத்தமான காணிக்கையாகவோ எது அவைகளை மாற்றக்கூடும் என்று சிந்தியுங்கள் (மல்கியா 1:7, 11)).
மல்கியா 3:8–12
நான் தசமபாகம் செலுத்தி என் விசுவாசத்தைக் காட்டும்போது கர்த்தர் வானத்தின் பலகணிகளை திறக்கிறார்.
நீங்கள் தசமபாகம் கொடுக்கிறீர்கள் என்பதை சமீபத்தில் அறிந்த ஒரு நண்பர் உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். “ஏன் அதைச் செய்கிறீர்கள்?“ என்று உங்கள் நண்பர் கேட்கிறார். மல்கியா 3:8–12ஐ நீங்கள் வாசிக்கும்போது இதைப்பற்றி சிந்தியுங்கள் . உங்கள் நண்பரின் கேள்விக்கு பதிலளிக்க உதவக்கூடியது என்னவற்றை அங்கு காண்கிறீர்கள்? தசமபாகம் பற்றி உங்கள் நண்பர் வேறு என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? மேலும் உதவிக்கு, மூப்பர் நீல் எல். ஆண்டர்சனின் செய்தியானதசமபாகம்: பரலோகத்தின் பலகணிகளைத் திறத்தல்”லியஹோனா, நவம்பர் 2023, 32–35), போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடலாம்:
-
நாம் ஏன் தசமபாகம் செலுத்த வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்?
-
தசமபாகம் கொடுப்பதிலிருந்து ஒருவரை எது தடுக்கலாம், அந்தத் தடைகளை நாம் எவ்வாறு மேற்கொள்வது?
-
தசமபாகம் கொடுப்பது எப்படி பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது?
நீங்கள் தசமபாகம் செலுத்தும்போது கர்த்தர் உங்களை எவ்வாறு ஆசீர்வதித்தார் என்பதை உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாம். “Lesson Number 1—Significant but Subtle Blessings” in Elder David A. Bednar’s message “The Windows of Heaven” (Liahona, Nov. 2013, 17–18).என்ற தலைப்பில் நீங்கள் யோசனைகளைக் காணலாம். தசமபாகம் கொடுப்பதால் நாம் எப்படிப்பட்டவர்களாக மாறுகிறோம்?
“வானத்தின் பலகணிகள் திறக்கும்“ (வசனம் 10) என்ற சொற்றொடர் எதைக் குறிக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஒருவேளை நீங்கள் ஒரு பலகணிக்குவெளியே பார்த்து ஜன்னல்களின் நோக்கங்களைப் பற்றி சிந்திக்கலாம். நாம் தசமபாகம் செலுத்தும்போது கர்த்தர் நம்மை எவ்வாறு ஆசீர்வதிப்பார் என்பதை விவரிக்க “வானத்தின் பலகணிகள்” ஏன் ஒரு சிறந்த வழியாகும்?
கர்த்லாந்து ஆலயத்தில் தரிசனம்–காரி இ. ஸ்மித்
மல்கியா 4:5-6
“தீர்க்கதரிசி எலியாவை நான் அனுப்புவேன்.”
மரோனி ஜோசப் ஸ்மித்துக்கு மல்கியா 4: 5–6 மேற்கோள் காட்டியபோது, அது வேதாகமத்தில் வாசிக்கப்படும் விதத்திலிருந்து சிறிது மாற்றத்தோடு வாசித்தான் ( ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:36-39). இந்த தீர்க்கதரிசனத்தைப்பற்றிய நமது புரிதலுக்கு மரோனி செய்த மாறுதல் என்ன சேர்க்கிறது? குறிப்பாக, பின்வருபவற்றைப் போன்ற கேள்விகளைப்பற்றி சிந்தியுங்கள்.
-
“பிதாக்கள்“ யார்? (உபாகமம் 29:13ஐ பார்க்கவும்). அவர்களுக்கு என்ன வாக்குத்தத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன? (ஆபிரகாம் 2:9–11ஐ பார்க்கவும்). இந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள்?
-
உங்கள் இருதயத்தை உங்கள் மூதாதையர்களிடம் திருப்ப என்ன அனுபவங்கள் உங்களுக்கு உதவியது? பரலோக பிதாவின் திட்டத்திற்கு அது ஏன் மிகவும் முக்கியமானது?
எலியாவின் வருகை மற்றும் இந்தத் தீர்க்கதரிசனம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிய கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:13–16 மற்றும் டி. டாட் கிறிஸ்டோபர்சன், “முத்திரிக்கும் வல்லமை” (லியாஹோனா, நவம்பர் 2023, 19–22) ஆகியவற்றைப் பார்க்கவும். எலியா வந்ததற்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
கெரிட் டபுள்யு.காங், “நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது,” லியாஹோனா, மே 2022, 43–46; “Turn Your Hearts,” Hymns, no. 291; “The Sealing Power” (காணொலி), ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.
