“டிசம்பர் 21–27. “இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்’: கிறிஸ்துமஸ்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“டிசம்பர் 21–27. “இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்’,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–சைமன் டீவி
டிசம்பர் 21–27: “இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்”
கிறிஸ்துமஸ்
ஆவலுடன் எதிர்பார்ப்பின் ஆவியை பழைய ஏற்பாடு தாங்கியிருக்கிறது. அந்த வகையில், இது சிறிது கிறிஸ்துமஸ் காலத்தைப் போன்றது. ஆதாம் மற்றும் ஏவாளிலிருந்து தொடங்கி, பழைய ஏற்பாட்டின் கோத்திர பிதாக்கள், தீர்க்கதரிசிகள், கவிஞர்கள் மற்றும் ஜனங்கள் மேசியாவால் புத்துணர்வு மற்றும் விடுதலையைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையால் நிரப்பப்பட்ட சிறந்த நாட்களை எதிர்பார்த்தார்கள். இஸ்ரவேலர் எகிப்திலோ அல்லது பாபிலோனிலோ சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும் அல்லது தங்கள் பாவத்தினாலோ அல்லது கிளர்ச்சியினாலோ சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு அந்த நம்பிக்கை அடிக்கடி தேவைப்பட்டது. இந்நேரம் முற்றிலும், “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை கூறவும்,” மேசியாவாக விடுவிப்பவர் ஒருவர் வருவார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு நினைவூட்டினார்கள் ( ஏசாயா 61:1).
இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபோது அந்த நம்பிக்கை நனவாகத் தொடங்கியது. இஸ்ரவேலின் வலிமைமிக்க மீட்பர் ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்து ஒரு முன்னணையில் கிடத்தப்பட்டார் (லூக்கா 2: 7ஐ பார்க்கவும்). ஆனால் அவர் பூர்வகால இஸ்ரவேலரை விடுவிப்பவர் மட்டுமல்ல. அவர் உங்களை விடுவிக்க வந்தார், உங்கள் பாடுகளை தாங்கவும், உங்கள் துக்கங்களைச் சுமக்கவும், அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமடையும்படிக்கு உங்கள் அக்கிரமங்களுக்காக காயப்படுத்தப்பட்டார் (ஏசாயா 53: 4–5ஐ பார்க்கவும்). இதனால்தான் கிறிஸ்துமஸ் இன்றும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் நிறைந்துள்ளது. மேசியா 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார், நாம் அவரைத் தேடும்போதெல்லாம் அவர் நம் வாழ்வில் தொடர்ந்து வருகிறார்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
எனது மீட்பரில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இயேசு கிறிஸ்து உலகிற்கு கொண்டு வரும் மகிழ்ச்சியின் காரணமாக கிறிஸ்துமஸ் ஒரு மகிழ்ச்சியின் காலமாக அறியப்படுகிறது. இரட்சகர் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் வரவிருக்கும் மேசியாவைப்பற்றி பேசியபோது மகிழ்ச்சியையும் உணர்ந்தார்கள். பின்வரும் சில பத்திகளைப் படித்து, இரட்சகரின் பணியை எதிர்நோக்கியவர்களுக்கு அவை ஏன் விலைமதிப்பற்றதாக இருந்திருக்கும் என்பதைப்பற்றி சிந்தியுங்கள்: சங்கீதம் 35:9; ஏசாயா 25:8–9; 44:21–24; 51:11; செப்பனியா 3:14–20; மோசே 5:5–11. இந்த பத்திகள் உங்களுக்கு ஏன் விலைமதிப்பற்றவை? மகிழ்ச்சியாக இருப்பதற்கு இந்த வேதவாக்கிய பத்திகள் என்ன காரணங்களைக் கூறுகின்றன?
டாலின் ஹெச். ஓக்ஸ், “Good Tidings of Great Joy” (First Presidency Christmas devotional, Dec. 4, 2022), Gospel Library; “Joy to the World,” Hymns, no 201 ஐயும் பார்க்கவும்.
