“டிசம்பர் 7–13. “கர்த்தருக்குப் பரிசுத்தம்”: ஆகாய் 1– 2; சகரியா 1–4; 7–14,’ என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“டிசம்பர் 7–13. “கர்த்தருக்குப் பரிசுத்தம்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
லாயி ஹவாய் ஆலயம்
டிசம்பர் 7– 13:“கர்த்தருக்குப் பரிசுத்தம்”
ஆகாய் 1–2; சகரியா 1–4; 7–14
பல தசாப்த கால சிறைவாசத்திற்குப் பிறகு, இஸ்ரவேலர்களில் ஒரு குழு அநேகமாக தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியா உட்பட எருசலேமுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இந்த குழுவில் சிலர் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பு ஆலயம் எப்படி இருந்தது என்பதை நினைவில் வைத்திருந்தனர். இந்த ஆலயம் மீண்டும் கர்த்தருடைய “ஆலயத்தின் முந்தின மகிமையைக் ” (ஆகாய் 2:3) ஒத்திருக்குமா என்று யோசித்தவர்களுக்கு, தீர்க்கதரிசி ஆகாய் கர்த்தருடைய ஊக்க வார்த்தைகளைப் பேசினான்: “திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன், … பயப்படாதேயுங்கள்.” “இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன், … இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன்” (ஆகாய் 2:4–5, 7, 9).
ஆனால் அந்த புனரமைப்பு பரிசுத்த ஆலயத்திற்கு மாத்திரம் தேவையானது அல்ல. பல வழிகளில், தேவனின் ஜனங்கள் ஆவிக்குரிய ரீதியில் பாழடைந்திருந்தனர். ஒரு பரிசுத்த ஜனத்தை மீண்டும் கட்டியெழுப்புவது கற்களை வெட்டுவதை விடவும், பரிசுத்த ஆலயத்தின் சுவரை கட்ட அவைகளை சீரமைப்பதை விடவும் அதிகம் தேவை. “கர்த்தருக்குப் பரிசுத்தம்“ என்ற கல்வெட்டு பொறிக்கப்படவேண்டியது ஆலய சுவரில் மட்டுமல்ல, “குதிரைகளின் மணிகள் மேல் மட்டுமல்ல“ மற்றும் “எருசலேமில் உள்ள ஒவ்வொரு பானையிலும் மட்டுமல்ல“ (சகரியா 14:20–21). ஒவ்வொரு இருதயத்திலும் அவை பொறிக்கப்பட வேண்டும்.
ஆகாய் மற்றும் சகரியா புத்தகங்களைப்பற்றிய சுருக்கமான குறிப்புக்கு,“ஆகாய்” மற்றும் “சகரியா ” in the Bible Dictionary பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
ஆகாய் 1; 2:1–9
“உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.”
எருசலேமை மீண்டும் கட்டியெழுப்ப பல முக்கியமான விஷயங்கள் இருந்தன. ஆனால் இஸ்ரவேலர் திரும்பி வந்து சுமார் 15 ஆண்டுகள் கழிந்த பின்பு, ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப அதிக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பது கர்த்தருக்கு அதிருப்தியாயிருந்தது (ஆகாய் 1: 2–5 பார்க்கவும்; எஸ்றா 4 : 24ஐயும் பார்க்கவும்). நீங்கள் ஆகாய் 1; 2:1–9ஐப் படிக்கும்போது இது போன்ற கேள்விகளைக் கவனியுங்கள்:
-
இஸ்ரவேலர் ஆலயத்தை கட்டி முடிக்காததால் என்ன விளைவுகளை சந்தித்தார்கள்?
-
அவருடைய வீட்டைக் கட்டி முடித்தால் கர்த்தர் அவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்களை வாக்குத்தத்தம் பண்ணினார்?
-
ஆகாய் 1:5–7இல் உங்களுக்கான கர்த்தருடைய செய்தி என்ன? உங்கள் முன்னுரிமைகளைத் தேவனுடன் நீங்கள் எவ்வாறு சீரமைக்க முடியும்? உங்கள் வாழ்க்கையில் தேவனுக்கு முதலிடம் கொடுத்ததற்காக நீங்கள் எப்போது ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்?
ஆகாய் வாழ்ந்த நாட்களில் இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட ஒரு சூழ்நிலையை போலவே பிற்கால பரிசுத்தவான்களும் ஆரம்பகாலத்தில் எதிர்கொண்டார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95ஐ பார்க்கவும்). இவ்விரண்டு உதாரணங்களிலிருந்து ஆலயங்களைப் பற்றிய கர்த்தரின் உணர்வுகள் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்?
டேல் ஜி. ரென்லண்ட், “இயேசு கிறிஸ்துவே நமது பொக்கிஷம்.,” லியஹோனா, நவம்பர் 2023, 96–99; டெரன்ஸ் எம், வின்சன், “இரட்சகரின் உண்மையான சீஷர்கள்,” லியஹோனா, நவம்பர் 2019, 9–11; “We Love Thy House, O God,” Hymns, no. 247; “Provo City Center Temple Completed” (video), ChurchofJesusChrist.org.ஐயும் பார்க்கவும்.
