என்னைப் பின்பற்றி வாருங்கள்
மே 25–31. “கர்த்தர் ஒரு ரட்சகனை எழும்பப் பண்ணினார்”: நியாயாதிபதிகள் 2–4; 6–8; 13–16


“மே 25–31. ‘கர்த்தர் ஒரு ரட்சகனை எழும்பப் பண்ணினார்: நியாயாதிபதிகள் 2–4; 6–8; 13–16” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026}

“மே 25–31. ‘“கர்த்தர் ஒரு ரட்சகனை எழும்பப் பண்ணினார்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026

தீர்க்கதரிசி தெபொராள்

“நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்”—தீர்க்கதரிசி தெபொராள்-டெஸ் லீவிட்

25– 31: “கர்த்தர் ஒரு ரட்சகனை எழும்பப் பண்ணினார்”

நியாயாதிபதிகள் 2–4; 6–8; 13–16

பாவம் செய்வது, அதைப்பற்றி மோசமாக உணருவது, பின்னர் மனந்திரும்புதல் மற்றும் நமது வழிகளை மாற்ற முடிவு செய்வது போன்றவற்றை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அடிக்கடி நாம் நமது முந்தைய தீர்மானத்தை மறந்து விடுகிறோம், மேலும், சோதனை வரும்போது, ​​நாமும் அதே பாவத்தைச் செய்கிறோம். நியாயாதிபதிகள் புத்தகத்தில் இந்த மாதிரி அடிக்கடி தோன்றுகிறது. தேசத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவர்களான, கானானியர்களின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளால் செல்வாக்கு பெற்றவர்களான, அவர்கள், இஸ்ரவேலர் கர்த்தருடனான உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, அவரை ஆராதிப்பதில் இருந்து விலகிவிட்டார்கள். இதன் விளைவாக, அவர்கள் அவருடைய பாதுகாப்பை இழந்து சிறைபிடிக்கப்பட்டார்கள். இது நடந்த ஒவ்வொரு முறையும், கர்த்தர் தம்முடைய உடன்படிக்கை ஜனங்களுக்கு மனந்திரும்ப சந்தர்ப்பமளித்து, ஒரு ரட்சகனை எழுப்பி, ஒரு “நியாயாதிபதி” என்னும் இராணுவத் தலைவனை எழுப்பினார். நியாயாதிபதிகள் புத்தகத்தில் உள்ள நியாயாதிபதிகள் அனைவரும் நீதிமான்கள் அல்ல, ஆனால் அவர்களில் சிலர் இஸ்ரவேல் புத்திரரை விடுவிப்பதிலும், கர்த்தருடனான உடன்படிக்கை உறவுக்கு அவர்களை மீண்டும் கொண்டுவருவதிலும் மிகுந்த நம்பிக்கை வைத்தார்கள். இயேசு கிறிஸ்துவிடமிருந்துவிலக்கி நம்மை வழிநடத்தியது எதுவாக இருந்தாலும், அவர் இஸ்ரவேலின் மீட்பர், நம்மை விடுவிக்கவும், நம்மை மீண்டும் அவரிடம் வரவேற்கவும் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை இந்த கதைகள் நமக்கு நினைவூட்டுகிறது.

நியாயாதிபதிகளின் புத்தகத்தின் மேலோட்டமான பார்வைக்கு “Judges, book of” in the Bible Dictionary பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

நியாயாதிபதிகள் 2:1–19; 3:5–12

நான் மனந்திரும்பும்போதெல்லாம் கர்த்தர் என்னை மன்னிக்கிறார்.

நியாயாதிபதிகள் புத்தகம் ஒரு எச்சரிக்கையாகவும் ஊக்கமாகவும் இருக்கலாம். நீங்கள் நியாயாதிபதிகள் 2:1–19; 3:5–12 படிக்கும்போது இந்த எச்சரிக்கையையும் ஊக்கத்தையும் தேடுங்கள். எச்சரிக்கையும் ஊக்கமும் உங்களுக்கு எப்படிப் பொருந்தும் என்று உணருகிறீர்கள்?

உதாரணமாக, நியாயாதிபதிகள் 2:19 பூர்வ இஸ்ரவேலர்களைப் பற்றி அல்லாமல் உங்களைப் பற்றியும் உங்கள் சோதனைகளைப் பற்றியும் இருந்தால், அது என்ன சொல்லக்கூடும்? நியாயாதிபதிகள் 3:9 கர்த்தர் உங்களை விடுவிக்க என்ன செய்தார் என்பதைப் பற்றி இருந்தால், அது என்ன சொல்லக்கூடும்?