இயேசு கிறிஸ்துவை நினைவுகூர அடையாளங்கள் எனக்கு உதவும்.
கிறிஸ்துமஸுடன் தொடர்புடைய பல மரபுகள் நமக்கு கிறிஸ்துவை சுட்டிக்காட்டும் குறியீட்டு அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். இந்த ஆண்டு பழைய ஏற்பாட்டைப் படித்தபோது, இரட்சகரின் பல அடையாளங்களை நீங்கள் கவனித்திருக்கலாம். சிலது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றைப் படித்து, அவரைப்பற்றி அவை உங்களுக்குக் கற்பிப்பதைப் பதிவுசெய்யவும்.
-
நட்சத்திரம்(எண்ணாகமம் 24:17; மத்தேயு 2:2; வெளிப்படுத்தின விசேஷம் 22:16).
-
மேய்ப்பர் (சங்கீதம் 23; லூக்கா 15:4-7; யோவான் 10:11).
-
ஆட்டுக்குட்டி (ஆதியாகமம் 22:8; யாத்திராகமம் 12:5; 1 பேதுரு 1:18–20).
-
தண்ணீர் (யாத்திராகமம் 17:1–6; எரேமியா 2:13; எசேக்கியேல் 47:1–12; யோவான் 4:7–14).
-
பாறை (1 சாமுவேல் 2:2; 2 சாமுவேல் 22:2–3; சங்கீதம் 118:22–23; ஏசாயா 28:16; எபேசியர் 2:20).
-
கிளை (ஏசாயா 11:1–2; எரேமியா 23:5; 33:15).
-
ஒளி (சங்கீதம் 27:1; ஏசாயா 9:2; 60:19; மீகா 7:8; யோவான் 8:12).
இயேசு கிறிஸ்துவை சாட்சியமளிக்கும் வேதவாக்கியங்களில் வேறு எந்த அடையாளங்கள், பத்திகள் மற்றும் விவரங்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?
2 நேபி 11:4; மோசியா 3:14–15; மோசே 6:63; “Types or Symbols of Christ ,” in Guide to the Scriptures, “Jesus Christ,” (Gospel Library) ஐயும் பார்க்கவும்.
“அவரது நாமம் அதிசயமானவர் என அழைக்கப்படும்.”
இயேசு கிறிஸ்து பல பெயர்களாலும் பட்டங்களாலும் குறிப்பிடப்படுகிறார். பின்வரும் வசனங்களில் பட்டங்களைத் தேடுங்கள்: சங்கீதம் 23:1; 83:18; ஏசாயா 7:14; 9:6; 12:2; 63:16; ஆமோஸ் 4:13; சகரியா 14:16; மோசே 7:53. வேறு என்ன பட்டங்களைப்பற்றி நீங்கள் சிந்திக்க முடியும்? கிறிஸ்துமஸ் பாடல்களில் நீங்கள் காணும் இயேசு கிறிஸ்துவின் பட்டங்களை பட்டியலிடுவதை நீங்கள் ரசிக்கலாம். ஒவ்வொரு பட்டமும் அவரைப்பற்றி நீங்கள் நினைக்கும் விதத்தில் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்துகிறது?
ஆண்டு முழுவதும் இரட்சகரை நீங்கள் நினைவில் கொள்ள உதவ அவரின் பட்டம் அல்லது அவர் ஆற்றிய பங்கு ஒன்றினை தேர்ந்தெடுக்க எண்ணவும்.
க்வென்டின் எல். குக், “சவாலான நேரங்களில் தனிப்பட்ட சமாதானம்,” லியஹோனா, நவ் 2021, 89–92; “Hark!,ஐயும் பார்க்கவும். The Herald Angels Sing,” Hymns, no.209.
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
பழைய ஏற்பாடு இயேசுவைப் பற்றி எனக்குக் கற்பிக்கிறது.