Provo City Center Temple Completed
சகரியா 1–3; 7–8;14
கர்த்தர் என்னை பரிசுத்தமாக்க முடியும்.
உங்கள் கருத்துப்படி, சகரியா 14:20இல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற அன்றாடப் பொருட்களில் “கர்த்தருக்குப் பரிசுத்தம்“ பொறிக்கப்பட்டிருப்பதன் மதிப்பு என்ன? (யாத்திராகமம் 28:36–38ஐயும் பார்க்கவும்). இன்று அவை ஆலயங்களில் பொறிக்கப்பட்டிருப்பதன் மதிப்பு என்ன? உங்களுக்கு இந்த சொற்றொடர் என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? பரிசுத்தத்தை உங்கள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக்குவது எப்படி? சகரியா 1:1–6; 3:1–7; 7:8–10; 8:16–17இல் அதிக பரிசுத்தமாக இருக்குமாறு கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு விடுத்த அழைப்புகளை நீங்கள் படிக்கும்போது இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்.
எதிர்கால நாளில் நாம் அனைவரும் கர்த்தருடன் பரிசுத்த நிலையில் வாழும்போது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள சகரியா 2:10–11; 8:1–8; 14:9–11, 20–21ஐயும் படிக்கலாம். எருசலேமின் எதிர்காலம் குறித்த சகரியாவின் தரிசனத்தைப்பற்றி உங்களை கவர்வது எது? உங்கள் சமூகத்தில் நீங்கள் பார்க்க விரும்புவதை இங்கே நீங்கள் என்ன காண்கிறீர்கள்? சகரியா விவரித்த நிலைமைகளில் வாழ நீங்கள் எவ்வாறு ஆயத்தமாகலாம்?
“இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.” (சகரியா 9:9). ஜெயப் பிரவேசம்–ஹாரி ஆன்டர்சன்
சகரியா 9:9–11; 11:12–13; 12:10; 13:6–7; 14:1–9
இயேசு கிறிஸ்துதான் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா.
சகரியாவின் பல எழுத்துக்கள் இயேசு கிறிஸ்துவின் பூலோக ஊழியத்தையும், இறுதியில் அவருடைய இரண்டாம் வருகையையும் சுட்டிக்காட்டுகின்றன. கீழே சகரியாவின் சில தீர்க்கதரிசனங்களும் அவற்றின் நிறைவேற்றத்தைப் பற்றிய வேதவாக்கியங்களும் உள்ளன. நீங்கள் இந்த வாசகங்களைப் படிக்கும்போது, “இது தேவனின் திட்டம்பற்றி என்ன போதிக்கிறது?” என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
-
சகரியா 9:9–11 (மத்தேயு 21:1–11; 1 பேதுரு 3:18–19ஐ பார்க்கவும்)
-
சகரியா 11:12–13 (மத்தேயு 26:14–16; 27:1–7ஐ பார்க்கவும்)
-
சகரியா 12:10 (யோவான் 19:37; வெளிப்படுத்தின விசேஷம் 1:7ஐ பார்க்கவும்)
-
சகரியா 13:6–7; 14:1–9 (மத்தேயு 26:31; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:47–53ஐ பார்க்கவும்)
சகரியா 9: 9–11இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, எருசலேமுக்குள் இயேசுவை வரவேற்கும் ஜனங்களிடையே நீங்கள் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் வீடுகளிலும், உங்கள் சமூகத்திலும் அவரை எப்படி வரவேற்கலாம்?
Guide to the Scriptures, “Messiah,” Gospel Library; “The Lord’s Triumphal Entry into Jerusalem” (video), Gospel Library; ரொனால்ட் எ. ராஸ்பாண்ட்,“அதி உன்னத தேவனுக்கு ஓசன்னா,” லியஹோனா, மே 2023, 108–12ஐயும் பார்க்கவும்.
The Lord's Triumphal Entry into Jerusalem
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
ஆகாய் 1:2-8.
“உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.”
-
ஆகாய் 1:2–5 வரையிலான பகுதிகளை உங்கள் பிள்ளைகளுடன் படிக்கும்போது, கர்த்தர் ஏன் ஜனங்களுடன் பிரியப்படவில்லை என்பதைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள். உங்கள் பிள்ளைகள் வசனம் 6இலிருந்து ஒரு சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து அதன் படத்தை வரையலாம். அவர்கள் அதை ஒருவருக்கொருவர் காட்டி ஒவ்வொரு வரைபடமும் எந்த சொற்றொடரைக் குறிக்கிறது என்பதை யூகிக்கலாம். கர்த்தர் விரும்புவதைத் தவிர வேறு விஷயங்களில் நாம் நேரத்தைச் செலவிடுவது எப்படி சாப்பிட்டும் நிரப்படாமலிருப்பதைப் போலிருக்கும்? கர்த்தருக்கு முக்கியமான காரியங்களுக்கு எப்படி நேரத்தை ஒதுக்கலாம் என்பதைப் பற்றி நீங்கள் ஒருவருக்கொருவர் பேசலாம்.