The Sealing Power
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
மல்கியா 1:2.
கர்த்தர் என்னை நேசிக்கிறார்.
-
மல்கியா 1: 2ல் காணப்படும், “[கர்த்தர்] நம்மை எப்படி சிநேகித்தார்?” என்ற கேள்விக்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எவ்வாறு பதிலளிப்பீர்கள். அவர் உங்களை நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்த காரணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் அவருடைய அன்பை நினைவூட்டும் படங்களை வரையலாம்.
சுவிசேஷ கலந்துரையாடல்களில் பிள்ளைகளை ஈடுபடுத்துங்கள். நீங்கள் சிறு பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறீர்கள் என்றால், அவர்களை சுவிசேஷ கலந்துரையாடல்களில் ஈடுபடுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியிருக்கலாம். உதாரணமாக, உங்கள் பிள்ளைகள் ஒரு பந்தைச் சுற்றி அனுப்பலாம்; அவர்கள் பந்தைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது, இயேசு தங்களை நேசிக்கிறார் என்பதை அவர்கள் அறிந்த ஒரு காரணத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.
மல்கியா 3:8–12
நான் தசமபாகம் கொடுக்கும்போது கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார்.
-
தசமபாகத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள் இந்த வார செயல்பாட்டுப் பக்கத்தில் உள்ள நாணயங்கள் போன்ற 10 சிறிய பொருட்களை எண்ணும்படி அவர்களிடம் கேட்கலாம். பின்னர் அவர்கள் ஒரு பொருளை மற்றவற்றிலிருந்து பிரிக்கலாம் - இதுவே நாம் கர்த்தருக்கு தசமபாகம் கொடுக்கிறோம். மல்கியா 3:8–12ன் படி, நாம் ஏன் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்? (“Malachi the Prophet” in Old Testament Stories, 171–72; “First Things First!” [காணொலி], Gospel Library) என்பதையும் பார்க்கவும்.
0:58Malachi the Prophet
1:18First Things First!
-
மல்கியா 3:10ஐ நீங்கள் ஒன்றாகப் படிக்கும்போது, “வானத்தின் பலகணிகள்” என்ற சொற்றொடரைப் நீங்கள் படிக்கிறபோது உங்கள் பிள்ளைகளை ஜன்னல் ஓரமாக நிற்கும்படி அழைக்கலாம். அல்லது “அதைப் பெறுவதற்கு போதுமான இடம் இருக்காது“ என்ற சொற்றொடரை விளக்குவதற்கு ஒரு கோப்பையில் தண்ணீரை ஊற்றலாம். நீங்கள் தசமபாகம் செலுத்தும்போது தேவன் உங்களுக்கு வழங்கிய ஆசீர்வாதங்களைப் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள் இந்த ஆசீர்வாதங்களைக் குறிக்கும் படங்களை வரைந்து அவற்றை உங்கள் வீட்டில் ஒரு ஜன்னலில் அல்லது அருகில் தொங்கவிடலாம்.
மல்கியா 4:5-6
எலியா நம் இருதயங்களை நம்முடைய குடும்பங்களுக்கு திருப்ப வந்தார்.
-
மல்கியா 4:5–6இல் மல்கியாவின் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய பின்வரும் கேள்விகளுக்கு உங்கள் பிள்ளைகள் பதில்களைத் தேடலாம்: கர்த்தர் யாரை அனுப்புவதாக வாக்களித்தார்? இந்த நபர் எப்போது வருவான் என்று கூறினார்? இந்த நபர் என்ன செய்வான் என்று கர்த்தர் சொன்னார்? இந்த நபர் ஏன் வர வேண்டும்? இந்தத் தீர்க்கதரிசனம் எங்கே நிறைவேறியது? (see கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:13–16ஐ பார்க்கவும்).
-
மல்கியா 4:5இல் உள்ள வாக்குத்தத்தங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதை அறிய, கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள், 26-30 இல் “ஜோசப்பும் ஆலிவரும் ஆசாரியத்துவத் திறவுகோல்களைப் பெறுகிறார்கள்” என்பதையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். “The Hearts of the Children” (Children’s Songbook, 92) போன்ற பாடல், எலியா வந்தது ஏன் மிகவும் முக்கியமானது என்பதை உங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ள உதவும். நீங்கள்FamilySearch.org/discovery, the FamilySearch Tree app, அல்லது the My Family booklet பார்வையிடலாம். இது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் இருதயங்களை உங்கள் முன்னோர்களிடம் திருப்ப உதவும்.
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.