-
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உரையாடலைத் தொடங்க சில கிறிஸ்துமஸ் அலங்காரங்களைப் பயன்படுத்தலாம். கிறிஸ்துமஸ் நட்சத்திரமோ, விளக்குகளோ அல்லது பரிசுகளோ இரட்சகரை எப்படி நமக்கு நினைவூட்டுகின்றன என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம். இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்தக்கூடிய ஏதாவது ஒன்றை நீங்கள் பின்வரும் வேதவாக்கியங்களில் ஒன்றிலோ அல்லது அதற்கு மேற்பட்டவைகளிலோ பார்க்கலாம்: ஆதியாகமம் 22:8; எண்ணாகமம் 24:17; சங்கீதம் 23:1; 27:1. உங்கள் பிள்ளைகள் ஒவ்வொரு வசனத்தையும் படிக்கும் போது ஒரு படத்தை அல்லது அலங்காரத்தை உயர்த்தி பிடிக்கலாம். இயேசு எப்படி ஆட்டுக்குட்டி, நட்சத்திரம், மேய்ப்பர் அல்லது ஒளி போன்றவர்? Stars Were Gleaming( Children’s Songbook, 37) போன்ற கிறிஸ்துமஸ் பாடலை ஒன்றாகப் பாட எண்ணுங்கள்.
-
ஏசாயா 9:6ஐ நீங்கள் படிக்கும்போது, உங்கள் பிள்ளைகளும் இந்த பாட சுருக்கத்தின் முடிவில் உள்ள படத்தைப் பார்க்கலாம். “ஒரு குழந்தை பிறந்தது“ என்ற சொற்றொடரைக் கேட்கும்போது குழந்தை இயேசுவை சுட்டிக்காட்ட உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசிகள் இயேசு பிறப்பார் என்று அறிந்திருந்தார்கள் என்று உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
அடுத்த ஆண்டு புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் படிக்க நீங்கள் தயாராகும் போது, பழைய ஏற்பாட்டில் இந்த ஆண்டு அவரைப்பற்றி அவர்கள் கற்றுக்கொண்டவற்றை உங்கள் குடும்பத்தினருடன் மதிப்பாய்வு செய்வதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் கற்றுக்கொண்டவற்றை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் வகையில், இந்த ஆதாரத்தின் குறிப்புகளையும் எந்தவொரு தனிப்பட்ட படிப்புக் குறிப்புகளையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். சிறு பிள்ளைகள் பழைய ஏற்பாட்டு கதைகள் அல்லதுஎன்னைப் பின்பற்றி வாருங்கள்லிலுள்ள படங்களை பார்ப்பதன் மூலம் பயனடையலாம். என்ன தீர்க்கதரிசனங்கள் அல்லது கதைகள் நமக்குத் தனித்து நிற்கின்றன? இரட்சகரைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
கிறிஸ்துமஸ் மரபுகள் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டலாம்.
-
இஸ்ரவேல் குடும்பங்கள் பஸ்கா மற்றும் பிற பண்டிகைகள் போன்ற மரபுகள் அவர்கள் இருதயங்களையும் மனதையும் கர்த்தரிடம் சுட்டிக்காட்ட இடம்பெற்றன (யாத்திராகமம் 12 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்த உதவும் கிறிஸ்துமஸ் நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு என்ன மரபுகள் உள்ளன? உங்கள் குடும்ப வரலாற்றிலிருந்து உங்களுக்கு என்ன மரபுகள் தெரியும்? நீங்கள் தொடங்க விரும்பும் சில மரபுகளை உங்கள் பிள்ளைகளுடன் கலந்துரையாட கருதலாம். தேவையுள்ளோருக்கு உதவிசெய்தல், நீங்கள் இரட்சகருக்கு பரிசாக கொடுக்க ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தல், பிரதான தலைமை கிறிஸ்துமஸ் ஆராதனை உங்களுடன் சேர்ந்து பார்க்க நண்பன் ஒருவரை அழைத்தல் (broadcasts.ChurchofJesusChrist.org) உங்கள் சொந்த கிறிஸ்துமஸ் பாடலை எழுதுதல் அல்லது கிறிஸ்துவின் பிறப்பின் செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஆக்கபூர்வமான வழியைக் கண்டறிதல் ஆகியவைகள் சில யோசனைகளாக அமையலாம்.