-
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வசனம் 8ஐ வாசித்து, அவர்கள் “மலையின்மேல் ஏறிப்போய்,” “மரங்களை வெட்டிக்கொண்டுவந்து,” “ஆலயத்தைக் கட்டுவதாக” பாசாங்கு செய்யும்படி அவர்களை அழைக்கலாம். உங்கள் பிள்ளைகள் தேவன் தாங்கள் செய்ய கேட்டுக்கொண்ட காரியங்கள் உட்பட பொதுவான நாள் ஒன்றில் தாங்கள் செய்யும் காரியங்களின் பட்டியலை உருவாக்கலாம். உங்கள் பிள்ளைகளின் பட்டியலில் உள்ள மிக முக்கியமான விஷயங்கள் என்று கர்த்தர் சொல்லக்கூடியவற்றைக் குறித்துக்கொள்வதின் மூலம் “[தங்களின்] வழிகளைச் சிந்தித்துபார்க்கும்படி“ அவர்களிடம் சொல்லுங்கள்.
இல்லத்தை மையமாகக் கொண்ட கற்பித்தல். “சுவிசேஷக் கற்றலின் மையமாக” இல்லம் இருக்க வேண்டும் என்று தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார் (“உதாரணமான பிற்காலப் பரிசுத்தவான்கள் ஆகுதல்,” லியஹோனா, நவ. 2018, 113). “உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்” என்ற ஆகாயின் அறிவுரையை உங்கள் குடும்பம் படிக்கும்போது, உங்கள் குடும்ப வாழ்க்கையில் தேவனுக்கு எப்படி முதலிடம் கொடுப்பது என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம்.
சகரியா 3:1–7.
உடன்படிக்கைகளை செய்துகொள்வதும் அதைக் கைக்கொள்வதும் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவைப் போல இருக்க எனக்கு உதவும்.
-
ஒரு தரிசனத்தில், சகரியா ஒரு பிரதான ஆசாரியனை “அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்க்“ கண்டான் (சகரியா 3:3). ஒரு தூதர் அவருக்கு சுத்தமான ஆடையைக் கொடுத்தார். சகரியா 3:1–7ஐ ஒன்றாகப் படிப்பதன் மூலமும், அழுக்கான ஆடைகள் மற்றும் சுத்தமான ஆடைகள் எதைக் குறிக்கலாம் என்பதைப் பற்றி பேசுவதன் மூலமும் முக்கியமான உண்மைகளைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவலாம். நாம் ஞானஸ்நானம் எடுத்த பிறகும், நம் பாவங்களிலிருந்து எவ்வாறு சுத்தம் அடைகிறோம்? நம்முடைய ஞானஸ்நான உடன்படிக்கை எவ்வாறு “[கர்த்தருடைய] வழிகளில் நடக்க” உதவுகிறது?
-
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இந்த பாட சுருக்கத்தில் உள்ளதைப் போன்ற ஒரு ஞானஸ்நானத்தின் படத்தைப் பார்க்கலாம். நாம் ஞானஸ்நானம் பெறும்போது நாம் ஏன் வெள்ளை உடை உடுத்துகிறோம்? “When I Am Baptized” (Children’s Songbook, 103) போன்ற ஞானஸ்நானம் பற்றிய பாடலையும் நீங்கள் பாடலாம்; நாம் ஏன் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதைப் பற்றி பாடல் என்ன கற்பிக்கிறது?
சகரியா 9:1–11; 11:12; 13:6–7
இயேசு கிறிஸ்துதான் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா.
-
சகரியா 9:9இல் முன்னறிவிக்கப்பட்ட நிகழ்வான இயேசு தம்முடைய அநித்திய வாழ்வின் கடைசி வாரத்தில் எருசலேமிற்கு வந்ததை உங்கள் பிள்ளைகள் கற்பனை செய்து பார்க்க விரும்பலாம். இதற்கு உதவ, இந்த பாட சுருக்கத்தில் உள்ளதைப் போன்ற நிகழ்வின் படத்தை அவர்களுக்குக் காட்டுங்கள். “The Savior Goes to Jerusalem” (in New Testament Stories, 110–12) அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். படங்களில் “மிகவும் களிகூருகிறவர்களை” உங்கள் பிள்ளைகள் சுட்டிக்காட்டலாம். சகரியா 9:9இல் உள்ள ராஜா யார்? நாம் ஏன் அவருக்கு நன்றி செலுத்துகிறோம்?
1:35Chapter 44: The Savior Goes to Jerusalem
-
சகரியாவின் தீர்க்கதரிசனங்களை அவற்றின் நிறைவேற்றத்தை விவரிக்கும் புதிய ஏற்பாட்டு வசனங்களுடன் உங்கள் பிள்ளைகளுக்கு ஒப்பிட்டுப் பார்க்க உதவுங்கள். இதோ சில உதாரணங்கள்: சகரியா 9:9 மற்றும் மத்தேயு 21:5–9; சகரியா 9:11 மற்றும் 1 பேதுரு 3:18–19; சகரியா 11:12 மற்றும் மத்தேயு 26:14–16; சகரியா 13:7 மற்றும் மத்தேயு 26:31. இந்த வசனங்களிலிருந்து இரட்சகரைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.