இளைஞர்களின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி இன் பக்கம் 9 இல் கேள்வியையும் பதிலையும் வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும். நியாயாதிபதிகள் புத்தகத்தில் உள்ள இஸ்ரவேலர்களின் அனுபவத்திற்கு இது எவ்வாறு பொருந்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இயேசு கிறிஸ்துவைப்பற்றி இது உங்களுக்கு என்ன போதிக்கிறது?

நியாயாதிபதிகள் 4:1–15.

வேத பாட வகுப்பு சின்னம்
கர்த்தர் மீது நம்பிக்கை வைக்க நான் மற்றவர்களை ஊக்குவிக்க முடியும்.

சில சமயங்களில் ஒருவரின் விசுவாசம் பலருக்கு விசுவாசத்தைத் தூண்டும். நியாயாதிபதிகள் 4 இல், அந்த ஒரு நபர் தெபொராள். நியாயாதிபதிகள் 4: 1–15ல் அவளைப்பற்றி வாசியுங்கள், மேலும் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் மீது அவள் கொண்டிருந்த செல்வாக்கைக் கவனியுங்கள். அவளுடைய அனுபவம் உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பொருந்தக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ள உதவும் சில கேள்விகள்:

  • அந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் இருந்த நிலைமைகளை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? (வசனங்கள் 1–3 பார்க்கவும்). இன்றைய நிலைமைகளில்—தனிநபர்கள் மற்றும் சமூகத்தில், என்ன ஒற்றுமைகளை நீங்கள் காண்கிறீர்கள்?

  • கர்த்தர் மீது விசுவாசம் இருந்ததை தெபொராளின் எந்த வார்த்தைகள் அல்லது செயல்கள் உங்களுக்குக் காட்டுகின்றன? அவளுடைய நம்பிக்கை மற்றவர்களை எவ்வாறு பாதித்தது? அவளிடம் உங்களைக் கவர்ந்த வேறு விஷயம் என்ன?

  • வசனம் 14ல் “கர்த்தர் உனக்கு முன்பாக செல்லவில்லையா?” என்ற தெபொராளின் கேள்வியின் அர்த்தம் என்ன என நீங்கள் நினைக்கிறீர்கள்? கர்த்தர் எவ்விதம் உங்களுக்கு “முன்பாக செல்கிறார்”? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84: 87–88 பார்க்கவும்).

இளம் பெண்கள் ஒன்றாக நடந்துகொண்டிருத்தல்

பாராக்கையும் மற்ற இஸ்ரவேலரையும் தெபொராளுடைய விசுவாசம் ஆசீர்வதித்தது போல் இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசம் மற்றவர்களை எவ்வாறு ஆசீர்வதிக்க முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதைப்பற்றி சிந்திக்க உங்களுக்கு உதவ, Elder Neil L. Andersen’s message “We Talk of Christ” (Liahona, Nov. 2020, 88–91) நீங்கள் வாசிக்கலாம். (1) இரட்சகரைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கான காரணங்கள் மற்றும் (2) அதைச் செய்வதற்கான வழிகளைத் தேடுங்கள்.

பிறகு, இயேசு கிறிஸ்துவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பட்டியலிடுங்கள்—வேதங்கள், ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து. இதை யார் தெரிந்து கொள்ள வேண்டும்? அதை எப்படி பகிர்ந்து கொள்வீர்கள்?

See also மத்தேயு 5:14–16; 1 பேதுரு 3:15; “Each Life That Touches Ours for Good,” Hymns, no. 293.

பகிர அழைக்கவும். நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால்—வீட்டிலோ சபையிலோ—“இரட்சகரையும் அவருடைய சுவிசேஷத்தையும்பற்றி கற்றுக்கொள்பவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியமானது. இதைச் செய்வது அவர்கள் கற்பிக்கப்படும் உண்மைகளை உள்வாங்கி அவற்றை வெளிப்படுத்த உதவும்” (Teaching in the Savior’s Way26). எடுத்துக்காட்டாக, நியாயாதிபதிகள் 4-ஐ ஒன்றாகப் படிக்கும் போது, ​​ஒவ்வொரு கற்பவருக்கும் குறிப்பிட்ட பாடத்தில் ஏதாவது ஒன்றைக் கொடுக்கலாம், பின்னர் அவர்கள் கண்டறிந்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள அவர்களை அழைக்கலாம்.

நியாயாதிபதிகள் 6–8

அவருடைய வழிகளில் நான் நம்பிக்கை வைக்கும்போது கர்த்தர் அற்புதங்களைச் செய்ய முடியும்.

நீங்கள் நியாயாதிபதிகள் 6–8 ஐப் படிக்கும்போது, ​​சாத்தியமில்லாததாகத் தோன்றிய ஒன்றை நம்பும்படி கர்த்தர் கிதியோனிடம் கேட்ட நிகழ்வுகளைக் கவனியுங்கள். அவர் எப்போதாவது உங்களிடம் அதைப் போன்ற ஏதாவது கேட்டாரா?