வீட்டில், கற்றுக்கொள்ளுதலும் வாழ்தலும் பிரிக்க முடியாதவை சுவிசேஷம் வீட்டில் உடனடிப் பொருத்தத்தைப் பெறுகிறது. அங்கு நீங்கள் யாருடன் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்கிறீர்களோ அவர்களுடன் தினமும் நீங்கள் அதன்படி வாழ்வீர்கள். உண்மையில், பெரும்பாலான நேரங்களில், சுவிசேஷத்தின்படி வாழ்வதே நாம் சுவிசேஷத்தை எவ்வாறு கற்றுக்கொள்கிறோம் என்பதாகும். எனவே நீங்கள் வீட்டில் சுவிசேஷத்தைக் கற்றுக்கொண்டு கற்பிக்கும்போது, நீங்கள் கற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை இணைப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். உங்கள் வீட்டில், சுவிசேஷம் நீங்கள் பேசும் விஷயமாக இல்லாமல், நீங்கள் வாழ முயற்சிக்கும் ஒன்றாக இருக்கட்டும்’.(இரட்சகரின் வழியில் கற்பித்தல், 31).
கிறிஸ்து பிறப்பு பட விளக்கம்–ஈதன் பிரவுன்
பரலோக பிதா தம்முடைய குமாரனை என் இரட்சகராக எனக்கு ஈவாய் கொடுத்தார்.
-
கிறிஸ்துவின் பிறப்பின் பயபக்தியையும் மகிழ்ச்சியையும் உங்கள் பிள்ளைகள் உணர நீங்கள் எவ்வாறு உதவலாம்? “The Christ Child” (Gospel Library) என்ற காணொளியை நீங்கள் பார்க்கலாம் அல்லது மத்தேயு 1:18–25; 2:1–12; லூக்கா 1:26–38; 2:1–20ஐ ஒன்றாகப் படிக்கலாம். ஒவ்வொரு பிள்ளையும் காணொளியிலோ அல்லது வேதவாக்கிய பகுதியிலிருந்தோ ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அந்த நபர் இரட்சகரைப் பற்றி எப்படி உணர்ந்தார் என்பதைப் பகிர்ந்து கொள்ளலாம். அப்போது அவரைப் பற்றிய உங்கள் சொந்த உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.
17:57The Christ Child
-
ஒருவேளை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பல ஆண்டுகளாக சந்தோஷத்தை கொண்டுவருகிற நீங்கள் கொடுத்த அல்லது பெற்ற பரிசுகளைப் பற்றி பேசலாம். பிறகு நீங்கள் ஏசாயா 25:9ஐ ஒன்றாகப் படித்துவிட்டு, பரலோக பிதா நமக்கு ஒரு இரட்சகரை அனுப்பியதற்காக நீங்கள் ஏன் சந்தோஷப்படுகிறீர்கள் என்பதைப் பற்றி பேசலாம். நம்முடைய இரட்சகராக இயேசு கிறிஸ்துவின் பங்கை உங்கள் பிள்ளைகள் நன்றாகப் புரிந்துகொள்ள உதவ ஏசாயா 25:8–9; 53:3–5; மற்றும் ஓசியா 13:14ஐ வாசிக்க அவர்களை அழைக்கவும். கர்த்தர் நம்மை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதைப் பற்றி இந்த வேதவாக்கியங்கள் நமக்கு என்ன கற்பிக்கின்றன?
-
“Away in a Manger” (Children’s Songbook, 42–43) or “O Little Town of Bethlehem” (Hymns, no. 208) போன்ற கிறிஸ்துமஸ் பாடலையும் நீங்கள் ஒன்றாகப் பாடலாம். பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் தங்களை நேசிக்கிறார்கள் என்பதை அறிய உதவும் சொற்றொடர்களை உங்கள் பிள்ளைகளுக்கு பாடலில் கண்டுபிடிக்க உதவுங்கள்.
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.