இந்த விவரத்தில் கர்த்தர் உங்களுக்கு என்ன கற்பிக்க முயற்சிக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கர்த்தர் தம்முடைய வேலையை சாத்தியமில்லாததாக தோன்றிய வழிகளில் செய்வதை நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?

நியாயாதிபதிகள் 13–16

நான் என் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருப்பதால் தேவன் என்னை பெலப்படுத்துகிறார்.

சிம்சோன் தனது உடல் வலிமை மற்றும் ஆவிக்குரிய வலிமை இரண்டையும் இழந்தான், ஏனென்றால் அவன், குறிப்பாக நசரேயர்களுக்குப் பொருந்திய தேவனுடனான உடன்படிக்கைகளை மீறினான் (நசரேயரைப்பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எண்ணாகமம் 6:1–6; நியாயாதிபதிகள் 13:7 பார்க்கவும்). நியாயாதிபதிகள் 13–16 இல் சிம்சோனைப் பற்றி நீங்கள் வாசிக்கும்போது, ​​கர்த்தர் சிம்சோனுடன் இருந்தார் என்பதைக் காட்டும் வசனங்களையும், சிம்சோன் கர்த்தருக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கவில்லை என்பதைக் காட்டும் வசனங்களையும் கவனியுங்கள்.

நீங்கள் கர்த்தருடன் செய்துள்ள உடன்படிக்கைகளையும் நீங்கள் சிந்திக்கலாம். இந்த உடன்படிக்கைகள் எவ்வாறு அவருடைய வல்லமையை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்துள்ளன? தேவனுடனான உங்கள் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருக்க உங்களை உணர்த்தும் சிம்சோனின் கதையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

சகோதரி ஆன் எம். டிப் கற்பித்தார்: “சிம்சோன் சிறந்த ஆற்றலுடன் பிறந்தான். அவன் இஸ்ரவேலை பெலிஸ்தியர் கையினின்று விடுவிப்பான் என்று அவனுடைய தாய்க்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டது [நியாயாதிபதிகள் 13:5]. ஆனால் சிம்சோன் வளர வளர, தேவனுடைய வழிநடத்துதலைக் காட்டிலும் உலகத்தின் சோதனைகளையே அவன் அதிகம் பார்த்தான். அந்தத் தேர்வுகள் சரியானவை என்பதையும் விட , அவை ‘[அவனை] மகிழ்வித்ததால்’ [நியாயாதிபதிகள் 14:3] அவன் தேர்வுகளைச் செய்தான். சிம்சோனின் பயணங்கள், செயல்கள் மற்றும் தேர்வுகள் பற்றிச் சொல்லும்போது, ​​வேதவசனங்கள் ‘அவன் போய்’ [நியாயாதிபதிகள் 14:7] என்ற சொற்றொடரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றன. சிம்சோன் தனது சிறந்த ஆற்றலை நிறைவேற்றுவதற்காக எழுந்து பிரகாசிப்பதற்குப் பதிலாக, உலகத்தால் வெல்லப்பட்டான், தேவன் கொடுத்த வல்லமையை இழந்து, ஒரு சோகமான, இளமைகால மரணம் அடைந்தான்.” (“Arise and Shine Forth,” Liahona, May 2012, 118).

See also Dallin H. Oaks, “Covenants and Responsibilities,” Liahona, May 2024, 93–96; Ulisses Soares, “Covenant Confidence through Jesus Christ,” Liahona, May 2024, 17–21.

பிள்ளைகள் பகுதி சின்னம்

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

இந்த ஞாயிற்றுக்கிழமை மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் “பிற்சேர்க்கை B: தேவனின் உடன்படிக்கைப் பாதையில் வாழ்நாள் முழுவதற்குமாக குழந்தைகளைத் தயார்படுத்துதல்” இல் கற்றல் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நியாயாதிபதிகள் 3; 7–9; 12–15

இயேசு கிறிஸ்து என்னை விடுவிப்பவர்.

  • பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கும் இரட்சகரின் ஆற்றலைப் பற்றி போதிக்கும் ஒரு மாதிரியை நியாயாதிபதிகள் 3 விவரிக்கிறது. இந்த மாதிரியை உங்கள் பிள்ளைகள் அடையாளம் காண உதவ, நீங்கள் பின்வரும் சொற்றொடர்களை எழுதலாம்: “தீமை செய்தேன்,” “கர்த்தரை நோக்கி கூக்குரலிட்டேன்,” மற்றும் “ஒரு ரட்சகனை எழும்பப்பண்ணினார்.” நியாயாதிபதிகள் 3:7–9 மற்றும் நியாயாதிபதிகள் 3:12–15இல் பின்னர் உங்கள் குழந்தைகள் இந்த சொற்றொடர்களை தேடலாம். இந்த மாதிரியிலிருந்து கர்த்தருக்குச் சேவை செய்வதைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

  • இயேசு கிறிஸ்து நம்மை விடுவிப்பவர் என்பதை வலியுறுத்த, இயேசுவின் படம் உட்பட பல நபர்களின் படங்களை நீங்கள் சேகரித்து, அவைகளை முகம் குப்புற வைக்கலாம். உங்கள் பிள்ளைகள் படங்களை மாறி மாறி புரட்டட்டும். அவர்கள் இயேசுவின் படத்தைக் கண்டால், அவரைப் பற்றி “He Sent His Son” (Children’s Songbook, 34–35) போன்ற ஒரு பாடலைப் பாடுங்கள், அவர் உங்களை எப்படி விடுவித்தார் என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்.

நியாயாதிபதிகள் 4:1–15.

கர்த்தர் மீது நம்பிக்கை வைக்க நான் மற்றவர்களை ஊக்குவிக்க முடியும்.

  • நியாயாதிபதிகள் 4 இல் உள்ள கதையை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல “Deborah the Prophetess” in Old Testament Stories, 92–95, நீங்கள் பயன்படுத்தலாம். தெபொராளைப் பற்றி நீங்கள் போற்றும் விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் மீது அவளது விசுவாசம் அவளைச் சுற்றியுள்ளவர்களை எவ்வாறு ஆசீர்வதித்தது? இயேசு கிறிஸ்துவில் அதிக விசுவாசம் வைக்க மற்றவர்களுக்கு உதவ நாம் என்ன செய்யலாம்?

    2:9

    Deborah the Prophetess

நியாயாதிபதிகள் 7:1–21.

கர்த்தர் சிறிய விஷயங்களைப் பயன்படுத்தி பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.

  • கர்த்தர் எப்படி இஸ்ரவேலின் சேனையைச் சிறியதாக்கினார் என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க, இந்த வார நிகழ்ச்சி பக்கத்தில் உள்ள நியாயாதிபதிகள் 7:4–7 அல்லது “The Army of Gideon” in Old Testament Stories, 96–99 பயன்படுத்தவும். ஏன் கிதியோனின் சேனை இவ்வளவு சிறியதாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார்? (நியாயாதிபதிகள் 7:2 பார்க்கவும்).

    2:37

    The Army of Gideon

  • உங்கள் பிள்ளைகள் வாள், கேடயம், எக்காளம், விளக்கு மற்றும் குடம் ஆகியவற்றின் படங்களை வரைந்து, போரிட அவர்கள் விரும்பும் பொருள்களைப் பற்றி பேசலாம். கிதியோனின் சேனையைப் பயன்படுத்தும்படி கர்த்தர் என்ன சொன்னார் என்பதை அறிய அவர்கள் நியாயாதிபதிகள் 7:16-ஐ வாசிக்கலாம். நியாயாதிபதிகள் 7:19–21ல் உள்ள போரைப் பற்றி நீங்கள் படிக்கும்போது, ​​இந்தக் கதையிலிருந்து கர்த்தரைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிம்சோன் ஆலயத்தின் தூண்களை கீழே தள்ளுதல்

சிம்சோன் தூண்களை கீழே தள்ளுதல்–ஜேம்ஸ் டிஸ்ஸோ மற்றும் பிறர்

நியாயாதிபதிகள் 13:5

உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது எனக்கு பலத்தைத் தருகிறது.

  • நம்முடைய உடன்படிக்கைகள் நமக்கு ஆவிக்குரிய பலத்தைத் தருவது போல, கர்த்தருடனான சிம்சோனின் உடன்படிக்கைகள் அவனுக்கு சரீர பலத்தை அளித்தன. உங்கள் குடும்பத்தினர் சில உடல் பயிற்சிகளை செய்து மகிழலாம், மேலும் அந்த பயிற்சிகள் நம்மை வலிமையாக்க எப்படி உதவும் என்பதை கலந்துரையாடலாம். நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது எப்படி நமது ஆவிகளை பலப்படுத்துகிறது? (மோசியா 18:8–10; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்).

கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

கிதியோனின் சேனையின் உறுப்பினர்கள்  கொம்புகளை ஊதுகிறார்கள்

கிதியோனின் சேனை–டானியல் ஏ. லூயிஸ்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்: கர்த்தர் சிறிய விஷயங்களைப் பயன்படுத்தி பெரிய காரியம் செய்ய முடியும்